Showing posts with label கடுப்பு. Show all posts
Showing posts with label கடுப்பு. Show all posts

Monday, April 23, 2012

பெண்களும் அழகியலும்..என் வருத்தமும்





..க்ரீம்கள், லோஷன்கள், ஸன்ஸ்க்ரீன்கள், பீல்-ஆஃப்கள், சோப்புகள் இப்படி அத்தனையும் விற்கிறது இந்த வியாபார உலகம்.
அதை கண்ணை மூடிகொண்டு வாங்கி பூசிகொள்கிறது இந்த பெண்களின் உலகம்(கொஞ்ச காலமாய் ஆண்களின் உலகமும்)

. ஃபேர் அண்ட் லவ்லியின் ஏழே நாளின் சிகப்பழகு பிரச்சாரம், என் வீட்டில் இருபது வருடமாய் நிரூபிக்கமுடியாமல்
மீண்டும் மீண்டும் முயற்சி செய்யப்படும் ஒரு அறிவியல் ஆய்வு.

நான் ஒரு நாள் என் அம்மாவிடம் சொன்னேன் “மேக்கப்பில், மேற்புறத்தில் அழகாய் இருப்பது அழகே இல்லை. உள்ளிருந்து ஒரு தெளிவு உன் கண்களிலும்
முகத்திலும் ஒளிரும்பொழுது வருவதே அழகு” என்று சொல்லி புரியவைத்தேன். அன்றே அவர் அந்த பேர் அண்ட் லவ்லியை தூக்கி எறிந்துவிட்டார்.

நான் ஒன்றும் தலை சீவாதே, சுத்தமாய் இருக்காதே என்று சொல்லவில்லை. கண்டமேனிக்கு எதையாவது தடவி, பிறரைவிட நான் அழகு என்று
காட்டிகொள்ள போராடாதே என்று சொல்கிறேன். யாராவது “உன்னைவிட நான் பெரிய முட்டாள் தெரியுமா? பார் என் முட்டாள்தனத்தை” என்று பரைசாற்றுகொள்வார்களா?

இப்பொழுதைய பெண்களை கவனிக்கையில் ஒன்று நன்றாக தெரிகிறது.
தன்னை எவ்வளவு வருத்திகொள்ளவும் அவர்கள் தயார், ஆனால் யாராவது ஒருவராவது தன் அழகை ரசித்துவிட வேண்டும் என்கிற மனப்பாங்கிற்கு வந்துவிட்டனர் போல.
இருக்கமான சுடிதார்களும், ஜீன்ஸும், காலை, உடலை சுற்றி, இறுக்கிகொண்டிருக்கும் ஆடைகளும், ”அய்யோ கடவுளே, ஏன் இப்படி இருக்கிறார்கள்” என்று என்னை மனதிற்குள்
அலறவைக்கிறது. தன்னை சவுக்கால் அடித்துகொண்டு பணம் கேட்பார்களே சிலர், அவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? இதுவும் ஒருவகை குரூரம் தானே. அவன் சாட்டையால் அடித்துகொள்கிறான், இவள் ஆடையால் இறுக்கிகொள்கிறாள். This is Masochism.

வயதுக்கேற்ப ஆடைகள் அணியலாம் என்பது என் கருத்து. 30 வயதை கடந்தவர்கள், அதற்கேற்ற ஆடைகளை அணிவதை விடுத்து, 20 வயது பெண்களைப்போல் சுடிதாருக்குள் சிறைப்பட்டு சித்திரவதைப்படுவது எந்த விதத்தில் புத்திசாலித்தனம் என்று எனக்கு புரியவில்லை.

அன்றொரு நாள் அப்படித்தான், ஒரு முகூர்த்தத்திற்கு செல்ல வேண்டி இருந்தது, வேர்க்க விருவிருக்க பட்டு புடவை அணிந்து வந்தார், பார்க்கவே பாவமாக இருந்தது.
வெயிலில் செல்லப்போகிறோம், ஒரு நீட்டான காட்டன் புடவை அணியலாமே, அதுவுமில்லாமல், அங்கே கும்பலாக இருக்கும், அங்கே இன்னும் வியர்க்குமே என்றேன்.
நான் ஒருத்தி மட்டும் அப்படி போவதா? என்று வாதத்திற்கு வந்தாரே தவிர, என்பக்க நியாத்தை கேட்கவில்லை. சரியென்று விட்டுவிட்டேன்.

ஒரு தெளிந்த மனிதன் தன்னை நிம்மதியாக வைத்திருப்பவைகளையே தேர்ந்தெடுப்பான் என்பார்கள், தெளிவானவர்கள் என்று ஆண்களால் நினைக்கப்பட்டுகொண்டிருக்கும் பெண்கள், இப்படி மிகச்சிரிய விஷயங்களில் கூட தெளிவாய், நிம்மதியாய் இல்லாது இருப்பது வருத்தமளிக்கிறது.

பி.கு: மொத்த பெண்ணினமே இப்படி என்று சொல்லவரவில்லை,என் கண்ணுக்கு தெரிந்த மனிதர்களை, பெண்களை கண்டதில் எழுத தோன்றியது. எழுதுவிட்டேன்..!!

Wednesday, April 13, 2011

மாப்பிள்ளை வீடு, பொண்ணு வீடு, வாயை மூடு!!



என் வாழ்வில் பல திருமணங்களை பார்த்திருக்கிறேன், என் தங்கை திருமணம் உட்பட.
அவைகளில் உள்ள சில விஷயங்கள் எனக்கு முரணாகவும், முட்டாள்தனமாகவும் ஏன் கொஞ்சம்
கீழ்த்தரமானதாகவும் கூடப் படுகிறது.
அதில் முக்கியமான ஒன்று.. நான் மாப்பிள்ளை வீடு என்று பந்தா காட்டுவது. எதோ மைக்ரோஸாப்ட் ஓனரின்
ஒன்னுவிட்ட கஸின் போல சீனைப்போட்டுக் கொண்டு ஒருசில பெண்களும் ஆண்களும்
பெண்வீட்டுக்காரர்களை சீண்டுவதும், அதிகாரம் பண்ணுவதுமாய் இருப்பார்கள். பெண்வீட்டுகாரர்கள் மனதிற்குள்
பொருமினாலும் வெளியே சொல்லாமல் சிரித்தும், நாசூக்காக தவிர்த்தும் அவர்களை அனுசரித்துகொள்வர்.
இப்படி ஒரு ஆணை பெற்றேன் என்று பெருமை அடித்துகொள்வதை நினைத்தால் சிரிப்பாய் இருக்கிறது.

சொல்லப்போனால் பெண்வீட்டுகாரர்கள் தான் பந்தா பண்ண வேண்டும். ஆணின் மொத்த பலமே.. பெண் தான்.
ஆண் தன்னை ஆண் என்று உறுதி செய்வதற்கும் ஒரு பெண்ணே தேவையாகிறாள். அவளின் அன்பும் அரவணைப்பும்
ஆணிற்கு மிகவும் முக்கியமானதாகவும், அவளின் புத்திசாலித்தனமும் நாசூக்கும் வாழ்க்கை சுமூகமாக செல்ல வழிவகுப்பதாகவும், தானே தாயான பின்னும் கணவனின் இரண்டாவது தாயாகவும் மாறும் பெருமையான பிறவியாக பெண் இருக்கிறாள்.

(உடனே பெண்ணியவாதின்னு நினைச்சுட்டீங்கன்னா உங்க தலைக்கு ஒரு செல்லக்குட்டு..நான் அவன் இல்லை :) )..

இப்படி ஒரு பெருமைக்குரிய பெண்ணை மணப்பெண்ணாய் ஒரு ஆணை நம்பி அனுப்புவதை நினைத்து பெருமையும்
பூரிப்பும் அடையவேண்டியது பெண்வீட்டார் தான். ஆனால் நிலைமை அப்படியா இருக்கிறது..

அந்த பெண்ணை அவர்கள் படுத்தும் பாடு... மாப்பிள்ளையை எப்படி அனுசரித்து போவது? மாமியாரை எப்படி வழிக்கு கொண்டுவருவது?
மாமனார் எப்படி? என மாப்பிள்ளை குடும்பத்தாரை பற்றி பேசி பேசி அந்த பெண்ணின் மனதில் பெருமளவு பீதியை கிளப்பிவிட்டுகிறார்கள்..
சமையல் குறிப்பு முதல் அழகு குறிப்பு வரை.. வந்தார் போவாரெல்லாம் அட்வைஸ் மழை பொழிந்து தள்ளி..
அந்த பெண்ணை திக்குமுக்காட செய்துவிடுகிறார்கள். பாவம் அந்த ஜீவன்.. இவ்வளவு பெரிய தலைவலியா திருமண வாழ்க்கை என்று..
திருமணத்திற்கு முன்பே நோக ஆரம்பித்துவிடுகிறாள்.

அதுமட்டுமில்லாமல், கொடுக்கும் சீரில் அது இல்லை இது இல்லை என்றும்..நாங்கள் அது செய்தோம்..இவங்க இவ்வளவுதானா என்று கம்பேரிஸன் கண்மணிகள் வேறு ஒரு பக்கம்..


அடுத்த தொல்லை ஹோம குண்டம்.. வேர்த்து விருவிருத்து.. சீக்கிரம் கட்டிடுப்பா தாலியைன்னு கடுப்பா உட்கார்ந்திருப்பாங்க.
அடுத்து..போட்டோ செஷன்..
நாளைக்கே போட்டோ ஆகப்போகிறவர்கள் முதற்கொண்டு எல்லாரும் சுற்றி சுற்றி வந்து சுட்டுதள்ளுவார்கள்.
அத்தனை போட்டோவிலும் புன்னகைக்க வேண்டும். இல்லாவிடில் அதுக்கும் பிரச்சனை கிளப்பும் கூட்டம் இது.

இப்படியெல்லா வகையிலும் அவளை படுத்தி எடுத்ததில்லாமல் அந்த சடங்கு இந்த சடங்கு என அடுத்த இரண்டு மூன்று மணிநேரங்கள்
கூத்து நடக்கும்..

இதெல்லாம் எதற்கு செய்கிறோம் என்ற அர்த்தம் புரியாமல் சொல்லுதுங்க...செஞ்சி தொலைப்போம் என்று மாப்பிள்ளையும் பெண்ணும் பொம்மைகளாய்
வலம் வருகின்றனர்.

இப்படி பல்வேறு வகையில் பெண்ணை வதைத்தே திருமணங்கள் நடக்கின்றன.


வெரி ஸேட்.. கொஞ்சமாச்சும் மாருங்கப்பா..!!


Wednesday, March 23, 2011

நான் இந்தியனில்லை.. நான் இந்துவுமில்லை..!!




எனக்கு இன்னைக்கு காலைல தாங்க தோணிச்சு..
அட.. நாம இந்த நாட்டுல பிறந்தது நம்ம தலையெழுத்தா?
இல்லை எதேச்சையான ஒரு விஷயமா? ம்ம்ம்..
எனக்கு நல்லா தெரியும் இது தலையெழுத்து இல்லைன்னு.. எனக்கு மொட்டை போட்டபோது எடுத்த போட்டோஸ் எல்லாத்தையும்..
ஜூம் பண்ணி பண்ணி பார்த்தேன்.. ”இந்தியனாய் பிற”ன்னு எதுவும் எழுதலை.. ஸோ..நோ தலையெழுத்து..

அப்போ.. எதேச்சையா நடந்த ஒரு விஷயம்.. ஓ.. அப்போ நான் இந்தியனெல்லாம் இல்லை..
இங்க பிறந்ததால இந்தியன்னு மெச்சிகலாம்.. அப்போ இதுல என்ன பெருமை இருக்கு?
நிறைய பேரை பாருங்க.. நான் இந்தியன்.. நான் ஆரியன்.. நான் திராவிடன்.. நான் அது.. நான் இது..
ஸ்ஸ்ஸப்பா.. எத்தனை ”..ன்”கள்.. முடியல..

இந்தியா ராக்கெட் விட்டா.. ஆஹா..இந்தியனாய் இருப்பதில் பெருமை.. அதே இந்தியா வேற நாட்டுகிட்ட
(முக்கியமா பாகிஸ்தான்)கிட்ட தோத்துட்டு வந்தா.. அந்த விளையாட்டு வீரர்கள் வீட்டை இடிக்கிறது.. பொம்மை எறிப்பு, அப்புறம்
இந்தியனாய் இருப்பதே அவமானம்னு புலம்பல்.

ஏன் இந்த வெட்டி பந்தா..ஏன் இந்த வீண் சோகம், வெறுமனே லாஜிக்கா யோசிச்சாலே போதும் இந்த எல்லா “..ன்”களும்
காணாம போய்டும். அப்படி என்னத்த இழந்துட்டீங்க.. அப்படி என்னத்த சாதிச்சிட்டீங்க.. ஒன்னுமில்லை..
இன்னும் இமயமலைதான் உசரமா இருக்கு.. இன்னும் கடலன்னை உங்களை மீறி சுனாமியா வரத்தான் செய்யுது..
Then what is the point in all the "ians"?

ஸோ..யாருக்கும் அவங்க அவங்க நாட்டை நினைச்சு பெருமைப்பட்டுக்கவோ, கேவலப்பட்டுக்கவோ வேண்டிய அவசியம் இல்லை!!

..அடுத்து வருவது மதம்..

ஸேம் லாஜிக்.. எதேச்சையா ஒரு இந்து அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பிறக்கவேண்டியதா போச்சு.... உடனே நானும் இந்துவாம்..
என்ன நியாயம் இது? நான் இந்துவாக இருப்பதும் வேறுமதத்தினனாய் இருப்பதும் என் தனிப்பட்ட உரிமை. இவங்களா எப்படி என் முதுகுல
இந்துன்னு சீல் குத்தலாம்? முதுகுலனா கூட பரவாயில்லை..தெரியாது ..சட்டை போட்டு மறைச்சிடலாம்.. ஆனா
நெத்தில விபூதி, குங்குமம், அப்புறம் அதென்னது..ஆங்..சந்தனம்.. ஃபர்பெக்ட்.. தேசிய கொடி கணக்கா எங்கப்பா வெச்சிவிட்டு அனுப்புவாரு..
அவருக்காக அதை ஏத்துக்குட்டேன்..அவரோட மதத்துக்காக அல்ல!! அதை ஒரு கிறுஸ்துவ டீச்சர் அழிச்சப்போ ஒரு இந்துவா எனக்கு
கோபமே வரலை.. என் தந்தையின் பாசமான பிள்ளையா எனக்கு செம கடுப்பு.

இப்படி சின்னவயசுல இருந்தே மதம் என்னை எப்பவும் பாதிக்காம தொல்லை பண்ணாம இருக்கணும்னு நினைச்சேன்.. இன்னும் நினைக்கிறேன்..
பட்..உலகம் அப்படி இல்லை.. எப்போ பாரு மதபீத்தல்கள். என் கடவுள்தான் பெருசு, உன் கடவுள் டம்மி பீசுன்னு அடிச்சுக்கறாங்க.
ஏன்.. இந்துகளுக்குள்ளயே.. மூணுகண்ணன் சிவன் பெருசா? நாலுகை நாராயணன் பெரிசான்னு இன்னும் சண்டை....
(சின்னவயசுல அம்மா மூணுகண்ணன் வரான்னு சொல்லி சோறு ஊட்டுவாங்க.. ஒருவேளை இவராத்தான் இருக்குமோ?!)

இப்படி.. மதம் சம்பந்தமா அடிச்சிக்கிறது அர்த்தமே இல்லாத ஒரு வேளை. (எனக்கு சாமி கும்பிடுவதே அர்த்தமில்லாத வேலை)
எதேச்சையா ஒரு இந்து குடும்பத்திலோ, ஒரு இஸ்லாமிய அல்லது கிருத்துவ குடும்பத்திலோ பிறந்துவிட்டதால்..
நம்மை நாமே இந்து என்றோ, முஸ்லிம் என்றோ, கிருத்துவன் என்றோ நினைத்துகொண்டால் அது முட்டாள்தனம்.

சோ.. நம்மை பற்றி எதுவும் (கடவுள் உள்பட) எதுவும் கவலைப்படவில்லை. நாம் தான் தேவையே இல்லாமல் எல்லாவற்றையும்
பற்றி கவலைப்பட்டு, நேரத்தை வீணாக்கி மனநோயாளிகளாய் திரிகிறோம்.

மதமும், நாட்டு பற்றும் போலி வேஷங்கள். ஏமாற வேண்டாம்.

கொஞ்சம் மாத்தி யோசிங்க.. நான் மனிதன்ன்னு பெருமைப்படுங்க.. உலக உயிரங்களிலேயே தன்னை தனக்குள் தேடும்
ஒரே உயிரனம் மனிதன் மட்டுமே.
வாழ்வை ரசித்துவாழ, நம்மால் மட்டுமே முடியும். அன்பும், அரவணைப்பும், கவிதையும், காதலும், பாட்டும், ஓவியமும்,
கலையும், நயமும், ஆடலும் பாடலுமாய்.. மட்டற்ற மகிழ்ச்சியோடு வாழும் ஒரே உயிரனம் மனிதன் மட்டுமே..!!

Thursday, November 5, 2009

பிடிக்கும்...ஆனா...பிடிக்காது!!!


எத்தன சொன்னாலும் கேக்குறாங்களா..ஹ்ம்ம்..
நானும் சிக்கிட்டேன் இந்த தொடர்பதிவில்..
அழைத்த முரளிக்குமாருக்கும், கலாம்மா(புதுகைத் தென்றல்)க்கும் நன்றி..ரெடி ..ஸ்டார்ட்..

1. அரசியல் தலைவர்:

பிடித்தவர்: காமராஜர்.

பிடிக்காதவர்: இப்போதைய எந்த _____ யும் பிடிக்காது..!!

2. எழுத்தாளர்:

பிடித்தவர்: சுஜாதா..(even we both have same Real Name,S.Ranga Rajan)

பிடிக்காதவர்: சாரு நிவேதிதா.(கண்ல படாம இருந்துக்க தம்பி, இல்லன்னா நான் பொறுப்பில்ல)

3. கவிஞர்:

பிடித்தவர்: பாரதியார், வைரமுத்து, கண்ணதாசன், தமிழரசி(அட நம்ம எழுத்தோசை எழுதுறவங்க!!)

பிடிக்காதவர்: டப்பாங்குத்து பாடல் எழுதும் இரண்டாம் தர கவிஞர்..?!கள்..

4. இயக்குனர்:

பிடித்தவர்: ஸ்ரீதர், பாலசந்தர், மணிரத்னம், அமீர், சேரன், பாலா, ஷங்கர்.

பிடிக்காதவர்: பேரரசு, கே.எஸ்.ரவிக்குமார்(ஆதவனுக்காக மட்டும்)

5. நடிகர்:
பிடித்தவர்: விக்ரம், சூர்யா

பிடிக்காதவர்: விஜய், அஜீத்.(மக்களை ஏமாத்தும் மவராசனுங்க..நல்லா இருங்கடே!)
6. நடிகை:

பிடித்தவர்: அசின், ஆச்சி மனோரம்மா, ஜெனிலியா(உன்னை பார்த்தாலே சிரிப்பு வருதே ஏன்?)

பிடிக்காதவர்:
நமீதா(தண்டம் ஆஃப் தமிழ் சினிமா),
பியா(அழகு முகத்தை குரங்கு மாதிரி வெச்சிகிட்டு நடிக்கிது இது),
த்ரிஷா(நீங்க நடிச்சு நான் பார்த்ததே இல்ல! aaannggg..!!)
நயன்தாரா (என் தாய்மாமனை கூட விட்டு வெக்கலைங்க இவங்க!!)

7 . இசையமைப்பாளர்:

பிடித்தவர்: இளையராஜா, ரஹ்மான், வித்யாசாகர்

பிடிக்காதவர்: எல்லார் இசையிலும் ஏதாவது ஒரு பாடல் பிடித்திருக்கிறது.

8. பாடகர்:
பிடித்தவர்: விஜய் யேசுதாஸ் (தாய் தின்ற மண்ணை பாட்டுக்காக), கார்த்திக் , எஸ்.பி.பி, மனோ

பிடிக்காதவர்: உதித்..(வேணாம்..தமிழ் பாவம்)

9. பாடகி:
பிடித்தவர்: ஜானகி, சொர்ணலதா, சுனந்தா, ஜென்சி, நித்யஸ்ரீ.

பிடிக்காதவர்: மன்மத ராசா பாடகி.
10. விளையாட்டு வீரர்:

பிடித்தவர்: விஸ்வநாதன் ஆனந்த், சக் தே இண்டியா! தன்ராஜ் பிள்ளை.

பிடிக்காதவர்: அம்புட்டு கிரிக்கெட் வீரர்களையும்...
( ball பட்டாலே மேட்ச்சுக்கு லீவ் எடுக்குறானுங்க..இவுனுங்க வீரர்களாம்..ச்சீஈஈ)..

ஹப்பாடி..ஒரு வழியா தொடர்பதிவு போட்டாச்சு..
இந்த தொடர்பதிவுக்கு நான் அழைப்பது..(சிக்கவிடுவது!!)
1. ரம்யா(will to live)
2.தமிழரசி(எழுத்தோசை)
3. ரசனைக்காரி(எனது ரசனை)
4. சீனா
5. இயற்கை(இதயப்பூக்கள்)
6.மயாதி(கொஞ்சும் கவிதைகள்)

Tuesday, October 13, 2009

Farmville'யில நீங்க எந்த லெவெல்?

http://vator.tv/images/attachments/020909121934gameBig_farmville.jpg


நானும் ..நானும்..நானும்...

இப்படி எத்தனையோ பேர்..சேர்ந்துகிட்டு இருக்காங்க.. ஃபார்ம் வில்லி Farmvilley என்னும் விவசாயம் பண்ணும் விளையாட்டுக்கு!!

அதில் பூசணிக்காய் விதைச்சா சாயங்காலம் அறுவடை..அதுல ஒரு குறிப்பிட்ட பணம் சம்பாதிக்க முடிகிறது...இப்படித்தான் நார்மலா
நாம் யோசிப்போம்..நான் யோசிச்சேன்.. எனக்கு லெவெல்களை பற்றி கவலை வந்ததே கிடையாது.. விளையாட்டு தானே என்று பொறுமையா
விளையாடுவேன்..

சில நாள் முன்னாடி என் நண்பரிடம் அரட்டையில் இருந்தேன் ..நான் பத்துவார்த்தை பேசினால் அவர் ஒரு வார்த்தையில் முடித்துகொள்கிறார்..
என்னடா இது..”பிஸியா இருக்கீங்களா? ” என்று கேட்டால் ஆமாம் என்றார்.

பிறகு நானும் ஃபார்ம்வில்லி பக்கம் போன போது தான் தெரிந்தது அவர் பிஸியாக இருந்தது இங்குதான் என்று..

இதுக்கூட பரவாயில்லை..இதை வைத்து ஈகோ சண்டை வேறு.. சில இடங்களில் நடந்ததாக கேள்விப்பட்டேன்.

நண்பரே நான் உங்களை சில கேள்விகள் கேட்கிறேன்..பதில் சொல்லுங்க பார்ப்போம்..

1. அங்க நீங்க சம்பாதிக்கும் பேரும் புகழும் எந்த வகையிலாவது உங்களுக்கு உதவ போகிறதா?

2. ஒரு ஜாலிக்கு தான் விளையாடுறோம்னு சொல்லும் உங்களுக்கு ஒரு கேள்வி.. இருக்கும் வேலைவெட்டியெல்லாம் விட்டுட்டு..
ஒரு நல்ல நண்பனின் அருகாமையை விட..அந்த குப்பை விவசாயம் உங்களுக்கு முக்கியமாய் போனதன் காரணம் என்ன?

3. அதில் வரும் பணத்தை கொண்டு..வீடு வாங்க முடியுமா? ஒரு சைக்கிள் போல்ட் வாங்கக்கூட வழியில்லாத அந்த விளையாட்டை
ஏன் இவ்வளவு வெறித்தனமாக ஆடுகிறீர்கள்...?

4. பல லெவெல் கடந்த மாமேதைகளுக்கு ஒன்று தெரிந்திருக்கும்..இது நேரத்தை கொள்ளையடிக்கும் ஒரு விளையாட்டு என்று(கிரிக்கேட் போல)..
அப்புறம் ஏன் அதிலேயே ஊறி உங்கள் நண்பர்களை அவமானப்படுத்தறீங்க..

5. தமிழ்மண நண்பர்கள் சொன்ன சேதி ஒன்று இன்னும் அதிர்ச்சி அளித்தது.. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் ப்ளாக் படிக்கப்படும் சதவீதம்
12% குறைந்துள்ளது.. என்று.. அதிர்ச்சிதான்..எனக்கும்..ஏன் இப்படி அதன் மீது ஒரு கிறுக்கு?

6. நான் அவனுக்கு பத்து பரிசுகள் அனுப்பினேனே..ஏன் அவன் ஒன்று கூட அனுப்பவில்லை..ஏன் பணம் சேரவே மாட்டேங்குது.. நிலத்தின் அளவை அதிகரிக்கலாமா?

இப்படியெல்லாம் யோசிக்கும் நீங்கள் ..அங்க ஒருத்தன் காத்திருக்கானே நமக்காக..அவரை விட..அந்த நல்ல நட்பை விட இந்த குப்பை முக்கியமா? என்று யோசிப்பது இல்லை..?


7. நீங்கள் ஆர்கூட் அக்கவுண்ட் வைத்திருந்தாலே அந்த நிறுவனத்திற்கு தினமும் 0.05 செண்ட் லாபம்.. ஆர்க்கூட்டை விட எத்தனையோ படி பலம் வாய்ந்தது இந்த ”முகரைப்புத்தகம்”..
அப்போ நீங்கள் தினமும் அந்த வலைப்பக்கத்திலேயே அதிகம் செலவிடுவதால்.. அவர்கள் எவ்வளவு சம்பாரிப்பார்கள்.. ?
தினமும் எத்தனை கோடிகள் புரளுமோ? தெரிந்தே நம் மின்சாரம்..நமது நேரம்..நமது மன உளைச்சலை போட்டு
ஏன் கண்ட நாய்க்கு சம்பாரிச்சு தரணும்..அதில் நமக்கு பத்து பைசா நமக்கு தேறாத போதும்?

8. அந்த லெவெல்ஸும் பணமும் வராமல் இருந்தால்.. நீங்கள் அதை விளையாடுவீர்களா?

ஒண்ணு கடைசியா சொல்லிக்க விரும்பறேன்.. அது ஒரு போதை வஸ்து.. நீங்க விவசாயமே பண்ணாட்டியும் அந்த வலைப்பக்கத்தில் நீங்கள் இருந்தால் அவனுக்கு பணம் சேரும்.
உஷாரா இருந்துக்கோங்க மக்கா.. ஒரு நாள் போதை தலைக்கு மீறி போய்ட்டா..நீங்கள் கண்டுக்காம விட்ட நண்பர்கள் கைக்கொடுப்பார்களா? நிச்சயம் கொடுப்போம்..

அதற்கான முதல் கட்டம் தான் இந்த பதிவு...

யோசிங்க.. Add Neighbours-க்ளிக் பண்றதுக்கு முன்னாடி உங்களுக்காக காத்திருக்கும் Real Friends-ஐ மறந்துடாதீங்க..!!

Friday, October 9, 2009

Engineering College for Humans!!!! (எச்சரிக்கை- இது கொஞ்சம் கடுப்பான பதிவு!)

http://cdn.sheknows.com/articles/fighting-couple.jpg


இனியும் என்னால பொறுக்க முடியாது..
இனி களத்துல குதிச்சுட வேண்டியதுதான்.. எப்படியாச்சும் இந்த புத்திமதியை, ஆதங்கத்தை நம்ம வலையுலகத்துல கொட்டிடணும்னு முடிவு பண்ணிட்டேன்.

ஒரு பழமொழி உண்டு ..ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்னு..

அதுபோல..இப்ப இந்த மனுஷ இனத்தையே ரெண்டு பண்ணி மனுஷங்களே கொண்டாடிக்கிறாங்க..!

இந்த சேலம் மாநகராட்சியில ஒரு பெயர் சொல்ல விரும்பாத..கல்லூரியில..

கல்லூரி பேருந்து விடுறாங்க..(இதுல என்னா ஆச்சரியம்னு தானே கேக்குறீங்க.?)...
அதுல முன்னாடி உக்கார்ந்து வரணுமாம் பெண்கள்.. பின்னாடி பசங்க வரணுமாம்..

சரி..கழுத..போய் தொலையுதுன்னு உக்கார்ந்த அடுத்த கண்டிஷன் பொண்ணுங்க கிட்ட எக்காரணம் கொண்டும் பேசவே கூடாதாம். இதை நினைச்சு சிரிக்கிறதா..அழுவுறதா? இல்ல அந்த காலேஜ் பிரின்சிபாலை மிதிக்கிறதான்னு தெரியலை..!!

அதுமட்டும் இல்லாம பேசுனது தெரிஞ்சா ரெண்டு நாளு சஸ்பெண்டு வேறயாம்..!!

அசிங்கமா இல்லை..!! ஒரு மனுஷன் இன்னோரு மனுஷ ஜென்மத்துகிட்ட பேசுவதை.. மூணாவதா இன்னோரு மனுஷ ஜென்மமே தடுக்குது..!!

அப்பா சாமிகளா..! அறிவு ஜீவிகளா! உங்க எல்லாருக்கும் ஒரு பெரிய கும்புடு..
இனிமேவாச்சும் யோசிச்சு பேசுங்க..உங்க வீட்டுலயும் ஒரு பொண்ணோ பையனோ இருக்கும் என்கிறதை ஞாபகம் வெச்சுக்கோங்க..!!

ஆணின் இயல்புகள் பெண்ணிற்கும் ..பெண்ணோட இயல்புகள் ஆணிற்கும் நிச்சயம் தெரிஞ்சிருக்கணும்..அப்படி தெரியாதவங்க மனுஷங்களா? எவ்ளோவோ படிச்சிருக்கோம்.. இதை ஏன் கண்டு பயப்படுறோம்?

தன் சக இனத்(மனித இனம்)தின் சைக்காலஜியையும் அனாடமியையும் தெரிஞ்சுக்காத ஒரே இனம் நாமா தான் இருப்போம்...!!

ப்ளீஸ்... நான் சொல்ல வரது இதுதான்.. பெண் பெண்ணா அழகா லட்சணமா இருக்கட்டும்..ஆனால் அவளுக்கு ஆணிடம் பேசவும் பழகவும் தைரியத்தையும் தெளிவையும் இந்த சமூகம் வளர்க்கட்டும்..

இதுவே தான் ஆணுக்கும்..

ப்ளீஸ் மச்சீஸ், கேர்ள்ஸ்!! இனிமே உங்க வாழ்க்கைய நீங்க வாழுங்க..உங்க அப்பா அம்மா வாழ்க்கைய அப்படியே ஜெராக்ஸ் பண்ணிட்டு இருக்காதிங்க..ஆல் தி பெஸ்ட்..!!

பி.கு : என் ப்ளாகுல நான் என்ன வேணா எழுதுவேன் என்று சொல்லபோவதில்லை.. அதே போல் பிறருக்காக நான் எழுவதை நிறுத்த போவதும் இல்லை.. என்ன சில நேரம் இப்படி கடுப்பா டைப் பண்ணிடுறேன்..ஹாஹாஹஹ..!!