Thursday, February 26, 2009

ஓவியத்தின் ஒரு சொல்!!!





கொஞ்சம் பொறு கிளியே,
பூத்து குலுங்கும் பூமி
புதிதாய் புதுக்கவிதை புனைந்திருக்கிறது.

காற்று காகிதத்தில்
மழைத்துளி மையில்
புல்லின் நுனியை;
புது பேனாவாக்கி...

அழகு என்னும் அற்புத தலைப்பிட்டு
அகிலம் எனும் கவிதை படைத்திருக்கிறது.

கனத்தில் பார்க்கையில்
ஓர்
கற்பனைக்கெட்டா ஓவியம்;

களிப்புற பார்க்கையில்
ஓர்
கண்காணா காவியம்;

நெஞ்செல்லாம் பூரிப்பில்;
செல்களெல்லாம் சிலிர்ப்பில்;
சிறகைப் பெற்ற முதற் மனிதனாய்...

விண்ணில் பறந்தேன்!!
இயற்கை தாயே! உன் மடியில் நிறைந்தேன்!!!

4 comments:

பித்தானந்தா said...

இயற்கை அற்புதமானது!
அபரிதமான ஆனந்தத்தை தன்னகத்தே வைத்துக் கொண்டிருக்கிறது!

தேடி வருபவர்களுக்கு அள்ளித்தருகிறது!

அவ்வகையில் இது ஒரு ஆனந்தப் பரிசு!
இயற்கையை நேசிப்பவர்களை
இயற்கையும் நேசிக்கிறது!

Anonymous said...

இயற்கைக்கான கவிதை! அழகுதான் ரங்கன்! வாழ்த்துக்கள்!

கவிதா | Kavitha said...

கவிதை அருமை..

ரசிச்சி எழுதி இருக்க... இன்னும் நிறைய எழுதலாமே..!! :)

ஆதவா said...

இயற்கையை விட அழகு கவிதை வேறென்ன இருக்கிறது??? அருமை அருமை!!!

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.