
புத்தம் புது முத்தம்
அதை சொல்லும் ச் எனும் சத்தம்
எப்போதும் என் இதயக்கூட்டில் யுத்தம்..
என்னை ஏனடி கொல்கிறாய் நித்தம்..?
*******
உன்னை அடங்கா பிடாரி என்று
உன் அம்மா சொன்ன போது
அதை நம்பவில்லை நான்..
இப்போது தான் புரிகிறது..
என் உதடுகளுக்கு
நீ அடங்காத போது...!!
************
சொன்னால் கேட்பதில்லை இவை..
எப்போதும் என்னையே சுவை பார்த்தபடி..
உன்னுடைய உதடுகள்!!
**********

அம்மா நீ எனக்கு
சிரிக்க சொல்லிதந்தாய்..
அவள் அழகாய் சிரிக்கிறேன் என்றாள்!!
அம்மா நீ எனக்கு
நடக்க சொல்லிதந்தாய்
அவள் கம்பீரமாய் நடக்கிறேன் என்றாள்!!
அம்மா நீ எனக்கு
அன்பை சொல்லிதந்தாய்
அவள் என்னை காதலிக்கிறேன் என்றாள்!!
*********
பூக்களின் தேசத்துக்கு ஒரே எதிரி நீ..
உன் புன்னகையின் தாக்குதலில்
தினமும் மாலையில் வாடின பூக்கள்!!
********
தேடிகொண்டே இருக்கிறேன்..
உன்னிடம் தொலைந்து போன
என் இதயத்தை
உனக்குள்...!!!
*********

எப்போதும் போல் தான் நடந்து வருகிறாய்..
ஆனால் ஏனடி என் இதயம் மட்டும் இப்படி குதிக்கிறது..?!
எப்போதும் போல் தான் சிரித்து பேசுகிறாய்..
ஆனால் ஏனடி உதடுகள் மட்டும் காய்ந்து போகின்றது..?!
எப்போதும் போல் தான் புன்னகை பூக்கிறாய்..
ஆனால் ஏனடி என் மனம் செத்து செத்து பிழைக்கிறது..?!
எப்போதும் போல் தான் ஐ லவ் யூ என்கிறாய்..
ஆனால் ஏனடி அந்த மூன்று வார்த்தைகளும் என்னை மூர்ச்சையாக்குகிறது..?!
**********
4 comments:
காதலே காதல் கொள்ளும் கவிதைகள்...அப்பப்பா அத்தனையும் அருஞ்சுவை....
@தமிழரசி..
அருஞ்சுவை தருவான் நளன்.. நான் அவனின் இளன்.
எனவே அவனின் கொஞ்சம் என்னுள்ளும் உண்டு இல்லையா?!
இளமையை படம் பிடித்துக்காட்டுகின்றன.வாழ்த்துக்கள்
@பனையூரான்:
நன்றி பனையூரான்...!!!
Post a Comment
வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.