Monday, May 30, 2011
சோகமாய்...ஒரு கவிதை...!!
Saturday, May 30, 2009
அப்பா.....!!

என்னில் எப்போதும் சில புயல்கள் வந்து போவதுண்டு.
எப்போதும் அவைகள் அவையாகவே மறைந்துவிடும்.
அன்றும் அப்படிதான் வந்தது ஒரு புயல்
உன்னை பிரியும் ஒரு பயங்கர புயல்..
எப்படி என்று இன்று நினைத்தாலும்
என்னுயிர் மெல்ல சறுக்கி விழுகிறது.
ஏன் என்று இன்று நினைத்தாலும்
நெஞ்செல்லாம் வலியுடன் துடிக்கிறது.
எதற்கு என்று இன்று நினைத்தாலும்
காரணம் தெரியாமல் விழி நீர்சேர்க்கிறது.
என்ன செய்ய.. ஏது செய்ய
என சிந்தித்து முடிப்பதற்குள்
எங்கோ போய்விட்டாய் நீ
என்னை தனியாய் தவிக்கவிட்டு..
நீ பிரியும் தருணத்தில் கூட
உன் வார்த்தைகளை மதித்தேன்..
ஆம்..
ஒரு துளி கண்ணீர் கூட சிந்தவில்லை
உன் வார்த்தைக்கு கட்டுப்பட்டு..
வாழ்நாளில் நீ என்னை நினைத்து
வருந்தினாய்..
மன்னித்துவிடு..!!
உன்னை வருந்த வைத்தமைக்கு..
இனி எவருக்கும் வருத்தந்தராதவனாய்
வாழ்ந்து காட்டுவேன் ...!!
இனி உன் குடும்பத்தின் பொறுப்பு
என் தோள்களில்...!!
உன்னை கேட்பதெல்லாம் ஒன்று தான்..
சுமையை குறைக்காதே..
என் தோள்களை விரிவாக்க செய்..
பாட்டு பாஸ்கி :
அவர் எங்கயும் போகலைப்பா.. ரங்கா.. அவர் எப்பவும் உங்களோட தான் இருக்காரு.. இருப்பாரு..
வலியை மற.. வாழ்வை நினை.. வெற்றி உனக்கே.. வாழ்த்துக்கள்!
Sunday, April 19, 2009
வெயிடிங்க்...!!!
அவளின் வளையல்களின் அசைவாய்
காற்றில் மெல்லிய சங்கீதம்..
அவளின் கண்ணசைவின் கிறக்கங்களாய்
பூக்களின் மெல்லிய கவர்ச்சிகள்..
அவளின் மெல்லிய பேச்சுக்களாய்
வண்டுகளின்.. ர்ர்ர்ரிங்ங்ங்ங்காரம்..
அவளின் மேனியின் நறுமணமாய்
மயக்கும் ரோஜாக்களின் வாசம்..
காலால் மிதிக்க மனம் வராத
காதலியின் கன்னம்போன்று புற்கள்...
அவளின் மெல்லிய நடை போல்
சின்ன மானின் அழகிய நடை..
கொஞ்சவந்தால் ஓடுகிறது அவளை போல்
இந்த பல வர்ண பட்டாம்பூச்சி..
அவளின் நீல சுடிதாரின் நிறம் போல்
வானிலும் அதே நீல நிறம்..
இப்படி அத்தனையும் அவளை பற்றிய
அழகினை சொல்லிக் கொண்டிருக்க..
அவள் மட்டும் இன்னும் வராமல்
காத்திருக்க செய்கிறாள் கள்ளி.
இப்படிக்கு-
பார்க் பெஞ்சில் காதலிக்காக காத்திருந்தவன்.
பாட்டு பாஸ்கி : என்னடா..மச்சி.... பதிவு எழுத எதும் மேட்டர் கிடைக்கலியா...?என்கிட்ட கேட்டா நிறைய சொல்லி இருப்பேன்ல.... சரி வுடு.. கவித(ஜ) நல்லாதான் இருக்கு... ஆனா கும்மி உறுதி.. சொல்லிட்டேன்..
Sunday, March 29, 2009
என் தேவதையின் சோகம் :(

அந்த குட்டி தேவதை கடவுளின் முன் சோகமாய் வந்து சேர்ந்தது
கடவுள் அதனுடைய வாட்டத்தை கண்டு அதனிடம் கேட்டார்.
"என்ன ஆனது.. உன் புன்னகைக்கு
என்ன ஆனது.. உன் பூரிப்பிற்கு
என்ன ஆனது.. உன் கண்களுக்கு
என்னவோ இழந்தது போல்
என்னவோ தொலைத்தது போல்
என்னவோ கிடைக்காதது போல்
ஏன் இந்த வாட்டம்..
நான் அறியலாமா உன் மன ஓட்டம்?"
தேவதை சொன்னது
" இறைவா எனக்கு கொடுப்பது பிடிக்கவில்லை"
கடவுள் சொன்னார்
" என்ன காரணம் என்று நான் அறியலாமா?"
தேவதை சொன்னது
"இறைவா..!!
நான் அன்பை நீட்டுகிறேன்
அதை பெற்றுக் கொண்டு
கன்னத்தில் அரைகிறது உலகம்;
நான் பூக்களை கொடுக்கிறேன்
அதை பெற்று கொண்டு
தீயால் சுடுகிறது உலகம்;
நான் புன்னகையை கொடுக்கிறேன்
அதை பெற்று கொண்டு
கண்ணீரை பரிசளிக்கிறது உலகம்;
நான் அரவணைப்பை கொடுக்கிறேன்
அதை பெற்றுக் கொண்டு
என்னை அசிங்கமானவன் என்கிறது உலகம்;
நான் ஆதரவை கொடுக்கிறேன்
அதை பெற்றுக் கொண்டு
அறிவுகெட்டவனவன் என்கிறது உலகம்;
நான் பாசத்தை மட்டுமே கொடுக்கிறேன்
அதை பெற்றுக் கொண்டு
"அவனோரு மிருகம்" என்கிறது உலகம்."
கடவுள் புன்னகைத்தார்..
தேவதை கன்னம் பிடித்து அதன் கண்களை பார்த்தார்.
"அதோ அங்கே பார்.. ஒரு மனிதன் வலியால் தவிக்கிறான்."
தேவதை சொன்னது
"ஒரு நிமிடம் இறைவா.. இதோ வந்துவிடுகிறேன்"
கடவுள் தேவதையின் கைகளை பிடித்து சொன்னார்.
"ஒரு நிமிடம்.. உனக்கு தான் கொடுப்பது பிடிக்கவில்லையே அப்புறம் ஏன் தவிக்கிறாய் ? "
தேவதை பதில் சொல்ல முடியாமல் தலைகுனிந்தது.
கடவுள் சிரித்தார்.
" அட என் அன்பு தேவதையே!! நீ கொடு வேண்டாமென்று நான் சொல்லவில்லை. ஆனால் அவர்களிடம் நீ எதையும் எதிர்ப்பார்க்காமல் கொடு. அப்படி கொடுக்க பழகிவிட்டால் உனக்கு சோகம் இருக்காது.
இப்படி கண்ணீர் வடிக்க வேண்டாம்.
கொடுப்பது உன் இயல்பு. அதுதான் உன்னை இயக்கும் உயிர். அதை நீ மாற்ற முயற்சிக்காதே. அதற்கு பதிலாக உன்னை நீயே சரி செய்துகொள்.
எதிர்பார்க்காமல் கொடு.அதுவே உனக்கு நான் தரும் உபதேசம்"
என்ன சரிதானே !! இப்போது கிளம்பு.."
தேவதை பிரகாசமான புன்னகையோடு சொன்னது :
"நன்றி இறைவா!! இது உங்களுக்காக "
தேவதை இறைவனின் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு அந்த மனிதனை நோக்கி பறந்தது.
பாட்டு பாஸ்கி :
ஆமா இது கதையா கவிதையா?
என்னவோ .. உனக்கு இப்போ மனஸ ரிப்பேர் பண்ணனும் .
க(வி)தைக்கேத்த பாட்டு என்கிட்ட இருக்கு.. கீழ பாரு.
"ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலை இல்லே.
நான் தான்டா என் மனசுக்கு ராஜா
தூவுங்கடா என் வழியில ரோஜா...
நீ கேட்டா கேட்டத கொடுப்பேன்..
கேக்குற வரத்தே கேட்டுக்கடா..
இந்த பாட்ட முழுசா கேளு..
தெம்பாகிடுவ.. என்னங்க.. இந்த பாஸ்கி சொல்றது சரிதானே...!!
Sunday, March 22, 2009
அவசர உலகில் ஒருவன் !
டிக் டிக்..
டிக் டிக்..
டமால்...!!
அலாரம் கீழே விழுந்து நொறுங்கியது.
"அய்யய்யொ.. போச்சு,ஸ்ஸ்ஸ்ஸ்.. "
உடைந்த பாகங்களை பொறுக்கிக் கொண்டு வாசலுக்கு நடந்தேன்.
தூக்க கலக்கம்.. நடக்கும்போதே லுங்கி அவிழ.
"அய்"
லுங்கியை பிடித்தேன். மீண்டும் அலாரம் சிதறியது.
மீண்டும் சில பாகங்கள் உடைந்தது.
ஒரு முறை கொன்றாலும் கொலையாளிதான்,
பலமுறை கொன்றாலும் கொலையாளிதான்.
ஏன் வேறு உதாரணமே கிடைக்கவில்லையா உனக்கு?
என மனதை திட்டுவிட்டு வாசலுக்கு
சடலத்துடன்..ச்சி..கருமம்..
உடைந்த பாகங்களோடு சென்றேன்.
அலாரத்துக்கு இறுதி அஞ்சலி செய்துவிட்டு..
பால் பாக்கெட்டை தூக்கி கொண்டு நடந்தேன்.
குளிர்சாதன பெட்டியில் அதை வைத்துவிட்டு
உள்ளே சென்றேன். போர்வையை மடித்தேன்.
காபி போட்டு குடித்தேன்.
நேரம் 6:45
குளிக்கப் போகிறேன்.
"அடடா!"
துணிகளை எடுக்கவேயில்லை மாடியிலிருந்து.
எடுக்க மேலே போனேன். வயலெட் ஜட்டி அப்புறம் வெள்ளை பனியன்.
மற்ற துணிகளையும் எடுத்துக்கொண்டு கீழே இறங்கும்போதுதான் பார்த்தேன்.
அதிர்ந்துபோனேன்.
"அவ்ளோ அழகான ஃபிகரை என்றைக்கும் பார்த்திருக்க மாட்டீர்கள்..
ஓ..ஃபிகர் என்று சொல்லிவிட்டேனா.. சாரி.. மங்கையை ..பெண்ணை .. போதுமா?!"
அப்படியே ஓரகண்ணில் ஒரு மெல்லிய பார்வை பார்த்தாள்.
ஆ.. இது பூமிதானே.. இல்ல வேற எதாவது சொர்க்கமா?
"போதும்டா போய் பொழப்ப பாருடா! பரதேஸி..! பரதேஸி..!"
வடிவேலு ஸ்டைலில் மனசாட்சி விரட்டியது.
"எனக்கு பேருதான் ராமன் மத்தபடி தினம் பல சைட்டுகள்.
சைட்டுகள் மட்டும்தான்.. ஹிஹி.."
உன்ன போட்டுதள்ளிட்டுதான் அடுத்த வேல..
ஒரு பொண்ண பாக்க விடுறியா? தொல்ல உன்னோட..
கண்டுகாதீங்க.. நானும் என் மனசாட்சியும் இப்படிதான் அடிக்கடி பேசிக்கொள்(ல்)வோம்.
நேரம் 7 : 20
"அய்யோ.. ச்சி..சீ.. என்னங்க.. பேசிட்டே பாத்ரூமுக்குள்ள வந்துட்டீங்க.."
நான் ஆண்தான் அதுக்காக வெக்கபடாம இருக்க முடியுமா.. ?வெளிய இருங்க.. வரேன்.ஹிஹி.."
"ம்ம்ம்.. ஸ்ஸ்ஸ்.. செம குளுரு.. "
"மெரூன் சர்ட் .. சாம்பல் கலர் பேண்ட். ஓகேதானே.. ?ஒக்கெ.."
போட்டாச்சு போட்டாச்சு.. எப்படி மாப்ள மாதிரி இருக்கனா ன்னு கேட்டேன் கண்ணாடிக்கிட்ட..
"உனக்கென்னடா.. அம்சமான ஆளுடா நீ.. கலக்குடா"அந்த பக்கத்தவன் சொன்னான்.. மகிழ்ந்தேன்.
டை.. கட்டுவதற்குதான் நேராமகிறது.வேகமாய் கட்ட பழகவேண்டும்..
இந்த கருமத்தை கட்டாமல் போனால் முறைப்பான் கரிசட்டிதலையன்.
கல்யாணத்துக்கு அப்புறம் அவள கட்டிவிட சொல்லி கட்டிக்கணும்.
ஓக்கே.. ஜம்ஜம்னு ரெடி ஆகியாச்சு.
போற வழில சாப்பிட்டுக்கலாம்.
பைக் சாவி எங்க..? ம். இருக்கு.
செல் இருக்கு.
பேக் இருக்கு.
ஷூ போட்டாச்சு.
கலக்கபோவது யாரு.. நாந்தான்..வூவ்.. !!
கேலண்டரில் ராசி பாக்கலாமே என திரும்பி பார்த்தேன்.
மார்ச் 22 2009. ஞாயிறு.
ஞாயிறு.. ஞாயிறு... ஞாயிறு..!!
அடச்சே.. இன்னிக்கு சண்டேவா?
தனியா மூணு நாள் இருந்ததுக்கே இப்படி ஆகிட்டனே.. அய்யோ..அய்யோ..!!
Tuesday, March 10, 2009
மரணத்தின் பாதைக்காக..!!!

எப்போதும் இருட்டில்
சுவனத்தனிமையில்
காற்றில்லா பூமியில்
கனியத்துடிக்கிறது மனம்;
பூக்கள் கருகி..
புன்னகைகள் இருண்டு
முட்களின் கூர்மையில்
சிகப்பு முத்துக்களாய்
ரத்தம் முட்களின் நுனியில்;
வெப்பம் எரிக்க
வேர்வையில் துளிகள்
கண்ணாடியாய் சிதற
சோகமாய் என் முகம்
ஒவ்வொரு துளியிலும் ;
மோனத்துவம் வந்து
மடியமர்ந்து கொண்டு
ஆலகால விஷமாய்
கொல்கிறது என் உயிரை;
பாலைவனச் சூட்டில்
மங்கும் சூரிய வெளிச்சத்தில்
கரிய முகங்கள்
கூரியப் பற்கள் காட்டி அழைக்கின்றன
மரணத்தின் பாதைக்காக..!!!
(பி.கு.) எட்டாங்கிளாஸில் எங்க டீச்சர் என்ன குரூப் டிஸ்கஷன்ல சேத்துக்கல.. அதான் இந்த கவிதை..சாரி.. கவுஜ..!!! ;)
Friday, February 20, 2009
எங்கே சென்றாய் நீ.....?

எங்கே சென்றாய் நீ...
என்னை விட்டுவிட்டு...
என்று எங்கெங்கோ தேடினேன்..
மலையின் பாதங்களில்;
கடலின் ஆழங்களில்;
மழையின் துளிகளில்;
"இங்கே தான் இருக்கிறேன்!!" என்றாய்..
"என் இதயத்தில் நீ.."
...