அடிப்படையில் மனிதர்கள் இரண்டுவகை
ஒன்று: பிறரின் சப்தங்களுக்காக வாழ்பவர்கள்,
இரண்டு:தன்னுள் எழும் சப்தங்களைகொண்டு வாழ்பவர்கள்.
பிறரின் சப்தங்களுக்காக என்றால், அதாவது, நீங்கள் திறமைசாலி, நீங்கள் பெரிய மேதை, நீங்கள் எங்கள் நிறுவனித்தின் தூண், நிலைத்தாங்கி, இடிதாங்கி..இப்படி பிறரின் புகழ்ச்சிக்கும், பாராட்டுக்கும், பாராட்டு தரும் மயக்கத்திற்குமே ஏங்கி ஏங்கி, தன்னுடைய உழைப்பை வாரி இரைக்கும் நபர்கள், இவர்களால் உலகில், உலகுக்காக சிறப்பாய் வாழமுடியுமே தவிர, தன்னுள் ஆழ்ந்து சென்று தனக்கானதை தேடி செய்ய இயலாது.

மாறிவிட்டதாய் புலம்புவதற்கு காரணம் இவர்களை போன்றோர் தான். இவர்களால் தான் வாழ்க்கை ஒரு வெறித்தன்மையும், போட்டித்தனும், போலித்தனமுமாய் மாறி நிற்கிறது. நான் சொல்வதை செய், இல்லையேல் ஓடிவிடு என்பது இவர்கள் கொளகை. இயந்திரத்தனமான, அன்பில்லாத, நிம்மதியில்லாத இவர்களின் தலைமையின் கீழ் 98% சதவிகத உலகம் சிக்கி சின்னப்பட்டுகொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் தீர்வே கிடையாதா? இவர்களிடம் இருந்து உலகை யார் காப்பாற்றுவது என்கிறீர்களா?
இப்போது இரண்டாவது வகை ஆட்கள், அதாவது, தன்னுள் எழும் சப்தங்களுக்காக வாழ்பவர்கள்.
தன்னுள் எழும் சப்தம் என்றதும், உடனே, நம் மனதின் வெற்று கூச்சல்களையே, வெறித்தன கூச்சல்களையே நாம் நம்முடைய சப்தம் என்று நினைத்திகொண்டிருக்கும். இல்லை. இல்லவே இல்லை. அது மனம். இயந்திரத்தனமானவர்கள் உங்களுக்குள் ஏற்படுத்திய நோய் மனம். அது எப்போதும் இயந்திரத்தனமானவர்களுக்கு உதவுமே தவிர உங்களுக்கு உதவாது. நீங்கள் அந்த மனமும் கிடையாது. நீங்கள் ஆன்மா. பெயரில்லா, மதமில்லா, சாதியில்லா ஒரு பிரபஞ்ச குழந்தை. உங்கள் தாய் பிரபஞ்சம், தந்தை வானம். நீங்கள் யாரென்று தெரிந்துகொள்ள முயல்வதே உங்கள் சப்தங்களை நீங்கள் கேட்டு உணரும் கணம். உங்கள் ஆன்மாவின் சப்தம், உங்கள் இதயத்தின் மூலமே கேட்கும். ஆம். உங்களில் இதயம், ஆன்மாவின் உதடுகள். இதயத்தை கவனியுங்கள்.
அவர்களே, அந்த பிரபஞ்ச குழந்தைகளே, புத்தனாய், இயேசுவாய், கிருஷ்ணராய், ஐன்ஸ்டீனாய், ரமணராய், ஷெல்டனாய், ஷேக்ஸ்பியராய், பாரதியாய், பட்டினத்தாராய், விவேகானந்தராய், இப்படி நம்மால் பைத்தியமாய் பார்க்கப்பட்ட பலராய் நம்மிடையே வந்து, நம் இயந்திரத்தனத்திலிருந்து இதயத்தில் வாழ நமக்கு வழி செய்தவர்கள். இன்னும் காலமிருக்கிறது. நீங்கள் இதயம் திறந்து நிறைவாய் வாழப்போகிறீர்களா? இல்லை ஆட்டுகூட்டத்தில் ஆடாய், வாழாத வாழ்க்கைக்காக அழுதபடி இறக்கப்போகிறீர்களா? இல்லை சிங்கமாய், கம்பீரமாய், தனித்தன்மையோடு வாழ்ந்தோம் என்கிற நிறைவோடு புன்னகையோடு வாழ்வை முடிக்கப்போகிறீர்களா? முடிவு உங்கள் கையில்..
நன்றி..!!