சரி.விஷயத்துக்கு வருவோம்.
என் செல்ல அம்மா பேரில் வந்திருக்குற “அவள் பெயர் தமிழரசி” படத்தை எல்லாரும் பார்த்திருப்பீங்கன்னு நினைக்கிறேன். படம் நல்லாவே வந்திருக்கு. எனக்கும் பிடிச்ச படம் அது.
நேற்று ஒரு ஜென் கதை ஒன்னு படிச்சேன்.அதன் ஆழமும் கருத்தும் ரொம்ப நல்லா இருந்தது.
அதை உங்களோட பகிர்ந்துக்க விரும்பறேன்.
அந்த இளவரசர்கள் நாலு பேருக்கும் அந்த துறவியை சந்திக்க அவர் குடிலுக்கு வந்திருக்கிறார்கள்.
அந்த துறவி அவர்களை வரவேற்று அமர செய்தார். அவர் வந்த விஷயம் என்னவென்று கேட்டார்.
அந்த இளவரசர்கள் சொன்னார்கள் : வாழ்க்கை என்பது என்ன ? இத்தனை துன்பங்களும் வாழ்க்கையின் அங்கமாகி போனதன் சூட்சுமம் என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டுகிறோம் ..
என்றனர்.
துறவி புன்னகை பூத்தார். சரி சற்று பொறுங்கள். டீ சாப்பிட்டுவிட்டு இதை பற்றி யோசிக்கலாம் என்று சொன்னார். இவர்களும் ஆமோதித்தனர்.
சில நிமிடங்கள் கழித்து ஒரு தட்டில் சில கோப்பைகளுடன் ஒரு கூஜாவில் டீயை ஊற்றி எடுத்து
வந்தார் துறவி. தட்டை அவர்கள் முன் வைத்தார். அவரவர்களுக்கு வேண்டிய கோப்பையை தேர்ந்தெடுத்துக்கொள்ள சொன்னார்.
அந்த தட்டில் இருந்ததோ நான்கு வகையான கோப்பைகள். ஒன்று- சுத்தமான தங்கத்தாலும்,
மற்றொன்று- சுத்தமான வெள்ளியாலும், மூன்றாவது- சுத்தமான செம்பாலும், நான்காவது- களிமண் கோப்பையாகவும் இருந்தது.
இளவரசர்கள் குழம்பினர். ஒருவரை ஒருவர் முறைக்கவே ஆரம்பித்துவிட்டனர். என்ன செய்ய..எல்லாருக்கும் தங்க கோப்பை மீதே ஆசை. இப்படியே சில நிமிடங்கள் மவுன போராட்டம் தொடர்ந்தது.
இதை பார்த்துகொண்டிருந்த துறவி சொன்னார். “இளவரசர்களே! இதோ இதுதான் வாழ்க்கை ”என்று
அந்த சூடான நறுமணம் மிக்க டீயை காட்டினார். ”நீங்கள் கோப்பைக்கு ஆசைப்பட்டு டீயை வீண்டிக்கிறீர்களே..? இது எந்த வகையில் நியாயம்? என்னதான் தங்ககோப்பையில் குடித்தாலும் இதே டீயை தான் குடிக்க போகிறீர்கள். களிமண் கோப்பையிலும் இதே டீதான் கிடைக்க போகிறது!
எனவே கோப்பை எது என்பது விஷயமல்ல..டீயை சுவைப்பதே முக்கியம்” என்றார்.
அவர்களுக்கு அப்போது தான் புரிந்தது : “பணம், அந்தஸ்து, கவுரவம் என்ற கோப்பைகள் எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாம் அனுபவித்து மகிழவேண்டியது இந்த வாழ்க்கை என்கிற டீயை தானே வேறொன்றுமில்லை..” என்பது.
Friends, இனிமேலும் டீயை வீணடிக்காதீர்கள் ஏனெனில் கோப்பை எப்போது வேண்டுமானால்
மாறலாம், ஆனால் நமக்கு எப்போதும் கிடைப்பது ஒரே ஒரு சுவையான வாழ்க்கைதான்..!!
by,
Rangan