Saturday, February 20, 2010

புயல்களுடன் ஒரு வாழ்க்கை!!

ஒரு நாளுக்குள் எத்தனை பிரச்சனைகள்..எத்தனை புயல்கள்..
இவைகளில் இருந்து விடுபடவே முடியாதா?


http://www.freewebs.com/hoseo_environmental_club/Cyclones.jpg

இந்த கேள்விதான் நம் மாபெரும் வாழ்க்கையின் அடிப்படை கேள்வியாக இருக்கிறது.
முதலில் நாம் அதை உணர முயல்வோம்..பிறகு அதை குறை கூறலாம். கடலில் அலைகள்
வந்தும் போயும் இருப்பது போல, பிரச்சனை புயல்களும் உங்கள் வாழ்வில் வந்தும் போயுமே இருக்கிறது.
எந்த ஒரு புயலும் அதே இடத்தில் தங்குவதில்லை..ஒன்று மறைந்தும் அடுத்து வந்துகொண்டுமே இருக்கின்றன.

ஒரு புயல் ஓய்ந்த பின் நீங்கள் பெருமகிழ்ச்சி கொள்கிறீர்கள், சந்தோஷத்தில் திளைக்கிறீர்கள்..ஆனந்தமாய் உணர்கிறீர்கள்..
அந்த கணங்களில் உங்களுக்குள் இருக்கும் பயம், தயக்கம், நடுக்கம் எல்லாம் மறந்து, மறைந்து போகிறது.
அன்பு ஊற்றெடுக்கிறது.

எப்போது நீங்கள் புயல்களை திறந்த மனதோடு வரவேற்கிறீர்களோ அப்போதே அவைகள் சக்தி இழந்துவிடுகின்றன.
அப்படி திறந்த மனதோடு இருக்க நீங்கள் முதலில் சில தியாகங்கள் செய்ய வேண்டி இருக்கிறது..
அற்ப ஆசைகள், அலையும் மனது, குற்ற உணர்ச்சிகள் என பலவகையான உணர்ச்சிகளை நீங்கள் தடுத்து ஆராய்வது அவசியம்.
அப்படி ஆராயும் போதுதான்..”இந்த கயிறுகளையா பாம்பென்று பயந்தேன் !!” ..என்று நீங்கள் தெளிவடைவீர்கள்..
அப்போது அறிவு பிறக்கும்..தெளிவு உண்டாகிடும்.

எல்லா ஞானிகளுமே ஒரு வகையில் இதைத்தான் செய்தார்கள்..தன்னுடைய குழப்பங்களை, அற்ப ஆசைகளை, குற்ற உணர்ச்சிகளை
பிரித்து பிரித்து வகுத்து பார்த்தார்கள்..அப்படி பிரித்து பார்த்து பெற்றதை ஞானம் என்றார்கள்.அதை நமக்கும் சொன்னார்கள்.

எப்போதும் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்..அலைகள் இல்லாத கடல் எப்படி சாத்தியமில்லையோ அதே போல் பிரச்சனைபுயல்கள் இல்லாத
வாழ்க்கையும் சாத்தியமில்லை...ஞானிகளுக்கும் மிகப்பெரும் மனிதர்களுக்கும் கூட பிரச்சனைகள் இருந்தன..இருக்கும், அது தான் இயற்கை.

எப்போதும் புயல்களை ஒழிக்கவோ, அதில் இருந்து தப்பிக்கவோ முயற்சிக்க தேவையில்லை. அதனோடு இருங்கள். அவைகளோடு ஒரு கப் தேனீர் கூட அருந்துங்கள்.
உங்கள் மடியில் வைத்துகொள்ளுங்கள். பிரச்சனைகள் வெளியே இல்லை உங்களுக்குள் தான் என்பது அப்போது புரியும். நீங்கள் தான் இப்போது உலகத்தின் மையம்.
அதாவது உங்கள் பிரச்சனைக்குரிய உலகத்திற்கு.

நீங்கள் எங்கே சென்றாலும் உடன் ஒருவரை ரகசியமாய் அழைத்தே போகிறீர்கள்..அது தான் உங்கள் மனம். அது எப்போதும் பிரச்சனைகளை சுமந்தபடி உங்களோடே வருகிறது.
அதை விட்டு நீங்கள் தப்பிக்க முடியாது..ஆனால் அது சுமக்கும் பிரச்சனை என்கிற பாரத்தை குறைக்கலாம்.

அப்படி பாரமில்லாத மனதோடு எங்கு சென்றாலும் உங்களுக்கு ஒரு பிரபஞ்ச ரகசியம் விளங்கும் : “புயல்கள் எப்போதும் இருக்கின்றன..நம்மை உயர்த்துவதற்காக”

9 comments:

cheena (சீனா) said...

அன்பின் ரங்கா

தத்துவம் அருமை - புயல்கள் நம்முடன் இருக்கத்தான் செய்யும் - நாம் தான் அவற்றைத் தாங்கும் சக்தியினை வளர்த்துக் கொண்டு எதிர் நோக்கத் தயாராய் இருக்க வேண்டும். சரியா

நல்வாழ்த்துகள்

நட்புடன் ஜமால் said...

அருமை ரங்கா.

எதையும் பாஸிட்டீவ்வா பார்த்தா நல்லதே.

நாம் எந்த மனோநிலையில் இருந்தாலும், அது அது நடக்கத்தான் செய்கின்றது - அதை அதாகவே ஏற்று கொண்டால் அவை சக்தியிழந்ததது போலத்தான்.

நல்ல தெளிவு ரங்கா - வாழ்த்துகள்.

கனிமொழி said...

Good post Ranga...
keep going...

( proving here da KB )

Ungalranga said...

@சீனா,

வாழ்த்துக்கு நன்றி சீனா சார்..!!

Ungalranga said...

@ஜமால்,

வாழ்த்துக்கு நன்றி ஜமால்!!

Ungalranga said...

@கனிமொழி,

வாங்க..!! ஆமா அதென்ன கே.பி..?

Anonymous said...

வயசுக்கு மீறிய தெளிவு உன்னிடம் என்னை எப்பவும் வியக்கவைக்கவும் சில சமயம் நீ சொல்லும் நம்பிக்கை வார்த்தைகள் என்னை தெளிய வைத்திருக்கிறது ...இதிலும் பொருள் பதிந்த கருத்துக்கள் ஏற்புடைவையே ரங்கா,,,,வாழ்த்துக்கள்

Thamira said...

பயபுள்ளைக என்னமா சிந்திக்கிறாங்கய்யா..

Iyappan Krishnan said...

ஒரு ஞானிக்கே உரிய தெளிவு..
ஒரு மந்திரிக்கு உள்ள மதி நுட்பம்
ஒரு மந்திரிக்கு உள்ள மதி நுட்பம்

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.