மெல்ல சரிந்து விழும்
மேகம் கலைத்து விழும்
வேகம் சேர்த்து விழும்
வானம் மறைக்க விழும்
மெல்லிய துளிகளாய் தூறல்!
.. இது அவளின் அணைப்பை போல் உள்ளதே!
அந்த மெல்லிய மழையில்
மேகத்தின் மோக கூடலில்
காற்றின் ஆவேச அணைப்பில்
பூமியின் கடும் மேற்பரப்பில்
அடியாய் இறங்கியது இடி!
.. இது அவளின் கோபத்தை போல் கொல்லுதே!
கண்கள் பறித்து செல்லும்
காண்போரை நடுங்க சொல்லும்
நிற்போரை ஓட சொல்லும்
நித்தமும் பூமியை கொல்லும்
ஆவேசம் கொண்ட மின்னல்!
..இது அவளின் கண்ணசைவை போல் சொல்லுதே!
காதலிபோல் மின்னல் கண்ணடித்து
அவள் கோபம்போல் இடியிடித்து
அவளின் அணைப்பாய் தூறலிட்டு
என் மனதை வென்றது
மழையா? அவளா?
10 comments:
உண்மையைச் சொல்லட்டுமா? வென்றது அவள்தான் ரங்கா.
மழையில் மட்டுமல்ல , காணும் பொருளில் எல்லாம் அவள் தெரிந்தால்,
வென்றது அவள்தானே? இதில் என்ன சந்தேகம்? ஆமா. யாரவள்.? ரகசியமாகச் சொல்லுங்கோ நண்பரே!
மழைய்ய்ம் கூட தோற்றுவிட்டதே அவளிடம்.....
ok.. good
உண்மையைச் சொல்லட்டுமா? வென்றது அவள்தான் ரங்கா.
மழையில் மட்டுமல்ல , காணும் பொருளில் எல்லாம் அவள் தெரிந்தால்,
வென்றது அவள்தானே? இதில் என்ன சந்தேகம்? ஆமா. யாரவள்.? ரகசியமாகச் சொல்லுங்கோ நண்பரே!
ஹேய் ஜெஸ் அவன் இப்ப எல்லாம் ஒரு மாதிரியாத் தான் இருக்கான் கேளுப்பா..
மொத்ததில் இது உன் காதலை சொல்லுதே...பாடல் அமைப்பில் கவிதை சுகம் ரங்கா....மெல்லிய காதலின் அசைவு..ஆம் என்ன எல்லாமே கேள்வியே பதில் எப்போது?
மழையாய் அவள். அதுதான் சரி
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
இனிமையான ஒப்பீடு.அழகான வரிகள்.
//காதலிபோல் மின்னல் கண்ணடித்து
அவள் கோபம்போல் இடியிடித்து
அவளின் அணைப்பாய் தூறலிட்டு
என் மனதை வென்றது
மழையா? அவளா?//
அருமை.அருமை.
அழகான கவிதை ரங்கா
தங்கள் படைப்பு வந்துள்ளதா என அறிந்துகொள்ளுங்கள்
http://valaivikadan.blogspot.com/2009/08/blog-post_12.html
Post a Comment
வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.