Monday, March 1, 2010

நூறு பதிவுகளை கடந்தபின்!!

http://jamesfrankel.musiced.net/files/2007/03/number_100_1.png
எல்லாருக்கும் பழக்கமான எண், எண்ணிக்கை 100.

சரி..ஏன் நூறு?
10*10= 100
எண்களில் முதல் மூண்றெழுத்து எண் 100.
இரண்டு 2 எழுத்து எண்களின் பெருக்கல் தொகை நூறு..
இப்படி நூறு பல வகைகளில் கணிதத்தில் ஒரு முக்கியமான எண்ணாக இருக்கிறது.

கணிதத்தின் அடிப்படையில் தான் உலகமே இருக்கிறது..நம் சமூகமும்..!!

அதனால் தான் நூறு வயதை எட்டியவர்களை கண்டு வியக்கிறோம்..நூறாண்டு வாழ்க என்று வாழ்த்துகிறோம்

சச்சின் டெண்டுல்கர் நூறு ஓட்டங்கள் எடுத்தால் கைதட்டு ஆர்ப்பரிக்கிறோம்..
பரிட்சையில் நூறு மார்க்குகளை உச்ச தகுதியாக வைத்திருக்கிறோம்..!!

ஒவ்வொரு நூற்றாண்டிலும் மாபெரும் முன்னேற்றத்தை மனித இனம் எடுத்து வைக்கிறது.!!

இப்படி எல்லா வகையிலும் நம் வாழ்வில் இணைபிரியாது வரும் நூறு என் வாழ்விலும் ஒரு
முக்கிய பங்கை தந்திருக்கிறது..!!

இதோ என் நூறு பதிவுகளை முடித்து நூற்றியோராவது பதிவை வெற்றிகரமாய் பதிவு செய்திருக்கிறேன்..!!
உண்மை தான் ..பதிவுகளை பொருத்த மட்டில் எண்ணிக்கை பெரிதில்லை..விஷயமே பெரிது..!!
நானும் என்னால் முடிந்த சிறந்த பதிவுகளை தந்திருக்கிறேன் என்பதில் எந்த ஐயமும் இல்லை..!!
அதை நிரூபிக்கும் விதமாக என் பதிவுகள் பலவற்றை தன்னகத்தே ஏற்றுகொண்டு ஆதரவளித்த ஆனந்த விகடனுக்கு இங்கே நன்றி சொல்ல
கடமைப் பட்டிருக்கிறேன்..!!

நூறு பதிவுகள் எழுதியும் வலைச்சரத்தில் எழுதாத ஒரே பதிவர் நானாகத்தான் இருப்பேன் என்று நினைக்கிறேன்...!!
அது என் அடுத்த நூறு பதிவுகளுக்குள் நடந்துவிடும் என்று நம்புகிறேன்..!!


இத்தனைக்கும் காரணமாய், ஆதரவாய், அன்பாய் நட்பாய் அமைந்த என் மாமன் நாமக்கல் சிபிக்கும் மற்ற உலக தமிழ் பதிவர்கள்
அத்தனை பேருக்கும் என் நன்றிகளையும் வணக்கங்களையும் தெரிவித்து கொண்டு..
இன்னும் நல்ல பல பதிவுகள் தருவேன் என்ற உறுதியும் அளிக்கிறேன்..!!

நன்றி நண்பர்களே !! ..என்னை கைப்பிடித்து , அரவணைத்து , ஆசுவாசப்படுத்தி , ஆறுதல்தந்து , அன்பை சுரந்தமைக்காக..!!

பி.கு :

நூறு பதிவுகளை கடந்த பின் நான் ஒரு பதிவராக கண்டுகொண்டது ஒரே விஷயம் தான்.
” பரிந்துரைக்கபடவேண்டும் என்றோ,ஹிட்டுக்காகவோ, எண்ணிக்கைக்காவோ, விகடனில் வெளியாகும் என்றோ என்றைக்கும் எழுதாதே..!!
உனக்கு ஒரு பதிவு எழுதி முடித்ததும் ஒரு மனமகிழ்ச்சி உண்டாகிறதா பார்..அதையே பதிவும் இடு..அது தான் நீ...அதை படிக்க தான் இந்த உலகம் காத்துகிடக்கிறது..மற்றவையில் எதுவும் இல்லை!!

17 comments:

pudugaithendral said...

விகடனில் வெளியாகும் என்றோ என்றைக்கும் எழுதாதே..!!
உனக்கு ஒரு பதிவு எழுதி முடித்ததும் ஒரு மனமகிழ்ச்சி உண்டாகிறதா பார்..அதையே பதிவும் இடு..அது தான் நீ...அதை படிக்க தான் இந்த உலகம் //

ஆமாம் ரங்கா,

என் மனத்திருப்திக்கு எழுதுகிறேன். 4 பேர் படிச்சாலும் சந்தோஷம் தான்.

அடிச்சு ஆடுங்க

Ungalranga said...

@புதுகை தென்றல்,

கண்டிப்பா மா!! நல்ல பதிவுகளுடன் விரைவில் விரைந்து வருகிறேன்!

*இயற்கை ராஜி* said...

valthukkal... kalakunga..

Ungalranga said...

@இயற்கை மகள்,

நன்றி. கலக்கிடுறேன்..!!

tamiluthayam said...

உனக்கு ஒரு பதிவு எழுதி முடித்ததும் ஒரு மனமகிழ்ச்சி உண்டாகிறதா பார்..அதையே பதிவும் இடு..அது தான் நீ...அதை படிக்க தான் இந்த உலகம் காத்துகிடக்கிறது..மற்றவையில் எதுவும் இல்லை!!

மிகச் சரியாக சொல்லி இருக்கிறிர்கள்.

இராகவன் நைஜிரியா said...

சூப்பர்.. கீப் இட் அப்... கீப் கோயிங்

சுடுதண்ணி said...

வாழ்த்துக்கள்!!! தொடர்ந்து கலக்குங்க :)

Ungalranga said...

@thamiluthayam,

மிக நல்லதும் கூட..!! :)

வருகைக்கு நன்றி தமிழுதயம்.

Ungalranga said...

@ராகவன்,

நன்றி பாஸ்..!!

Ungalranga said...

@சுடுதண்ணி,

நல்ல பெயர் ! எப்படிங்க யோசிச்சீங்க..!!

கண்டிப்பா கலக்கிடலாமுங்க..!!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//நூறு பதிவுகள் எழுதியும் வலைச்சரத்தில் எழுதாத ஒரே பதிவர் நானாகத்தான் இருப்பேன் என்று நினைக்கிறேன்...!!//


நானும் எழுதியதில்லை,

Anonymous said...

VAZHUTHUKKAL RANGA....

நட்புடன் ஜமால் said...

இது ஒரு திறந்த டைரி அவ்வளவே

சுயத்துக்காக மட்டுமே எழுதனும்

சரியா சொன்னீங்க.

thiyaa said...

வாழ்த்துக்கள்!!!

cheena (சீனா) said...

அன்பின் ரங்கா

நூறுக்கு வாழ்த்துகள்

விரைவினிலேயே வலைச்சர ஆசிரியராக நல்வாழ்த்துகள் - 100 ஆயிரமாகவும் வாழ்த்துகள்

நட்புடன் சீனா

நாமக்கல் சிபி said...

//” பரிந்துரைக்கபடவேண்டும் என்றோ,ஹிட்டுக்காகவோ, எண்ணிக்கைக்காவோ, விகடனில் வெளியாகும் என்றோ என்றைக்கும் எழுதாதே..!!
உனக்கு ஒரு பதிவு எழுதி முடித்ததும் ஒரு மனமகிழ்ச்சி உண்டாகிறதா பார்..அதையே பதிவும் இடு..அது தான் நீ...அதை படிக்க தான் இந்த உலகம் //

சூப்பர் பஞ்ச் மாப்பி!
100க்கு வாழ்த்துக்கள்!

பதிவுலக பாட்ஷா said...

நூறு நூறா பதிவு வாழ்வைப் பிரிச்சிக்கோ! அதில் எந்த நூறுல் இப்ப இருக்கே தெரிஞ்சிக்கோ!

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.