Saturday, December 26, 2009

பொம்மை கதை

http://www.carwale.com/images/RoadTests/ChevroletSpark%5CChevrolet%20Spark%20Front%20Dynamic.jpg


என்னங்க..நிஜமாத்தான் சொல்றீங்களா?
லோன் சேங்ஷன் ஆகிடுச்சா?
ஓ..காட்..என்னால நினைச்சுகூட பார்க்க
முடியல..

எப்போ பணம் வருமாம்..?
......
மனைவியின் துள்ளலில் எனக்கு எரிச்சலாய் இருந்தாலும்..
குடும்ப கவுரவம் என்பதற்காக இதை செய்யவேண்டியதாய் போனது.
அதுதான் கார் வாங்குவது.

சுசிக்கு ஏனோ..எதிர்வீட்டுகாரர் காரின் மீது அப்படி ஒரு கண்.
அதே போல நிறம் மட்டும் வேறு நிறத்தில் ஒரு கார் வாங்கியே ஆக வேண்டும்
என்று என்னை நச்சரிக்க ஆரம்பித்தாள்.

இது சகஜம் என்றுதான் இருந்தேன்..ஆனால் என்னையும் குழந்தைகளையும்
பட்டினி போடும் அளவுக்கு அவளுக்கு வெறியேறிவிட்டது.

நண்பனிடம் சொன்னேன்.
போனா போகுது..வாங்கிடேன் என்று தனக்கு தெரிந்த
கார் டீலரை அணுக சொன்னான்.

இப்போது பேங்கில் லோன் போட்டு, பணம் வர இருக்கிறது.
......
ஏங்க..உங்களைத்தான் கேக்குறேன்..எப்போ பணம் வருமாம்?

இன்னும் ரெண்டு நாளில் வந்துடும் சுசி.

..ஓ..நல்லது..அதுக்குள்ள நாம என்ன கார் வாங்குறதுன்னு முடிவு பண்ணிடலாம்..

ம்ம்..சரி..

வார்த்தைகள் முடிப்பதற்குள் வந்து விழுந்தது முத்தம்.


10 நாட்கள் கழித்து..

நன்றி சார்..வரோம்..
தன் புதிய செவ்ரோலெட் ஸ்பார்க்கில் ஏறி அமர்ந்தபோது..
சங்கர் மகிழத்தான் செய்தான்.

சுசிக்கும், குமார்,அனு மூவருக்கும் இருப்பு கொள்ளவில்லை..
வேகம் எடுத்தால் அலறுகிறார்கள்..மிதுவாய் சென்றால் சினுங்கினார்கள்..

இந்தா..நீயாச்சு காராச்சு..என்று சுசி கையில் காரை கொடுத்துவிட்டால் என்ன என்றுகூட
இருந்தது..

ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தோம்.

மாலை கோவிலுக்கு சென்று திரும்பி வந்தோம்.

மகள் அனு அழும் சத்தம் கேட்டது..
”என்னடா ஆச்சு..”என்று எழுந்து ஓடினேன்.

”ம்ம்..வேணும்..அதுதான் வேணும்..” என்று சுசியுடன் சண்டையிட்டு கொண்டிருந்தாள் அனு.

”ஹேய்..அனு என்ன இது அடம் பிடிச்சிகிட்டு..என்ன வேணும் உனக்கு இப்போ? ”

எங்க க்ளாஸ் பொண்ணு ஒருத்தி ஒரு கார் பொம்மை வெச்சிருக்கா..

அதே மாதிரி எனக்கும் வேணும்பா..வாங்கி தர சொல்லுங்கப்பா..

கெஞ்சினாள் அனு.

”சுசி..பொம்மைதானே..வாங்கிகுடு
த்திருக்கலாம்ல..”என்றேன் மனைவியிடம்.

”ஏங்க..நீங்களும் புரியாம பேசுறீங்க..அது விலை 1200 ரூபாய்.

அதில்லாம அதே கலர்ல இருக்க கூடாதாம் வேற கலர்-ல வேணுமாம்.

இந்த வயசில இப்படி அடம்பிடிச்சா எதிர்காலத்துல ரொம்ப சிரமப்படுவா..!!

நீங்கதான் கண்டிக்கறதே இல்லை..அதான் நான் கண்டிச்சேன்.” என்றாள்..

உண்மைதான்..நான் அவளை மட்டுமல்ல..உன்னையும் கண்டிக்க தவறி இருக்கிறேன்.

அன்று இரவு டைரியில் எழுதினேன்:

வாழ்க்கை என்பது எப்போதும் பொம்மை விளையாட்டுதான்.
சிறு வயதில் பொம்மைகள் நம் கைக்குள் அடங்கி இருந்தது.
பெரியவர் ஆனதும் அவை நம்மை கைக்குள் அடக்கிவிடுகிறது.
சில பொம்மைகள் உயிரற்றவை என் புதிய காரை போல,
சில பொம்மைகள் உயிருள்ளவை..
என் சுசியை போல!!!

Thursday, December 17, 2009

அறிவு [திருக்குறள் கதைகள்- 1]

வரேன் சார்...!!

ஆங்..வாங்க..!!

பணத்தை கட்டிவிட்டு நடந்தார் ராம்சுந்தர்.
இவ்வளவு பெரிய பெயர்பெற்ற பள்ளியில் தன் பிள்ளையும் படிக்கிறான் என்கிற நிறைவோடு.

இவர் மகன் கோபால்.இதே பள்ளியில் பளஸ் ஒன் படிக்கிறான்.

பள்ளி கேட் வழியே மாணவிகள் வந்த வண்ணம் இருக்க..

அந்த பக்கம் நின்றிருந்த சில மாணவர்கள் “ஃபிகர்..ஃபிகர் “என்று பேசிகொண்டு இருப்பதை கவனித்தார்.

அவர்களை கண்டிப்பதற்காக அருகில் சென்ற அவருக்கு இன்னும் ஒரு அதிர்ச்சி.

அந்த கூட்டத்தில் அவன் மகனும் இருந்தான். கடும் கோபம் .

அவர் மகனை வெளியே இழுத்து வந்து கன்னங்களில் அறை விட்டார்.

அரண்டு போனான் கோபால். மற்ற மாணவர்கள் ஓடி வந்து அவரை தடுத்தனர்.

“சார் ஏன் சார் கோபாலை அடிக்கறீங்க..என்ன தப்பு பண்ணிட்டான் ?” என்றான் ஒரு மாணவன்.

“ஏண்டா..படிக்க பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினா..போற வர பொண்ணுங்களை ஃபிகர்னு சொல்லி கிண்டல் பண்ணிட்டு இருக்கீங்களா?..
இதுல எப்படிடா நீயும் சேர்ந்த..”என்று கோபாலை முறைத்தார்.

“சார் ..இங்க பாருங்க..”
என்று தன் க்ராப் நோட்டை காட்டினான் ஒரு மாணவன்.

”இதுல ஒரு சில படங்கள், அதாவது..ஃபிகர்ஸ் சரியா வரலைன்னு பேசிகிட்டு இருந்தோம்..
நீங்க தப்பா புரிஞ்சிகிட்டு அவனை அடிச்சிட்டீங்க.”.என்றான் .

மகனை அடித்த வேதனையும்..அவனை பொது இடத்தில் அவமானபடுத்தியதையும் நினைத்து வருந்தியபடி கிளம்பினார் ராம்சுந்தர்.

குறள் : எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பது அறிவு.

Wednesday, December 9, 2009

யோசித்தேன்..எழுதிவிட்டேன்..இந்த பதிவில் ஹைக்கூ-3

பேருந்து

http://varnajaalam.files.wordpress.com/2007/07/patient_bus.jpg

இறங்கிய போதுதான்
நினைவுக்கு வந்தது
டிக்கெட் எடுக்காதது..!!
*********************************************
சத்தம்

http://www.indolinks.com/websights/diwali/crackers1.jpg

அந்த பட்டாசு சத்தங்களூடே
மறைந்து போனது
ஏழை சிறுவனின் விசும்பல்.!!
*********************************************

குடிநீர்

http://3.bp.blogspot.com/_NedBqSzM_oA/STR9_fp3_mI/AAAAAAAACd0/1jLnV-ddEyM/s320/Chennai_water.jpg

காசு கேட்டு அடிவிழுந்தது
தண்ணியடிக்க..
காசு கொடுத்து தண்ணீர் வாங்கினாள்
சோறு சமைக்க..
*********************************************

பணம்

http://www.zananas-martinique.com/_images/immigration-indienne/jamaica-banana-coolies.jpg

வேர்த்த வேர்வையும்
விட்ட கண்ணீரும்
பணமாய் இன்று,
கந்துகாரன் கைகளில்!!
*********************************************

கண்டுபிடிப்பு

http://www.northcoastjournal.com/media/issues/062509/06-25-09-NCJ-Water-on-Moon.jpg

நிலவில் கண்டுபிடித்தது
தண்ணீரில்லை
தோற்ற காதலர்களின் கடைசி
கண்ணீர்..!!
*********************************************

தாய்பால்

http://www.stockphotopro.com/photo-thumbs-2/AWT2TY.jpg

பிள்ளைக்கு
அவள் ரத்தம் பாலானது
ரத்தவங்கி தந்த பணத்தில்..!!
*********************************************

மகிழ்ச்சி

http://2.bp.blogspot.com/_nu26Un627pA/Snkkt_DXFyI/AAAAAAAAAog/reAwvpn3luY/S220/jaipurfoot-zambia1.jpg

அகமகிழ்ந்தாள் அம்மா..
பிள்ளை அழகாய் நடக்கிறான்,
...
செயற்கை கால்களை கொண்டு.
*********************************************

முத்துசரம்


http://www.thepearloutlet.com/buypearls_images/South_Sea_pearl_necklace.jpg
அவர் அணிவித்த சரம்
மகள் கழுத்தில் இன்று
அன்பு சீதனமாய்..!!
*********************************************

தமிழரசி

http://4.bp.blogspot.com/_QyOswGA6pnY/Stqv6Twyn_I/AAAAAAAAAzk/HR6Fx2IU4eY/S220/DETA-127.jpg

பிறந்து பெற்றெடுத்தேன்
பெற்றடுக்காத இந்த தாயை!!

Tuesday, December 8, 2009

இல்லாத பொழுதுகளில்..

உன்னோடு கதைக்காத காரணத்தால்
வீட்டில் போன் பில்
மிகவும் குறைந்து போனது

இப்போதெல்லாம் மாதம்
நான்கு முறை மட்டுமே
வண்டி பெட்ரோல் நிரம்புகிறது..

இப்போதெல்லாம் இரவில்
சரியான நேரத்தில்
தூங்க முடிகிறது..

ஆபிஸில் நல்ல பெயர்
அற்புதமாக உழைக்கிறேனாம்..
நெஞ்சம் ஆனந்தமாய் உணர்ந்தது..

இப்போதெல்லாம் எனக்கு
சலனமின்று தெளிவாக
தெரிகின்றது மனது..

வீட்டில் கூட பாராட்டுக்கள்..
ஆனாலும் அம்மாவுக்கு தெரியும்
ஏன் இவை எல்லாம் என்று..

இவை எல்லாம் துவங்கியது
நீ மறக்க சொல்லிவிட்டுபோன
அந்த வருடத்தின் போது..

என்றாலும் நெஞ்சோரமாய் வலிக்கிறது..
இதை சொல்லி பெருமைப்பட
நீ இல்லாத போது..!!

Monday, December 7, 2009

கண்ணாமூச்சி..!!அம்மா..ஒரே ஒரு தடவை மா..ப்ளீஸ் மா!!..

என்னடா இப்படி நச்சு பண்ற..என்ன வேணும் உனக்கு இப்போ?

கண்ணாமூச்சி ஆடணும்..மா..

இங்கயா? இந்த குடிசைல கண்ணாமூச்சி ஒண்ணுதான் குறைச்சல்…
சரி.. போ..போய் ஒளிஞ்சிக்கோ..!!

ஹையா ஜாலி..அம்மா திரும்பி நில்லு..

ம்ம்..சரிங்க துரை..!

முருகன் ஓடிப்போய் அருகில் இருந்த மரப்பலகை பின்னால் ஒளிந்துகொண்டான்.

முருகா..எங்கடா போய்ட..அச்சச்சோ..முருகனை காணலையே..டேய் திருட்டுபயலே..எங்கடா போய்ட..பொய்யாக தேடினாள் கண்ணம்மா.

களுக்கென்று வெட்கத்தோடு சிரிப்பு வந்தது முருகனுக்கு..

அம்மா நான் இங்கே இருக்கேன் என்று எழுந்து நின்றான்..

அடப்பாவி..அங்க போய் ஒளிஞ்சிகிட்டியா..கில்லாடிடா நீ..

ஹப்பா..இவனுக்கு எவ்வளவு சந்தோஷம்..இவளுக்குள்ளும் மகிழ்ச்சி தொற்றிகொண்டது. அணைத்துகொண்டாள் மகனை.

கண்ணம்மா..!! ஓங்கி ஒலித்தது ஒரு ஆண் குரல்.
சிடுசிடுப்பான முகம். கோபப் பார்வை. கலைந்த தலை. கசங்கிய சட்டை.
குடிசைக்குள்ளே நுழைந்தான் ராமசாமி.

வாங்க..!! காப்பி போடவா?

ம்கும்..இந்த ஊருல ஒரு நாய் என்னை மதிக்கிறதில்லை..காப்பி ஒன்னு தான் குறைச்சல்…போட்டு தொல போ..!!

சரிங்க..!..சில நிமிடங்களில் காப்பியோடு வந்தாள்.
அப்பா..ஆசையாய் கட்டிகொள்ள வந்தான் முருகன். கைகளை தட்டி விட்டு நாற்காலியில் அமர்ந்தான்.

என்னடா? என்ன வந்துச்சு உன் அப்பனுக்கு..? சொல்லு

பா.. கண்ணாமூச்சி ஆடலாமா பா..?

டேய்..அரைஞ்சி பல்லை எல்லாம் கழட்டிடுவேன்..இந்த குடிசைல கண்ணாமூச்சிதான் குறைச்சல்.. போடா போய் படிக்கிற வேலைய பாரு..

காப்பியோடு வந்த கண்ணம்மா முருகன் முகம் வாடுவதை கவனித்தாள்.

ஏங்க ஆசையா கேக்குறான்..ஒரு தடவ தானே..

ஏய் யாருடி இவ... சரிடா.. போ..போய் ஒளி..

ஹைய்யா..மீண்டும் அதே மரப்பலகை அருகில் ஒளிந்துகொண்டான்.

என்ன கோபமோ.. நேராக அவனை இழுத்து வந்து நடுகூடத்தில் போட்டு ஒரு அறை அறைந்தான்.ராமசாமி.

கலங்கியபடி அம்மாவிடம் சேர்ந்துகொண்டான் முருகன்.

ஏண்டா..அந்த பலகை பக்கம் போகாதேன்னு சொல்லி இருக்கேன்ல..விழுந்தா எவன் செலவுக்கு அழுவறதாம்?

ஸாரிப்பா..இனிமே போகலை..!! கண்ணில் நீர் பெருகியது.
வாசல் அருகில் அமர்ந்துகொண்டான்.

ஏங்க அவனை இப்படி வையறீங்க..பாவம் அவன்..!!

ஏய்..ஏண்டி.. நானே கம்பெனிக்காரனுங்க பண்ண கூத்துல கடுப்பா இருக்கேன்..இவன் வேற..

இவன் கம்பெனி கதையை சொல்ல..அவள் வீட்டு கதைகளை சொல்ல..
சில மணி நேரங்கள் உருண்டது.

ஆமா..எங்க முருகனை காணோம்? முருகா..!!..
தேடினார்கள்..தேடிக்கொண்டே இருந்தார்கள்..

காலையில் தான் கண்டுபிடித்தினர்..

முருகன் அந்த ஊர் கோவில் குளத்து நீரில் ஒளிந்திருப்பதை..அவன் அதில் அதுவாக மிதந்த போது..!!Sunday, December 6, 2009

என்ன பேரு வேணும்..?

என்னடா இவன் பேரை எல்லாம் விலைக்கு விக்கிறானான்னு நினைச்சுடாதீங்க.. எல்லாம் ஒரு குறும்பு மெயிலால் வந்த வினை..

நீங்களும் இந்த குறும்பை படிங்க..ரசிங்க..!!

Doctor – Vaidyanathan
Dentist -- Pallavan
Lawyer -- Kesavan
North Indian Lawyer -- Panjabakesan
Financier -- Dhanasekaran
Cardiologist -- Irudhayaraj
Pediatrist -- Kuzhandaisamy
Psychiatrist -- Mano
Sex Therapist -- Kamadevan
Marriage Counselor -- Kalyanasundaram
Ophthalmologist --Kannayiram
ENT Specialist -- Neelakandan
Diabetologist -- Sakkarapani
Nutritionist -- Arogyasamy
Hypnotist -- Sokkalingam
Mentalist -- Budhisikamani
Exorcist -- Maatruboodham
Magician -- Mayandi
Builder -- Sengalvarayan
Painter -- Chitraguptan
Meteorologist -- Kaarmegam
Agriculturist -- Pachaiyappan
Horticulturist -- Pushpavanam
Landscaper -- Bhuminathan
Barber -- Kondaiappan
Beggar -- Pichai
Bartender -- Madhusudhan
Alcoholic -- Kallapiraan
Exhibitionist -- Ambalavaanan
Fiction writer -- Naavalan
Makeup Man -- Singaram
Milk Man -- Paul Raj
Dairy Farmer -- Pasupathi
Dog Groomer -- Naayagan
Snake Charmer -- Nagamurthi
Mountain Climber -- Yezhumalai
Javelin Thrower -- Velayudam
Polevaulter -- Thaandavarayan
Weight Lifter -- Balaraman
Sumo Wrestler -- Gundu Rao
Karate Expert -- Kailaasam
Kick Boxer -- Ethiraj
Batsman -- Dhandiappan
Bowler -- Balaji
Spin Bowler -- Thirupathi
Female Spin Bowler -- Thirupura Sundari
Driver -- Sarathy
Attentive Driver – Parthasarathy

டிஸ்கி :  பெண்கள் பேரு லிஸ்டில் இல்லாம போச்சேன்னு எனக்கும் வருத்தம்தான்..!!கிகிகி..

Tuesday, December 1, 2009

ஏம்ப்பா..நீங்களாவது சொல்லுங்க..இது தமிழ்நாடு தானே?

இன்னாங்கடா இது..ஆச்சரியமா கீது.. நெசமாத்தான் சொல்றியா?

இப்படி எனக்குள் கேட்டுகொண்டேன் இன்று முழுதும்..

“ஏம்பா...ஏய்..இது தமிழ்நாடு ஸ்டேட் தானே.. இல்ல ஆஸ்திரேலியா எதும் வந்துட்டேனா? ” என்று புளங்காதிப்படும் விதமாய் சில சம்பவங்கள் நெஞ்சை தொட்டது..

சம்பவம் -1:

தங்கை புதுக்குடித்தனம் போவதால் அவர் பெயரை அட்டையில் இருந்து நீக்க வேண்டும்..அதற்கு இன்று வர சொல்லி இருந்தார்கள். போன சில நிமிடங்களில் அன்பான உபசரிப்போடு!!! சான்றிதழ் வழங்கிவிட்டார்கள்.

அட..!! இது முதல் அதிர்ச்சி.

சம்பவம் -2 :

இன்னைக்கு என்று பார்த்து என் வாகனம் நட்ட நடு சாலையில் மக்கர் பண்ண..அதுவும் சேலம் நான்கு ரோடு பகுதியில் நடு ரோட்டில் பக்கி பழிவாங்கிவிட்டது..

இன்னிக்கு ஃபைன் தான்.. 500 வாங்காம மாமா விடமாட்டாரு..அய்யயோ போச்சே.. ஆமா யார் முகத்தில் விழிச்சோம் என்றெல்லாம் என்ன அலைகள் அழுவ..

அருகில் வந்த அந்த ட்ராபிக் கான்ஸ்டபிள்.. தம்பி..பாத்து...இப்படி..ஓரமா கொண்டுவாங்க..என்று அவரும் எனக்கு உதவ.. எதற்கும் ஒரு முறை பார்த்துகொள்வோம் அது கடவுளாய் இருந்துதொலைத்துவிட போகிறது என்று உத்த்த்த்து பார்த்தேன்..அவர் பெயர் சண்முக சுந்தரம்.ஆபத்தில் ஓடு வந்து உதவிய இவரது செயல் என்னை வியப்பில் ஆழ்த்தியது. ஒரு திட்டு இல்லை..ஒரு கோபப் பார்வை இல்லை..அட ஒரு ஃபைன் கூட இல்லை ..நீ நீடுழி வாழ்க என போற்றியபடி புறப்பட்டேன்..

சம்பவம் -3:

அடுத்து வீடு வந்து சேர்ந்தால் மின்சாரம் தடைப்பட்டிருந்தது. சம்சாரம் போனா சந்தோஷபடலாம்(ஊருக்கு போனால்).. மின்சாரம் போனால் முடியுமா? உடனே மின்சார வாரிய தொலைப்பேசிக்கு அழைத்தேன்..
அட...!!
அமைதியான தெளிவான குரலில் பதில்கள் வந்தன.. என்னால் இதை நம்ப முடியவில்லை...காலை பதினோரு மணிக்கு கம்ப்ளெயிண்ட் புக் செய்யப்பட்டது...மதியம் 12.30க்குள் மின்சார விநியோகம் சீர் செய்யப்பட்டு விட்டது.

ஏம்ப்பா..நீங்களாவது சொல்லுங்க..இது தமிழ்நாடு தானே?