Showing posts with label கலாய்த்தல். Show all posts
Showing posts with label கலாய்த்தல். Show all posts

Sunday, January 8, 2012

மக்களை பூமிக்கு கொண்டுவர சில வழிகள்


பொதுவாக நாம் சந்திக்கும் மக்கள் அனைவரும் எந்நேரமும் பூமியிலேயே இருப்பதில்லை..
சிலர் செவ்வாயிலும், சிலர் வெள்ளியிலும், சிலர் வியாழனிலும் இருக்கிறார்கள்..
எதோ ஒரு சிந்தனையில் எதோ இயந்திரம்போல் வேலை செய்துகொண்டிருக்கும் நம் அன்பு மக்களை மீண்டும் பூமிக்கு கொண்டுவருவது நம் கடமையல்லவா..அதற்குதான் சில வழிகளை யோசித்திருக்கிறேன்..

1. சாலை போக்குவரத்து அதிகாரி:
சிக்னலில் அவர் அருகே நிற்க நேர்ந்தால்..
“ஏம்பா, நானும் காலைல இருந்து பார்த்துகிட்டு இருக்கேன்.. நடுரோட்டுல நின்னு போற வர்ற பொண்ணுங்களுக்கு கைகாட்டிகிட்டு இருக்க..ஒருத்தனும் ஏன்னு கேக்க மாட்டேங்கறான்.. எந்த ஊருப்பா நீயி? பஸ்ஸ விட்டுட்டியா? காசு எதுனா வேணுமா? “ என்று நலம் விசாரிக்கலாம்.

2. நகை கடை ஊழியர்:
வேகமாக உள்ளே சென்று ஒரு “நல்ல” ஊழியராய் பார்த்து “ ரெண்டு கிலோ தங்கம், ஒரு கிலோ வெள்ளி, அரை கிலோ ப்ளாட்டினம், அப்படியே கலப்படம் பண்ண கொஞ்சம் கொசுறு செம்பு பார்சல் பண்ணுப்பா.. அப்புறம், நெக்லஸ் முப்பது, அட்டிகை இருபத்தஞ்சு, தங்க மோதிரம் ஒரு நாப்பது..அப்படியே முத்து முந்நூறு..ம்ம்..இப்போதைக்கு இவ்ளோதான்.. என்னப்பா முழிக்கிற..எழுதிக்கோப்பா..”

அப்படியே அங்கே கல்லாவில் அமர்ந்திருப்பவரிடம் சென்று “ தம்பி, லிஸ்ட் குடுத்துட்டேன்..சாயங்காலம் சரக்கெல்லாம் வீட்டுக்கு வந்தாகணும்..இல்லைன்னா அப்புறம் பார்த்துக்க” என்று மிரட்டிவிட்டு வரலாம்.

3. வங்கி பணியாளர்:
வெகு நேரம் ஒரு க்யூவில் நில்லுங்கள்.. பிறகு பக்கத்து க்யூவிற்கு மாறிவிடுங்கள், பிறகு மீண்டும் அடுத்த க்யூவிற்கு மாறிகொள்ளுங்கள்..வெகு நேரம் நின்றபின் உங்கள் முறை வந்தவுடன் “5 ரூபாய்க்கு சில்லரை இருக்கா?” என்று அவசரமாய் கேளுங்கள். உங்களை அவர்கள் வாழ்க்கைக்கும் மறக்கமாட்டார்.

4. கோவில் பூசாரி:
உங்கள் பேருக்கு அர்ச்சனை செய்துவிட்டு அவர் வெளியே வந்ததும்.. “அய்யரே, ஒன்னுமே புரியலை.. என்னய்யா மந்திரம் படிச்சீரு.. ஒழுங்கா புரியற மாதிரி இன்னொரு முறை சொல்லும்..போங்க..”  பலமுறை அவரை விரட்டுங்கள். அல்லது.
”நீயும்தான் தினமும் சாமிகிட்ட வேண்டுற, சாமி பக்கத்துலயே இருக்க.. ஆனா என்ன புண்ணியம்? ஒரு சட்டை கூட வாங்க வழியில்லை.. என்னை பார்த்தியா? எப்பவாச்சும் தான் வரேன்..ஒரு 2 நிமிஷம் தான் நிக்கறேன்..சட்டை பார்த்தீல்ல..500 ரூபா.. அதுக்கெல்லாம் குடுப்பணை வேணும்யா..” என்று சொல்லி கடுப்பேத்தலாம்.

5. ஹாஸ்பிடஸ் ரிஷப்ஷனிஸ்ட்:
வேகமாக அவரை அணுகுங்கள், மிக சீரியஸாய்
”இந்த 302ம் ரூம்ல இருக்கற பேஷண்ட் எப்போ சாவார்னு கொஞ்சம் பார்த்து சொல்ல முடியுமா?” என்று கேட்கலாம்.

6. கிஃப்ட் ஷாப் வைத்திருப்பவர்:
நேராக உள்ளே போய் “எடுங்க..எடுங்க..டைம் ஆச்சு..”
அவர் பேந்த பேந்த முழிப்பார்.
“அலோ, கிஃப்ட எடுங்க, என் கிஃப்ட எனக்கு குடுக்க இவ்ளோ யோசிக்கிறீங்க..”
என்று அவரை முழிபிதுங்க வைக்கலாம்.

7. மீன் விற்கும் கடை:
திடீரென சத்தமாக “ஏம்பா. திமிங்கலம் ரெண்டு, டால்பின் ஒண்ணு போடுப்பா, நேரமாச்சு.. அப்படியே ஆக்டோபஸ் அரைகிலோ பார்ஸல் பண்ணிடுஎ ..அப்படியெ கொசுறா கொஞ்சம் விண்மீன் போட்டுடு” என்று சொல்லலாம்.

8. ஜெராக்ஸ் கடை:

நீங்கள் உங்கள் நண்பரையும் இதில் கூட அழைத்துகொள்ளலாம்.
”ஏம்பா, வீட்ல ஏகப்பட்ட வேலை.. ஒரே ஆளா சமாளிக்க முடியலை.. என்ன ரெண்டு காப்பி ஜெராக்ஸ் எடு, இவரு என் நண்பரு, அப்படியே இவரையும் ஒரு காப்பி ஜெராக்ஸ் போட்டுடு..எவ்ளோ ஆகும்?” என்று பவ்யமாக கேட்கலாம்.

9. திருமண தகவல் மையம்:
நேராக உள்ளே சென்று, ”எனக்கு தெரிஞ்சு பையன் ஒருத்தன் இருக்கான், செவ்வாய் கிரகத்துல மணல் அள்ளுற வேலை, நல்ல் சம்பளம், வருஷம் ஒருக்கா ஒரு பத்து நிமிஷம் டான்னு வீட்டுக்கு வந்துடுவான், நல்ல உயரம்.. ஒரு 17 அடி இருக்கும், படிப்பு கம்மிதான்.. ஆள் ஆனா பூசினாப்படி..ஒரு லாரி சைஸ் இருப்பான்.. நல்ல செவப்பா இருப்பான்.. பொண்ணு எதுனா இருக்கா?” என்று கேட்கலாம்.

10. லேடிஸ் ஹாஸ்டல்:

அங்கே மேனேஜரிடம், அறிவியல் பூர்வமான சொல்லணும்னா ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு ஆண் இருக்கு, ஒவ்வொரு ஆணுக்குள் ஒரு பெண் இருக்கு. இப்போ எனக்குள்ளயும் ஒரு பெண் இருக்கு, அதனால என்னை இங்கெ தங்க அனுமதிக்கணும், இல்லைன்னா இங்க இருக்குற எல்லா பெண்களுக்குள்ளும் ஒரு ஆண் இருக்கு, எனவே எல்லாரையும் உடனே வெளியேற்றியே ஆகணும். ஏன்னா இது லேடிஸ் ஹாஸ்டல்” என்று மிரட்டல் விடுக்கலாம்..

11. ஹோட்டல் சர்வர்:

டிப்ஸ் கேட்கும்பொழுது:
”முதலில் நீ நன்றாக வேகமாக நடக்க பழகவேண்டும், அப்போதுதான் கஸ்டமருக்கு உன் மீது மதிப்பு வரும். இரண்டாவது, நீ பல்விளக்காது வரவே கூடாது. உன்னால் என் நண்பர் இரண்டுமுறை மயங்கிவிழுந்துவிட்டார். மூன்றாவது, மாதமொரு தடவை எப்பாடுப்பட்டாவது குளித்துவிட வேண்டும்.. எனக்கென்னவோ உன்னால்தான் இந்த ஹோட்டலில் ஒரு கெட்ட வாடை வருகிறதென்று தோன்றுகிறது”
 என்று இப்படி நல்ல நல்ல டிப்ஸ் கொடுக்கலாம். நிச்சயம் பயன்படும்.
மேற்சொன்ன ஐடியாக்களை செய்து பார்க்கும்பொழுது, ஏச்சுக்களோ, வசவுகளோ வாங்க நேர்ந்தால் அஞ்ச வேண்டாம். ஏனெனில், உங்களுக்கு அவர்கள் புத்திசாலித்தனமாக பதிலளிக்க முடியாமல் இருப்பது அவர்களது பிரச்சனை. நமக்கு அவர்களை பூமிக்கு கொண்டுவந்தாயிற்று.. அவ்வளவுதான். :)

Sunday, December 6, 2009

என்ன பேரு வேணும்..?

என்னடா இவன் பேரை எல்லாம் விலைக்கு விக்கிறானான்னு நினைச்சுடாதீங்க.. எல்லாம் ஒரு குறும்பு மெயிலால் வந்த வினை..

நீங்களும் இந்த குறும்பை படிங்க..ரசிங்க..!!

Doctor – Vaidyanathan
Dentist -- Pallavan
Lawyer -- Kesavan
North Indian Lawyer -- Panjabakesan
Financier -- Dhanasekaran
Cardiologist -- Irudhayaraj
Pediatrist -- Kuzhandaisamy
Psychiatrist -- Mano
Sex Therapist -- Kamadevan
Marriage Counselor -- Kalyanasundaram
Ophthalmologist --Kannayiram
ENT Specialist -- Neelakandan
Diabetologist -- Sakkarapani
Nutritionist -- Arogyasamy
Hypnotist -- Sokkalingam
Mentalist -- Budhisikamani
Exorcist -- Maatruboodham
Magician -- Mayandi
Builder -- Sengalvarayan
Painter -- Chitraguptan
Meteorologist -- Kaarmegam
Agriculturist -- Pachaiyappan
Horticulturist -- Pushpavanam
Landscaper -- Bhuminathan
Barber -- Kondaiappan
Beggar -- Pichai
Bartender -- Madhusudhan
Alcoholic -- Kallapiraan
Exhibitionist -- Ambalavaanan
Fiction writer -- Naavalan
Makeup Man -- Singaram
Milk Man -- Paul Raj
Dairy Farmer -- Pasupathi
Dog Groomer -- Naayagan
Snake Charmer -- Nagamurthi
Mountain Climber -- Yezhumalai
Javelin Thrower -- Velayudam
Polevaulter -- Thaandavarayan
Weight Lifter -- Balaraman
Sumo Wrestler -- Gundu Rao
Karate Expert -- Kailaasam
Kick Boxer -- Ethiraj
Batsman -- Dhandiappan
Bowler -- Balaji
Spin Bowler -- Thirupathi
Female Spin Bowler -- Thirupura Sundari
Driver -- Sarathy
Attentive Driver – Parthasarathy

டிஸ்கி :  பெண்கள் பேரு லிஸ்டில் இல்லாம போச்சேன்னு எனக்கும் வருத்தம்தான்..!!கிகிகி..

Sunday, September 27, 2009

விஜயதசமி வாழ்த்துக்களும்..!! ஒரு காமெடி ஸ்கிரீன் ப்ளேவும்!!!

http://www.dollsofindia.com/dollsofindiaimages/paintings2/goddess_poster_PX89_l.jpg
எல்லாருக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்!!

குட்டீஸ் நல்லா படிச்சு பெரிய அளவுல பேர் வாங்கி , அப்பா அம்மாவை காப்பாத்தணும்னு சாமிய நல்லா வேண்டிக்கோங்க..!!

இளவட்டங்கள் இப்போ நல்லா படிக்காட்டியும் இனிமே நல்லா படிச்சு, கண்ட பொண்ணு பின்னாடி சுத்தாம, நல்ல வேலைக்கு போய், கைநிறைய சம்பாதிச்சு , பெத்தவங்களை சந்தோஷமா வெச்சிருந்து, நாலு பொண்ணை நம்ம பின்னாடி சுத்த வெய்யி தாயேன்னு சரஸ்வதிய வேண்டிக்கோங்க..!!

பெரிசுகள் எப்பவும் ஜாலியா சந்தோசமா நம்மையும் நம்மை சுத்தி உள்ளவங்களையும் வெச்சு பார்த்துக்க வேண்டிய பொறுப்பை இன்னும் சிறப்பா செய்யணும்னு வேண்டிக்கோங்க...!!

பெண்கள் எப்பவும் எதற்கெடுத்தாலும் கோவப்படாம , சூதனாம(அது உங்களுக்கு மட்டும்தான் வரும்.. ஜென்ஸ் இதில் வேஸ்ட்) நடந்து புகுந்த வீட்லயும், பிறந்த வீட்லயும் நல்ல பேரு வாங்கி , என்னையும் என் குடும்பத்தையும் மேலும் முன்னேற்றம் பண்ண வழி செய் தாயீன்னு வேண்டிக்கோங்க..!!!

அம்பாளின் அருளுக்கு எல்லாருக்கும் எல்லாம் தரட்டும். எல்லாரும் நல்ல மனசோட பரிச்சுத்தமா இருங்க..!!


http://farm2.static.flickr.com/1009/864900082_71906f506d.jpg


ஹோஸ்ட் : வணக்கம் நேயர்களே என்றும் போல் இன்றும் ஏழரை எப்.எம் மோடு உங்கள் இந்த இனிய இரவு பொழுதை கழியுங்கள்..!!

நேயர் : அலோஓஓஓஓஓஓஓஓஓ!..

ஹோஸ்ட் : அலோ.. வாங்க வணக்கம். உங்க பேர் என்ன ? எங்க இருந்து பேசுறீங்க?

நேயர் : அலோஓஓஓஓஓஓஒ...ஓ..ஓஓஓஓஓஓஓஓ..!!

குரல் லெந்தாக ஒலிக்க ஹோஸ்ட் பீதியாகிறார்...

ஹோஸ்ட் : சார், லைனுக்கு வந்துட்டீங்க..பேசுங்க..உங்க பேர் என்ன?

நேயர் : ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ...!!

சங்கு சத்தமெல்லாம் கேக்குதே என அதிர்ச்சி அடைகிறார் ஹோஸ்ட்..

ஒரு வேளை கோஸ்டா இருக்குமோ என்று பீதியாகி லைனை துண்டிக்கிறார்.

அடுத்த நேயர் அழைக்கிறார். கொஞ்சம் முகத்தை துடைத்துகொண்டு பேச ஆரம்பிக்கிறார் ஹோஸ்ட்.

நேயர் : அலோ வணக்கம்!!

ஹோஸ்ட் : வணக்கம் . உங்க பேரு என்ன? எங்க இருந்து பேசுறீங்க..?

நேயர் : அலோ.. சுகமதி இருக்காளா?

ஹோஸ்ட் : நீங்க கால் பண்ணி இருக்குறது ஏழறை எப்.எம் முக்கு சார்.. உங்க பேரை சொல்லுங்க..!!

நேயர் : டேய் நாயே!! யாருடா நீ? என் வீட்டுல உனக்கு என்னடா வேலை..?

ஹோஸ்ட் : (அதிர்ச்சியில் முழி பிதுங்கி) சார் இது உங்க வீடு இல்லை.. இது ஏழரை எப்.எம் ஆபிஸ்.. நீங்க நம்பர் தப்பா டயல்
பண்ணிட்டீங்க போல.. கட் பண்ணிட்டு அப்புறமா கூப்பிடுங்க..

நேயர் : டேய் பொரம்போக்கு..!! என் வீட்ல அதும் அர்த்த ராத்திரியில என்னடா பண்ற.. இருடா நேர்ல வரேன்.. மவனே இன்னிக்கு
நீ செத்தட!!

பீதியாகி இணைப்பை துண்டிக்கிறார் .

சரி தற்போது அலம்பர ..ச்சே..விளம்பர இடை வேளை..!!


அருகே கம்யூட்டர் ஆப்பரேட்டரை பார்க்க

க.ஆ : யோவ் லூஸா நீ..இன்னிக்கு ஒரு விளம்பரமும் இல்லை ..

ஹோஸ்ட் : ஆமால்ல.. சரி சரி..

ம்ம்.. அடுத்த நேயர் வருக வணக்கம்.

நேயர் : வணக்கம்.. ம்ம்..ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!!

ஹோஸ்ட் : என்ன வணக்கத்தையே இவ்ளோ நீளமா சொல்றீங்க.. உங்க பேரு உண்மைதமிழனா?

நேயர் : இல்லீங்க..என் பேஏஏஏஎரு... குடியாத்தம் குப்புசாமிங்க..!!

ஹோஸ்ட் : சரி சொல்லுங்க குடிகாரன் குப்புசாமி.. உங்களுக்கு என்ன பாடல் வழங்கலாம்?

நேயர் : ரெண்டு ப்ளேட் மிக்ஸர் கொஞ்சம் சோடா!!

ஹோஸ்ட் (கடுப்பாகிறார்) : ஐயா இது டாஸ்மாக் கடை இல்லை.. ஏழறை எப். எம். இங்க நீங்க பாட்டு மட்டும்தான் கேக்கணும்.

நேயர் : அப்போ ரெண்டு பாட்டில் எளைய ராசா பாட்டு குடு.. அப்படியே தொட்டுக்க கொஞ்சம் குத்துபாட்டும் ,
ரசிக்க 3 மெலடி பாட்டும் போடு போதும்..!!

ஹோஸ்ட் : சரிங்க வைங்க..!!

ஹோஸ்ட் முதலில் கீழே இருக்கும் அந்த இரும்பு தடியை எடுத்து கம்ப்யூட்டர் ஆப்பரேட்டரை மண்டே மேலே போடுறார்..
அப்படியே தன் மண்டே மேல்யும் போட்டுகிட்டு திவாலாகிறார்..!!

பின்ன ஏழறைன்னா சும்மாவா?

Saturday, June 20, 2009

வில்லு நாயகனும்.. 32 கேள்விகளும்..!!



1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?


என்னிடம் பிடிச்ச ஒரே விஷயம் பேர்தான்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

அழாதது எப்போதுன்னு கேக்கணும்.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

இங்க தலையெழுத்தே கிறுக்கலா இருக்கு ..இதுல கையெழுத்தை கேக்க வந்துட்டாரு..!!
(அடிக்க வருகிறார்..அவ்வ்வ்)

4).பிடித்த மதிய உணவு என்ன?

லெமன் ஜூஸ்.


5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

அதுக்குத்தானே அனுபவிச்சுட்டு இருக்கேன். இன்னும் வேறயா?


6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

தண்ணீரில் குளிக்க பிடிக்கும்.


7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

”குஷி”க்கு பிறகு ..இடுப்பை தான் பார்க்கிறேன்.

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச விஷயம்: நடிப்பு.

பிடிக்காத விஷயம் : எதன்னு சொல்ல... ஒரு படமா.. ரெண்டு படமா?

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடிச்ச விஷயம்: வெற்றி படங்களுக்கு என்னை பாராட்டுவது..

பிடிக்காத விஷயம் : தோற்ற படங்களுக்கு மக்களை பாராட்டுவது.

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

நயன் அண்ட் த்ரிஷா.


11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

ச்சீ..அசிங்கமா பேசாதீங்க..!!

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

வில்லு படத்தில்.. வடிவேலு காமெடி..!!

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

என்னையே பேனாவா மாத்துற அளவுக்கு எவனுக்கு தைரியம் இருக்கு?(பயத்தோடு சுற்றுமுற்றும் பார்க்கிறார்)

14.பிடித்த மணம்?

”கோ...........”(சென்ஸாரால் நறுக்கப்பட்டது)

வேணாம்..வாய கிளறாதீங்க..


15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

எனக்கு இதை பார்வேர்டு செய்தது..பிடிக்காத விஷயம்..எனக்கே இதை பார்வேடு செய்தது..
அவரை அழைக்க காரணம்.. இன்னுமா புரியல..(வில்லத்தனமாக சிரிக்கிறார்)

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

யாருன்னு தெரியலை.. சிக்கினார்..சின்னபின்னமாக்க படுவார் என்று அன்புடன் தெரிவித்துகொள்கிறேன்.(குரூர சிரிப்பு முகத்தில்)

17. பிடித்த விளையாட்டு?

கபடி.. கபடி.. !!

18.கண்ணாடி அணிபவரா?

போட்டுகிட்ட மட்டும் படம் ஸில்வர் ஜூப்ளியா ஓடிட போவுது..?!

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

ம்ம்.. பாஸ்..

20.கடைசியாகப் பார்த்த படம்?

வில்லு..

ஏய்..பேசிட்டு இருக்கொம்ல.. சைலன்ஸ்.!!

21.பிடித்த பருவ காலம் எது?

படம் வெற்றிபெற்ற காலங்கள் எல்லாமே..(விட்டத்தை ஏக்கமாய் பார்க்கிறார்)..!!

22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

சினிமாவால் அழிந்த சிலர்.

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

அது என்ன டெஸ்க்டொப்?

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சப்தம் :என் படத்தில் நான் பேசிய பஞ்ச் டயலாக்.

பிடிக்காதது : பேட்டி கொடுக்கும் போது மொணமொணவென பேசுவது.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

பத்ரி படத்துக்காக ஸ்விச்டர்லாந்து..

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

கை காலை வேகமா..ஆட்ட தெரியும்..
அதாங்க டான்ஸ்னு எதோ சொல்லுவாங்களே அதுதான். அதுமட்டும்தான்.


27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

அவர் படம் ஹிட்டாவது, என் படம் சொல்லிவெச்ச மாதிரி ஃப்ளாப்பாவது..!!



28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோவம்.. உங்க பாஷையில சொல்லணும்னா கொலைவெறி.(நாக்கை துறுத்தியபடி முறைக்கிறார்)

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

கோடம்பாக்கம்..

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

இன்னும் இருக்கேனேன்னு சந்தோஷப்படுங்க..அத விட்டுட்டு ..

31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

மனைவி இல்லாம்ல் செய்ய விரும்பும் காரியம்.... ..

.. திருட்டு முழி முழிக்கிறார்...

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

வாழ்க்கை ஒரு வட்டம்.. அதுல தோக்குறவன் ஜெயிப்பான்..(அழுகிறார்)ஜெயிக்கிறவன் தோப்பான்..!!

இந்த தொடர் பதிவுக்கு நான் அழைப்பது

எவண்டா எனக்கு இதை பார்வேடு பண்ணது?

டிஸ்கி :
இது விஜயை தாக்கவோ, கிண்டல் செய்யவோ போடப்பட்ட பதிவு அல்ல..!!

Friday, April 24, 2009

அற்புத பதிவு -1001!!!

வணக்கம் நட்புகளே!!

பதிவிடுவது என்பதை பொழுதுபோக்காய் தொடங்கினேன்.ஆனால் இன்று அது இல்லாமல் ஒரு நாளை ஓட்டுவது என்பது சிரமமானதாகவே ஆகிவிட்டது.

தினசரி நான்கைந்து பதிவுகளையாவது படித்து கமெண்ட் போடாவிடில் தூக்கம் வருவதில்லை. நமது ஜமால் போல் பத்தாயிரம் பின்னுரை எல்லாம் போட்டு அசத்த வேண்டும் என்றுகூட சில நேரங்களில் ஆசையாயிருக்கு எனக்கு. மனிதருக்கு எப்படி தான் நேரம் கிடைக்குதோ தெரியலீங்க..!!

ஆனால் நிச்சயமாக என்னால் முடிந்த சிறந்த , சில உதவிகரமான பின்னுரைகளை தந்திருக்கிறேன் என்பதில் பெருமகிழ்ச்சி.

நான் 2007-ஆம் ஆண்டு சிபியால் அறிமுகப்படுத்த பட்டேன். அவர் அறிமுகப்படுத்திய பல பதிவர்கள் நான் படித்து அசந்து போகும் அளவுக்கு பதிவில் கலக்குகிறார்கள் ,அடியேன் இன்னும் கத்துக்குட்டிதான்..என்பதில் பெருமையே எனக்கு.

அதுமட்டுமில்லாமல் என்னை வளர்த்துகொள்ள சில பதிவர்கள் உற்ற துணையாய் இருந்திருக்கிறார்கள். அவர்களின் பதிவை படித்தே நான் என்னை உயர்த்திகொண்டு வருகிறேன் என்பது அவர்களுக்கே தெரியாது பாவம்.

உதாரணமாக இவரை சொல்லலாம்.. இவரை பதிவுகளில் இல்லாத சுவையே இல்லை எனலாம். இவரின் பதிவுகள் ஒவ்வொன்றும் இந்த பதிவுலகத்தையே கலக்கும் திறம் பெற்றவை என்று சொன்னால் அது மிகையாகாது.

அப்படியே சில பல பிரச்சனைகளை சந்திக்கவும் சமாளிக்கவும் கற்றுத் தந்தது இந்த பதிவுலகம் தான்.

ஆமா.. இப்போ நீ என்னதான் சொல்ல வரே? ன்னு கடுப்பாய் காதில் புகையுடன் கேட்பது புரிகிறது.

அது தெரிஞ்சா முதல் பாராவிலேயே சொல்லி இருக்க மாட்டேனா?


பாட்டு பாஸ்கி : அடப்பாவி இன்னுமா உனக்கு எழுத மேட்டர் கிடைக்கலை.. இன்னிக்கு நீ செத்தடி...நான் வரலை.. நீயாச்சு.. அவங்களாச்சு.. நான் இப்போவே டீசண்டா கழண்டுக்கறேன்..

Tuesday, March 17, 2009

கோபம் என்னும் எதிரி




நம்ம ஸ்வீட்பாய் விஜய்க்கு இவ்ளோ கோவம் வருமா.. ?!!!
அடி ஆத்தே...
அதான் இவரு படம் எல்லாமே ஆக்ஷன் படமா இருக்கு போல..
நல்லாதான்யா கோவப்படுறாரு...
பாத்தாச்சா..
பாத்ததுக்கு நாலு கமெண்ட் நச்சுனு போட்டுட்டு போங்க..

Wednesday, March 11, 2009

பேனாவை இரவல் கொடுப்பதால் வரும் பதினோரு சங்கடங்கள் !!!



சரி.. வீடியோ பாத்தாச்சா...
இப்போ மேட்டருக்கு வருவோம்..
1. முதல் சங்கடம்
நிச்சயமாக திருப்பி தருவார் என்ற மூடநம்பிக்கையுடனோ, திரும்ப வாங்கி தரவே மாட்டார் என்ற நம்பிக்கையுடனோ தான் பேனாவை கொடுக்க நேரும். இரண்டுமே கொடுப்பவருக்கு நன்மை பயக்கக் கூடியதல்ல.

2. இரண்டாம் சங்கடம்
பேனாவை இரவல் கொடுத்த ஓரிரு நாட்களில் அந்தப் பேனாவை ஏதாவது குறிப்புக்காகவோ, தகவலுக்காகவோ தேட நேர்கிறது.

3.மூன்றாம் சங்கடம்
‘இதோ இரண்டொரு நிமிஷத்தில் எழுதி விடுவேன். குடுங்க. எழுதிட்டு மேக்ஸிமம் ஒரே நிமிஷத்தில் குடுத்துடுவேன்’ – இது இரவல் வாங்கும் எல்லாரும் சொல்லும் வாசகம். ஆனால் கவிஞர். வாலியின் டெம்ப்ளேட் வரிகளைப் போல, இரவல் வாங்குபவர்களுக்கு எப்போதுமே மாதங்கள் வாரங்களாக, யுகங்கள் கணங்களாகத்தான் இருக்கின்றன.

4. நான்காம் சங்கடம்
இரவல் வாங்கியவர் பெயர் மிஸ்டர்.குப்பன் என்று வைத்துக் கொண்டால், வாங்கிய ஓரிரு வாரங்களுக்குத்தான் அவர் மிஸ்டர்.குப்பன் ஆக இருக்கிறார். அதற்குப் பிறகு அவர் ‘என்கிட்ட அந்த நீலக்கலர்ல எழுதுறப் பேனாவை வாங்கீட்டு போனவர்’ என்றும், இன்னும் கொஞ்ச நாளில் ‘பேனாவை வாங்கீட்டு திருப்பியே தராதவர்’ என்றும்தான் அவர் பற்றிய பிம்பம் மனதில் படிகிறது.

5. ஐந்தாம் சங்கடம்
நாம் இரவல் கொடுத்த பேனாவை நம்மிடம் இரவல் வாங்கியவரிடம், இன்னொருவர் இரவல் கேட்கும்போது ‘நம்மளே இரவல் வாங்கினதாச்சே.. குடுக்கலாமா வேண்டாமா’ என்ற குழப்பத்திற்கு ஆளாக்குகிறோம். அல்லது அவர்கள் இரவல் குடுத்தால் ‘இரவல் வாங்கியதை இரவல் கொடுத்த’ பாவத்திற்கு அவரை ஆளாக்குகிறோம்.

6. ஆறாம் சங்கடம்
வாங்கிய பேனாவை வைத்து ஏதாவது பூச்சிகளை குத்துவது, காது குடைவது போன்றவற்றை செய்யும் சுதந்திரம் இல்லாமல் வாங்கியவரை தவிக்க வைக்கிறோம். அல்லது அப்படி அவர் செய்தால் ‘இப்படிப் பட்டவருக்குக் கொடுத்தோமே’ என்ற தவிப்புக்கு நம்மை ஆளாக்கிக் கொள்கிறோம்.

7. ஏழாம் சங்கடம்
உண்மையாகவே அந்தப் பேனாவை வாங்கியவர் தொலைத்து விட்டால், அவர் அப்படிச் சொல்லும்போது அதை நம்ப முடியாமல் அவரைப் பற்றி நாம் தவறாகப் புரிந்து கொள்ள நேர்கிறது. உண்மையாகவே தொலைக்காமல் அவர் அப்படிச் சொல்வதானால்... (மீண்டும் 6வது சங்கடத்தின் கடைசி வரிகளைப் படிக்க....)

8. எட்டாம் சங்கடம்
இரவல் குடுத்த பேனா திரும்ப வராத சோகத்தில் நாமிருக்கும்போது, வேறொரு நண்பர் இரவல் கேட்க, சூடு கண்ட பூனையாய் அவருக்கு நாம் இரவல் கொடுக்க மறுக்க, அவர் நம்மைத் தவறாகப் புரிந்து கொள்ள ஏதுவாகிறது.

9. ஒன்பதாம் சங்கடம்
நண்பனுக்குப் பணம் கொடுத்தால் நட்பு, பணம் இரண்டையும் இழக்க நேரும் என்று பெர்னாட்ஷா சொன்னது போல,(அனுபவசாலி!!!) நண்பனுக்குப் பேனா கொடுத்தால் அந்தப் பேனா, அதற்கான பணம், நட்பு மூன்றையுமே நாம் இழக்க நேர்கிறது.

10. பத்தாம் சங்கடம்
பேனாவை இரவல் வாங்கினால் உடனே திருப்பித்தர வேண்டும் என்ற நினைப்பு வருவதில்லை. அதே காசு கொடுத்து வாங்கியிருந்தாலாவது, அதன் மதிப்புணர்ந்து நிச்சயமாகத் திருப்பித் தருவார்கள்... (அல்லது அப்படி நாம் நினைத்துக் கொள்கிறோம்!)

11. பதினோறாம் சங்கடம்
நல்ல பேனா என்பதால்தான் பகிர்ந்து கொள்கிறோம். அந்த நல்ல பேனாவை இரவலாகக் கொடுப்பதால் அவர் பேனா வாங்கும் மனப்பான்மையினை தடுத்து
பல பேனா கம்பெனிகளுக்கு அவரால் வரும் லாபத்தினை இழக்க செய்கிறோம்.

(டிஸ்கி) :-
இந்தப் பதிவில் வரும் எதுவும் யாரையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ (உள்குத்தோ) குறிப்பிடுவதல்ல என இதன்மூலம் உறுதியளிக்கிறேன்!!!

Tuesday, March 3, 2009

கன்னத்தில் என்னடி காயம்...??

நம்ம சிபி...
ஞாயித்துகிழமை ஆளையே காணோம்..
திங்ககிழமை சாட்டிங்-லயும் இல்ல..மெயிலும் இல்ல..

என்னாடா இது.. தல சத்தமில்லாம இருக்கே..னு ரொம்ப பயமா போச்சு..
நம்ம மக்கள் வேற மண்ட காஞ்சிபோயி
"ரங்கா ரங்கா போன் போடு".. "ரங்கா ரங்கா போன் போடு"ன்னு ஒரே நச்சு..

சரி போட்டு தான் பாப்போம்-னு கால் பண்ணா...
"சும்மாதான் டயர்டா இருந்திச்சு.. அதான் லீவ்.. நாளைக்கு வந்துடுவேன்னு சொல்லிடு"னு சொன்னார்

இருந்தாலும் நம்ம க்ரெயின்(அதாங்க.. இங்கிலீஷ்ல மூளை-னு சொல்லுவாங்களே) வேல செய்ய ஆரம்பிச்சுது..
என்னமோ இடிக்குதேன்னு நம்ம சென்னை பிராஞ்ச் உளவுத்துறைய தூண்டிவுட்டேன்..

வந்தது ஒரு அதிர்ச்சி தகவல்...
சிபியோட கன்னத்துல பேண்டேஜ்...!!
ஆடிப்போய்ட்டான் ரங்கன்.. :(


என்னாடா இது கூத்தா இருக்கு.. ?சிபிமேல யாருக்கு என்ன கோவம்?
இந்த கவிதா அப்பப்போ சிபி கன்னக்குழி மேல கண்ணா இருந்துச்சே அதனாலயா?
ஒருவேள கண்மணி கடுப்பாகி கடிச்சுடுத்தா?
இல்ல பக்கத்து ஊட்டு நாய் எதும் பதம் பாத்துருக்குமோ?
இப்படி பல பல கேள்விகள் மண்டைக்குள்ள சுத்துது...

இதுக்கு பதில நம்ம உளவுத்துறையாலக் கூட கண்டுப்புடிக்க முடியல...
அதனால மக்கா மேட்டர உங்ககிட்ட விடரேன்...

எதனால் ஏற்பட்டது அந்த காயம் & பேண்டேஜ்-னு கண்டுபிடிங்க பாக்கலாம்..
பரிசானது கண்டுபிடித்தவரை பொருத்து வாரி வாரி "வழங்கப்படும்"...


பாட்டு பாஸ்கி : இத கேக்கும்போது
ஆ :"கன்னத்தில் என்னடி காயம் ?
பெ : "அது வண்ணக்கிளி செய்த மாயம்"னு சோகமா பாடத்தோணுது..
ஹ்ம்ம்.. சீக்கிரம் காயம் ஆர ப்ராஸ்பிரஸ்தூ...