Wednesday, April 13, 2011

மாப்பிள்ளை வீடு, பொண்ணு வீடு, வாயை மூடு!!



என் வாழ்வில் பல திருமணங்களை பார்த்திருக்கிறேன், என் தங்கை திருமணம் உட்பட.
அவைகளில் உள்ள சில விஷயங்கள் எனக்கு முரணாகவும், முட்டாள்தனமாகவும் ஏன் கொஞ்சம்
கீழ்த்தரமானதாகவும் கூடப் படுகிறது.
அதில் முக்கியமான ஒன்று.. நான் மாப்பிள்ளை வீடு என்று பந்தா காட்டுவது. எதோ மைக்ரோஸாப்ட் ஓனரின்
ஒன்னுவிட்ட கஸின் போல சீனைப்போட்டுக் கொண்டு ஒருசில பெண்களும் ஆண்களும்
பெண்வீட்டுக்காரர்களை சீண்டுவதும், அதிகாரம் பண்ணுவதுமாய் இருப்பார்கள். பெண்வீட்டுகாரர்கள் மனதிற்குள்
பொருமினாலும் வெளியே சொல்லாமல் சிரித்தும், நாசூக்காக தவிர்த்தும் அவர்களை அனுசரித்துகொள்வர்.
இப்படி ஒரு ஆணை பெற்றேன் என்று பெருமை அடித்துகொள்வதை நினைத்தால் சிரிப்பாய் இருக்கிறது.

சொல்லப்போனால் பெண்வீட்டுகாரர்கள் தான் பந்தா பண்ண வேண்டும். ஆணின் மொத்த பலமே.. பெண் தான்.
ஆண் தன்னை ஆண் என்று உறுதி செய்வதற்கும் ஒரு பெண்ணே தேவையாகிறாள். அவளின் அன்பும் அரவணைப்பும்
ஆணிற்கு மிகவும் முக்கியமானதாகவும், அவளின் புத்திசாலித்தனமும் நாசூக்கும் வாழ்க்கை சுமூகமாக செல்ல வழிவகுப்பதாகவும், தானே தாயான பின்னும் கணவனின் இரண்டாவது தாயாகவும் மாறும் பெருமையான பிறவியாக பெண் இருக்கிறாள்.

(உடனே பெண்ணியவாதின்னு நினைச்சுட்டீங்கன்னா உங்க தலைக்கு ஒரு செல்லக்குட்டு..நான் அவன் இல்லை :) )..

இப்படி ஒரு பெருமைக்குரிய பெண்ணை மணப்பெண்ணாய் ஒரு ஆணை நம்பி அனுப்புவதை நினைத்து பெருமையும்
பூரிப்பும் அடையவேண்டியது பெண்வீட்டார் தான். ஆனால் நிலைமை அப்படியா இருக்கிறது..

அந்த பெண்ணை அவர்கள் படுத்தும் பாடு... மாப்பிள்ளையை எப்படி அனுசரித்து போவது? மாமியாரை எப்படி வழிக்கு கொண்டுவருவது?
மாமனார் எப்படி? என மாப்பிள்ளை குடும்பத்தாரை பற்றி பேசி பேசி அந்த பெண்ணின் மனதில் பெருமளவு பீதியை கிளப்பிவிட்டுகிறார்கள்..
சமையல் குறிப்பு முதல் அழகு குறிப்பு வரை.. வந்தார் போவாரெல்லாம் அட்வைஸ் மழை பொழிந்து தள்ளி..
அந்த பெண்ணை திக்குமுக்காட செய்துவிடுகிறார்கள். பாவம் அந்த ஜீவன்.. இவ்வளவு பெரிய தலைவலியா திருமண வாழ்க்கை என்று..
திருமணத்திற்கு முன்பே நோக ஆரம்பித்துவிடுகிறாள்.

அதுமட்டுமில்லாமல், கொடுக்கும் சீரில் அது இல்லை இது இல்லை என்றும்..நாங்கள் அது செய்தோம்..இவங்க இவ்வளவுதானா என்று கம்பேரிஸன் கண்மணிகள் வேறு ஒரு பக்கம்..


அடுத்த தொல்லை ஹோம குண்டம்.. வேர்த்து விருவிருத்து.. சீக்கிரம் கட்டிடுப்பா தாலியைன்னு கடுப்பா உட்கார்ந்திருப்பாங்க.
அடுத்து..போட்டோ செஷன்..
நாளைக்கே போட்டோ ஆகப்போகிறவர்கள் முதற்கொண்டு எல்லாரும் சுற்றி சுற்றி வந்து சுட்டுதள்ளுவார்கள்.
அத்தனை போட்டோவிலும் புன்னகைக்க வேண்டும். இல்லாவிடில் அதுக்கும் பிரச்சனை கிளப்பும் கூட்டம் இது.

இப்படியெல்லா வகையிலும் அவளை படுத்தி எடுத்ததில்லாமல் அந்த சடங்கு இந்த சடங்கு என அடுத்த இரண்டு மூன்று மணிநேரங்கள்
கூத்து நடக்கும்..

இதெல்லாம் எதற்கு செய்கிறோம் என்ற அர்த்தம் புரியாமல் சொல்லுதுங்க...செஞ்சி தொலைப்போம் என்று மாப்பிள்ளையும் பெண்ணும் பொம்மைகளாய்
வலம் வருகின்றனர்.

இப்படி பல்வேறு வகையில் பெண்ணை வதைத்தே திருமணங்கள் நடக்கின்றன.


வெரி ஸேட்.. கொஞ்சமாச்சும் மாருங்கப்பா..!!


Monday, April 4, 2011

நீ காதலின் புன்னகை..!




உண்மைதான் புரிகிறது..
உன் பாசம் தெரிகிறது..

காதல் கொண்ட கண்ணில்
கோபம் கொட்டிக் கிடக்கிறது..

ஆசை சொல்லும் இதழில்
ஆத்திரம் பொங்கி வழிகிறது..

புன்னகை பூக்கும் முகம்
பூகம்பமாய் என்னை பார்க்கிறது..

தென்றல் வீசும் பேச்சு
இன்று இடியென இடிக்கிறது..

சாரல் வீசும் சொற்கள்..
கற்கள் வீசி செல்கிறது

வண்ண கண்களை கத்தியாக்கி
என் இதயத்தில் கீறாதே..

சொற்களின் சூரிய சுட்டீல்
என்னை சுட்டுவிடவும் பார்க்காதே..

தாமதம் தவறுதான்..
தயவுசெய்து என்னை மன்னி..

நாம் காதல்செய்யும் நேரமிது
புரிந்துகொள்ளடி என் கன்னி..

கண்கள் மெல்ல பார்த்து
காற்றாட காலாட நடந்து
காதல் செய்வதை விட்டுவிட்டு..

அட..
இதோ.. வருகிறது..
இன்னும் கொஞ்சம்..


அட வந்துவிட்டதே புன்னகை..!!
என் அழகிக்கு அழகு சேர்க்கும் பொன் நகை..!!