Tuesday, March 23, 2010

ஒரு சோம்பல் முறிப்பும், ஒரு ஜென் கதையும்-2

ரொம்ப்ப்ப்பபப நாள் ஆச்சுங்க பதிவு போட்டு..என்ன செய்ய வேலை பென்ட கழட்டுது.
சரி.விஷயத்துக்கு வருவோம்.
என் செல்ல அம்மா பேரில் வந்திருக்குற “அவள் பெயர் தமிழரசி” படத்தை எல்லாரும் பார்த்திருப்பீங்கன்னு நினைக்கிறேன். படம் நல்லாவே வந்திருக்கு. எனக்கும் பிடிச்ச படம் அது.

நேற்று ஒரு ஜென் கதை ஒன்னு படிச்சேன்.அதன் ஆழமும் கருத்தும் ரொம்ப நல்லா இருந்தது.
அதை உங்களோட பகிர்ந்துக்க விரும்பறேன்.


http://webwarriortools.com/images/ebooks/email-zen.jpg


: ஒரு கோப்பை தேநீர் :
அந்த இளவரசர்கள் நாலு பேருக்கும் அந்த துறவியை சந்திக்க அவர் குடிலுக்கு வந்திருக்கிறார்கள்.
அந்த துறவி அவர்களை வரவேற்று அமர செய்தார். அவர் வந்த விஷயம் என்னவென்று கேட்டார்.
அந்த இளவரசர்கள் சொன்னார்கள் : வாழ்க்கை என்பது என்ன ? இத்தனை துன்பங்களும் வாழ்க்கையின் அங்கமாகி போனதன் சூட்சுமம் என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டுகிறோம் ..
என்றனர்.
துறவி புன்னகை பூத்தார். சரி சற்று பொறுங்கள். டீ சாப்பிட்டுவிட்டு இதை பற்றி யோசிக்கலாம் என்று சொன்னார். இவர்களும் ஆமோதித்தனர்.

சில நிமிடங்கள் கழித்து ஒரு தட்டில் சில கோப்பைகளுடன் ஒரு கூஜாவில் டீயை ஊற்றி எடுத்து
வந்தார் துறவி. தட்டை அவர்கள் முன் வைத்தார். அவரவர்களுக்கு வேண்டிய கோப்பையை தேர்ந்தெடுத்துக்கொள்ள சொன்னார்.

அந்த தட்டில் இருந்ததோ நான்கு வகையான கோப்பைகள். ஒன்று- சுத்தமான தங்கத்தாலும்,
மற்றொன்று- சுத்தமான வெள்ளியாலும், மூன்றாவது- சுத்தமான செம்பாலும், நான்காவது- களிமண் கோப்பையாகவும் இருந்தது.

இளவரசர்கள் குழம்பினர். ஒருவரை ஒருவர் முறைக்கவே ஆரம்பித்துவிட்டனர். என்ன செய்ய..எல்லாருக்கும் தங்க கோப்பை மீதே ஆசை. இப்படியே சில நிமிடங்கள் மவுன போராட்டம் தொடர்ந்தது.
இதை பார்த்துகொண்டிருந்த துறவி சொன்னார். “இளவரசர்களே! இதோ இதுதான் வாழ்க்கை ”என்று
அந்த சூடான நறுமணம் மிக்க டீயை காட்டினார். ”நீங்கள் கோப்பைக்கு ஆசைப்பட்டு டீயை வீண்டிக்கிறீர்களே..? இது எந்த வகையில் நியாயம்? என்னதான் தங்ககோப்பையில் குடித்தாலும் இதே டீயை தான் குடிக்க போகிறீர்கள். களிமண் கோப்பையிலும் இதே டீதான் கிடைக்க போகிறது!
எனவே கோப்பை எது என்பது விஷயமல்ல..டீயை சுவைப்பதே முக்கியம்” என்றார்.
அவர்களுக்கு அப்போது தான் புரிந்தது : “பணம், அந்தஸ்து, கவுரவம் என்ற கோப்பைகள் எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாம் அனுபவித்து மகிழவேண்டியது இந்த வாழ்க்கை என்கிற டீயை தானே வேறொன்றுமில்லை..” என்பது.


Friends, இனிமேலும் டீயை வீணடிக்காதீர்கள் ஏனெனில் கோப்பை எப்போது வேண்டுமானால்
மாறலாம், ஆனால் நமக்கு எப்போதும் கிடைப்பது ஒரே ஒரு சுவையான வாழ்க்கைதான்..!!

by,
Rangan

Monday, March 1, 2010

நூறு பதிவுகளை கடந்தபின்!!

http://jamesfrankel.musiced.net/files/2007/03/number_100_1.png
எல்லாருக்கும் பழக்கமான எண், எண்ணிக்கை 100.

சரி..ஏன் நூறு?
10*10= 100
எண்களில் முதல் மூண்றெழுத்து எண் 100.
இரண்டு 2 எழுத்து எண்களின் பெருக்கல் தொகை நூறு..
இப்படி நூறு பல வகைகளில் கணிதத்தில் ஒரு முக்கியமான எண்ணாக இருக்கிறது.

கணிதத்தின் அடிப்படையில் தான் உலகமே இருக்கிறது..நம் சமூகமும்..!!

அதனால் தான் நூறு வயதை எட்டியவர்களை கண்டு வியக்கிறோம்..நூறாண்டு வாழ்க என்று வாழ்த்துகிறோம்

சச்சின் டெண்டுல்கர் நூறு ஓட்டங்கள் எடுத்தால் கைதட்டு ஆர்ப்பரிக்கிறோம்..
பரிட்சையில் நூறு மார்க்குகளை உச்ச தகுதியாக வைத்திருக்கிறோம்..!!

ஒவ்வொரு நூற்றாண்டிலும் மாபெரும் முன்னேற்றத்தை மனித இனம் எடுத்து வைக்கிறது.!!

இப்படி எல்லா வகையிலும் நம் வாழ்வில் இணைபிரியாது வரும் நூறு என் வாழ்விலும் ஒரு
முக்கிய பங்கை தந்திருக்கிறது..!!

இதோ என் நூறு பதிவுகளை முடித்து நூற்றியோராவது பதிவை வெற்றிகரமாய் பதிவு செய்திருக்கிறேன்..!!
உண்மை தான் ..பதிவுகளை பொருத்த மட்டில் எண்ணிக்கை பெரிதில்லை..விஷயமே பெரிது..!!
நானும் என்னால் முடிந்த சிறந்த பதிவுகளை தந்திருக்கிறேன் என்பதில் எந்த ஐயமும் இல்லை..!!
அதை நிரூபிக்கும் விதமாக என் பதிவுகள் பலவற்றை தன்னகத்தே ஏற்றுகொண்டு ஆதரவளித்த ஆனந்த விகடனுக்கு இங்கே நன்றி சொல்ல
கடமைப் பட்டிருக்கிறேன்..!!

நூறு பதிவுகள் எழுதியும் வலைச்சரத்தில் எழுதாத ஒரே பதிவர் நானாகத்தான் இருப்பேன் என்று நினைக்கிறேன்...!!
அது என் அடுத்த நூறு பதிவுகளுக்குள் நடந்துவிடும் என்று நம்புகிறேன்..!!


இத்தனைக்கும் காரணமாய், ஆதரவாய், அன்பாய் நட்பாய் அமைந்த என் மாமன் நாமக்கல் சிபிக்கும் மற்ற உலக தமிழ் பதிவர்கள்
அத்தனை பேருக்கும் என் நன்றிகளையும் வணக்கங்களையும் தெரிவித்து கொண்டு..
இன்னும் நல்ல பல பதிவுகள் தருவேன் என்ற உறுதியும் அளிக்கிறேன்..!!

நன்றி நண்பர்களே !! ..என்னை கைப்பிடித்து , அரவணைத்து , ஆசுவாசப்படுத்தி , ஆறுதல்தந்து , அன்பை சுரந்தமைக்காக..!!

பி.கு :

நூறு பதிவுகளை கடந்த பின் நான் ஒரு பதிவராக கண்டுகொண்டது ஒரே விஷயம் தான்.
” பரிந்துரைக்கபடவேண்டும் என்றோ,ஹிட்டுக்காகவோ, எண்ணிக்கைக்காவோ, விகடனில் வெளியாகும் என்றோ என்றைக்கும் எழுதாதே..!!
உனக்கு ஒரு பதிவு எழுதி முடித்ததும் ஒரு மனமகிழ்ச்சி உண்டாகிறதா பார்..அதையே பதிவும் இடு..அது தான் நீ...அதை படிக்க தான் இந்த உலகம் காத்துகிடக்கிறது..மற்றவையில் எதுவும் இல்லை!!

என்றென்றும் புன்னகை!!

http://www.granitestatechild.com/images/smiling-girl.jpg

இன்று காலை ஏ.டி.எம் போய்விட்டு திரும்பி வந்துகொண்டிருந்தேன்..
அப்போது ஒரு பூக்காரர் திடீரென்று கையில் பூவோடு ஓடி வர..
வேகம் குறைத்து அவரை கவனித்தேன்..

ஒரு இளம்பெண் பச்சை சுடிதாரில் தோள்களில் கைப்பையோடு, இடது கையில் செல்லுடன்
நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அந்த பூக்காரர் அந்த பெண்ணிடம் பூவை கொடுத்துவிட்டு கடந்து சென்றுவிட்டார்.
நான் அந்த பூவையும், பெண்ணையும், அந்த கண்களையும் ஒரு கணம் ரசிக்கத்தான் செய்தேன்.
ஜீவ்ஸின் கேமரா என்னிடம் இருந்திருந்தால் க்ளிக்கி இருப்பேன். அடுத்த கணம் அவரை பார்த்து
புன்னகைக்க அவரும் புன்னகைத்தார். இது அன்பா, ரசனையா, மகிழ்ச்சியா?

பெண்ணே அழகுதான்..பூ அழகுதான்.
பெண்கள் தலையில் பூச்சுடுவது அழகுதான்.., ஆனால் இன்று ஒரு மாறுதலாய் ஒரு பெண் கையில் புத்தம்புது
பூவோடு நடந்து செல்வதை பார்த்ததும் நின்று ரசிக்காமல் இருக்க முடியவில்லை. ரசித்தேன், புன்னகைத்தேன்,
நன்றிகளை பெற்றுகொண்டேன்..!!

அதன் தொடர்ச்சியாக என் அம்மாவை பள்ளியில் ட்ராப் பண்ணிவிட்டு வண்டியை திருப்பும் சமயம் ஒரு குட்டி பெண்
சரியாக முன் டயரை கடக்க உடனே ப்ரேக் அடித்து நிறுத்தினேன். அந்த குட்டிப்பெண் என்னை பயத்தோடு பார்த்தாள்.
அந்த கண்களின் அழகை கண்டதும் மீண்டு(ம்) வந்தது புன்னகை. என் புன்னகையை பார்த்து அவளுக்கும் நம்பிக்கை வர,
அவளும் புன்னகைக்க.. கொல்லிமலை அருவியில் கண்மூடி குளிக்கும்போது ஒரு உணர்வு உள்ளத்தில் பரவுமே..
அதே உணர்வு என்னுள் பரவி விரவி நின்றது.

அதன் பிறகு எப்போது வீடு வந்தேன்..எப்போது இந்த பதிவை எழுதினேன் என்று தெரியவில்லை..
என்னை அறியாமலே என் புன்னகையும் மகிழ்ச்சியும் பிறரை ஆக்ரமித்து நிற்கும் அதிசயத்தை பார்த்து
நித்தமும் வியந்துகொண்டிருக்கிறேன்..!!

”One Pure Smile , a spiritual touch between two good hearts" - Buddha.