Thursday, December 17, 2009

அறிவு [திருக்குறள் கதைகள்- 1]

வரேன் சார்...!!

ஆங்..வாங்க..!!

பணத்தை கட்டிவிட்டு நடந்தார் ராம்சுந்தர்.
இவ்வளவு பெரிய பெயர்பெற்ற பள்ளியில் தன் பிள்ளையும் படிக்கிறான் என்கிற நிறைவோடு.

இவர் மகன் கோபால்.இதே பள்ளியில் பளஸ் ஒன் படிக்கிறான்.

பள்ளி கேட் வழியே மாணவிகள் வந்த வண்ணம் இருக்க..

அந்த பக்கம் நின்றிருந்த சில மாணவர்கள் “ஃபிகர்..ஃபிகர் “என்று பேசிகொண்டு இருப்பதை கவனித்தார்.

அவர்களை கண்டிப்பதற்காக அருகில் சென்ற அவருக்கு இன்னும் ஒரு அதிர்ச்சி.

அந்த கூட்டத்தில் அவன் மகனும் இருந்தான். கடும் கோபம் .

அவர் மகனை வெளியே இழுத்து வந்து கன்னங்களில் அறை விட்டார்.

அரண்டு போனான் கோபால். மற்ற மாணவர்கள் ஓடி வந்து அவரை தடுத்தனர்.

“சார் ஏன் சார் கோபாலை அடிக்கறீங்க..என்ன தப்பு பண்ணிட்டான் ?” என்றான் ஒரு மாணவன்.

“ஏண்டா..படிக்க பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினா..போற வர பொண்ணுங்களை ஃபிகர்னு சொல்லி கிண்டல் பண்ணிட்டு இருக்கீங்களா?..
இதுல எப்படிடா நீயும் சேர்ந்த..”என்று கோபாலை முறைத்தார்.

“சார் ..இங்க பாருங்க..”
என்று தன் க்ராப் நோட்டை காட்டினான் ஒரு மாணவன்.

”இதுல ஒரு சில படங்கள், அதாவது..ஃபிகர்ஸ் சரியா வரலைன்னு பேசிகிட்டு இருந்தோம்..
நீங்க தப்பா புரிஞ்சிகிட்டு அவனை அடிச்சிட்டீங்க.”.என்றான் .

மகனை அடித்த வேதனையும்..அவனை பொது இடத்தில் அவமானபடுத்தியதையும் நினைத்து வருந்தியபடி கிளம்பினார் ராம்சுந்தர்.

குறள் : எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பது அறிவு.

Wednesday, December 9, 2009

யோசித்தேன்..எழுதிவிட்டேன்..இந்த பதிவில் ஹைக்கூ-3

பேருந்து

http://varnajaalam.files.wordpress.com/2007/07/patient_bus.jpg

இறங்கிய போதுதான்
நினைவுக்கு வந்தது
டிக்கெட் எடுக்காதது..!!
*********************************************
சத்தம்

http://www.indolinks.com/websights/diwali/crackers1.jpg

அந்த பட்டாசு சத்தங்களூடே
மறைந்து போனது
ஏழை சிறுவனின் விசும்பல்.!!
*********************************************

குடிநீர்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs137ZygRRf4ILwcQMUu3odywCl4M0D4NuwR5DXqaIBGwepqx45anp6TffibseAPv3Y6OkHdY8tJeKJBxgrTWdmN86iRblzInSFlBAELKfdl0p4ROfHDinetcznI-KK0QbNPpYUUSJqFw/s320/Chennai_water.jpg

காசு கேட்டு அடிவிழுந்தது
தண்ணியடிக்க..
காசு கொடுத்து தண்ணீர் வாங்கினாள்
சோறு சமைக்க..
*********************************************

பணம்

http://www.zananas-martinique.com/_images/immigration-indienne/jamaica-banana-coolies.jpg

வேர்த்த வேர்வையும்
விட்ட கண்ணீரும்
பணமாய் இன்று,
கந்துகாரன் கைகளில்!!
*********************************************

கண்டுபிடிப்பு

http://www.northcoastjournal.com/media/issues/062509/06-25-09-NCJ-Water-on-Moon.jpg

நிலவில் கண்டுபிடித்தது
தண்ணீரில்லை
தோற்ற காதலர்களின் கடைசி
கண்ணீர்..!!
*********************************************

தாய்பால்

http://www.stockphotopro.com/photo-thumbs-2/AWT2TY.jpg

பிள்ளைக்கு
அவள் ரத்தம் பாலானது
ரத்தவங்கி தந்த பணத்தில்..!!
*********************************************

மகிழ்ச்சி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjc9rcu85ZiEZRYir6Nb5sN98YP16aVrDluqYAtr_RUvAl_wd6PflLcAPg5mj7arazBPkDlX1Lb8p4Go28TROGYzQgfevo6D-05gtyIfhBMhifuCWpMfVCCwkLK8Ycpojvm2JbpiOBH_eE/s220/jaipurfoot-zambia1.jpg

அகமகிழ்ந்தாள் அம்மா..
பிள்ளை அழகாய் நடக்கிறான்,
...
செயற்கை கால்களை கொண்டு.
*********************************************

முத்துசரம்


http://www.thepearloutlet.com/buypearls_images/South_Sea_pearl_necklace.jpg
அவர் அணிவித்த சரம்
மகள் கழுத்தில் இன்று
அன்பு சீதனமாய்..!!
*********************************************

தமிழரசி

http://4.bp.blogspot.com/_QyOswGA6pnY/Stqv6Twyn_I/AAAAAAAAAzk/HR6Fx2IU4eY/S220/DETA-127.jpg

பிறந்து பெற்றெடுத்தேன்
பெற்றடுக்காத இந்த தாயை!!

Tuesday, December 8, 2009

இல்லாத பொழுதுகளில்..

உன்னோடு கதைக்காத காரணத்தால்
வீட்டில் போன் பில்
மிகவும் குறைந்து போனது

இப்போதெல்லாம் மாதம்
நான்கு முறை மட்டுமே
வண்டி பெட்ரோல் நிரம்புகிறது..

இப்போதெல்லாம் இரவில்
சரியான நேரத்தில்
தூங்க முடிகிறது..

ஆபிஸில் நல்ல பெயர்
அற்புதமாக உழைக்கிறேனாம்..
நெஞ்சம் ஆனந்தமாய் உணர்ந்தது..

இப்போதெல்லாம் எனக்கு
சலனமின்று தெளிவாக
தெரிகின்றது மனது..

வீட்டில் கூட பாராட்டுக்கள்..
ஆனாலும் அம்மாவுக்கு தெரியும்
ஏன் இவை எல்லாம் என்று..

இவை எல்லாம் துவங்கியது
நீ மறக்க சொல்லிவிட்டுபோன
அந்த வருடத்தின் போது..

என்றாலும் நெஞ்சோரமாய் வலிக்கிறது..
இதை சொல்லி பெருமைப்பட
நீ இல்லாத போது..!!