Friday, July 9, 2010

சிங்கத்தின் எண்ணங்கள்!!

இந்த பதிவில் நான் எழுதியது எதுவும் இல்லை..!!
விவேகானந்தரின் வீரமான வார்த்தைகளில் இருந்து பிறந்த வாக்கியங்களை இங்கே தந்துள்ளேன்..!


முடிந்தால் ப்ரிண்ட் போட்டு கண்ணில்படுமாறு ஒட்டிவிடுங்கள்.
தன்னம்பிக்கை குறைவதாய்ப்படும் சமயங்களில் இது பெரிதும் உதுவும்.(அனுபவச்சி சொல்றேன் :) )







* எப்போதும் வெற்றி பெறுவது அன்பு மட்டுமே. அன்புடன் ஒப்பிடும்போது நூல்களும், அறிவும், யோகமும், தியானமும், ஞான ஒளியும் ஆகிய யாவுமே அதற்கு ஈடாகாது.


* நல்லவர்கள் உலகில் பெரும் தியாகங்களைச் செய்கிறார்கள். அதன் விளைவாக வரும் நன்மைகளை மனிதகுலம் பெற்று அனுபவிக்கிறது. இந்த உண்மையை உலக வரலாறு எங்கும் காணமுடியும்.


* தேவையில்லாத விஷயங்களைப் பற்றி அலட்டிக் கொள்வதில் ஆற்றலைச் சிதற விடாமல் அமைதியுடனும், ஆண்மையுடனும் ஆக்கப்பூர்வமான கடமைகளில் அக்கறை காட்டுங்கள்.


* யாருடைய நம்பிக்கையையும் கலைக்க முயலாதீர்கள். முடியுமானால் அந்த மனிதனுக்கு அவன் கொண்ட நம்பிக்கைக்கும் மேலாக இன்னொன்றைக் கொடுங்கள்.


* மனிதன் தன் வாழ்க்கையைத் தானே உருவாக்கிக் கொள்கிறான். தனக்குத் தானே அமைத்துக் கொள்ளும் விதிகளைத் தவிர, வேறு எதற்கும் மனிதன் கட்டுப்பட்டவன் அல்ல.


* ஒரு எஜமானைப் போல உங்கள் செயல்களைச் செய்யுங்கள். அடிமையைப் போல உங்கள் செயல்பாடுகள் அமையக்கூடாது. முழுமையான சுதந்திர உணர்வும், அன்பும் கொண்டு உங்கள் கடமைகளில் பணியாற்றுங்கள்.


* எழுந்து நில்லுங்கள். தைரியமாயிருங்கள். பலமுடையவராகுங்கள். உங்கள் மீதே முழுப்பொறுப்புகளையும் சுமந்து கொண்டு வாழப்பழகுங்கள்.


* வலிமையின்மையே துன்பத்திற்கான ஒரே காரணம். பொய்யும், திருட்டும், கொலையும், மற்ற அனைத்து பாவச் செயல்களும் மனபலவீனத்தாலே தோன்றுகின்றன.


* வாழ்க்கை என்னும் போர்க்களத்தில், அஞ்சாது எதிர்த்து நிற்கும் வெற்றி வீரன் ஒருவனுடைய மனநிலையே இப்போது நமக்கு தேவை.


* தைரியமாக இருங்கள். உங்கள் விதியை நிர்ணயிக்கும் சக்தியைப் பெறுவீர்கள். நல்ல செயல்களுக்கும், இதயப்பூர்வமான நன்மைகளுக்கும் இறைவனே முன்நின்று உதவுவார்.


* இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய மூன்றும் நமக்குத் தேவை.


* நம் மனநிலைக்கு தகுந்தவாறு உலகம் காட்சியளிக்கிறது. நமது எண்ணங்களே உலகத்தை அழகுடையதாகவும், அவலட்சணமுடையதாகவும் ஆக்குகின்றன.


* உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சு எண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும்.

12 comments:

கனிமொழி said...

சிங்கத்தின் எண்ணங்கள்!!

:)

நல்ல பகிர்வு ரங்கா...

cheena (சீனா) said...

அன்பின் ரங்கா

விவேகானந்தரின் பொன்மொழிகள் போற்றிப் பாதுகாத்து, பின் தொடரத்தக்கவை. அருமை அருமை அத்தனையும் அருமை. செயல்படுத்துவோம்

நல்வாழ்த்துகள் ரங்கா
நட்புடன் சீனா

Ungalranga said...

@கனிமொழி,
நன்றி கனிமொழி...!!

வால்பையன் said...

சுயமைதுனம் செய்து கொள்ள ஆசைப்படும் போது சுவற்றில் ஒட்டியிருக்கும் சமந்தாஃபாக்ஸ் படத்தை பார்த்து தீர்த்து கொள்வதற்கும், உங்கள் தன்னம்பிக்கைக்கும் சம்பந்தம் உண்டா!?

தன்னம்பிக்கை உங்களிடமிருந்து வரணுமா, சுவற்றில் ஒட்டியிருக்கும் படத்திலிருந்து வரணுமா!?

soundr said...

//சுயமைதுனம் செய்து கொள்ள ஆசைப்படும் போது சுவற்றில் ஒட்டியிருக்கும் சமந்தாஃபாக்ஸ் படத்தை பார்த்து தீர்த்து கொள்வதற்கும், உங்கள் தன்னம்பிக்கைக்கும் சம்பந்தம் உண்டா!?

தன்னம்பிக்கை உங்களிடமிருந்து வரணுமா, சுவற்றில் ஒட்டியிருக்கும் படத்திலிருந்து வரணுமா!?//


பதில் இதிலேயே இருக்கு.

புரிதலில் தான் தடுமாற்றம் ஏற்பட்டிருக்கு.

http://vaarththai.wordpress.com

வால்பையன் said...

அய்யா,
நான் தத்துவங்களை கட்டி அழுபவன் இல்லை!

விவேக் சொன்ன தத்துவங்களால் உங்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுமாயின், நான் சொன்ன சுவரொட்டி உங்களை சுயமைதுனம் செய்ய தூண்டுவதும் ஒன்று தான்!

Ungalranga said...

@வால்பையன்,

நீங்கள் இதை பார்த்துதான் தன்னம்பிக்கை பெறவேண்டும், வேறொன்றை தேடி போகக்கூடாது என்று சொல்லவில்லை.

இதுவும் ஒரு காரணியாக அமையலாம் என்பதற்காக தான் இந்த பதிவு.

உங்கள் விருப்பம் சமந்தா பாக்ஸ் என்றால் அதற்காக நான் ஒன்றும் செய்ய இயலாது.

என் பாட்டை நான் பாடுகிறேன்..கேட்க விருப்பம் இருந்தால் கேளுங்கள்.

இல்லையேல் கிளம்பலாம்! :)

வால்பையன் said...

//என் பாட்டை நான் பாடுகிறேன்..கேட்க விருப்பம் இருந்தால் கேளுங்கள்.//


மட்டுறுத்தல் இருந்தால் என் எதிர்பாட்டு யாருக்கும் தெரியாமலே போயிருக்கும்!

பொதுவான ப்ளாக்கில் ஒரு விசயம் இருக்கும் போது அதன் எதிர்கருத்து வரத்தான் செய்யும்!

சொல்லிட்டிங்கல்ல, இனி இந்த பக்கம் வரல!

Ungalranga said...

@வால்பையன்,

பாஸ், என்ன இதெல்லாம் :))
எதிர்கருத்து வரும்னு தெரியும்.

எதிர்கருத்து போடுறீங்க சந்தோஷம். அதை நட்பான முறையில் கூட கேட்டுகலாமே. கொச்சை சொற்களை பொதுவில் சொன்னதால் “கிளம்பலாம்”னு சொல்லவேண்டியதா போச்சு.

இந்த பாட்டு புடிக்கலைன்னா கிளம்புங்கன்னு தான் சொன்னேனே தவிர.
நான் பாடுற தெரு பக்கமே வரக்கூடாதுன்னு சொல்லலை..!!

ஒரு சமயம் ஒரு பாட்டு நல்லா இருக்கும், நல்லா இல்லாமலும் போகும்..!!

ஸோ.. எதிர்கருத்தோடு இருப்பவர்களையும் எப்போதும் வரவேற்கும் என் பதிவுகள்.

யூ ஆர் ஆல்வேஸ் வெல்கம், கொஞ்சம் நல்ல வார்த்தைகளோடு !! :)

வால்பையன் said...

//கொச்சை சொற்களை பொதுவில் சொன்னதால் “கிளம்பலாம்”னு சொல்லவேண்டியதா போச்சு.//

இப்படி இருட்டிலேயே வாழ்வதால் தான் பாலியல் தொல்லைகள் இங்கே அதிகமா இருக்கு!

சுயமைதுனம் என்பது இயல்பான ஒன்று, நிச்சயம் அது அவரவர் உரிமையும் கூட!

பேசாப்பொருளை பற்றி பேசலாம், மற்றவைகளை ஏற்கனவே பலர் பேசிவிட்டனர்!

*********

சும்மா சொல்லிட்டா வராம போயிருவேனா!?

Ungalranga said...

@வால்பையன்,

//சும்மா சொல்லிட்டா வராம போயிருவேனா!?//

உங்க அப்ரோச் எனக்கு பிடிச்சி இருக்கு!!

Anonymous said...

Good one. :)

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.