தோழி..
மரணிக்க கடலில்
குதித்த வேளையில்
மீனவன் வலை சிக்கியவனாய்..
வீழ கிடந்த என்னை
தாங்கி பிடித்தாய் நீ..
சருகாய் வாடி
மண்ணோடு மக்க
இருந்த வேளையில்
பாசத்தண்ணீர் ஊற்றி
பாதுகாத்தாய் நீ...
காற்றில் மறையும்
கானல் நீராய்
இருந்த வேளையில்
மெல்ல மெருகேற்றி
நதியாக்கினாய் நீ...
விழுந்த என்னை
எழுப்பி..
சுருண்ட என்னை
நிமிர்த்தி..
பழையதான என்னை
புதியவனாக்கி..
என்னுள் என்னை
எனக்கே அறிமுகம் செய்தாய்..
எப்போதும் என்னை
தாங்கி பிடிக்கும் நீயும் எனக்கு
ஒரு தாய்..!!
9 comments:
//
சருகாய் வாடி
மண்ணோடு மக்க
இருந்த வேளையில்
பாசத்தண்ணீர் ஊற்றி
பாதுகாத்தாய் நீ..//
இந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு ரங்கா!
நன்றி சென்ஷி.. !!
அன்பின் ரங்கா
கவிதை அருமை - தோழி நல்ல தோழி தான்
நல்வாழ்த்துகள்
நல்ல தோழிங்க..உங்கள் தோழமை வாழ்க...
நல்லா இருக்குங்க !
நல்லா இருக்குங்க!
இலங்கையில் இருந்து யாதவன்
உங்கள் படைப்பு நன்றாக உள்ளது
அருமையான வரிகள்
mmmmmmmmmm.....mmmmmmmmmmmmmmmm.......
kaathal mayam..
மரணக்கிணறுக்குள் விழ்ந்த உன்னைக் காத்து மனக்கிணற்றுக்குள் பொத்தி வைத்தாயிற்றா....
இனி மண்ணோடு மக்காதே அவள் மனதோடு மக்கிவிடு...
கானல் நீர் கனவுகளுக்கு மட்டுமே... நதி நீர் போல் நீ நன்மை பயக்கவே.....மெருகாக பிறந்த நீ சருகாக யார்க்கு மனம் வரும்....
Post a Comment
வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.