Showing posts with label திரை விமர்சனம். Show all posts
Showing posts with label திரை விமர்சனம். Show all posts

Thursday, September 9, 2010

Deja Vu - 2006 திரை விமர்சனம்

What if you had to tell someone
the most important thing in the world,
but you knew they'd never believe you?

இந்த உலகத்திலேயே முக்கியமான விஷயத்தை ஒருத்தர்கிட்ட சொல்றீங்..
ஆனா அவங்க இதை நிச்சயம் நம்பமாட்டாங்கன்னு உங்களுக்கு தெரியும்.
அப்போ நீங்க என்ன செய்வீங்க?

Monday, January 18, 2010

ஆயிரத்தில் ஒருவன் - திரை விமர்சனம்

எனக்கு மிகவும் பிடித்த எம்ஜிஆர் படம் இதுதான்.


http://4.bp.blogspot.com/_03G3R_dD0Cc/SzSjk1GO3VI/AAAAAAAAAgI/pcu83jxQsGE/s320/2.jpg

1965இல் வந்த படம். எம்ஜிஆர், ஜெயலலிதா, நாகேஷ், நம்பியார், மனோகர், ராமதாஸ், எல். விஜயலக்ஷ்மி நடிப்பு. விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணைந்து இசை அமைத்த கடைசி படம். பி.ஆர். பந்துலு சிவாஜியுடன் முறைத்துக்கொண்டு எம்ஜிஆர் பக்கம் வந்து எடுத்த முதல் படம். அவரேதான் இயக்கம் என்று நினைக்கிறேன், சரியாக நினைவில்லை.

கலர் படங்கள் அபூர்வமாகவே வந்த காலத்தில் வந்த கலர் படம். கலர் மேக்கப் ரொம்ப கோரமாக இருக்காது (சரோஜாதேவி, எங்க வீட்டுப் பிள்ளை, enough said) எட்டு மணி மணியான பாட்டுகள். ராஜா ராணி சாகசக் கதைகளில் எம்ஜிஆரை அடிக்க ஆளில்லை என்று நிரூபித்த படம்.



எம்ஜிஆர் ஒரு டாக்டர். சர்வாதிகாரி மனோகரை எதிர்க்கும் புரட்சியாளர்களுக்கு தன் தொழில் தர்மப்படி சிகிச்சை அளிப்பார். அதற்காக அடிமையாக ராமதாசின் தீவில் விற்கப்படுவார். அங்கே சென்று நாம் அடிமையாகவே இருக்க வேண்டியதுதானா என்று கேட்கும் தோழர்களுக்கு ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே, நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே என்று ஆறுதல் சொல்வார். நடுவில் தன்னை சைட் அடிக்கும் ஜெவை பற்றி மாளிகையில் அவள் வீடு, மரக்கிளையில் ஏன் கூடு, இதில் நான் அந்த மான் நெஞ்சில் வாழுவதேங்கே கூறு என்று பாடுவார். கொள்ளை அடிக்கவரும் நம்பியாருடன் போராடினால் சுதந்திரம் தருகிறேன் என்று சொல்லும் ராமதாசை நம்பி நம்பியாரை விரட்டுவார். ஏமாற்ற நினைக்கும் ராமதாசிடமிருந்து தப்பி நம்பியாரின் கப்பலில் போவார். நம்பியாரின் ப்ளாக்மெயிலால் கொள்ளைக்காரனாக மாறுவார். ஆனால் கொள்ளைக்காரர்களிடமிருந்துதான் கொள்ளை அடிப்பார். ஜெவின் கப்பலை கைப்பற்றுவார். ஜெவை விரும்பும் நம்பியாரிடமிருந்து அவரை காப்பாற்ற தன் அடிமையாக்கிக்கொள்வார். பிறகு அவரை மணப்பார். நம்பியாரிடமிருந்து தப்ப முயற்சி செய்யும்போது நம்பியாருடன் ஒரு சூப்பர் கத்தி சண்டை போட்டு பிறகு அதோ அந்த பறவை என்று பாட்டு பாடி, மனோதரின் கப்பலுடன் சண்டை போட்டு, மனோகரை சாவிலிருந்து காப்பற்றி, மனோகர் தரும் ராஜ பதவியை நிராகரித்து டாக்டராகவே வாழ்வார்.

அவரல்லவோ சூப்பர்மான்? இப்போதைய நடிகர்கள் எந்த காலத்திலும் அவருக்கு ஈடாக முடியாது.

அருமையான ஆர்ட் டைரக்ஷன். காட்சிகள் மிகவும் ரிச்சாக எடுக்கப்பட்டிருக்கின்றன. கப்பல் காட்சிகள் நம்மை இன்னும் அசத்துகின்றன. பந்துலு பணத்தை தண்ணீ ராகத்தான் செலவழித்திருக்கிறார்.

எம்ஜிஆர், நம்பியார், ஜெ, ராமதாஸ் ஆகியோருக்கு நல்ல வேஷப் பொருத்தம். சரோஜா தேவியின் கொஞ்சல் பாணியிலிருந்து விடுதலை! நாகேஷ் ராமதாஸ் காட்சிகளில் சிரிக்கலாம்.

நம்பியாரிடமிருந்து ஜெவை ஒரு பெட்டியில் வைத்து கடத்தி செல்ல, நம்பியார் அந்த பெட்டியில் தன் வாளை செருகும் காட்சி அருமையானது. அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் என்று பாடும் போது தியேட்டரில் உற்சாகம் பிய்த்துக்கொண்டு கிளம்பும்.

ராமதாஸ் பேசும் “நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள். ஆனால் வாய்தான் காது வரை இருக்கிறது” என்ற வசனம் எங்கள் வட்டத்தில் ரொம்ப ஃபேமஸ்!

கண்ணதாசனும் வாலியும் போட்டி போட்டுக்கொண்டு அருமையான பாட்டுகளை எழுதி இருக்கிறார்கள். கண்ணதாசன் “அதோ அந்தப் பறவை”, “நாணமோ” பாட்டுகளை எழுதினால், வாலி “பருவம் எனது பாடல்”, “ஆடாமல் ஆடுகிறேன்”, “ஏன் என்ற கேள்வி”, “ஓடும் மேகங்களே”, “உன்னை நான் சந்தித்தேன்” போன்ற பாட்டுகளில் அசத்தி இருக்கிறார்.

எனது ஃபேவரிட் அதோ அந்த பறவைதான். எல்லாருக்குமே அதுதான் ஃபேவரிட். பாட்டும், கப்பலில் எம்ஜிஆரும் ஜெவும் ஓடி ஆடி பாடுவதும் பிரமாதம்.

எனக்கு பிடித்த அடுத்த பாட்டு ஏன் என்ற கேள்விதான். அருமையாக படம் பிடிக்கப்பட்டிருக்கும். எம்ஜிஆரும் அவர் தோழர்களும் வட்டமாக படுத்துக்கொண்டு தண்ணீர் குடிக்கும் காட்சி பார்க்க பிரமாதமாக இருக்கும்.

ஓடும் மேகங்களேவுக்கு மூன்றாவது இடம். நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன் என்ற வரிகள் மிக அருமை. படத்தின் டைட்டிலை வேறு அர்த்தத்தில் வாலி உபயோகித்திருப்பார். வார்த்தைகள் வருவதற்கு முன் அருமையான இசை.

ஒரே ஒரு டூயட் – நாணமோ. நல்ல பாட்டு.

ஜெவுக்கு மூன்று சோலோ பாட்டுகள். பருவம் எனது பாடல், உன்னை நான் சந்தித்தேன், ஆடாமல் ஆடுகிறேன் என்று. நன்றாக, அந்த காலத்துக்கு கவர்ச்சியாக ஆடியிருப்பார்.

எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கைக்கு வித்திட்ட படங்களில் ஆயிரத்தில் ஒருவனும் ஒன்று. இந்த படம் தான் அவரை கோடி மக்களின் தலைவனாக உருவாக்கியது.

நான் ஒரு வைத்தியன் ... இந்த சமுதாயத்திற்கு வைத்தியம் பார்ப்பது மட்டும் தான் என் தொழில்.

தோல்வியை எதிரணிக்கு பரிசளித்வன் நான் இது போன்ற வசனங்கள் ரசிகர்களை கவர்ந்தது.

இந்த படம் வெளியாகும் போது எம்.ஜி. ஆர் ரசிகர்கள் எப்படி இருந்தார்களோ... அதே நிலை தான் இப்போதும் பார்க்க முடிகிறது.

Wednesday, November 11, 2009

The Prestige-2006, Christopher Nolan,Christian Bale,Hugh Jackman

கிரிஸ்டோபர் நோலன்.. என்னவோ சாதரண பேர்தான்..என்றாலும் தலைவர் வாழ்கன்னு கோஷம் போடுற அளவுக்கு ரசிகர்கூட்டம் கொண்ட டைரக்டர்.
ஸ்டீவன் ஸ்பீல்ஸ்பெர்க்கிர்கு பிறகு அதிக ரேட்டிங் கட்டிய ரைட்டர், டைரக்டர் இவர்.
இவரோட படங்கள் எப்பவுமே கடைசி நேர திருப்பத்துக்கு பேமஸ்..
அதுவும் அதிகபட்சம் மனதை தொடும் முடிவாகவே அமைப்பதில் கில்லாடி.

சரி புராணம் போதும்..வரலாறுக்கு வருவோம்!
இவர் இயக்கிய படங்கள் அனைத்துமே சூப்பர்பா ரகம்.Memento,Batman Begins,Dark Knight,The Prestige.

இப்போ நாம் பார்க்க போகும் படம் the prestige.

http://images.allmoviephoto.com/2006_The_Prestige/2006_the_prestige_045.jpg

1800களில் நடக்கும் கதை இது.
பிரிட்டிஷ் இங்கிலாந்தில் இரண்டு சமகால மேஜிக் நிபுணர்கள்.கிரிஸ்டியன் பேல்(Terminator Salvation hero),ஹீஜ் ஜேக்மேன்(Wolverine-xmen,-2,3,4)
இவங்க ரெண்டு பேரும் முதலில் ஒருத்தருக்கு கீழ வேலை செஞ்சு பிறகு சில காலம் கழிச்சு தனித்தனியே மேடை
ஏறி மக்களை ஏமாற்றியவர்கள்(மேஜிக்கில் மட்டும்).

ஆனால் ஒரே வித்தியாசம்..ஜாக்மேன் தான் பெரிய மெஜிஷியனா வரணும்ங்கற வெறி கொண்டவர். அதற்காக எப்படியும் பலரோட ஸ்டைலை காப்பி அடிக்க
தவறாதவர்.
கிரிஸ்டியன் பேலும் அதே ரகம் ஆனால் கொஞ்சம் டீஸண்டா தானே புதுசா கண்டுபிடிக்க தெரிஞ்சவர்.ரகசியங்களை காப்பாத்த தெரிஞ்ச கில்லாடி.

ஒரு முறை ஜேக்மேனின் ஷோவில் மாறுவேஷத்தில் மேடையில் கலந்துகொள்கிறார்.அப்போது நடக்கும் அசம்பாவிதத்தில் ஜேக்மேனின் மனைவி இறக்கிறார்.The Prestige Wallpaper - 2006
இதற்கு கிரிஸ்டியன் பேல் தான் காரணம் என்று ஜேக்மேன் அவரை பழிவாங்க துடிக்கிறார். தான் தொலைத்த மகிழ்ச்சியை அவனும் தொலைக்க வேண்டும் என்கிற
பழிவெறி மனதில் குடிகொள்கிறது.

இப்போது கதை சூடுபிடிக்கிறது.. ஒரு புதிய ஷோ ஆரம்பிக்கிறார் கிரிஸ்டியன் பேல். அதில் மக்களோடு மக்களாய் கலந்துகொள்ளும் ஜேக்மேன் , கிரிஸ்டியன் பேலை கொல்ல முயற்சிக்க,
கைதவறிப்போக..கிரிஸ்டியன் பேலின் இரண்டு இடது கை விரல்களை மட்டும் பலி வாங்குகிறது.தப்பித்து விடுகிறார் ஜேக்மேன்.

அதற்குள் கிரிஸ்டின் பேல் ஒரு புதிய நிகழ்ச்சியை துவங்குகிறார். அதில் கிரிஸ்டியன் பேல் இந்த மூலையில் இருந்து ஒரு பந்தினை தானே தூக்கி போட்டுவிட்டு ஒரு கதவுக்குள் அறைக்குள் செல்வார். அடுத்த மூலையில் இருக்கும் கதவு வழியாக வெளியேறி பந்தை பிடிக்கிறார்.
மக்கள் ஆச்சரியத்தில் வியந்து போகிறார்கள். இதை ஜேக்மேனும் கவனிக்கிறார்.


சில நாட்கள் கடந்தன. ஒரு புதிய ஷோ ஒன்றை ஏற்பாடு செய்யும் திட்டத்தில் இருக்கும் ஜேக்மேன்.. தன்னை போலவே இருக்கும் இன்னொரு நபரை தேடுகிறார். ஆனால் அந்த நபர் சரியான குடிகாரனாய் இருப்பதால் அவரை விரட்டிவிடுகிறார்.
நிக்கோலஸ் டெஸ்லா என்பவர் மூலம் “ஒரு பொருளை அப்படியே நகல் எடுத்து வேறு இடத்தில் சேர்க்கும்”(Science-fiction)புதிய திட்டம் பற்றி அறிகிறார்.
இவருக்கு முதலில் ஆச்சரியமாக இருந்தாலும் இவருக்குள்ள இருக்கும் சாத்தான் சிரித்தது. இந்த மிஷினை தானே வாங்கிகொள்வதாகவும், அதை தன் ஷோவில் பயன்படுத்தபோவதாகவும் சொல்கிறார் ஜேக்மேன்.

அந்த ஷோவிற்கு பெயர் ”Transported Man" என நாமகரணம் சூட்டுகிறார். ஆனால் ஒரே ஒரு பிரச்சனை. ஒவ்வொரு ஷோவிலும் ஒரு புதிய ஜேக்மேன் உருவாகிவிடுவார். அவரின் நகல்களாய்.
இதை சமாளிக்க தன்னையே பலியிடுகிறார் ஜேக்மேன்.

இந்த பலியிடலை ஒருநாள் நேரில் பார்த்துவிடும் கிரிஸ்டின் பேல் அவரை காப்பாற்ற முயற்சிக்கிறார். ஆனால் அதில் தோற்றுவிட , கிரிஸ்டின் பேல் மீது வழக்கு தொடர்கிறார் ஜேக்மேனின் உதவியாளர் மைக்கேல் கேன்.
இதை சற்றும் எதிர்பாராத கிரிஸ்டின் பேல் கோர்டின் தூக்கு தண்டனைக்கு ஆளாகிறார்.

கிரிஸ்டின் பேலின் குடும்பத்தை கவனித்துகொள்கிறார் அவரின் உதவியாளர்.(இவர்தான் கதையின் மெயின் கேரக்டர்). ஒரு நாள் கிரிஸ்டியன் பேலை சந்திக்க ஒரு அரசாங்க அதிகாரி வர.. அதிர்கிறார் கிரிஸ்டியன் பேல்.
காரணம் அது ஜேக்மேனின் இன்னொரு காப்பி. அதாவது அந்த மிஷின் மூலம் கடைசி ஷோவில் உருவான காப்பி .

உன் குழந்தை உயிருடன் இருக்க வேண்டுமானால் உன் ஷோவின் ரகசியத்தை சொல்லிடுன்னு மிரட்டுகிறார் ஜேக்மேன்.இறுதி நாட்கள் நெருங்கினாலும் தன் ரகசியத்தை வெளியிடாமலே உயிர்விடுகிறார் கிரிஸ்டின் பேல்.
குழந்தையையும் காப்பாற்றிவிடுகிறார் கிரிஸ்டின் பேல். எப்படி...?

படத்தில் காணுங்கள்.



ரொம்ப பெருசா போய்டுச்சா? ஐயம் ஸாரி..!!

..very lengthy..but..very very nice script..by christopher nolan.


எச்சரிக்கை..படத்தில் எதாவது ஒரு கதாப்பாத்திரத்தின் குணம் உங்களை தொற்றிகொள்ளும் வாய்ப்புள்ளது..ஜாக்கிரதை..!

Saturday, October 17, 2009

திரை விமரசனம்- Eternal Sunshine of a Spotless Mind (+18 only)

ஹாய்..


புது டெம்ளேட் நல்லா இருக்கும்னு நம்பறேன்..!!


ரொம்ப நாளாச்சுங்க திரைவிமர்சன பதிவெழுதி..

இப்போதான் சரியான நேரமும் விமர்சனத்துக்கு ஒரு படமும் கிடைச்சுது..அப்புறம் கேக்கவா வேணும்..!!

இன்னிக்கு விமர்சனத்துக்கு எடுத்துகிட்ட படம் “Eternal Sunshine of a Spotless Mind"..

இந்த படத்தை IMDB rating-ல தான் முதன்முதலில் பார்த்தேன்..

ஆனால் “Rated-R".. :(

Jim carrey யின் அசத்தலான நடிப்பில் உருவாக்கப்பட்ட படம் இது..







கதையின் போக்கை புரிஞ்சிக்க முதலில் இருந்தே உன்னிப்பாக கவனிக்க வேண்டிய கட்டாயம் இருக்கு.

எப்பவும் போல Jim-காமெடி பண்ணி கலக்குவாரு.. நல்ல நகைச்சுவை இருக்கும்னு பார்த்தா..
மனுஷன் ரொம்ப சீரியஸாவே இருக்கார்..

அடுத்த இன்ப அதிர்ச்சி..நம்ம டைட்டானிக் ஹீரோயின் (கேட் வின்ஸ்லெட்) பார்க்க 70’s ஹிப்பி மாதிரி ஒரு திமிரான(அழகான) லுக்கோட வளைய வராங்க..!!



முதல் 6 காட்சிகள் கவிதையோ கவிதை..!!

ஜிம் கேரியை ஒரு ரயில் பயணத்தில் சந்திக்கும் ஹீரோயின் அவரிடம் பேச்சு கொடுக்கிறார்..
அந்த பேச்சு நல்ல நட்பாக மாறி பிறகு காதலில் முடிகிறது.. ஆனால் சில பொய்களும் கொஞ்சம் டாமினேஷனும் குறுக்கே வர
அவர்களின் காதல் சிதைகிறது. சிறது காலம் விரக்தியில் வாழும் ஜிம் கேரி தன் காதலியை மீண்டும் சந்திக்க அவர் வேலை செய்யும்
கடைக்கு செல்கிறார். ஆனால் அவளோ அவரை சுத்தமாக மறந்தே விட்டார்...கவனிக்க.. சுத்தமாக என்றால்..தன் மனதில்,மூளையில் இருந்து
அவரின் நினைவுகள் அனைத்தையும் அழித்தே விட்டார்.(கொஞ்சம் சையின்ஸ் ஃபிக்‌ஷன்).. அதிர்ந்து போகிறார் ஜிம் கேரி.








அவரின் நண்பர் ஒருவர்
இது சகஜம்தான்..இதே போல் நீயும் அவளை அழித்துவிட்டு ஏன் நிம்மதியாக வாழக்கூடாது என்று கேட்க ஜிம் கேரிக்கு பொறி தட்டுகிறது.
அவளே நம்மை தூக்கி எறிந்த பிறகு நாம் மட்டும் ஏன் அவளை நினைத்து உருகிக்கொண்டு இருக்க வேண்டும் என்று சொல்ல
அந்த நினைவுகளை அழிக்கும் டாக்டரை சந்திக்கிறார். அந்த டாக்டர் ஏன் அவள் காதலியை அவளுக்கு பிடிக்கவில்லை என்பது போல சில பல
கேள்விகளோடு நினைவுகளை அழிக்கும் வேலையை துவங்குகிறார்.

ஜிம்மின் வீட்டிலேயே நினைவழித்தல் ட்ரீட்மெண்ட் தருவதாக உறுதியளித்த டாக்டர் அவரை விட்டிற்கு அனுப்பிவிடுகிறார்.வீட்டிற்கு வந்ததும்
ஜிம் கேரிக்கு மீண்டும் அதே விரக்தி தொற்றி கொள்கிறது. அதே நேரம் அவர் வீட்டிற்கு இரண்டு அஸிஸ்டண்ட் டாக்டர்கள் வர.. நினைவழித்தல்
வேலை துவங்கிவிடுகிறது.





ஆழ்நிலை உறக்கத்திற்கு செல்லும் ஜிம் கேரியின் மூளையினை Brain Mapping மூலம் ஆராய்கிறார் டாக்டர். குறிப்பிட்ட இடத்தில் அவரின்
காதல் நினைவுகள் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கிறார். இப்போது ஜிம்மின் மனம் அவரின் மூளைக்குள் பயணிக்கிறது..அவரின் நினைவுகளை அவரே
மூன்றாவது மனிதராக நின்று பார்க்கிறார்..சில நேரம் அவரே அந்த நினைவுகளை கட்டுபடுத்தவும் முடிகிறது...


அந்த ட்ரீட்மெண்ட் நடந்துகொண்டிருக்கும் போது ஜிம்மின் வீட்டில் இந்த அஸிஸ்டண்ட் டாக்டர்கள் போடும் ஆட்டம்.. Untoleratable..!! இதுங்க அடிக்கிற லூட்டிக்கு தான் படம் "R" rating வாங்கிடுச்சுன்னு கூட சொல்லலாம்..!!


இப்போது துவங்குகிறது போராட்டம்.


ஜிம்-மின் காதல் நினைவுகள் அழிக்கப்பட ஆரம்பித்தவுடன் அவருக்கு பயம் தொற்றிக்கொள்கிறது. அவர் தன் நினைவுகள் அப்படியே இருந்துவிட்டால் என்ன என்று
யோசிக்கிறார்.. தன் காதலில் சின்னமாய் நம் நினைவுகளாவது இருக்கட்டும் என்று முடிவு செய்யும் ஜிம்.. அவரின் காதலியை கூட்டிக்கொண்டு..
கன்னாபின்னாவென்று குழந்தை நாள் நினைவுகளுக்கும் எதிர்கால கனவுகளுக்குள்ளும் புகுந்து கொள்கிறார். இதனால் ஜிம் கேரியின் நினைவுகளை
ஒழுங்காக அழிக்க முடியாமல் தடுமாறுகிறார்கள் இந்த டாக்டர்கள்.



இது ஒரு பக்கம் இருக்க.. தன் அடுத்த பாய் ஃப்ரெண்டோடு விளையாடிகொண்டிருக்கும் ஹீரோயினுக்கும் எதோ தோன்றுகிறது. அவர் கண்முன்னே ஜிம் கேரியின் முகமும்
அவர்களின் சில காதல் நினைவுகளும் வந்து மறைகின்றன. தன் காதலனை தன் நினைவுகளை அழித்துவிட்ட அந்த நாள் அவருக்கு ஞாபகம் வர
அவரை தேடி அவர் வீட்டுக்கு கிளம்புகிறார் ஹீரோயின்.

இங்கே ஜிம் தன் காதலியின் நினைவுகளை காப்பாற்ற போராடிகொண்டிருக்க..அவளும் ஜிம்மை தேடி கிளம்ப..

இறுதியில் ஜிம் தன் காதலியின் நினைவுகளை அழிக்காமல் காப்பாற்றினாரா? அவர்கள் மீண்டும் இணைந்தார்களா? கடைசி பத்து நிமிட கவிதை காட்சிகள் உங்களுக்கு அதை சொல்லும்..!!

சில நெளிய வைக்கும் காட்சிகளை நீங்கள் உங்கள் நினைவிலிருந்து அழித்துவிட்டு..மீண்டும் இந்த திரைப்படத்தை பற்றி நினைத்து பார்த்தால்..அவர்களின் அருமையான நடிப்பும், கதையின் ஆழமும் நிச்சயம் புரியும்...


மேற்படி தகவலுக்கு இங்க பாருங்க..

Thursday, June 18, 2009

ஒரு பாண்டா கரடியின் கனவு..!!!

Kung Fu Panda





ஒரு ஊருல ஒரு பாண்டா கரடி இருந்துச்சாம். அதுக்கு குங்-ஃபூ கலையை கத்துக்கணும்னு ரொம்ப ஆசையாம். ஆனா அவங்க அப்பா அவனை
நூடுல்ஸ் விக்க சொல்லிட்டே இருந்தாராம். ஒரு நாளு..

இப்படி சொல்ல வேண்டிய கதையை மெருகேற்றி.. அழகாய், அனிமேஷனாய், அம்சமாய் குடுத்திருக்கிறார்கள் நமது ஹாலிவுட் சகாக்கள்.
நம்ம டிரீம்வர்க்ஸின் கைவண்ணத்தில் அற்புதமாய் ஒரு படைப்பு.

ஒரு உயரமான உருளைகிழங்கு கணக்காய் ஒரு பாண்டா கரடி.
அதனுடைய ஆசைகள், கனவுகள்,லட்சியம் எல்லாமே குங்-ஃபூ.(இதுவும் கராத்தே போலத்தான்..மேலும் தகவலுக்கு இங்கே பாருங்கள்).
அதில் தேர்ச்சி பெற அது அனுபவிக்கும் கஷ்டங்கள். அதை அடைந்துவிட்ட பிறகு அதற்கு வரும் முக்கியமான சவால். இவை அனைத்தையும்
நகைச்சுவையோடு சொல்லி இருக்கிறார்கள்.




எப்படியும் தன்னை தனித்து நிலைநாட்டிகொள்வதில் ட்ரீம்வர்க்ஸ் எப்போதும் முதலிடம் வகிக்கிறது. பிக்ஸரின் திரைப்படங்களுக்கு
ஈடுகொடுக்கும் விதமாக எப்போதும் ஒரு படைப்பை தன்னிடம் கொண்டுள்ளது ட்ரீம்வர்க்ஸ்.

இது அனிமேஷன் தானா? அல்லது நிஜ சம்பவங்களா? என்று திகைக்க கூடிய அளவுக்கு
அனிமேஷனில் புகுந்து விளையாடி இருக்கிறார்கள் ”கனவுவேலையாட்கள்”. சண்டை காட்சிகளில் இருக்கும் தத்ரூபத்திற்காகவே
படம் ஆஸ்கருக்கு தேர்ந்தெடுக்க பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் பிக்ஸரின் வால்-இ ஆஸ்கரை தட்டி சென்றதுதான் சோகம். இருந்தாலும் மக்கள் மனதில் சிறந்த அனிமேஷன் படமாக
கடந்த 2008ம் ஆண்டு குடிகொண்டது என்பதை மறுப்பதற்கில்லை.

இந்த படத்தில் வரும் முதல் காட்சியானது 3டி-யில் செய்யப்படாமல் 2டி அனிமேஷனாக ஜேம்ஸ் பாக்ஸ்டர் (என் மானசீக குரு)என்கிற அனிமேட்டரால்
தனியே தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதை அவர் நாவலேயே கேட்டு அறியும் பாக்கியமும் எனக்கு கிடைத்தது ,சமீபத்திய பெங்களூரு பயணத்தின் போது.

உதிரி தகவல்கள் :

இதில் வரும் குரங்கு கதாப்பாத்திரத்திற்கு நமது அதிரடி மன்னன் ”ஜாக்கி சானு”ம்..
இதில் வரும் பெண்புலி (அந்த புலி இல்லீங்கோ..இது டைகரஸ்)க்கு நம்ம ”ஏஞ்சலீனா ஜூலி”யக்காவும் குரல் குடுத்திருக்கிறார்கள்.

படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்க கூடியது.

சிடிக்கள் முக்கிய நகரங்களில் நிச்சயம் கிடைக்க கூடியதே!!

நம்ம ரேட்டிங் [7/10]