Thursday, August 27, 2009

ஒரு துண்டிக்கப்படாத இணைப்பு!


”குட் மார்னிங் சார்.. ஈஸ் திங் ராம்குமார்..”

”யெஸ் ராம்குமார் ஹியர்”

”நாங்க IJKLMN கம்பெனியில் இருந்து பேசுறோம்.
புதுசா ஒரு லோன் ஸ்கீம் ரிலீஸ் பண்ணி இருக்கோம்.
அதை பத்தி உங்ககிட்ட எக்ஸ்பிளையின் பண்ண இருக்கோம்.
ஒரு 5 மினிட்ஸ் ஒதுக்க முடியுமா ப்ளீஸ்”
கெஞ்சியபடி கொஞ்சினாள் அவள்.

“ம்ம்..ஸ்யூர்”..

ஐந்து நிமிடங்கள் முடிந்தது.
குரல் இனித்தது.
சொன்ன விஷயங்கள் மறந்தது.

”சரிங்க பாக்கறேன், நைஸ் வாய்ஸ். நாளைக்கு ஈவனிங் உங்க ஆபீஸ் வரேன்”

“தேங்க் யூ ஸார். ஸீ யூ.. பை”

”பை..”

மகிழ்ச்சியோடு இணைப்பை துண்டித்தாள் அவள்.

அடுத்த ஒரு நிமிஷத்தில் ராம்குமாரின் செல்போன் ஒலித்தது.

புவனா கூப்பிட்டாள்.

”என்னங்க..”

‘என்ன?”

“ வீட்ல கேஸ் தீந்துடும் போல இருக்கு வரும்போது சொல்லிட்டு வந்துடுங்களேன்.”

“ம்ம்.. சரி”

“அப்புறம் ... என்ன பண்ணிட்டு இருக்கீங்க..பிஸியா?”

”ஆமா.. ஒரு முக்கியமான பைல் பார்த்துட்டு இருக்கேன். சரி நான் அப்புறம் கூப்பிடுறேன்.. வை”

‘ம்ம்.. சரி..பை”..

எழுந்து காபி குடிக்க நடந்தான் ராம்குமார்.

வருத்தத்தோடு இணைப்பை துண்டிக்காமல் இவள்!!

Tuesday, August 25, 2009

காத்திருக்கிறோம்....மெல்லிய காதலோடு!!


சேர்ந்தே இருந்த நேரத்தில்
சண்டையிட்டே கழித்தோம்..

பிரிந்த சில நொடிகளில்
ஒருவரில் ஒருவரை இழந்தோம்..

ஏந்தான் நாம் பிரிந்தோம் என்று
ஏங்கியே கழித்தோம்.. நம் பிரிவை!

ஏன் இன்னும் சேரவில்லை என்று
எப்போதும் பார்த்தோம்.. நம் சாலைகளை!

ஏன் இன்னும் விடியவில்லை என்று
மாலை ஏழுமணிக்கே மணி பார்ப்போம் நாம்!

இன்னுமா இருட்டவில்லை என்று
மதியத்திலேயே மதி மயங்குவோம் நாம்!

இப்படி நமக்கான காலமும்
நமக்கான நாட்களும்
நீண்டுகொண்டுதான் இருக்குகிறது!

நாம் நேற்று விடைபெற்றதில் இருந்து!

Friday, August 7, 2009

மழையா? அவளா? என் மனதை வென்றது..!



மெல்ல சரிந்து விழும்
மேகம் கலைத்து விழும்
வேகம் சேர்த்து விழும்
வானம் மறைக்க விழும்
மெல்லிய துளிகளாய் தூறல்!
.. இது அவளின் அணைப்பை போல் உள்ளதே!

அந்த மெல்லிய மழையில்
மேகத்தின் மோக கூடலில்
காற்றின் ஆவேச அணைப்பில்
பூமியின் கடும் மேற்பரப்பில்
அடியாய் இறங்கியது இடி!
.. இது அவளின் கோபத்தை போல் கொல்லுதே!

கண்கள் பறித்து செல்லும்
காண்போரை நடுங்க சொல்லும்
நிற்போரை ஓட சொல்லும்
நித்தமும் பூமியை கொல்லும்
ஆவேசம் கொண்ட மின்னல்!
..இது அவளின் கண்ணசைவை போல் சொல்லுதே!


காதலிபோல் மின்னல் கண்ணடித்து
அவள் கோபம்போல் இடியிடித்து
அவளின் அணைப்பாய் தூறலிட்டு
என் மனதை வென்றது
மழையா? அவளா?