இன்று காலை ஏ.டி.எம் போய்விட்டு திரும்பி வந்துகொண்டிருந்தேன்..
அப்போது ஒரு பூக்காரர் திடீரென்று கையில் பூவோடு ஓடி வர..
வேகம் குறைத்து அவரை கவனித்தேன்..
ஒரு இளம்பெண் பச்சை சுடிதாரில் தோள்களில் கைப்பையோடு, இடது கையில் செல்லுடன்
நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அந்த பூக்காரர் அந்த பெண்ணிடம் பூவை கொடுத்துவிட்டு கடந்து சென்றுவிட்டார்.
நான் அந்த பூவையும், பெண்ணையும், அந்த கண்களையும் ஒரு கணம் ரசிக்கத்தான் செய்தேன்.
ஜீவ்ஸின் கேமரா என்னிடம் இருந்திருந்தால் க்ளிக்கி இருப்பேன். அடுத்த கணம் அவரை பார்த்து
புன்னகைக்க அவரும் புன்னகைத்தார். இது அன்பா, ரசனையா, மகிழ்ச்சியா?
பெண்ணே அழகுதான்..பூ அழகுதான்.
பெண்கள் தலையில் பூச்சுடுவது அழகுதான்.., ஆனால் இன்று ஒரு மாறுதலாய் ஒரு பெண் கையில் புத்தம்புது
பூவோடு நடந்து செல்வதை பார்த்ததும் நின்று ரசிக்காமல் இருக்க முடியவில்லை. ரசித்தேன், புன்னகைத்தேன்,
நன்றிகளை பெற்றுகொண்டேன்..!!
அதன் தொடர்ச்சியாக என் அம்மாவை பள்ளியில் ட்ராப் பண்ணிவிட்டு வண்டியை திருப்பும் சமயம் ஒரு குட்டி பெண்
சரியாக முன் டயரை கடக்க உடனே ப்ரேக் அடித்து நிறுத்தினேன். அந்த குட்டிப்பெண் என்னை பயத்தோடு பார்த்தாள்.
அந்த கண்களின் அழகை கண்டதும் மீண்டு(ம்) வந்தது புன்னகை. என் புன்னகையை பார்த்து அவளுக்கும் நம்பிக்கை வர,
அவளும் புன்னகைக்க.. கொல்லிமலை அருவியில் கண்மூடி குளிக்கும்போது ஒரு உணர்வு உள்ளத்தில் பரவுமே..
அதே உணர்வு என்னுள் பரவி விரவி நின்றது.
அதன் பிறகு எப்போது வீடு வந்தேன்..எப்போது இந்த பதிவை எழுதினேன் என்று தெரியவில்லை..
என்னை அறியாமலே என் புன்னகையும் மகிழ்ச்சியும் பிறரை ஆக்ரமித்து நிற்கும் அதிசயத்தை பார்த்து
நித்தமும் வியந்துகொண்டிருக்கிறேன்..!!
”One Pure Smile , a spiritual touch between two good hearts" - Buddha.
18 comments:
புன்னகை நம்மையும் புதுசா காட்டும்....உறவின் மனங்களிலும் அதே புன்னகையை பூக்கச் செய்யும்..உங்கள் ரசனை பிடிச்சிருக்கு ரங்கா..எப்பவும் கவனமா இருங்க வண்டி ஓட்டும் போது....
தமிழ்,
உண்மை தான் தமிழ், அழகான புன்னகை பிறர் மனங்களில் பூப்பூக்க செய்கிறது..!!
இனிமே கவனமா இருக்கேன் தமிழ்!
:)
நானும் புன்னகைச்சேன்!
@வால்பையன்,
நானும் நானும்.. !!
:)
பாஸ். புன்னகை ஒரு தொத்து வியாதி. காலைல யாரையாச்சும் பாத்து புன்னைகைச்சுட்டீங்க.. போச்சு அவ்வளவு தான். நல்லா தான் எழுதிருக்கீங்க....
நல்லாருங்க. நல்லாருங்க ( பயபுள்ள என் கேமராவைக் கேக்குறதப் பாரு... அந்தப் பொண்ணை போட்டோ எடுக்கிறேன்னு கேமராவை உடைச்சுக் கொண்டுவரவா ? )
நூரைக் கண்ட ( ஐ மீன் நூறைக் கண்ட ) ரங்க்ஸ் வாழ்க வாழ்க..
@ஜீவ்ஸ்,
நீங்க கேமராவ தரமாட்டிங்கன்னு தெரியும்..சஞ்செய்ய சுடும்போதே அது வெடிச்சிடுச்சுன்னு கேள்விப்பட்டேன்..!!
கிகிகி..!!
நூறுதானே ஆகி இருக்கு..!! ஹாஹாஹா!!
//”One Pure Smile , a spiritual touch between two good hearts" - Buddha. //
Real fact....
புன்னகைக்கு நிகர் புன்னகை மட்டும்தான்
@நினைவுகளுடன்- நிகே-,
உண்மைதான் நிகே.
வருகைக்கு நன்றி..!!
எனக்கு கூட இப்படி ஒருமுறை நடந்திருக்கிறது, ஒருமுறை வண்டியில் போகும்போது எதிரில் எங்கோ வேடிக்கை பார்த்துகொண்டுவந்த நண்பனை பார்த்து கைகாட்ட அவன் திடீரென என்னை பார்த்ததில் சிரிக்க, நானும் சிரித்துகொண்டே அவனை கடந்தேன் ஆனால் அந்த புன்னகையை நிறுத்த இன்னும் சில வினாடிகள் பிடித்தது, பின்னால் வந்த பெண் அவரை பார்த்துதான் புன்னகைக்கிறேன் என யோசித்தபடியே சிரித்துவிட்டு போனார். நானும் யோசனையா திரும்பிபார்க்க அவரும் திரும்பிபார்க்க, மறுபடியும் சிரிப்பு. இன்று வரை அவரை ரோட்டில் பார்க்கும்போது சிரித்துகொள்வோம், இதுவரை பேசிக்கொண்டதில்லை. :-)
Congrats for for ur 100th post Ranga...
.......
:-)
good post da...
.......
வண்டியை ரொட்ட பார்த்து ஓட்டுமகனே....
......
டேய் ரங்கா - புன்னகைச்சிட்டே இருந்தியானா - கீழ்பாக்கந்தான் - பாத்துக்க
மிக நல்ல பதிவு.. புன்னகையுடன் சொல்கிறேன்:-)
100 வது பாதிவா?
வாழ்த்துக்கள் மாப்பி!
நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள் ரங்கா :)
100 வாழ்த்துக்கள்
இனிய நூறுக்கு நல்வாழ்த்துகள் - அடுத்த நூறினை நோக்கிப் பயணம் செய்க - வெற்றி பெறுக -
Post a Comment
வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.