Monday, May 25, 2009

அந்த மழை காலத்தில் ஒரு மதிகெட்டவன்..!!



மெல்லிய மழை..
சாலையோரம் நான்..
எப்போதும் போல நனைய மறுக்கும்
நமத்துபோன நெஞ்சங்கள்..
எனக்கும் நனைய விருப்பமில்லை..
என்றாலும் காலையில் படித்த ஓஷோ
என்னை என்னவோ செய்ய சொன்னாரே...?!

ஆங்... உன் மனதை கவனி..
அப்போது உன் உண்மையான உன்னை நீ உணரலாம்..

கவனித்தேன்..
ரொம்பவும் அஞ்சுகிறது..
நனைந்தால் சுரம் வரும்..
ஆபிஸ் லீவ் வேறு இல்லை..
பார்ப்பவர்கள் பைத்தியமென்பார்கள்..
வீட்டில் விட்டு விட்டு திட்டுவார்கள்..
இவனுக்கு ஒழுங்கா வேலைக்கு போற எண்ணமில்லை என்பார்கள்..
இப்படி பல மடங்கு அஞ்சியது..

சரி.. நனைந்து தான் பார்த்துவிடுவோம்..
என்னதான் ஆகிவிடும்..
மிஞ்சி மிஞ்சி போனால் காய்ச்சல் வர போகிறது..
ஒரு கால்பாலும்.. ரஹ்மான் பாடலும் போட்டால்
சரியாகிவிடுமே..

ஆஹா.. இவ்ளோ மழையும் எனக்காக
பெய்கிறதா..
என்று ஒரு ஆச்சிரியம்..

மெல்ல இரண்டு கைகளையும் விரித்து நின்றேன்..
இன்னும் இருக்கமாய் அணைத்துகொண்டது அது..

இப்படியே சில கணங்கள் மெல்ல கரைந்து போனேன்...
சாலைவாசிகள் என்னை பார்த்து எதோ சொன்னதுபோல இருந்தது..

இருக்கட்டுமே.. என்ன இப்போ..

நனைவதன் சுகம் எப்போதும் அலாதியானது..
அருவி குளியல் அகத்தினை தொட்டால்...
மழையின் நனைதல்.. ஆன்மாவை தீண்டுகிறதே...

சில கணங்களுக்கு பின்..
என் சாலையில் ஒரு லாரி சடசடத்தபடி ஓடியது..
பாவம் யாரோ ஒருவன்
நட்ட நடு சாலையில் அடிபட்டு கிடக்கிறான்..

அட..!!
நான் அணிந்திருக்கும் சட்டை
போலவே இருக்கிறதே அவனுடையதும்..!!!

பாட்டு பாஸ்கி : இதுக்குதான்.. மழைவந்தா ஒதுங்கி நிக்கணுங்கறது..
இல்லனா.. செம் சர்ட்.. சேம் ப்ளட்...!!

3 comments:

Anonymous said...

மழையில் நனையும் சுகமே அலாதிதான்....ஹப்பா ஒரு PHD பண்ணிடீங்க நனைய முடிவெடுக்கும் முன்னே....அத்தனை ஆராய்ந்து அதன் சுகத்தை அணுஅணுவாய் ரசித்து....முடிவு ஏனோ ஏற்க மறுக்குது மனது....எத்தனை எதார்த்த நடை உங்கள் கவிதையில்.....முதல் தொடங்கி முடியும் வரை இம்மியும் பிசகவில்லை கைத்தேர்ந்த திரைக்கதை ஆசிரியர் போல்.... வாழ்த்துக்கள் வாழ்வதற்க்கு...வாழ்த்துக்கள் மேலும் வளர்வதற்கு

sakthi said...

நனைவதன் சுகம் எப்போதும் அலாதியானது..
அருவி குளியல் அகத்தினை தொட்டால்...
மழையின் நனைதல்.. ஆன்மாவை தீண்டுகிறதே...

அருமை ரங்கா

மேவி... said...

கவிஜ நல்ல இருக்கு .......
மழை குறித்த உங்கள் கண்ணோட்டம் எனக்கு பிடிச்சு இருக்கு

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.