Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Friday, September 10, 2010

புத்தரை தடுமாற வைத்த கேள்வி!



என்னது புத்தரையே தடுமாற வெச்ச கேள்வியா? ஆமாங்க..
அப்படி யோசிச்சு கேள்விகேட்டது யாருங்க? இருங்க சொல்றேன்..
ஞானி..எல்லாம் தெரிஞ்சவர் அவர் ஏன் தடுமாறினாரு? எல்லாம் தெரிஞ்சதாலதான்..

Tuesday, March 23, 2010

ஒரு சோம்பல் முறிப்பும், ஒரு ஜென் கதையும்-2

ரொம்ப்ப்ப்பபப நாள் ஆச்சுங்க பதிவு போட்டு..என்ன செய்ய வேலை பென்ட கழட்டுது.
சரி.விஷயத்துக்கு வருவோம்.
என் செல்ல அம்மா பேரில் வந்திருக்குற “அவள் பெயர் தமிழரசி” படத்தை எல்லாரும் பார்த்திருப்பீங்கன்னு நினைக்கிறேன். படம் நல்லாவே வந்திருக்கு. எனக்கும் பிடிச்ச படம் அது.

நேற்று ஒரு ஜென் கதை ஒன்னு படிச்சேன்.அதன் ஆழமும் கருத்தும் ரொம்ப நல்லா இருந்தது.
அதை உங்களோட பகிர்ந்துக்க விரும்பறேன்.


http://webwarriortools.com/images/ebooks/email-zen.jpg


: ஒரு கோப்பை தேநீர் :
அந்த இளவரசர்கள் நாலு பேருக்கும் அந்த துறவியை சந்திக்க அவர் குடிலுக்கு வந்திருக்கிறார்கள்.
அந்த துறவி அவர்களை வரவேற்று அமர செய்தார். அவர் வந்த விஷயம் என்னவென்று கேட்டார்.
அந்த இளவரசர்கள் சொன்னார்கள் : வாழ்க்கை என்பது என்ன ? இத்தனை துன்பங்களும் வாழ்க்கையின் அங்கமாகி போனதன் சூட்சுமம் என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டுகிறோம் ..
என்றனர்.
துறவி புன்னகை பூத்தார். சரி சற்று பொறுங்கள். டீ சாப்பிட்டுவிட்டு இதை பற்றி யோசிக்கலாம் என்று சொன்னார். இவர்களும் ஆமோதித்தனர்.

சில நிமிடங்கள் கழித்து ஒரு தட்டில் சில கோப்பைகளுடன் ஒரு கூஜாவில் டீயை ஊற்றி எடுத்து
வந்தார் துறவி. தட்டை அவர்கள் முன் வைத்தார். அவரவர்களுக்கு வேண்டிய கோப்பையை தேர்ந்தெடுத்துக்கொள்ள சொன்னார்.

அந்த தட்டில் இருந்ததோ நான்கு வகையான கோப்பைகள். ஒன்று- சுத்தமான தங்கத்தாலும்,
மற்றொன்று- சுத்தமான வெள்ளியாலும், மூன்றாவது- சுத்தமான செம்பாலும், நான்காவது- களிமண் கோப்பையாகவும் இருந்தது.

இளவரசர்கள் குழம்பினர். ஒருவரை ஒருவர் முறைக்கவே ஆரம்பித்துவிட்டனர். என்ன செய்ய..எல்லாருக்கும் தங்க கோப்பை மீதே ஆசை. இப்படியே சில நிமிடங்கள் மவுன போராட்டம் தொடர்ந்தது.
இதை பார்த்துகொண்டிருந்த துறவி சொன்னார். “இளவரசர்களே! இதோ இதுதான் வாழ்க்கை ”என்று
அந்த சூடான நறுமணம் மிக்க டீயை காட்டினார். ”நீங்கள் கோப்பைக்கு ஆசைப்பட்டு டீயை வீண்டிக்கிறீர்களே..? இது எந்த வகையில் நியாயம்? என்னதான் தங்ககோப்பையில் குடித்தாலும் இதே டீயை தான் குடிக்க போகிறீர்கள். களிமண் கோப்பையிலும் இதே டீதான் கிடைக்க போகிறது!
எனவே கோப்பை எது என்பது விஷயமல்ல..டீயை சுவைப்பதே முக்கியம்” என்றார்.
அவர்களுக்கு அப்போது தான் புரிந்தது : “பணம், அந்தஸ்து, கவுரவம் என்ற கோப்பைகள் எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாம் அனுபவித்து மகிழவேண்டியது இந்த வாழ்க்கை என்கிற டீயை தானே வேறொன்றுமில்லை..” என்பது.


Friends, இனிமேலும் டீயை வீணடிக்காதீர்கள் ஏனெனில் கோப்பை எப்போது வேண்டுமானால்
மாறலாம், ஆனால் நமக்கு எப்போதும் கிடைப்பது ஒரே ஒரு சுவையான வாழ்க்கைதான்..!!

by,
Rangan

Monday, December 7, 2009

கண்ணாமூச்சி..!!



அம்மா..ஒரே ஒரு தடவை மா..ப்ளீஸ் மா!!..

என்னடா இப்படி நச்சு பண்ற..என்ன வேணும் உனக்கு இப்போ?

கண்ணாமூச்சி ஆடணும்..மா..

இங்கயா? இந்த குடிசைல கண்ணாமூச்சி ஒண்ணுதான் குறைச்சல்…
சரி.. போ..போய் ஒளிஞ்சிக்கோ..!!

ஹையா ஜாலி..அம்மா திரும்பி நில்லு..

ம்ம்..சரிங்க துரை..!

முருகன் ஓடிப்போய் அருகில் இருந்த மரப்பலகை பின்னால் ஒளிந்துகொண்டான்.

முருகா..எங்கடா போய்ட..அச்சச்சோ..முருகனை காணலையே..டேய் திருட்டுபயலே..எங்கடா போய்ட..பொய்யாக தேடினாள் கண்ணம்மா.

களுக்கென்று வெட்கத்தோடு சிரிப்பு வந்தது முருகனுக்கு..

அம்மா நான் இங்கே இருக்கேன் என்று எழுந்து நின்றான்..

அடப்பாவி..அங்க போய் ஒளிஞ்சிகிட்டியா..கில்லாடிடா நீ..

ஹப்பா..இவனுக்கு எவ்வளவு சந்தோஷம்..இவளுக்குள்ளும் மகிழ்ச்சி தொற்றிகொண்டது. அணைத்துகொண்டாள் மகனை.

கண்ணம்மா..!! ஓங்கி ஒலித்தது ஒரு ஆண் குரல்.
சிடுசிடுப்பான முகம். கோபப் பார்வை. கலைந்த தலை. கசங்கிய சட்டை.
குடிசைக்குள்ளே நுழைந்தான் ராமசாமி.

வாங்க..!! காப்பி போடவா?

ம்கும்..இந்த ஊருல ஒரு நாய் என்னை மதிக்கிறதில்லை..காப்பி ஒன்னு தான் குறைச்சல்…போட்டு தொல போ..!!

சரிங்க..!..சில நிமிடங்களில் காப்பியோடு வந்தாள்.
அப்பா..ஆசையாய் கட்டிகொள்ள வந்தான் முருகன். கைகளை தட்டி விட்டு நாற்காலியில் அமர்ந்தான்.

என்னடா? என்ன வந்துச்சு உன் அப்பனுக்கு..? சொல்லு

பா.. கண்ணாமூச்சி ஆடலாமா பா..?

டேய்..அரைஞ்சி பல்லை எல்லாம் கழட்டிடுவேன்..இந்த குடிசைல கண்ணாமூச்சிதான் குறைச்சல்.. போடா போய் படிக்கிற வேலைய பாரு..

காப்பியோடு வந்த கண்ணம்மா முருகன் முகம் வாடுவதை கவனித்தாள்.

ஏங்க ஆசையா கேக்குறான்..ஒரு தடவ தானே..

ஏய் யாருடி இவ... சரிடா.. போ..போய் ஒளி..

ஹைய்யா..மீண்டும் அதே மரப்பலகை அருகில் ஒளிந்துகொண்டான்.

என்ன கோபமோ.. நேராக அவனை இழுத்து வந்து நடுகூடத்தில் போட்டு ஒரு அறை அறைந்தான்.ராமசாமி.

கலங்கியபடி அம்மாவிடம் சேர்ந்துகொண்டான் முருகன்.

ஏண்டா..அந்த பலகை பக்கம் போகாதேன்னு சொல்லி இருக்கேன்ல..விழுந்தா எவன் செலவுக்கு அழுவறதாம்?

ஸாரிப்பா..இனிமே போகலை..!! கண்ணில் நீர் பெருகியது.
வாசல் அருகில் அமர்ந்துகொண்டான்.

ஏங்க அவனை இப்படி வையறீங்க..பாவம் அவன்..!!

ஏய்..ஏண்டி.. நானே கம்பெனிக்காரனுங்க பண்ண கூத்துல கடுப்பா இருக்கேன்..இவன் வேற..

இவன் கம்பெனி கதையை சொல்ல..அவள் வீட்டு கதைகளை சொல்ல..
சில மணி நேரங்கள் உருண்டது.

ஆமா..எங்க முருகனை காணோம்? முருகா..!!..
தேடினார்கள்..தேடிக்கொண்டே இருந்தார்கள்..

காலையில் தான் கண்டுபிடித்தினர்..

முருகன் அந்த ஊர் கோவில் குளத்து நீரில் ஒளிந்திருப்பதை..அவன் அதில் அதுவாக மிதந்த போது..!!



Sunday, November 1, 2009

ஒரு சோம்பல் முறிப்பும்..!! சில ஜென் கதைகளும்!!

நான் புதுமையானவன்

புதுசா தலைப்பு(ஹெட்டர்) மாத்தியாச்சு..!!
கீழ பஞ்ச் டயலாக் கூட மாத்தியாச்சே!!
ம்ம்.. அப்புறம்..என்னை தெரியுதா.. ரொம்ப நாளா சரியா பதிவு போடும் மனநிலையில் இல்லாமல்..அல்லாடி தள்ளாடி..மீண்டும் களத்துல ஜம்முனு குதிச்சாச்சு..

சரி..இன்னிக்கு என்ன பதிவலாம்னு யோசிச்ச போது..!!!!!!!
இப்படி பல Exclamatoryயை மனசுக்குள்ள கொண்டுவரும் ஜென் கதைகள் பல்பாய் எறிஞ்சுது.

நீ செய்ய வேண்டாம் நீ செய்தால் போதும்,
நீ வாழ நான் சாகவேண்டி இருக்கும்..

இப்படி பல குழப்பமான பஞ்ச் டயலாக் இருக்கும் பல ஜென் கதைகளை படிச்சு இருக்கேன்.. என்றாலும்..அதில் இருக்கும் அதீத சொல்லாடலும், தத்துவங்களும் என்னை ரொம்ப கவர்ந்தன.

அதில் குறிப்பிட்ட சில ஜென் கதைகளை இங்க தரேன்..படிச்சுட்டு சொ(கொ)ல்லுங்க..!!

எங்கிருந்து வந்தது..?
ஒருவன் ஒரு ஜென் துறவியைக் காண வந்தான். அவரிடம், "இவ்வுலகில் இப்போது புத்தர் இருக்கிறாரா? இல்லையே? எதுவுமே இல்லை என்பதில் தான் இருக்கிறது. அனைத்துமே வெற்றிடம் தான். யாரும் எதுவும் கொடுப்பதில்லை. எதுவும் பெறுவதில்லை." என்றான்.

உடனே அந்த துறவி அவனை தன்னிடமிருந்த ஒரு குச்சியால் ஒரு அடி அடித்தார்.

அவனுக்குக் கோபம் வந்து விட்டது.

"எதுவுமே இல்லை என்றால் உனது கோபம் எங்கிருந்து வந்தது அப்பனே!", என்று கேட்டார் துறவி.


உண்மையான மகிழ்ச்சி!!

ஒரு ஜென் துறவியைச் சந்திக்க ஒரு பணக்காரர் வந்திருந்தார். துறவியிடம் தாம் தம் வழித்தோன்றல்களுடன் மகிழ்ச்சியாக வாழ ஒரு வழி சொல்லுமாறு வேண்டிக் கொண்டார். துறவியும் ஒரு ஓலையை எடுத்து "தந்தை இறப்பார். மகன் இறப்பான். பேரன் இறப்பான்." என்று எழுதிக் கொடுத்தார். பணக்காரருக்கு கடும் கோபம் வந்தது. "என்ன இது? வாழ்வைப் பற்றிக் கேட்டால் சாவைப் பற்றி சொல்கிறீர்களே?", என்று கேட்டார். துறவியோ சிரித்துக் கொண்டே, "வாழ்விற்குத் தான் வழி சொல்லி இருக்கிறேன். நீங்கள் இறக்கும் முன் உங்கள் மகனோ, உங்கள் பேரனோ இழந்தால் அது மகிழ்ச்சி தருமா? எனவே உண்மையான மகிழ்ச்சி என்பது இயற்கையின் வழி வாழ்ந்து இயற்கையாகவே இறப்பது", என்றார்.


விடுதியா? அரண்மனையா?

ஒரு ஜென் குரு ஒரு அரசனின் அரண்மனை நோக்கி வந்தார். நேராக அரசவைக்கே சென்றார். அரசனின் சிம்மாசனத்துக்கு அருகில் வந்ததும், அரசனே, " ஐயா! உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டான்.

அவரோ, "இந்த விடுதியில் ஓரிரவு தங்க இடம் வேண்டும்" என்றார்.

அரசனோ, "இது விடுதி அல்ல. அரண்மனை." என்றான்.

ஜென் குரு, "உனக்கு முன் இது யாருடையது?" என்றார். "என் தந்தையாருடையது".

"அவருக்கு முன்?" என்ற குருவிற்கு "என் பாட்டனாருடையது" என்றான் அரசன்.

இப்படி ஒவ்வொருவரும் சிறிது காலமே தங்கிச் சென்ற இது விடுதி இல்லாமல் வேறென்ன? என்றார் குரு.

இன்னும் இருக்கு..இருந்தாலும் இத்தோட நிறுத்திகிக்க சொல்லி பட்சி சொல்லுது..

நீங்க என்ன சொல்றீங்க...?

அதோட.. எனக்கு தெரிஞ்சு.. ஐநூறூஊஊஊஊஊஊ(500!!).. பதிவுகள் எழுதின ஒரே பதிவர்.. நம்ம புதுகை தென்றலுக்கு தனிப்பட்ட முறையில் ஒரு வாழ்த்துகளையும் சொல்லிக்கிறேன்..!!

Monday, September 28, 2009

சீட்டிங் சிறுகதைகள்!




கள்ளா!



http://boyfriendcheat.files.wordpress.com/2009/03/how-to-catch-a-cheating-husband_hubsite40a.jpg



மாலை 7.30 மணி.

களைப்பாய் உள்ளே வருகிறான் ராம்.

”புவனா ஒரு காபி கிடைக்குமா?”

”ஏன் அவ போட்டுகுடுக்கலையா?”

அதிர்ந்த ராம், மனதிற்குள் சொல்லிக்கொண்டான் .
”எவனோ போட்டுகுடுத்துட்டான்”

காதலா?!

http://i.ehow.com/images/GlobalPhoto/Articles/5203617/cheating-main_Full.jpg

மதியம் 12 : 30


அலோ உமா.

அவ இல்ல.. வசு பேசுறேன்.

ஹப்பாடி..ஹேய் எப்போ பீச்சுக்கு போலாம்?

இன்னிக்கு ஈவனிங்..!

”சரி.. பார்த்து வா. அவளுக்கு தெரிஞ்சுட போகுது.”

12: 31

..கடற்கரையில் உமா.. அவள் காதலனிடம்..
”ம்ம்..தெரிஞ்சிருக்க வாய்ப்பு இல்லை.. தெரிஞ்சா சமாளிச்சுக்கலாம்!!”

Thursday, August 27, 2009

ஒரு துண்டிக்கப்படாத இணைப்பு!


”குட் மார்னிங் சார்.. ஈஸ் திங் ராம்குமார்..”

”யெஸ் ராம்குமார் ஹியர்”

”நாங்க IJKLMN கம்பெனியில் இருந்து பேசுறோம்.
புதுசா ஒரு லோன் ஸ்கீம் ரிலீஸ் பண்ணி இருக்கோம்.
அதை பத்தி உங்ககிட்ட எக்ஸ்பிளையின் பண்ண இருக்கோம்.
ஒரு 5 மினிட்ஸ் ஒதுக்க முடியுமா ப்ளீஸ்”
கெஞ்சியபடி கொஞ்சினாள் அவள்.

“ம்ம்..ஸ்யூர்”..

ஐந்து நிமிடங்கள் முடிந்தது.
குரல் இனித்தது.
சொன்ன விஷயங்கள் மறந்தது.

”சரிங்க பாக்கறேன், நைஸ் வாய்ஸ். நாளைக்கு ஈவனிங் உங்க ஆபீஸ் வரேன்”

“தேங்க் யூ ஸார். ஸீ யூ.. பை”

”பை..”

மகிழ்ச்சியோடு இணைப்பை துண்டித்தாள் அவள்.

அடுத்த ஒரு நிமிஷத்தில் ராம்குமாரின் செல்போன் ஒலித்தது.

புவனா கூப்பிட்டாள்.

”என்னங்க..”

‘என்ன?”

“ வீட்ல கேஸ் தீந்துடும் போல இருக்கு வரும்போது சொல்லிட்டு வந்துடுங்களேன்.”

“ம்ம்.. சரி”

“அப்புறம் ... என்ன பண்ணிட்டு இருக்கீங்க..பிஸியா?”

”ஆமா.. ஒரு முக்கியமான பைல் பார்த்துட்டு இருக்கேன். சரி நான் அப்புறம் கூப்பிடுறேன்.. வை”

‘ம்ம்.. சரி..பை”..

எழுந்து காபி குடிக்க நடந்தான் ராம்குமார்.

வருத்தத்தோடு இணைப்பை துண்டிக்காமல் இவள்!!

Thursday, July 30, 2009

அலோ யாரு ஜார்ஜ் புஷ்ஷா?


அலோ யாரு ஜார்ஜ் புஷ்ஷா?

ஆமா நீங்க?

நாந்தான் பில் கிளண்டன் பேசுறேன்.

ஓ..சொல்லுங்க நலமா? லெவெண்ஸ்கி நலமா?

யாவரும் நலம் ஜார்ஜ், அங்க எல்லாரும் சௌக்கியமா?

ஆங்,, நலம்.!!

...பில் கிளிண்டனின் பின்னால் ஒபாமா நிற்கிறார்.

சார் நானும் பேசணும் ஒரு நிமிஷம்..

ஜார்ஜ்.. ஒபாமா பேசணுமாம்..

இல்லை வேண்டாம்.. நீங்க பேசுங்க.



ஒபாமா கைப்பேசியை வாங்கி கீழே எறிகிறார்.

கிளிண்டன் அதிர்ச்சியடைகிறார்.

புஷ்ஷீக்கும் அதிர்ச்சி.

டேய் ஒபாமா ஏண்டா இப்படி பண்ண?


ஒழுங்கா போய் தூங்கு.. இல்லனா சோனியா காந்தி கிட்ட சொல்லிடுவேன்..


பயந்துபோய் கட்டிலிக்கு ஓடிப்போய் படுத்துகொள்கிறார் கிளிண்டன்.

ஒரு பெருமூச்சு விடுகிறார் ஒபாமா.


இதெல்லாம் தினசரி வாடிக்கையாகிவிட்டது , இந்த பைத்தியகார ஆஸ்பத்திரிக்கும் நமது கம்பவுண்டர் ஓபாமா கந்தசாமிக்கும்!!!

Thursday, July 23, 2009

இரண்டாவது மணநாளில்!!


இன்று பார்கவனுக்கும், ஹேமாவுக்கும் இரண்டாவது கலியாண நாள்

என்னங்க.. ஸேரி நல்லா இருக்கா?

ம்ம்.. சூப்பர்.. அழகா இருக்குடா.

தேங்க் யூ டா தடியா!!

ஹேய்..என்ன கொழுப்பா? அடிங்க!

ஹாஹா..சும்மா . கண்ணடித்தாள் ஹேமா.


ஏங்க..அத்தைக்கு முந்திரி பக்கோடா, மாமாவுக்கு மெதுவடையும், முறுக்கும் பண்ணி இருக்கேன்.

பாவம் மாமா அத்தை இதெல்லாம் சாப்பிட வாய்ப்பே இல்லாம போச்சு.

பார்கவன் நெகிழ்ந்தான்.

ம்ம்.. உண்மைதான் ஹேமா.

உன் அக்கறை என்னை சிலிர்க்க வெக்கிது.

தோ..நான் கூட அப்பாவுக்கு பிடிச்ச மாதிரி டிரஸ் பண்ணி இருக்கேன்.

ம்ம்..கலக்குறீங்க.

சரி..சீக்கிரம் வாங்க அவங்க வெயிட் பண்ணிட்டு இருக்க போறாங்க!!

வீட்டு கதவை பூட்டிவிட்டு கிளம்பினார்கள் இருவரும்.

முதியோர் இல்லத்திற்கு!!



Thursday, July 9, 2009

ஹலோ... எமன் ஹியர்.. !!

-”டேய்.. சொன்னா கேளுடா.. ஏண்டா இப்படி பண்ற.”

-”மா. சும்மா இரும்மா..பேசும்போது நொய் நொய்னு. பேசிட்டு இருக்கோம்ல.”

-”டேய்.. மனோ. வேண்டாம்.. இப்போ நிறுத்த போறியா இல்லியா?”

- “.. ம்ம்..ஆமாடா.. அம்மாதான்... சும்மா அட்வைஸ் பண்ணிகிட்டு.. டென்ஷன் ஆகுதுடா.”

- “..என்னவொ போடா..நீ சொன்னா கேக்க மாட்டா.. அப்படியே அப்பன் புத்தி..ம்ஹீம்.”

-“ஹேய்..ஒண்ணு குடேன்.. ப்ளீஸ்டா.. என் செல்லம்ல..”

- “இப்படியே எத்தனை நாளைக்கு கொஞ்சிட்டு இருக்க போற?
ஒழுங்கா கலியாணம் பண்ணிக்கிற வழிய பாரு.. மனோ.”

- “ஹேய்.. அம்மா கட்டிக்க சொல்றாங்கடா . கட்டிக்கவா?
தோடா..வெக்கமா.. ம்ம்... அப்புறம்..”

...கீங்..கீங்..கீங்...

அம்மா, “என்னடா போன் கட்டா?”

மனோ, “ஆமாம்மா..பேலன்ஸ் காலி.”

செல்போனை பார்த்தபடி மனோ பைக்கின் ஆக்ஸிலேட்டரை திருக..

..சில பல.. பலமான சத்தங்களுக்கு பின்.

.
.
.

”அம்மா.. என்ன மன்னிச்சுடு.. நீ சொன்னது சரிதான்.. வண்டி ஓட்டும் போது போன் பேசி இருக்க கூடாது.”

தன் பிணத்தின் முன்னால் கதறும் தாயின் பின்னால் நின்றபடி மனோ சொல்லிகொண்டான்.


(பி.கு)..

நேற்று மட்டும் சேலத்தில் இருவர் சாலைவிபத்துகளில் பலி. இருவருமே சாலையில் டூவிலரில் செல்லும்போது செல்லில் பேசியபடி சென்றுள்ளனர்!!!

"வண்டியில் செல்லும்போது செல்லை தொடாதீர்கள்.
அழைப்பது எமனாகவும் இருக்கலாம்."

Thursday, July 2, 2009

ஒரு கவிஞனின் விதி...!!!


அப்போது எனக்கு வயது 16..

அன்றொரு நாள்..

..
ஆசையோடு நான்
சில புதுக் கவிதை
எழுதி வந்தேன்;

”ஏண்டா இப்படி பேப்பரா வீண் பண்ற?!” என்றாள் தங்கை.

“ஹோம்வர்க் செய்யறதை விட்டுட்டு,கவிதை கேக்குதா கழுதை” இது அப்பா

“பையன் போற போக்கே சரியில்ல சாந்தி, கொஞ்சம் அடக்கி வை” இது பாட்டி

...

ம்ம்.. அம்மாவும் திட்ட போகிறாள் என்று நினைத்தேன்.


ஆனால் தனியே என்னை அழைத்து..

“லூஸ்.. இதெல்லாம் தனியா என்கிட்ட காட்டி இருக்கலாம்ல.”

கவிதையை பார்த்துவிட்டு

”பரவாயில்லையே.. கவிதை எல்லாம் சூப்பர்.. ம்ம்.. அடுத்த வாலி நீதான்.”

நான் கேட்டேன்..

”வாலா.. வாலியா?”

அழகாய் சிரித்துவிட்டு சொன்னாள்.

“வாலிடா கண்ணா. அவர் ஒரு பெரிய கவிஞர்”. என்று சொல்லி என் தலை வருடினார்.

அப்போது அம்மாவை அப்பா முறைத்தார்.

மாலை..
அப்பா.
“ஏண்டி.. உன் புள்ளைதான் லூஸுன்னு பார்த்தா நீயுமா?”

அம்மா.
“ஏங்க..என்ன ஆச்சு இப்போ?”

அப்பா.
“பின்ன என்ன? அவன் கவிதை எழுதிட்டு வரான். நீ அவனை ரொம்ப புகழ்ற.”

அம்மா.
“ஆமா. புகழ்ந்தேன். அதுக்கென்ன இப்பொ?”

அப்பா.
“இப்படி ஆரம்பிச்சா. அவன் எப்படி ப்ராக்டிகல் வாழ்க்கையில் வாழ முடியும்?,,
எப்ப பார்த்தாலும் கவிதை, கற்பனைன்னே இருந்துட்டா.. சுத்தி நடக்குறது என்னனு தெரியாமலே போய்டும்.
அவன் மட்டும் இந்த உலகத்துக்கு அந்நியமா போய்டுவான். அவனை நீ என்கெரேஜ் பண்ணாதே”

அம்மா.
“அது எனக்கு தெரியாதாங்க. முதலில் என்கெரேஜ் பண்ற மாதிரி பண்ணுவேன். அப்புறம் போக போக, அது சரியில்லை
இது சரியில்லைன்னு சொல்லி. அவனை கவிதை எழுதுவது மேல ஒரு வெறுப்பு வர வெச்சுடுறேன். அப்புறம் அவன்
நம்ம வழிக்கு வந்து தானே ஆகணும். “

அப்பா.
“அட.. நல்லா தான் யோசிச்சுருக்க. குட். அவனை கவிஞனா பாக்க எனக்கு மனசு வரலை. அவன் பெரிய பிசினஸ் மேனா வரணும்.
அது தான் என் ஆசை.”

அம்மா
“என் ஆசையும் அதுதான்.”

..........

ஒரு மெல்லிய விசும்பலோடு.. அவைகளை கேட்டுகொண்டிருந்தேன் நான்.

முதன்முறையாக.. என் தாயே எனக்கு ஒரு எதிரியாக தெரிந்தார்.

என்ன செய்வது.. அவர்களின் தேடல் வேறு. என் தேடல் வேறு.


இறுதியாக...

ஒரு “ரகசிய வாழ்க்கை”யை துவங்குவது பற்றி யோசிக்க ஆரம்பித்தேன்.

இனி உலகுக்கு நான் பிஸினஸ் மேன். எனக்குள் ஒரு மகா கவி.

அன்று முடிவு செய்தேன்:

சுயத்தை இழந்து தானே வாழக்கூடாது. சுயத்தோடு வாழ்ந்துகொண்டே, உலகத்தோடும் வாழ்ந்து காட்டுகிறேன்.


பாட்டு பாஸ்கி : ஐ யம் பேக்.. !!

ஆஹா.. இது என்னடா அந்நியன் படம் பார்த்த எஃபெக்ட்டா இருக்குது.

ஆனா, அந்த பையன் பேர கடைசி வரை சொல்லவே இல்லியே நீ...?

Monday, June 22, 2009

பொல்லாதவன்-2..?!

ஹாய் நண்பர்களே!!

என்னடா இவன் எல்லாம் கதை சொல்லி கேட்கும் அளவுக்கு ஆகிட்டோமேன்னு ஃபீல் பண்ணாதீங்க.. எனக்கும் நல்லா கதை விட..ச்சே.. சொல்ல வரும்..

சரி கதைக்கு வருவோம்..!!

ராம்குமார் மார்க்கெட் அருகே வந்து தனது யமஹா கிளேடியேட்டரை நிறுத்தினான்.

"டேய் ராம்...எங்கடா இவ்ளோ தூரம்...?!" என்றார் சண்முகம்.

"அது ஒண்ணுமில்ல மாமா.. சும்மாத்தான் பாத்துட்டு போலாமேன்னு வந்தேன்"

-"சரி சரி.. வா.. கடைக்கு வா. எத்தன நாள் ஆச்சு உன்ன பாத்து .. ஆளே இளச்சி போன மாதிரி இருக்கியே ஏன்?"

"அட..என்ன மாமா இப்படி சொல்லிட்டீங்க.. நான் நேத்து தான் வெயிட் பாத்தேன்..
எடை 4 கிலோ கூடி இருக்கு.. நீங்க என்னடான்னா..."

"நீ என்ன சொன்னாலும் சரி மாப்ள.. நீ இளச்சுத்தான் போய்ட்ட... எங்க அக்கா சரியா சோறாக்கி போடுதா இல்லையா?!"

கடைக்கு உள்ளே சென்றனர்..

கடைப்பையனை பார்த்து சண்முகம்..

"தம்பி.. ஓடிப்போய் ஒரு கலர் வாங்கியா... பணம் அக்கவுண்ட்ல போட்டுக்க சொல்லு.."

கடைப்பையன்..
"ஆமா.. அவனுக்கும் பணத்துல அக்கவுண்டு.. எனக்கு சம்பளத்துல அக்கவுண்டு.. பக்கி" என மனதுக்குள் திட்டிக்கொண்டே செல்கிறான்.

"எதுக்கு மாமா வீண் செலவு " என்று சம்பிரதாயமாக சொல்லி வைக்கிறான் ராம்.

"இருக்கட்டும் மாப்ள..நமக்குள்ள என்ன?"... என்கிறார் சண்முகம்.

"ஆமா மாப்ள.. கேக்கணும்னு இருந்தேன்.. வண்டி கண்டிஷன் எப்படி?"

"அச்சோ மாமா.. மறந்தே போய்ட்டேன்" என அலறுகிறான் ராம்.

"என்ன மாப்ள.. என்ன ஆச்சு?"

"வண்டி சாவி..வண்டிலேயே இருக்கு. இருங்க.. வரேன்.."

பதறியடித்து கொண்டு ஓடினான்..

வண்டியை நெருங்கி பார்த்தான். சாவி அதிலேயே இருந்தது.

உடனே சாவியை எடுத்துகொண்டு திரும்பினான்.

செல்லும் வழியில் ஒரு விநாயகர் கோவில் இருந்தது.

அதில் விநாயகருக்கு ஒரு அர்ச்சனை செய்து விட்டு வெளியே வந்தான்.

சண்முகம் நின்றிருந்தார்..

"என்ன மாப்ள.. சாவி கிடைச்சுடுச்சுல்ல.. வண்டி இருக்குல்ல.. ?!"

"ஆங்.. இருந்துச்சு மாமா. நல்ல வேளை . ஒரு நிமிஷம் ஆடிப்போய்ட்டேன்"

"உன் நல்ல நேரம்.. மாப்ள.. இனிமே ஜாக்கிரதையா இருந்துக்கோ"


"சரி மாமா.. நான் கிளம்புறேன்"

"சரி மாப்ள.. உனக்கும் வேலை இருக்கும். போய்ட்டு வா"

நிதானமாய் வண்டியை நோக்கி சென்றான்.

டுத்த சில நிமிடங்களில்..

"சார்.. என் பேர் ராம்குமார்..என் வண்டிய காணோம்.. யாரோ திருடிட்டு போய்ட்டாங்க"..

ஏட்டு எட்டி பார்த்தார்.

"தம்பி ஒரு காபி..அப்படியே ரெண்டு வடை சொல்லிடு"

ராம்குமாரை பார்த்து..

"வாங்க.. சொல்லுங்க... என்ன விசேஷம்?"...

Sunday, March 29, 2009

என் தேவதையின் சோகம் :(

எப்போதும் போல இல்லை இன்று. மனம் சோகத்தின் நிழலோடு காணப்படுகிறது. கவிதைகள் சோகத்தை கரைக்கும் என்ற நம்பிக்கையோடு கவிஞானாகிறேன்.




அந்த குட்டி தேவதை கடவுளின் முன் சோகமாய் வந்து சேர்ந்தது

கடவுள் அதனுடைய வாட்டத்தை கண்டு அதனிடம் கேட்டார்.

"என்ன ஆனது.. உன் புன்னகைக்கு
என்ன ஆனது.. உன் பூரிப்பிற்கு
என்ன ஆனது.. உன் கண்களுக்கு
என்னவோ இழந்தது போல்
என்னவோ தொலைத்தது போல்
என்னவோ கிடைக்காதது போல்
ஏன் இந்த வாட்டம்..
நான் அறியலாமா உன் மன ஓட்டம்?"

தேவதை சொன்னது
" இறைவா எனக்கு கொடுப்பது பிடிக்கவில்லை"

கடவுள் சொன்னார்
" என்ன காரணம் என்று நான் அறியலாமா?"

தேவதை சொன்னது

"இறைவா..!!
நான் அன்பை நீட்டுகிறேன்
அதை பெற்றுக் கொண்டு
கன்னத்தில் அரைகிறது உலகம்;



நான் பூக்களை கொடுக்கிறேன்
அதை பெற்று கொண்டு
தீயால் சுடுகிறது உலகம்;


நான் புன்னகையை கொடுக்கிறேன்
அதை பெற்று கொண்டு
கண்ணீரை பரிசளிக்கிறது உலகம்;


நான் அரவணைப்பை கொடுக்கிறேன்
அதை பெற்றுக் கொண்டு
என்னை அசிங்கமானவன் என்கிறது உலகம்;


நான் ஆதரவை கொடுக்கிறேன்
அதை பெற்றுக் கொண்டு
அறிவுகெட்டவனவன் என்கிறது உலகம்;


நான் பாசத்தை மட்டுமே கொடுக்கிறேன்
அதை பெற்றுக் கொண்டு
"அவனோரு மிருகம்" என்கிறது உலகம்."

கடவுள் புன்னகைத்தார்..
தேவதை கன்னம் பிடித்து அதன் கண்களை பார்த்தார்.

"அதோ அங்கே பார்.. ஒரு மனிதன் வலியால் தவிக்கிறான்."

தேவதை சொன்னது
"ஒரு நிமிடம் இறைவா.. இதோ வந்துவிடுகிறேன்"

கடவுள் தேவதையின் கைகளை பிடித்து சொன்னார்.

"ஒரு நிமிடம்.. உனக்கு தான் கொடுப்பது பிடிக்கவில்லையே அப்புறம் ஏன் தவிக்கிறாய் ? "

தேவதை பதில் சொல்ல முடியாமல் தலைகுனிந்தது.

கடவுள் சிரித்தார்.
" அட என் அன்பு தேவதையே!! நீ கொடு வேண்டாமென்று நான் சொல்லவில்லை. ஆனால் அவர்களிடம் நீ எதையும் எதிர்ப்பார்க்காமல் கொடு. அப்படி கொடுக்க பழகிவிட்டால் உனக்கு சோகம் இருக்காது.
இப்படி கண்ணீர் வடிக்க வேண்டாம்.

கொடுப்பது உன் இயல்பு. அதுதான் உன்னை இயக்கும் உயிர். அதை நீ மாற்ற முயற்சிக்காதே. அதற்கு பதிலாக உன்னை நீயே சரி செய்துகொள்.
எதிர்பார்க்காமல் கொடு.அதுவே உனக்கு நான் தரும் உபதேசம்"

என்ன சரிதானே !! இப்போது கிளம்பு.."

தேவதை பிரகாசமான புன்னகையோடு சொன்னது :
"நன்றி இறைவா!! இது உங்களுக்காக "

தேவதை இறைவனின் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு அந்த மனிதனை நோக்கி பறந்தது.



பாட்டு பாஸ்கி :
ஆமா இது கதையா கவிதையா?

என்னவோ .. உனக்கு இப்போ மனஸ ரிப்பேர் பண்ணனும் .
க(வி)தைக்கேத்த பாட்டு என்கிட்ட இருக்கு.. கீழ பாரு.


"ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலை இல்லே.
நான் தான்டா என் மனசுக்கு ராஜா
தூவுங்கடா என் வழியில ரோஜா...

நீ கேட்டா கேட்டத கொடுப்பேன்..
கேக்குற வரத்தே கேட்டுக்கடா..

இந்த பாட்ட முழுசா கேளு..
தெம்பாகிடுவ.. என்னங்க.. இந்த பாஸ்கி சொல்றது சரிதானே...!!

Sunday, March 22, 2009

அவசர உலகில் ஒருவன் !

நேரம் 6 : 30
டிக் டிக்..
டிக் டிக்..
டமால்...!!


அலாரம் கீழே விழுந்து நொறுங்கியது.
"அய்யய்யொ.. போச்சு,ஸ்ஸ்ஸ்ஸ்.. "
உடைந்த பாகங்களை பொறுக்கிக் கொண்டு வாசலுக்கு நடந்தேன்.
தூக்க கலக்கம்.. நடக்கும்போதே லுங்கி அவிழ.
"அய்"
லுங்கியை பிடித்தேன். மீண்டும் அலாரம் சிதறியது.
மீண்டும் சில பாகங்கள் உடைந்தது.

ஒரு முறை கொன்றாலும் கொலையாளிதான்,
பலமுறை கொன்றாலும் கொலையாளிதான்.
ஏன் வேறு உதாரணமே கிடைக்கவில்லையா உனக்கு?
என மனதை திட்டுவிட்டு வாசலுக்கு
சடலத்துடன்..ச்சி..கருமம்..
உடைந்த பாகங்களோடு சென்றேன்.

அலாரத்துக்கு இறுதி அஞ்சலி செய்துவிட்டு..
பால் பாக்கெட்டை தூக்கி கொண்டு நடந்தேன்.

குளிர்சாதன பெட்டியில் அதை வைத்துவிட்டு
உள்ளே சென்றேன். போர்வையை மடித்தேன்.
காபி போட்டு குடித்தேன்.

நேரம் 6:45
குளிக்கப் போகிறேன்.
"அடடா!"
துணிகளை எடுக்கவேயில்லை மாடியிலிருந்து.
எடுக்க மேலே போனேன். வயலெட் ஜட்டி அப்புறம் வெள்ளை பனியன்.
மற்ற துணிகளையும் எடுத்துக்கொண்டு கீழே இறங்கும்போதுதான் பார்த்தேன்.

அதிர்ந்துபோனேன்.

"அவ்ளோ அழகான ஃபிகரை என்றைக்கும் பார்த்திருக்க மாட்டீர்கள்..
ஓ..ஃபிகர் என்று சொல்லிவிட்டேனா.. சாரி.. மங்கையை ..பெண்ணை .. போதுமா?!"
அப்படியே ஓரகண்ணில் ஒரு மெல்லிய பார்வை பார்த்தாள்.

ஆ.. இது பூமிதானே.. இல்ல வேற எதாவது சொர்க்கமா?

"போதும்டா போய் பொழப்ப பாருடா! பரதேஸி..! பரதேஸி..!"
வடிவேலு ஸ்டைலில் மனசாட்சி விரட்டியது.

"எனக்கு பேருதான் ராமன் மத்தபடி தினம் பல சைட்டுகள்.
சைட்டுகள் மட்டும்தான்.. ஹிஹி.."

உன்ன போட்டுதள்ளிட்டுதான் அடுத்த வேல..
ஒரு பொண்ண பாக்க விடுறியா? தொல்ல உன்னோட..

கண்டுகாதீங்க.. நானும் என் மனசாட்சியும் இப்படிதான் அடிக்கடி பேசிக்கொள்(ல்)வோம்.

நேரம் 7 : 20
"அய்யோ.. ச்சி..சீ.. என்னங்க.. பேசிட்டே பாத்ரூமுக்குள்ள வந்துட்டீங்க.."
நான் ஆண்தான் அதுக்காக வெக்கபடாம இருக்க முடியுமா.. ?வெளிய இருங்க.. வரேன்.ஹிஹி.."

"ம்ம்ம்.. ஸ்ஸ்ஸ்.. செம குளுரு.. "
"மெரூன் சர்ட் .. சாம்பல் கலர் பேண்ட். ஓகேதானே.. ?ஒக்கெ.."

போட்டாச்சு போட்டாச்சு.. எப்படி மாப்ள மாதிரி இருக்கனா ன்னு கேட்டேன் கண்ணாடிக்கிட்ட..
"உனக்கென்னடா.. அம்சமான ஆளுடா நீ.. கலக்குடா"அந்த பக்கத்தவன் சொன்னான்.. மகிழ்ந்தேன்.

டை.. கட்டுவதற்குதான் நேராமகிறது.வேகமாய் கட்ட பழகவேண்டும்..
இந்த கருமத்தை கட்டாமல் போனால் முறைப்பான் கரிசட்டிதலையன்.
கல்யாணத்துக்கு அப்புறம் அவள கட்டிவிட சொல்லி கட்டிக்கணும்.

ஓக்கே.. ஜம்ஜம்னு ரெடி ஆகியாச்சு.
போற வழில சாப்பிட்டுக்கலாம்.

பைக் சாவி எங்க..? ம். இருக்கு.
செல் இருக்கு.
பேக் இருக்கு.
ஷூ போட்டாச்சு.

கலக்கபோவது யாரு.. நாந்தான்..வூவ்.. !!
கேலண்டரில் ராசி பாக்கலாமே என திரும்பி பார்த்தேன்.

மார்ச் 22 2009. ஞாயிறு.
ஞாயிறு.. ஞாயிறு... ஞாயிறு..!!

அடச்சே.. இன்னிக்கு சண்டேவா?
தனியா மூணு நாள் இருந்ததுக்கே இப்படி ஆகிட்டனே.. அய்யோ..அய்யோ..!!

Tuesday, March 10, 2009

சந்துருவும்.. புதிய பப்பியும்

சந்துரு..எங்கடா கிளம்பிட்ட..?

மா.. விமல் வீட்டுக்கு போறேன்மா..

நானும் வரட்டுமாடா?

இல்லமா.. அடுத்த தெருதானே.. நானே போயிக்குறேன்..

சரி.. பொறுமையா போ.. கால் வலிக்க போகுது...

ம்ம்ம்... சரிம்மா.. கிளம்பறேன்..டாட்டா..

டாட்டா செல்லம்..

*******************************

சந்துரு படியிறங்கி நடந்தான்..
அப்படியே அவன் தாத்தாவின் மிலிட்டரி நடை..

சற்று நேரத்தில் விமல் வீட்டை அடைந்தான்
ஆனால் வீடு பூட்டி இருந்தது.

திரும்பி வீட்டிற்கே நடந்தான்.
செல்லும் வழியில் ஒரு புதிய கடை ஒன்று வந்திருப்பதை பார்த்தான்.
அருகே சென்று பார்த்தான். அது ஒரு "பெட் ஷாப்".

********************************

சந்துரு "உள்ளே வரலாமா?"

கடை முதலாளி அவனை வரவேற்றார்.

குட்மார்னிங்.. அங்கிள்..

குட்மார்னிங்...

என்னப்பா.. உனக்கு பேர்ட்ஸ் பிடிக்குமா.. அல்லது டாக்ஸ் பிடிக்குமா?

ரெண்டும்தான் அங்கிள், இப்பொ எனக்கு டாக்ஸ் பார்க்கணும்.

சரி வா.. பாத்துடலாம்.

**************************




இங்க பாரு... எல்லாமே அழகழகான பப்பீஸ். நல்லா இருக்கா..?

ஆமாம் அங்கிள்.. அருமையா இருக்கு...
அங்கிள்.. அது என்ன அந்த பப்பி மட்டும் ஏன் நொண்டுது ?
என்ன ஆச்சு அதுக்கு?


அதுவா.. அதுக்கு இடுப்பு எலும்பு அவளோ வலுவா இல்லப்பா.. அதனாலதான் நொண்டுது.

சே.. பாவம் அங்கிள் ... அங்கிள் நான் அந்த பப்பிய வாங்கிக்கறேன்.

தம்பி.. அது எதுக்குப்பா உனக்கு..?
அதானல.. ஓடமுடியாது.. வேகமா நடக்கவே கஷ்டப்படும்..
உன் கூட அது குதிச்சு குதிச்சு விளையாட முடியாது...

இல்ல அங்கிள்.. அதுதான் வேணும்.
எவ்ளோ அங்கிள் பணம் தரணும்?

இல்லப்பா அதுக்கு பணம் ஏதும் வேண்டாம்..
சும்மாவே தரேன்.. வச்சுக்கோ..

சந்துரு கோபமாக..
அங்கிள்.. அதெப்படி.. மத்த பப்பி மாதிரி தானே இதுவும்
இதுக்கு மட்டும் ஏன் விலை இல்லை..?


இல்லப்பா... வேணாம்.. நீயே எடுத்துக்கோ..
பணம் வேண்டாம்.

நோ.. அங்கிள்.. முடியாது..
சரி அந்த பப்பிக்கு என்ன விலை..?
சந்துரு வேறொரு பப்பியை காட்டினான்.

அது.. 1500 ரூபா..ப்பா.

ம்ம்.. இருங்க..
தன் பாக்கெட்டில் இருந்து.. 20 ரூபாயை எடுத்தான்.

இந்தாங்க... இப்போதைக்கு இத வெச்சிகங்க..
மாசாமாசம்.. பணம் அனுப்பிடுறேன்...
சரியா? என்று அவரின் கண்களை பார்த்தான்

அவருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

சரிப்பா.. பணம் வாங்கிக்கறேன்.
ஆனால் ஒரு சந்தேகம், ஏன் அந்த பப்பி மேல அவ்ளோ விருப்பம்?

அவன் புன்னகைத்தான்.
அவனுடைய ஃபேண்டை உயர்த்திக்காட்டினான் சந்துரு.

அவனுடைய வலது கால் மிகவும் மெலிந்து,
இரும்பு தகடுகள் பொருத்தப்பட்டிருந்தது.

அந்த பப்பியோட வலி எனக்குதான் புரியும் அங்கிள்.. அதான் நான் கேட்டேன்..
அங்கிள் குறை இருக்கறதனால எந்த உயிரும் குறைஞ்சி போய்டாது..
வரேன் அங்கிள்.

மலைத்துபோய் நின்றார் கடைக்காரர்.

சந்துரு."பப்பீ.. உனக்கு என்ன பேரு வெக்கலாம்..?"


பாட்டு பாஸ்கி : இதுக்கு சரியா பாட்டு
குறையொன்றுமில்லை.. மறைமூர்த்தி கண்ணா.. !
குறையொன்றுமில்லை கண்ணா...!!
குறையொன்றுமில்லை கோவிந்தா...!!!

(பி.கு) என்றோ படித்த ஆங்கில கதை இது ... நன்றி