Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Thursday, September 9, 2010

Deja Vu - 2006 திரை விமர்சனம்

What if you had to tell someone
the most important thing in the world,
but you knew they'd never believe you?

இந்த உலகத்திலேயே முக்கியமான விஷயத்தை ஒருத்தர்கிட்ட சொல்றீங்..
ஆனா அவங்க இதை நிச்சயம் நம்பமாட்டாங்கன்னு உங்களுக்கு தெரியும்.
அப்போ நீங்க என்ன செய்வீங்க?

Monday, January 18, 2010

ஆயிரத்தில் ஒருவன் - திரை விமர்சனம்

எனக்கு மிகவும் பிடித்த எம்ஜிஆர் படம் இதுதான்.


http://4.bp.blogspot.com/_03G3R_dD0Cc/SzSjk1GO3VI/AAAAAAAAAgI/pcu83jxQsGE/s320/2.jpg

1965இல் வந்த படம். எம்ஜிஆர், ஜெயலலிதா, நாகேஷ், நம்பியார், மனோகர், ராமதாஸ், எல். விஜயலக்ஷ்மி நடிப்பு. விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணைந்து இசை அமைத்த கடைசி படம். பி.ஆர். பந்துலு சிவாஜியுடன் முறைத்துக்கொண்டு எம்ஜிஆர் பக்கம் வந்து எடுத்த முதல் படம். அவரேதான் இயக்கம் என்று நினைக்கிறேன், சரியாக நினைவில்லை.

கலர் படங்கள் அபூர்வமாகவே வந்த காலத்தில் வந்த கலர் படம். கலர் மேக்கப் ரொம்ப கோரமாக இருக்காது (சரோஜாதேவி, எங்க வீட்டுப் பிள்ளை, enough said) எட்டு மணி மணியான பாட்டுகள். ராஜா ராணி சாகசக் கதைகளில் எம்ஜிஆரை அடிக்க ஆளில்லை என்று நிரூபித்த படம்.



எம்ஜிஆர் ஒரு டாக்டர். சர்வாதிகாரி மனோகரை எதிர்க்கும் புரட்சியாளர்களுக்கு தன் தொழில் தர்மப்படி சிகிச்சை அளிப்பார். அதற்காக அடிமையாக ராமதாசின் தீவில் விற்கப்படுவார். அங்கே சென்று நாம் அடிமையாகவே இருக்க வேண்டியதுதானா என்று கேட்கும் தோழர்களுக்கு ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே, நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே என்று ஆறுதல் சொல்வார். நடுவில் தன்னை சைட் அடிக்கும் ஜெவை பற்றி மாளிகையில் அவள் வீடு, மரக்கிளையில் ஏன் கூடு, இதில் நான் அந்த மான் நெஞ்சில் வாழுவதேங்கே கூறு என்று பாடுவார். கொள்ளை அடிக்கவரும் நம்பியாருடன் போராடினால் சுதந்திரம் தருகிறேன் என்று சொல்லும் ராமதாசை நம்பி நம்பியாரை விரட்டுவார். ஏமாற்ற நினைக்கும் ராமதாசிடமிருந்து தப்பி நம்பியாரின் கப்பலில் போவார். நம்பியாரின் ப்ளாக்மெயிலால் கொள்ளைக்காரனாக மாறுவார். ஆனால் கொள்ளைக்காரர்களிடமிருந்துதான் கொள்ளை அடிப்பார். ஜெவின் கப்பலை கைப்பற்றுவார். ஜெவை விரும்பும் நம்பியாரிடமிருந்து அவரை காப்பாற்ற தன் அடிமையாக்கிக்கொள்வார். பிறகு அவரை மணப்பார். நம்பியாரிடமிருந்து தப்ப முயற்சி செய்யும்போது நம்பியாருடன் ஒரு சூப்பர் கத்தி சண்டை போட்டு பிறகு அதோ அந்த பறவை என்று பாட்டு பாடி, மனோதரின் கப்பலுடன் சண்டை போட்டு, மனோகரை சாவிலிருந்து காப்பற்றி, மனோகர் தரும் ராஜ பதவியை நிராகரித்து டாக்டராகவே வாழ்வார்.

அவரல்லவோ சூப்பர்மான்? இப்போதைய நடிகர்கள் எந்த காலத்திலும் அவருக்கு ஈடாக முடியாது.

அருமையான ஆர்ட் டைரக்ஷன். காட்சிகள் மிகவும் ரிச்சாக எடுக்கப்பட்டிருக்கின்றன. கப்பல் காட்சிகள் நம்மை இன்னும் அசத்துகின்றன. பந்துலு பணத்தை தண்ணீ ராகத்தான் செலவழித்திருக்கிறார்.

எம்ஜிஆர், நம்பியார், ஜெ, ராமதாஸ் ஆகியோருக்கு நல்ல வேஷப் பொருத்தம். சரோஜா தேவியின் கொஞ்சல் பாணியிலிருந்து விடுதலை! நாகேஷ் ராமதாஸ் காட்சிகளில் சிரிக்கலாம்.

நம்பியாரிடமிருந்து ஜெவை ஒரு பெட்டியில் வைத்து கடத்தி செல்ல, நம்பியார் அந்த பெட்டியில் தன் வாளை செருகும் காட்சி அருமையானது. அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் என்று பாடும் போது தியேட்டரில் உற்சாகம் பிய்த்துக்கொண்டு கிளம்பும்.

ராமதாஸ் பேசும் “நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள். ஆனால் வாய்தான் காது வரை இருக்கிறது” என்ற வசனம் எங்கள் வட்டத்தில் ரொம்ப ஃபேமஸ்!

கண்ணதாசனும் வாலியும் போட்டி போட்டுக்கொண்டு அருமையான பாட்டுகளை எழுதி இருக்கிறார்கள். கண்ணதாசன் “அதோ அந்தப் பறவை”, “நாணமோ” பாட்டுகளை எழுதினால், வாலி “பருவம் எனது பாடல்”, “ஆடாமல் ஆடுகிறேன்”, “ஏன் என்ற கேள்வி”, “ஓடும் மேகங்களே”, “உன்னை நான் சந்தித்தேன்” போன்ற பாட்டுகளில் அசத்தி இருக்கிறார்.

எனது ஃபேவரிட் அதோ அந்த பறவைதான். எல்லாருக்குமே அதுதான் ஃபேவரிட். பாட்டும், கப்பலில் எம்ஜிஆரும் ஜெவும் ஓடி ஆடி பாடுவதும் பிரமாதம்.

எனக்கு பிடித்த அடுத்த பாட்டு ஏன் என்ற கேள்விதான். அருமையாக படம் பிடிக்கப்பட்டிருக்கும். எம்ஜிஆரும் அவர் தோழர்களும் வட்டமாக படுத்துக்கொண்டு தண்ணீர் குடிக்கும் காட்சி பார்க்க பிரமாதமாக இருக்கும்.

ஓடும் மேகங்களேவுக்கு மூன்றாவது இடம். நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன் என்ற வரிகள் மிக அருமை. படத்தின் டைட்டிலை வேறு அர்த்தத்தில் வாலி உபயோகித்திருப்பார். வார்த்தைகள் வருவதற்கு முன் அருமையான இசை.

ஒரே ஒரு டூயட் – நாணமோ. நல்ல பாட்டு.

ஜெவுக்கு மூன்று சோலோ பாட்டுகள். பருவம் எனது பாடல், உன்னை நான் சந்தித்தேன், ஆடாமல் ஆடுகிறேன் என்று. நன்றாக, அந்த காலத்துக்கு கவர்ச்சியாக ஆடியிருப்பார்.

எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கைக்கு வித்திட்ட படங்களில் ஆயிரத்தில் ஒருவனும் ஒன்று. இந்த படம் தான் அவரை கோடி மக்களின் தலைவனாக உருவாக்கியது.

நான் ஒரு வைத்தியன் ... இந்த சமுதாயத்திற்கு வைத்தியம் பார்ப்பது மட்டும் தான் என் தொழில்.

தோல்வியை எதிரணிக்கு பரிசளித்வன் நான் இது போன்ற வசனங்கள் ரசிகர்களை கவர்ந்தது.

இந்த படம் வெளியாகும் போது எம்.ஜி. ஆர் ரசிகர்கள் எப்படி இருந்தார்களோ... அதே நிலை தான் இப்போதும் பார்க்க முடிகிறது.

Saturday, June 20, 2009

வில்லு நாயகனும்.. 32 கேள்விகளும்..!!



1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?


என்னிடம் பிடிச்ச ஒரே விஷயம் பேர்தான்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

அழாதது எப்போதுன்னு கேக்கணும்.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

இங்க தலையெழுத்தே கிறுக்கலா இருக்கு ..இதுல கையெழுத்தை கேக்க வந்துட்டாரு..!!
(அடிக்க வருகிறார்..அவ்வ்வ்)

4).பிடித்த மதிய உணவு என்ன?

லெமன் ஜூஸ்.


5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

அதுக்குத்தானே அனுபவிச்சுட்டு இருக்கேன். இன்னும் வேறயா?


6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

தண்ணீரில் குளிக்க பிடிக்கும்.


7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

”குஷி”க்கு பிறகு ..இடுப்பை தான் பார்க்கிறேன்.

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச விஷயம்: நடிப்பு.

பிடிக்காத விஷயம் : எதன்னு சொல்ல... ஒரு படமா.. ரெண்டு படமா?

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடிச்ச விஷயம்: வெற்றி படங்களுக்கு என்னை பாராட்டுவது..

பிடிக்காத விஷயம் : தோற்ற படங்களுக்கு மக்களை பாராட்டுவது.

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

நயன் அண்ட் த்ரிஷா.


11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

ச்சீ..அசிங்கமா பேசாதீங்க..!!

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

வில்லு படத்தில்.. வடிவேலு காமெடி..!!

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

என்னையே பேனாவா மாத்துற அளவுக்கு எவனுக்கு தைரியம் இருக்கு?(பயத்தோடு சுற்றுமுற்றும் பார்க்கிறார்)

14.பிடித்த மணம்?

”கோ...........”(சென்ஸாரால் நறுக்கப்பட்டது)

வேணாம்..வாய கிளறாதீங்க..


15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

எனக்கு இதை பார்வேர்டு செய்தது..பிடிக்காத விஷயம்..எனக்கே இதை பார்வேடு செய்தது..
அவரை அழைக்க காரணம்.. இன்னுமா புரியல..(வில்லத்தனமாக சிரிக்கிறார்)

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

யாருன்னு தெரியலை.. சிக்கினார்..சின்னபின்னமாக்க படுவார் என்று அன்புடன் தெரிவித்துகொள்கிறேன்.(குரூர சிரிப்பு முகத்தில்)

17. பிடித்த விளையாட்டு?

கபடி.. கபடி.. !!

18.கண்ணாடி அணிபவரா?

போட்டுகிட்ட மட்டும் படம் ஸில்வர் ஜூப்ளியா ஓடிட போவுது..?!

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

ம்ம்.. பாஸ்..

20.கடைசியாகப் பார்த்த படம்?

வில்லு..

ஏய்..பேசிட்டு இருக்கொம்ல.. சைலன்ஸ்.!!

21.பிடித்த பருவ காலம் எது?

படம் வெற்றிபெற்ற காலங்கள் எல்லாமே..(விட்டத்தை ஏக்கமாய் பார்க்கிறார்)..!!

22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

சினிமாவால் அழிந்த சிலர்.

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

அது என்ன டெஸ்க்டொப்?

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சப்தம் :என் படத்தில் நான் பேசிய பஞ்ச் டயலாக்.

பிடிக்காதது : பேட்டி கொடுக்கும் போது மொணமொணவென பேசுவது.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

பத்ரி படத்துக்காக ஸ்விச்டர்லாந்து..

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

கை காலை வேகமா..ஆட்ட தெரியும்..
அதாங்க டான்ஸ்னு எதோ சொல்லுவாங்களே அதுதான். அதுமட்டும்தான்.


27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

அவர் படம் ஹிட்டாவது, என் படம் சொல்லிவெச்ச மாதிரி ஃப்ளாப்பாவது..!!



28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோவம்.. உங்க பாஷையில சொல்லணும்னா கொலைவெறி.(நாக்கை துறுத்தியபடி முறைக்கிறார்)

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

கோடம்பாக்கம்..

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

இன்னும் இருக்கேனேன்னு சந்தோஷப்படுங்க..அத விட்டுட்டு ..

31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

மனைவி இல்லாம்ல் செய்ய விரும்பும் காரியம்.... ..

.. திருட்டு முழி முழிக்கிறார்...

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

வாழ்க்கை ஒரு வட்டம்.. அதுல தோக்குறவன் ஜெயிப்பான்..(அழுகிறார்)ஜெயிக்கிறவன் தோப்பான்..!!

இந்த தொடர் பதிவுக்கு நான் அழைப்பது

எவண்டா எனக்கு இதை பார்வேடு பண்ணது?

டிஸ்கி :
இது விஜயை தாக்கவோ, கிண்டல் செய்யவோ போடப்பட்ட பதிவு அல்ல..!!