Sunday, February 22, 2009

பேனா

அன்புள்ள விமலா,
என்று நீ என்னை சந்தித்தாயோ அன்று முதல் இன்று வரை நான்
உன்னை மனமார நேசிக்கத்தான் செய்கிறேன்.
ஆனால், அன்று நீ என்னை அந்த பெண்ணோடு தொடர்ப்படுத்தி
சந்தேகித்தப் போது கூட எனக்கு துளியும் வருத்தம் இல்லை.
அன்று சமாதானம் செய்ய வந்த என்னை உன் வார்த்தைகள் வதைத்துவிட்டன.
இனியும் உனக்காக வாழ்க்கையை செலவிடவேண்டுமா ? என்ற எண்ணம் என் மனதில் ஓடுகிறது.
இது சரி வருமா என யோசித்து நம் இருவருக்கும் வலிக்காத ஒரு முடிவைத் தருகிறேன்.
'நாம் பிரிந்துவிடலாம்'. இதை விட சிறப்பான வழி எனக்கு தெரியவில்லை.
இதுவே நான் உனக்கு எழுதும் கடைசி கடிதம். ..

-நன்றி- மகேஷ்.

************************************************************************************
மகேஷ் மெல்ல எழுந்தான். ஒரு முடிவுக்கு வந்தவனாய் கடிதத்தை மடித்து அவள் ஹாஸ்டல் முகவரியை
எழுத எத்தனிக்கையில். பேனா எழுத மறுத்தது.
"நல்லாத்தானே எழுதிச்சு... என்ன ஆச்சு...?"
மீண்டும் முயன்றான்... எழுதவில்லை...

"ச்சே".. கோபத்துடன் பேனாவை விட்டெறிந்தான்...
எங்கே தேடியும் வேறு பேனா கிடைக்கவில்லை...

"ஒ... இங்க இருக்கானு பார்ப்போம்.. " அலமாரியில் முதல் அடுக்கில் துழாவினான்...
ஒரு பேனா.. கிடைத்தது.....

உடனே முகவரியை எழுதி முடித்தான்..

தபால் பெட்டி பக்கத்தில் தான் இருந்தது...
நாலு எட்டில்.. அதை அடைந்தான்...
கடிதத்தை.. உள்ளே நுழைத்தான்...
சத்தமில்லாமல் உள்ளே விழுந்தது...

மனபாரம் குறையும் என எதிர்ப்பார்த்தான்..
ஆனால்.. அது இன்னும் அதிகமானதே தவிர.. குறையவில்லை..
சரியாக தூங்கவோ.. சாப்பிடவோ.. முடியவில்லை...

"காதலில் விழுந்த முதல் நாள் பட்ட பாடுகளை இப்போதும் படுகிறேன்....
..... ம்... சரியாகிவிடும்... "
என்று சமாதானம் செய்துகொண்டான்...

***********************************************************************************

இரண்டாவ்து நாள்...
அவனின்.. செல்போன்.. சினுங்கியது...
"புதிய நம்பரா இருக்கே... யாரா இருக்கும்...?"
"ஹலோ"
எதிர்முனையில்..
"சார்.. நீங்க மகேஷ் தானே.. ?" பெண்குரல்...
"ஆமாம்.. நீங்க ?"
" இந்திரா வுமன்ஸ் ஹாஸ்டல்ல இருந்து பேசறேன்..
விமலாவோட தோழி நான்..."
"ம்... சொல்லுங்க.."
"நேத்து விமலா பாய்சன் சாப்பிட்டுடாங்க..." குரல் தளுதளுத்தது...

"எ... என்ன.. நிஜமாவா..?.." அப்படியெ அதிர்ந்துபோனான்...
"ஆமாம் சார்.. இப்போ ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்கோம்.."
"சீரியஸ் கண்டிஷன் தான்.. நீங்க வரமுடியுமா..?..ப்ளீஸ்"

"எந்த ஹாஸ்பிடல் மேடம்.. ?"

"வி.கே. தாஸ்.... ஐ.சி.யூ.ல.."

"தோ.. வரேன்.."
உடனே சட்டையை அணிந்துகொண்டு கிளம்பினான்...
அந்த புதிய பேனா.. கீழே விழுந்தது...
எடுத்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டான்..
பைக்.. சீறியது...

**********************************************************************************

"ஐ.சி.யூ.. விமலான்னு ஒரு பேஷண்ட்.. "

"நேரா போய்.. லெஃப்ட் சைட் சார்.. "

"தேங்கஸ்"

ஓட்டமும் நடையுமாக விரைந்தான்....
ஐ.சி.யூ.. தெரிந்தது..

"மகேஷ்.. ?" போனில் பேசியவள்...
"ஹான்.. நான்தான்"

"சாரி... அவ.. நோ மோர்..:" சொல்லும்போதே வெடித்து அழுதாள்...
இவன் கண்கள் பனித்தது...
"நா அவள பாக்கனும்.."
"சாரி.. மிஸ்டர்.. இது டைம் இல்ல" ஒரு பெண் டாக்டர் கையமர்த்தினார்...
மெல்ல அமர்ந்தான்..
குனியும்போது..சட்டையில் அவன் பேனா தென்பட்டது...
.. வெளியே எடுத்தான்..
"இந்த பேனா இருக்கும்வரைக்கும் நம் காதலும் இருக்கும்.. நானும் இருப்பேன் உனக்காக"
"இது உன் காதலியின் முதல் பரிசு"ஆடிப்போனான்..

"அழுது முடிச்சாச்சா? போய் விமலாவ எழுப்பி கூட்டிட்டு வாங்க... "
"என்ன ஒளர்றீங்க... அவ இறந்துட்டான்னு சொல்றேன்... நம்பாம ஒளராதீங்க.."
"வேணும்-னா உள்ள போய் பாருங்க... "

"ம்.... கண்டிப்பா..."

*********************************************************************************

மூன்று.. நாட்கள் கழித்து...




"எப்டிடா.. எப்படி தெரியும் உனக்கு...
செ.. போடா.. எவ்ளோ யோசிச்சோம் தெரியுமா..!!!"

"தோ.. இந்த பேனா சொல்லிச்சு..."

"இன்னும் இருக்கா உன்கிட்ட.. வாவ்.."

"நீ இருக்கற வரைக்கும் இதுவும் இருக்கும்"


"போதும் பேசுனது..."

16 comments:

நாமக்கல் சிபி said...

மீ த ஃபர்ஸ்ட்டு!

அபி அப்பா said...

அய்யா! தாங்கள் கேட்டு கொண்டதுக்கு இனங்க படிக்கவில்லை!

ஆனா கதை ஜூப்பர்!

நிஜமா நல்லவன் said...

கதை நல்லா இருக்கு.....தொடர்ந்து எழுதினா இன்னும் சுவாராசியமாக எழுதுவீர்கள் என்பது எனது எண்ணம்....வாழ்த்துக்கள்!

கவிதா | Kavitha said...

ரங்கா...ம்ம்... எவ்வளவு வெட்டியா இருக்கேன்னு மட்டும் புரியுது..

எனக்கு கதை பிடிச்சி இருக்கு......

நாமக்கல் சிபி said...

குட் நரேஷன் மாப்பி!

தூக்கி மேலே வைக்கவும்! (கீப் இட் அப்)

Lancelot said...

aaaaaahhhhhhhhhhhh aavi kathai illala??? :P

Ungalranga said...

// Namakkal Shibi said...

மீ த ஃபர்ஸ்ட்டு!//
தாங்ஸூ..

Ungalranga said...

//அபி அப்பா said...

அய்யா! தாங்கள் கேட்டு கொண்டதுக்கு இனங்க படிக்கவில்லை!

ஆனா கதை ஜூப்பர்!//
தப்பா நினைக்க வேண்டாம்...
சும்மா உலுலாயீ...
பாராட்டுக்கு நன்றி...

Ungalranga said...

//நிஜமா நல்லவன் said...

கதை நல்லா இருக்கு.....தொடர்ந்து எழுதினா இன்னும் சுவாராசியமாக எழுதுவீர்கள் என்பது எனது எண்ணம்....வாழ்த்துக்கள்!//

மிக்க நன்றி.. !!!
(உங்களுக்கு தனியா இருக்குடி...)

Ungalranga said...

//கவிதா | Kavitha said...

ரங்கா...ம்ம்... எவ்வளவு வெட்டியா இருக்கேன்னு மட்டும் புரியுது..

எனக்கு கதை பிடிச்சி இருக்கு......//
என் ஹெட்போன ஒடச்சதும் இல்லாம..
வெட்டியா இருக்கேன்னு வேற சொல்லிட்டு போற...
அணிலு அளவுக்குகூட உனக்கு மனசாட்சியே கிடையாதா?

உனக்கு கதை பிடிக்கும்னு தெரியும்..
வந்ததுக்கு நன்னி...

(உங்களுக்கு தனியா இருக்குடி-2)

Ungalranga said...

//Namakkal Shibi said...

குட் நரேஷன் மாப்பி!

தூக்கி மேலே வைக்கவும்! (கீப் இட் அப்)//

அதென்ன தூக்கி வெக்கிறது.. தூக்காம வெக்கிறது...??

ஓ.. இது பாராட்டா? கவனிக்கல பா.. நானு...
சரி.. சரி.. நன்னி...!! :))

Ungalranga said...

//Lancelot said...

aaaaaahhhhhhhhhhhh aavi kathai illala??? :P//

என்ன கதைய முழுசா படிச்சீங்களா.. இல்லயா?
அடுத்த பின்னூட்டத்தில் விளக்குமாறு கேட்டுக்கறேன்...
அவ்வ்வ்வ் :((

Lancelot said...

@ Rangan

thalai fulla padichen athu summa humor conceptukku commentu :P

சந்தனமுல்லை said...

//நிஜமா நல்லவன் said...
கதை நல்லா இருக்கு.....தொடர்ந்து எழுதினா இன்னும் சுவாராசியமாக எழுதுவீர்கள் என்பது எனது எண்ணம்....வாழ்த்துக்கள்!
//

ரிப்பீட்டு!

Ungalranga said...

// Lancelot said...

@ Rangan

thalai fulla padichen athu summa humor conceptukku commentu :P //

ஓ.. சரி சரி...
மிக்க நன்றி...

Ungalranga said...

//சந்தனமுல்லை said...

//நிஜமா நல்லவன் said...
கதை நல்லா இருக்கு.....தொடர்ந்து எழுதினா இன்னும் சுவாராசியமாக எழுதுவீர்கள் என்பது எனது எண்ணம்....வாழ்த்துக்கள்!
//

ரிப்பீட்டு!//
சரி.. சந்தோசம்....
வருகைக்கு நன்றி...

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.