Showing posts with label சமூக சீர்திருத்தம். Show all posts
Showing posts with label சமூக சீர்திருத்தம். Show all posts
Sunday, August 22, 2010
கல்யாணமும்,காதலும்,கசப்புகளும்!!
என்ன பாஸ் இது? என்ன இதெல்லாம்? இப்படி ஒரு பொழப்பு தேவையா நமக்கு?
நல்லா இருந்த பையனையும் பொண்ணையும் புடிச்சு கட்டிவெச்சிட்டு..இப்போ அதுங்க போடுற
ஆட்டம் தாங்கலைன்னு புலம்புறதும், அதுங்களை மாதிரி நாங்க ஒன்னும் சண்டை போட்டுக்கலைன்னு
பெருமை பேசிக்கிறதும்..ஏன் ஏன் இந்த வேலை..
..அந்த புள்ள பாட்டுக்கு படிச்சமா வேலைக்கு போனமா, ஒரு நல்ல பையனை லவ் பண்ணினமா,
வாழ்க்கைய சிறப்பா ஆரம்பிச்சமான்னு இருந்திருக்கும்..அத போய் எவனோ ஒரு குடிகாரனுக்கு கட்டிவெச்சி,
அது வாழ்க்கையை வீணடிச்சிட்டீங்க.. இப்போ அந்த நாதாரிய திருத்த அந்த புள்ள எவ்ளோ போராடிகிட்டிருக்கு.
அது மனசுல எவ்ளோ பொறுமும் , வேதனைப்படும்னு யாராச்சும் யோசிச்சீங்களா?
அந்த நாய்க்கு குடிப்பழக்கம் விட்டுபோகணும்னா மறுவாழ்வு மையத்துல சேர்க்க வேண்டியதுதானே..அதை விட்டுட்டு
இப்படியா ஒரு பொண்ணோட வாழ்க்கையை சீரழிப்பீங்க..த்தூ..
இது கூட பரவால்ல..இந்தா..இந்த பையன பாருங்க..நல்லவன், நல்ல வேலை, நல்ல வாழ்க்கை, நல்ல நண்பர்கள்னு
எல்லாம் நல்லதாய் அமைஞ்ச ஒரு மனுஷன். இவனுக்கு ஒரு பொஞ்சாதி. யப்பா.. சும்மா சொல்லக்கூடாது...அடங்காபிடாரி,
இவனுக்கு என்ன கேடுகாலமோ..இப்படி ஒரு பொண்ணை கட்டிகணும்னு தலையெழுத்து. பாவம் நொடிஞ்சி போய்ட்டான்.
எப்ப பாரு, அத வாங்கி குடு, இத வாங்கி குடுன்னு தினமும் சண்டை. சம்பளத்துக்கு மீறி வாழ்க்கை நடத்தகூடாதுன்னு நினைச்சவனுக்கு,
கிம்பளம் வாங்கிகூட திருப்திபடுத்த முடியல இந்த மகராணிய. இவனோட அப்பா அம்மா மேல எனக்கு சந்தேகமா இருக்கு. இதுங்களுக்கு
பொண்ணு பார்க்க தெரியுமா தெரியாதா? இல்லை..அழகா இருக்காங்கற ஒரே காரணத்துக்காக கட்டி வெச்சிடுசுங்களா?! .. பாவம் இந்த பையன்,
இன்னைக்கு இவளால இவன் கடன்காரன், குடும்ப விரோதி, திருடன்னு பட்டம் வாங்கி குவிச்சதுதான் மிச்சம்..
...
ஸோ..மக்களே..மகாஜனங்களே!! எப்பவும் நம்ம அப்பா அம்மா நமக்கு நல்லதுதான் செய்வாங்கனு நினைச்சு..நீங்க கண்ணமூடிகிட்டு சம்மதிச்சா,
98% நீங்க அதலபாதாளத்துல குதிக்கறீங்கன்னுதான் அர்த்தம்..அது மட்டும் இல்லாம, அடுத்து வர 80 வருஷமும் உங்களுக்கு ஆயுள் தண்டனையாகவும்
போகலாம். ஸோ.. ப்ளீஸ்..யோசிங்க.. அந்த பொண்ணுகூடவோ, பையன்கூடவோ பழகி பாருங்க. உங்க குணத்துக்கு சரிவரும்னு முடிவு பண்ணிட்டு அப்புறம்
சம்மதிங்க. அழகுல மயங்கி விழுகுற வேலையே வேணாம். அது பசுத்தோல் போர்த்திய முதலை. ஸோ..ப்ளீஸ்..யோசிங்க. பழகிப்பாருங்க. முடிவுப்பண்ணுங்க.
டிஸ்கி :
வாழ்ந்து முடிச்சவுங்களுக்காக, வாழப்போறவங்க வாழ்க்கையை தொலைக்கணும்னு எந்த தர்மமும் சொல்லலை!! அது போன்ற அதர்மமும் இல்லை!!
Labels:
Self Improvement,
சமூக சீர்திருத்தம்,
சிந்தனை,
ச்சும்மா
Tuesday, January 5, 2010
”சாலை பாதுகாப்பு வார”த்தை முன்னிட்டு ஒரு சிறுகதை..

-”டேய்.. சொன்னா கேளுடா.. ஏண்டா இப்படி பண்ற.”
-”மா. சும்மா இரும்மா..பேசும்போது நொய் நொய்னு. பேசிட்டு இருக்கோம்ல.”
-”டேய்.. மனோ. வேண்டாம்.. இப்போ நிறுத்த போறியா இல்லியா?”
- “.. ம்ம்..ஆமாடா.. அம்மாதான்... சும்மா அட்வைஸ் பண்ணிகிட்டு.. டென்ஷன் ஆகுதுடா.”
- “..என்னவொ போடா..நீ சொன்னா கேக்க மாட்டா.. அப்படியே அப்பன் புத்தி..ம்ஹீம்.”
-“ஹேய்..ஒண்ணு குடேன்.. ப்ளீஸ்டா.. என் செல்லம்ல..”
- “இப்படியே எத்தனை நாளைக்கு கொஞ்சிட்டு இருக்க போற?
ஒழுங்கா கலியாணம் பண்ணிக்கிற வழிய பாரு.. மனோ.”
- “ஹேய்.. அம்மா கட்டிக்க சொல்றாங்கடா . கட்டிக்கவா?
தோடா..வெக்கமா.. ம்ம்... அப்புறம்..”
...கீங்..கீங்..கீங்...
அம்மா, “என்னடா போன் கட்டா?”
மனோ, “ஆமாம்மா..பேலன்ஸ் காலி.”
செல்போனை பார்த்தபடி மனோ பைக்கின் ஆக்ஸிலேட்டரை திருக..
..சில பல.. பலமான சத்தங்களுக்கு பின்.
.
.
.
”அம்மா.. என்ன மன்னிச்சுடு.. நீ சொன்னது சரிதான்.. வண்டி ஓட்டும் போது போன் பேசி இருக்க கூடாது.”
தன் பிணத்தின் முன்னால் கதறும் தாயின் பின்னால் நின்றபடி மனோ சொல்லிகொண்டான்.
(பி.கு)..
”சாலை பாதுகாப்பு வார” த்தை முன்னிட்டு இந்த சிறுகதை..!!
டிஸ்கி :
"வண்டியில் செல்லும்போது செல்லை தொடாதீர்கள்.
அழைப்பது எமனாகவும் இருக்கலாம்."
Tuesday, October 13, 2009
Farmville'யில நீங்க எந்த லெவெல்?

நானும் ..நானும்..நானும்...
இப்படி எத்தனையோ பேர்..சேர்ந்துகிட்டு இருக்காங்க.. ஃபார்ம் வில்லி Farmvilley என்னும் விவசாயம் பண்ணும் விளையாட்டுக்கு!!
அதில் பூசணிக்காய் விதைச்சா சாயங்காலம் அறுவடை..அதுல ஒரு குறிப்பிட்ட பணம் சம்பாதிக்க முடிகிறது...இப்படித்தான் நார்மலா
நாம் யோசிப்போம்..நான் யோசிச்சேன்.. எனக்கு லெவெல்களை பற்றி கவலை வந்ததே கிடையாது.. விளையாட்டு தானே என்று பொறுமையா
விளையாடுவேன்..
சில நாள் முன்னாடி என் நண்பரிடம் அரட்டையில் இருந்தேன் ..நான் பத்துவார்த்தை பேசினால் அவர் ஒரு வார்த்தையில் முடித்துகொள்கிறார்..
என்னடா இது..”பிஸியா இருக்கீங்களா? ” என்று கேட்டால் ஆமாம் என்றார்.
பிறகு நானும் ஃபார்ம்வில்லி பக்கம் போன போது தான் தெரிந்தது அவர் பிஸியாக இருந்தது இங்குதான் என்று..
இதுக்கூட பரவாயில்லை..இதை வைத்து ஈகோ சண்டை வேறு.. சில இடங்களில் நடந்ததாக கேள்விப்பட்டேன்.
நண்பரே நான் உங்களை சில கேள்விகள் கேட்கிறேன்..பதில் சொல்லுங்க பார்ப்போம்..
1. அங்க நீங்க சம்பாதிக்கும் பேரும் புகழும் எந்த வகையிலாவது உங்களுக்கு உதவ போகிறதா?
2. ஒரு ஜாலிக்கு தான் விளையாடுறோம்னு சொல்லும் உங்களுக்கு ஒரு கேள்வி.. இருக்கும் வேலைவெட்டியெல்லாம் விட்டுட்டு..
ஒரு நல்ல நண்பனின் அருகாமையை விட..அந்த குப்பை விவசாயம் உங்களுக்கு முக்கியமாய் போனதன் காரணம் என்ன?
3. அதில் வரும் பணத்தை கொண்டு..வீடு வாங்க முடியுமா? ஒரு சைக்கிள் போல்ட் வாங்கக்கூட வழியில்லாத அந்த விளையாட்டை
ஏன் இவ்வளவு வெறித்தனமாக ஆடுகிறீர்கள்...?
4. பல லெவெல் கடந்த மாமேதைகளுக்கு ஒன்று தெரிந்திருக்கும்..இது நேரத்தை கொள்ளையடிக்கும் ஒரு விளையாட்டு என்று(கிரிக்கேட் போல)..
அப்புறம் ஏன் அதிலேயே ஊறி உங்கள் நண்பர்களை அவமானப்படுத்தறீங்க..
5. தமிழ்மண நண்பர்கள் சொன்ன சேதி ஒன்று இன்னும் அதிர்ச்சி அளித்தது.. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் ப்ளாக் படிக்கப்படும் சதவீதம்
12% குறைந்துள்ளது.. என்று.. அதிர்ச்சிதான்..எனக்கும்..ஏன் இப்படி அதன் மீது ஒரு கிறுக்கு?
6. நான் அவனுக்கு பத்து பரிசுகள் அனுப்பினேனே..ஏன் அவன் ஒன்று கூட அனுப்பவில்லை..ஏன் பணம் சேரவே மாட்டேங்குது.. நிலத்தின் அளவை அதிகரிக்கலாமா?
இப்படியெல்லாம் யோசிக்கும் நீங்கள் ..அங்க ஒருத்தன் காத்திருக்கானே நமக்காக..அவரை விட..அந்த நல்ல நட்பை விட இந்த குப்பை முக்கியமா? என்று யோசிப்பது இல்லை..?
7. நீங்கள் ஆர்கூட் அக்கவுண்ட் வைத்திருந்தாலே அந்த நிறுவனத்திற்கு தினமும் 0.05 செண்ட் லாபம்.. ஆர்க்கூட்டை விட எத்தனையோ படி பலம் வாய்ந்தது இந்த ”முகரைப்புத்தகம்”..
அப்போ நீங்கள் தினமும் அந்த வலைப்பக்கத்திலேயே அதிகம் செலவிடுவதால்.. அவர்கள் எவ்வளவு சம்பாரிப்பார்கள்.. ?
தினமும் எத்தனை கோடிகள் புரளுமோ? தெரிந்தே நம் மின்சாரம்..நமது நேரம்..நமது மன உளைச்சலை போட்டு
ஏன் கண்ட நாய்க்கு சம்பாரிச்சு தரணும்..அதில் நமக்கு பத்து பைசா நமக்கு தேறாத போதும்?
8. அந்த லெவெல்ஸும் பணமும் வராமல் இருந்தால்.. நீங்கள் அதை விளையாடுவீர்களா?
ஒண்ணு கடைசியா சொல்லிக்க விரும்பறேன்.. அது ஒரு போதை வஸ்து.. நீங்க விவசாயமே பண்ணாட்டியும் அந்த வலைப்பக்கத்தில் நீங்கள் இருந்தால் அவனுக்கு பணம் சேரும்.
உஷாரா இருந்துக்கோங்க மக்கா.. ஒரு நாள் போதை தலைக்கு மீறி போய்ட்டா..நீங்கள் கண்டுக்காம விட்ட நண்பர்கள் கைக்கொடுப்பார்களா? நிச்சயம் கொடுப்போம்..
அதற்கான முதல் கட்டம் தான் இந்த பதிவு...
யோசிங்க.. Add Neighbours-க்ளிக் பண்றதுக்கு முன்னாடி உங்களுக்காக காத்திருக்கும் Real Friends-ஐ மறந்துடாதீங்க..!!
Labels:
கடுப்பு,
சமூக சீர்திருத்தம்,
சமூகம்,
சிந்தனை,
பொது
Friday, October 9, 2009
Engineering College for Humans!!!! (எச்சரிக்கை- இது கொஞ்சம் கடுப்பான பதிவு!)

இனியும் என்னால பொறுக்க முடியாது..
இனி களத்துல குதிச்சுட வேண்டியதுதான்.. எப்படியாச்சும் இந்த புத்திமதியை, ஆதங்கத்தை நம்ம வலையுலகத்துல கொட்டிடணும்னு முடிவு பண்ணிட்டேன்.
ஒரு பழமொழி உண்டு ..ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்னு..
அதுபோல..இப்ப இந்த மனுஷ இனத்தையே ரெண்டு பண்ணி மனுஷங்களே கொண்டாடிக்கிறாங்க..!
இந்த சேலம் மாநகராட்சியில ஒரு பெயர் சொல்ல விரும்பாத..கல்லூரியில..
கல்லூரி பேருந்து விடுறாங்க..(இதுல என்னா ஆச்சரியம்னு தானே கேக்குறீங்க.?)...
அதுல முன்னாடி உக்கார்ந்து வரணுமாம் பெண்கள்.. பின்னாடி பசங்க வரணுமாம்..
சரி..கழுத..போய் தொலையுதுன்னு உக்கார்ந்த அடுத்த கண்டிஷன் பொண்ணுங்க கிட்ட எக்காரணம் கொண்டும் பேசவே கூடாதாம். இதை நினைச்சு சிரிக்கிறதா..அழுவுறதா? இல்ல அந்த காலேஜ் பிரின்சிபாலை மிதிக்கிறதான்னு தெரியலை..!!
அதுமட்டும் இல்லாம பேசுனது தெரிஞ்சா ரெண்டு நாளு சஸ்பெண்டு வேறயாம்..!!
அசிங்கமா இல்லை..!! ஒரு மனுஷன் இன்னோரு மனுஷ ஜென்மத்துகிட்ட பேசுவதை.. மூணாவதா இன்னோரு மனுஷ ஜென்மமே தடுக்குது..!!
அப்பா சாமிகளா..! அறிவு ஜீவிகளா! உங்க எல்லாருக்கும் ஒரு பெரிய கும்புடு..
இனிமேவாச்சும் யோசிச்சு பேசுங்க..உங்க வீட்டுலயும் ஒரு பொண்ணோ பையனோ இருக்கும் என்கிறதை ஞாபகம் வெச்சுக்கோங்க..!!
ஆணின் இயல்புகள் பெண்ணிற்கும் ..பெண்ணோட இயல்புகள் ஆணிற்கும் நிச்சயம் தெரிஞ்சிருக்கணும்..அப்படி தெரியாதவங்க மனுஷங்களா? எவ்ளோவோ படிச்சிருக்கோம்.. இதை ஏன் கண்டு பயப்படுறோம்?
தன் சக இனத்(மனித இனம்)தின் சைக்காலஜியையும் அனாடமியையும் தெரிஞ்சுக்காத ஒரே இனம் நாமா தான் இருப்போம்...!!
ப்ளீஸ்... நான் சொல்ல வரது இதுதான்.. பெண் பெண்ணா அழகா லட்சணமா இருக்கட்டும்..ஆனால் அவளுக்கு ஆணிடம் பேசவும் பழகவும் தைரியத்தையும் தெளிவையும் இந்த சமூகம் வளர்க்கட்டும்..
இதுவே தான் ஆணுக்கும்..
ப்ளீஸ் மச்சீஸ், கேர்ள்ஸ்!! இனிமே உங்க வாழ்க்கைய நீங்க வாழுங்க..உங்க அப்பா அம்மா வாழ்க்கைய அப்படியே ஜெராக்ஸ் பண்ணிட்டு இருக்காதிங்க..ஆல் தி பெஸ்ட்..!!
பி.கு : என் ப்ளாகுல நான் என்ன வேணா எழுதுவேன் என்று சொல்லபோவதில்லை.. அதே போல் பிறருக்காக நான் எழுவதை நிறுத்த போவதும் இல்லை.. என்ன சில நேரம் இப்படி கடுப்பா டைப் பண்ணிடுறேன்..ஹாஹாஹஹ..!!
Subscribe to:
Posts (Atom)