Tuesday, May 17, 2011

தாழ்வு மனப்பான்மையிலிருந்து வாழ்வு மனப்பான்மைக்கு...பொதுவாகவே மேலைநாட்டு அறிஞர்களுக்கும், ஏன் நமது நாட்டு அறிஞர்கள் சிலருக்குமே ஒரு கருத்து உண்டு.
அதாவது இந்தியா ஒரு இறந்த நாடு என்று. அட..!! ஏன் இவர்கள் இப்படி சொல்கிறார்கள்?
காரணம் உண்டு. அது நாம் நமக்குள் சுமக்கும் அழுத்தமான ஆழமான தாழ்வுமனப்பான்மை. அது ஒரு நாடு
முழுக்க பரவி பரதிபலிப்பதால் இந்தியா தாழ்வுமனப்பான்மை கொண்ட மக்கள் நிறைந்த இறந்த நாடாக இருக்கிறது.

 அடிப்படைகள் புரிந்த எந்த விஷயமுமே
சீக்கரம் சரிசெய்யக்கூடியதாய் மாறிவிடும் இல்லையா.. சரி தாழ்வு மனப்பான்மைக்கான அடிப்படைகள் என்ன?

முதலில் பால்ய பருவம்:

நம் நாட்டில் குழந்தைகளை மிகவும் குழந்தைத்தனமாக வளர்க்கப்படுகிறார்கள்.
குழந்தைகள் வெறுமனே தாய் தந்தையரோடு மட்டும் வளராமல் அவர்களின் சொந்தகளோடும் வெளிவட்டார நட்புகளோடும்
இருக்க அனுமதிக்க வேண்டும். வெறுமனே தாய் தந்தையே உலகம் என்றிருந்தால் குழந்தைகளின் சிந்தனைத் திறன் குறைவது
மட்டுமில்லாமல், படிப்பிலும், விளையாட்டிலும் ஆர்வமில்லாமல் இருக்கும். அதிகமான நட்புறவு கொண்ட குழந்தைகள்
வேகமாகவும், விவேகமாகவும் இருப்பார்கள். சுறுசுறுப்பும், எல்லாரிடமும் எளிதில் பழகும்விதமாகவும் இருப்பார்கள்.
இதனால் அவர்களின் தாழ்வு மனப்பான்மை அளவு குறைவாகவே இருக்கும்.

முதலில் நாம் குழந்தைகளின் அங்க அடையாளங்களை சுட்டிக்காட்டி அவர்களை குறைகூறுதல் கூடாது. அது முதல்கட்ட
தாழ்வு மனப்பான்மைக்கான அடிப்படை.

அடுத்து குழந்தைகளை யாரோடும் ஒப்பிட்டு பேசாதீர்கள். அது மிகவும் மோசமான வழக்கம். அப்படி பேசுவதால்
குழந்தைகள் மிகவும் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். எல்லா குழந்தையும் சச்சினாகவோ, விஸ்வநாதன் ஆனந்தாகவோ பிறப்பதில்லை.
பிறக்காது. எனவே, உங்கள் குழந்தைகளின் தனித்தன்மையை புரிந்துகொண்டு அவனை/அவளை வளர்ப்பதே சிறந்தது. பிறரின் ஜெராக்ஸ்
காப்பியாக உங்கள் குழந்தையை வளர்க்கும் பாவத்தை தவறியும் செய்துவிடாதீர்கள்.

மூன்றாவது முக்கியமான விஷயம். குழந்தைகளை அடிப்பது. இது மிகவும் மோசமான, மனிதத்தன்மையற்ற செயல்.
ஏன் குழந்தையை அடிக்கிறீர்கள். திருப்பி அடிக்கமாட்டான்/மாட்டாள் என்கிற தைரியம் தானே... இதே கோபத்தை உங்களைப்போன்ற
சக வயதினரிடமோ, அல்லது ஒரு இளைஞரிடமோ காட்டிப்பாருங்கள். பற்கள் நொறுங்கிவிடும். குழந்தைகளை அடித்துதான் வளர்க்கவேண்டும்
என்று எவரேனும் சொன்னால், அவர்கள் அறிவு இன்னும் வளரவே இல்லை என்றுதான் அர்த்தம். ஒன்றை புரிந்துகொள்ளுங்கள். எப்போது
நாம் நம் குழந்தைகளின் நண்பனாக மாறுகிறோமோ அப்போதே அவர்கள் மாற ஆரம்பித்துவிடுகிறார்கள்.

அன்பை சொல்லிக்கொடுங்கள். அரவணைப்பை தாருங்கள். அவனை/அவளை அவனாக/அவளாக இருக்கவிடுங்கள். நீங்கள் பாதுக்காப்பை மட்டும்
தந்தால் போதும். இந்த சின்னஞ்சிறு பறவைகள் பாசமாய் கூட்டைத்தேடி வரும். தாயும் தந்தையுமே குழந்தைகளின் முதல் நண்பர்களாகட்டும்.

தாழ்வு மனப்பான்மை ஒழிந்து வாழ்வு மனப்பான்மை மலரட்டும்..

தொடரும்....

13 comments:

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...

விழிப்புணர்வை ஏற்படுத்தும் சிறந்தப் பதிவு பகிர்ந்தமைக்குவிழிப்புணர்வை ஏற்படுத்தும் சிறந்தப் பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி நன்றி

கீதா said...

பெற்றோர் அனைவரும் கட்டாயம் அறிந்திருக்கவேண்டியதும் கடைப்பிடிக்கவேண்டியதுமான பதிவு. அருமையான பதிவு.

Ramani said...

இன்றுதான் தங்கள் பதிவுக்குள் நுழைந்தேன்
பதிவுகள் அனைத்தும் அருமை
தியானமும் நானும் இன்னும் கொஞ்சம்
விரிவாக எழுதி இருக்கலாமோ எனத் தொன்றியது
தாழ்வு மனப்பான்மை பதிவை மிகச் சிறப்பாக
துவங்கியிருக்கிறீர்கள்
விரிவாகத் தொடர வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி said...

தாழ்வு மனப்பான்மை ஒழிந்து வாழ்வு மனப்பான்மை மலரட்டும்..

cheena (சீனா) said...

aakaa ஆகா ரங்கா - நலலதொரு இடுகை - பயனுள்ள அறிவுரை. தொடரட்டும் - பார்ப்போம் - விரைவினில் உனக்கு திருமணமாகி ஒரு குழந்தை பிறக்க நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

ரங்கன் said...

@பனித்துளி சங்கர்,

ஆஹா, அருமையான பெயர்!

படித்தமைக்கு மிகவும் நன்றி..!!

மீண்டும் வருக..!!

ரங்கன் said...

@கீதா,

நன்றிம்மா.. மிக்க நன்றி..!!

மீண்டும் வருக..!!

ரங்கன் said...

@Ramani,

உங்கள் பாராட்டுக்கு நன்றி ரமணி அண்ணா..!!

தியானம் பற்றி நானும் இன்னும் விரிவாக எழுதும் எண்ணத்தில் தான் இருக்கிறேன். நிச்சயம் எழுத முயற்சிக்கிறேன்.

நன்றி.. மீண்டும் வருக..!!

ரங்கன் said...

@ராஜராஜேஸ்வரி,

நிச்சயமாக, எனக்கு மலர்ந்ததை போல..!!

:)

மீண்டும் வருக தோழி..!!

ரங்கன் said...

@சீனா,

சார்..ஏன் இந்த கொலைவெறி.. குழந்தை திருமணம் சட்டபடி குற்றம்..நான் பச்ச கொழந்த.. ஆளை விடுங்க..!!

மதுரை சரவணன் said...

பயனுள்ள இடுகை... வாழ்த்துக்கள்

ரங்கன் said...

@மதுரை சரவணன்,

நன்றி சரவணன்..!!

மீண்டும் வருக..!!

siva said...

இதே கோபத்தை உங்களைப்போன்ற
சக வயதினரிடமோ, அல்லது ஒரு இளைஞரிடமோ காட்டிப்பாருங்கள். பற்கள் நொறுங்கிவிடும்//
ஹஹஅஹா எனது நண்பர் மகன்
ஒரு குட்டிய்பயன் எப்படித்தான் அடி வாங்கி வாங்கி
எனக்கு இப்போ வலிக்கலையே என்கிறான்
என்னத்த சொல்ல சில நேரம் வாடா போடா வேறு

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.