
”குட் மார்னிங் சார்.. ஈஸ் திங் ராம்குமார்..”
”யெஸ் ராம்குமார் ஹியர்”
”நாங்க IJKLMN கம்பெனியில் இருந்து பேசுறோம்.
புதுசா ஒரு லோன் ஸ்கீம் ரிலீஸ் பண்ணி இருக்கோம்.
அதை பத்தி உங்ககிட்ட எக்ஸ்பிளையின் பண்ண இருக்கோம்.
ஒரு 5 மினிட்ஸ் ஒதுக்க முடியுமா ப்ளீஸ்”
கெஞ்சியபடி கொஞ்சினாள் அவள்.
“ம்ம்..ஸ்யூர்”..
ஐந்து நிமிடங்கள் முடிந்தது.
குரல் இனித்தது.
சொன்ன விஷயங்கள் மறந்தது.
”சரிங்க பாக்கறேன், நைஸ் வாய்ஸ். நாளைக்கு ஈவனிங் உங்க ஆபீஸ் வரேன்”
“தேங்க் யூ ஸார். ஸீ யூ.. பை”
”பை..”
மகிழ்ச்சியோடு இணைப்பை துண்டித்தாள் அவள்.
அடுத்த ஒரு நிமிஷத்தில் ராம்குமாரின் செல்போன் ஒலித்தது.
புவனா கூப்பிட்டாள்.
”என்னங்க..”
‘என்ன?”
“ வீட்ல கேஸ் தீந்துடும் போல இருக்கு வரும்போது சொல்லிட்டு வந்துடுங்களேன்.”
“ம்ம்.. சரி”
“அப்புறம் ... என்ன பண்ணிட்டு இருக்கீங்க..பிஸியா?”
”ஆமா.. ஒரு முக்கியமான பைல் பார்த்துட்டு இருக்கேன். சரி நான் அப்புறம் கூப்பிடுறேன்.. வை”
‘ம்ம்.. சரி..பை”..
எழுந்து காபி குடிக்க நடந்தான் ராம்குமார்.
வருத்தத்தோடு இணைப்பை துண்டிக்காமல் இவள்!!