
முதல் முதலாக புவி வெப்பமடைவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலக நாடுகளில் உள்ள மக்கள் பலர் ஒன்று சேர்ந்து நாளை சனி இரவு 8 : 30 மணி முதல் 9:30 மணி வரை தங்கள் வீடுகளில் விளக்கை அணைத்து தங்களின் விழிப்புணர்வை வெளிப்படுத்த இருக்கிறார்கள்.

இது போன்ற முயற்சி எர்த்ஹவர் என்கிற இயக்கம் மூலமாக 2007ல் துவங்கப்பட்டது.
முதல் முதலாக 2007ல் ஆஸ்திரேலிய மக்கள் 2.2 மில்லியன் பேர் தங்களுடைய வீடுகளில் உள்ள விளக்குகளை அணைத்து தங்களுடைய ஓட்டினை எர்த் ஹவருக்கு பதிவு செய்தனர்.
அடுத்த ஆண்டே 2008ல் 50 மில்லியன் பேர் தங்களுடைய ஓட்டினை இவ்வாறு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இயக்கத்தை இந்த வருடம் இந்தியாவும் இந்த ஆண்டு ஆதரிக்க முன்வந்துள்ளது.
நமது நாட்டில் இந்த இயக்கத்தினை தலைமையேற்க பாலிவுட் நடிகர் அமீர்கான் முன்வந்துள்ளார்.
இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு மட்டுமல்லாமல் உலக வெப்பமாதலில் நமது நாடும் முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே வரும் சனிக்கிழமை இரவு உங்கள் வீடுகளில் உள்ள விளக்குகளை அனைத்து எர்த் ஹவருக்கு உங்கள் ஓட்டினை பதிவு செய்யுங்கள்.
உங்களின் ஓட்டுகள் அனைத்தும் பதியப்படுவது மட்டுமின்றி அது
கோபென்ஹாகனில் நடக்கவிருக்கும் புவி வெப்பமடைதல் மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும் என்பது குறிப்படத்தக்கது.
இன்று வரை சரியாக 80 நாடுகளில் உள்ள 825 நகர மக்கள் இதற்கு ஆதரவு தெரிவுத்துள்ளனர்.
நமது நாட்டில் இன்ஃபோசிஸ், விப்ரோ, HSBC , HP ஆகிய நிறுவனங்கள் இதற்கு ஆதவளித்துள்ளன.
நீங்களும் உங்கள் மேலான ஆதரவினை அளிக்குமாறு கேட்டுகொள்கிறேன்.
மேலும் தகவலுக்கு இங்கே சுட்டவும்.
உங்களின் கருத்துக்களை வரவேற்கிறேன்.
13 comments:
பயனுள்ள பதிவு! எல்லோரும் புவிக்கு ஓட்டுப் போடுவோம்!
நல்ல பதிவு
//நாமக்கல் சிபி சொன்னது…
பயனுள்ள பதிவு! எல்லோரும் புவிக்கு ஓட்டுப் போடுவோம்!//
மிக்க நன்னி தல.
உங்கள் ஓட்டு உலகத்துக்கு.!!
//கிரி சொன்னது…
நல்ல பதிவு//
நன்றி கிரி.
பயனுள்ள பதிவு!
:))) என்னுடைய ஓட்டும் :D
//G3 சொன்னது…
:))) என்னுடைய ஓட்டும் :D//
போட்டாச்சா.. சந்தோஷம்.
நல்லது.
அப்படியே எல்லாருக்கும் சொல்லிடுங்க.
நல்ல பதிவை கொடுத்து இருக்கிறீர்கள் ரங்கன்
விவரமாக பதிவை பகிர்ந்தமைக்கு நன்றி !!
//
இன்று வரை சரியாக 80 நாடுகளில் உள்ள 825 நகர மக்கள் இதற்கு ஆதரவு தெரிவுத்துள்ளனர்.
நமது நாட்டில் இன்ஃபோசிஸ், விப்ரோ, HSBC , HP ஆகிய நிறுவனங்கள் இதற்கு ஆதவளித்துள்ளன.
//
VERY GOOD and we too
உங்க template வெகு ஜோர் :))
//RAMYA சொன்னது…
நல்ல பதிவை கொடுத்து இருக்கிறீர்கள் ரங்கன்
விவரமாக பதிவை பகிர்ந்தமைக்கு நன்றி !!//
வருகைக்கு நன்றி ரம்யா.
நீங்களும் இது பத்தி நாலு பேருக்கு சொல்லிடுங்க.
சரி
குட் பாய்.. நானும் பதிவு போட்டிருக்கேன். இன்னும் சிலர் கூட பதிவிட்டிருக்கங்க. நல்ல விழிப்புணர்வு. சந்தோஷமா இருக்கு. :)
Post a Comment
வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.