Showing posts with label சோகம். Show all posts
Showing posts with label சோகம். Show all posts

Monday, May 30, 2011

சோகமாய்...ஒரு கவிதை...!!







இருப்பதில் இருப்பது
ஏதுமில்லை எனவே
இருப்பதா வேண்டாமா
யோசிக்கிறேன்..

பொறுமை என்னை
போவென விட்டபின்
பொருப்பதா போகவா
யோசிக்கிறேன்..

நன்மையும் தீமையும்
தீர்க்கமாய் தெரிந்தபின்
தீயில் தீய்ந்திட
யோசிக்கிறேன்..

சுட்ட பழங்கள் எல்லாம்
சுடாமல் போனபின்
சுடலையில் சுடப்பட
யாசிக்கிறேன்..

அண்டமும் பிண்டமும்
அவனே ஆனப்பின்
அணைவதா எரிவதா?
யோசிக்கிறேன்..

நேசங்கள் அத்தனையும்
வேஷங்கள் ஆனப்பின்
காற்றோடு கரைந்திட
யாசிக்கிறேன்..

மண்ணும் நீரும்
கொஞ்சம் காற்றும்
கலவையாய் கலந்து
கொடுத்த உடம்பை
கவனமாய் கழட்டிவிட்டு
கரைந்திட போகிறேன்..

சிரித்ததும் போதும்
சிரிக்க வைத்ததும் போதும்
அழுததும் போதும்
இந்த அன்பான மானுடத்தில்

வருந்துகிறேன் 
இங்கு வந்தமைக்கு
திரும்புகிறேன் 
என் தாய்வீட்டிற்கு!!



Sunday, March 29, 2009

என் தேவதையின் சோகம் :(

எப்போதும் போல இல்லை இன்று. மனம் சோகத்தின் நிழலோடு காணப்படுகிறது. கவிதைகள் சோகத்தை கரைக்கும் என்ற நம்பிக்கையோடு கவிஞானாகிறேன்.




அந்த குட்டி தேவதை கடவுளின் முன் சோகமாய் வந்து சேர்ந்தது

கடவுள் அதனுடைய வாட்டத்தை கண்டு அதனிடம் கேட்டார்.

"என்ன ஆனது.. உன் புன்னகைக்கு
என்ன ஆனது.. உன் பூரிப்பிற்கு
என்ன ஆனது.. உன் கண்களுக்கு
என்னவோ இழந்தது போல்
என்னவோ தொலைத்தது போல்
என்னவோ கிடைக்காதது போல்
ஏன் இந்த வாட்டம்..
நான் அறியலாமா உன் மன ஓட்டம்?"

தேவதை சொன்னது
" இறைவா எனக்கு கொடுப்பது பிடிக்கவில்லை"

கடவுள் சொன்னார்
" என்ன காரணம் என்று நான் அறியலாமா?"

தேவதை சொன்னது

"இறைவா..!!
நான் அன்பை நீட்டுகிறேன்
அதை பெற்றுக் கொண்டு
கன்னத்தில் அரைகிறது உலகம்;



நான் பூக்களை கொடுக்கிறேன்
அதை பெற்று கொண்டு
தீயால் சுடுகிறது உலகம்;


நான் புன்னகையை கொடுக்கிறேன்
அதை பெற்று கொண்டு
கண்ணீரை பரிசளிக்கிறது உலகம்;


நான் அரவணைப்பை கொடுக்கிறேன்
அதை பெற்றுக் கொண்டு
என்னை அசிங்கமானவன் என்கிறது உலகம்;


நான் ஆதரவை கொடுக்கிறேன்
அதை பெற்றுக் கொண்டு
அறிவுகெட்டவனவன் என்கிறது உலகம்;


நான் பாசத்தை மட்டுமே கொடுக்கிறேன்
அதை பெற்றுக் கொண்டு
"அவனோரு மிருகம்" என்கிறது உலகம்."

கடவுள் புன்னகைத்தார்..
தேவதை கன்னம் பிடித்து அதன் கண்களை பார்த்தார்.

"அதோ அங்கே பார்.. ஒரு மனிதன் வலியால் தவிக்கிறான்."

தேவதை சொன்னது
"ஒரு நிமிடம் இறைவா.. இதோ வந்துவிடுகிறேன்"

கடவுள் தேவதையின் கைகளை பிடித்து சொன்னார்.

"ஒரு நிமிடம்.. உனக்கு தான் கொடுப்பது பிடிக்கவில்லையே அப்புறம் ஏன் தவிக்கிறாய் ? "

தேவதை பதில் சொல்ல முடியாமல் தலைகுனிந்தது.

கடவுள் சிரித்தார்.
" அட என் அன்பு தேவதையே!! நீ கொடு வேண்டாமென்று நான் சொல்லவில்லை. ஆனால் அவர்களிடம் நீ எதையும் எதிர்ப்பார்க்காமல் கொடு. அப்படி கொடுக்க பழகிவிட்டால் உனக்கு சோகம் இருக்காது.
இப்படி கண்ணீர் வடிக்க வேண்டாம்.

கொடுப்பது உன் இயல்பு. அதுதான் உன்னை இயக்கும் உயிர். அதை நீ மாற்ற முயற்சிக்காதே. அதற்கு பதிலாக உன்னை நீயே சரி செய்துகொள்.
எதிர்பார்க்காமல் கொடு.அதுவே உனக்கு நான் தரும் உபதேசம்"

என்ன சரிதானே !! இப்போது கிளம்பு.."

தேவதை பிரகாசமான புன்னகையோடு சொன்னது :
"நன்றி இறைவா!! இது உங்களுக்காக "

தேவதை இறைவனின் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு அந்த மனிதனை நோக்கி பறந்தது.



பாட்டு பாஸ்கி :
ஆமா இது கதையா கவிதையா?

என்னவோ .. உனக்கு இப்போ மனஸ ரிப்பேர் பண்ணனும் .
க(வி)தைக்கேத்த பாட்டு என்கிட்ட இருக்கு.. கீழ பாரு.


"ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலை இல்லே.
நான் தான்டா என் மனசுக்கு ராஜா
தூவுங்கடா என் வழியில ரோஜா...

நீ கேட்டா கேட்டத கொடுப்பேன்..
கேக்குற வரத்தே கேட்டுக்கடா..

இந்த பாட்ட முழுசா கேளு..
தெம்பாகிடுவ.. என்னங்க.. இந்த பாஸ்கி சொல்றது சரிதானே...!!

Tuesday, March 10, 2009

மரணத்தின் பாதைக்காக..!!!



எப்போதும் இருட்டில்
சுவனத்தனிமையில்
காற்றில்லா பூமியில்
கனியத்துடிக்கிறது மனம்;

பூக்கள் கருகி..
புன்னகைகள் இருண்டு
முட்களின் கூர்மையில்
சிகப்பு முத்துக்களாய்
ரத்தம் முட்களின் நுனியில்;

வெப்பம் எரிக்க
வேர்வையில் துளிகள்
கண்ணாடியாய் சிதற
சோகமாய் என் முகம்
ஒவ்வொரு துளியிலும் ;

மோனத்துவம் வந்து
மடியமர்ந்து கொண்டு
ஆலகால விஷமாய்
கொல்கிறது என் உயிரை;

பாலைவனச் சூட்டில்
மங்கும் சூரிய வெளிச்சத்தில்
கரிய முகங்கள்
கூரியப் பற்கள் காட்டி அழைக்கின்றன
மரணத்தின் பாதைக்காக..!!!

(பி.கு.) எட்டாங்கிளாஸில் எங்க டீச்சர் என்ன குரூப் டிஸ்கஷன்ல சேத்துக்கல.. அதான் இந்த கவிதை..சாரி.. கவுஜ..!!! ;)