
சூரிய கதிர்கள்
செல்லும் வழி
எப்போதும் அறியாது..
ஓடும் நதி
தன் பாதை
எப்போதும் அறியாது..
வெள்ளை மேகம்
தன் இலக்கு
எப்போதும் தெரியாது..
வளரும் மரம்
தன் வயதை
எப்போதும் அறியாது..
சுற்றும் பூமி
சுற்றும் காரணம்
எதுவும் அறியாது..
எப்படி என்றால்
ஏழாயிரம் விளக்கமுண்டு.
ஏன் என்றால்
எவனுமில்லை விளக்க..
வாழ்க்கை எனும் நதியிலே
வாழ்வை போல் இன்பமில்லை..
உடலே அதன் படகு..
உன் மனமே அதில் பயணி..
வாழ்வே அந்த நதி..
நிச்சயமாய் பயணம் முடிவற்றது
சில படகுகள் மாறி ஏறிக்கொள்வோம்..
நிச்சயமாய் பயணத்தில் அர்த்தமுள்ளது
பயணிக்கையில் அதை நாம் அறிந்துகொள்வோம்.
5 comments:
நண்பா, ஜென் கவிதை தோத்தது போங்க. தத்துபித்துவம் தாங்கமுடியலையே!..... ரங்கா.... நீ எங்கயயோ போய்ட்டடா.....:-)
முடியல
நல்ல இருக்கிறது
//சில படகுகள் மாறி ஏறிக்கொள்வோம்..//
சட்டமும் சமுதாயமும் அனுமதிக்கிறதில்லையே மாப்பி!
அன்பின் ரங்கா
படமும் கவிதையும் அருமை
சிந்திக்கத் துவங்கி விட்டாய் நன்று நன்று
உடலே படகு - படகுகளை மாற்றுவோம் - புரியவில்லை ரங்கா
முயற்சிக்கு நல்வாழ்த்துகள்
Post a Comment
வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.