இருக்கும்...!! கடந்த கால மனிதர்களுக்கும் நம் நவீன கால மனிதர்களுக்கும் தான் எத்தனை வித்தியாசம்.!!
எத்தனை மாற்றங்கள், எத்தனை முன்னேற்றங்கள், எத்தனை சவுகரியங்கள், சுகங்கள்!!
இதை, இந்த சவுகரியத்தையும் சுகத்தையும்தான் அந்த ஆதிகால மனிதன், அந்த கல்லை குட்டி தீமூட்டி நின்றவன்
சிந்தித்தான். செயலாற்ற முனைந்தான். அதுவே இன்று நம்மை இந்த நிலைக்கு கொண்டுவந்து விட்டுருக்கின்றன..!!
இதற்கு அடிப்படை மனிதனின் படைப்பாற்றல்!! Creativity. அது அவனை இன்னும் பல்வேறு மைல்கள் கொண்டுசெல்லும்
என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை..!! அது எப்போதும் முட்டி மோதி தன்னை வெளிப்படுத்திகொண்டே இருக்கிறது..!!
ஆனால்..இப்போது சூழ்நிலை சரியில்லையோ என்று தோன்றுகிறது. என்னிடம் பேசும் பலர்...எனக்கு கற்பனைத் திறன் கம்மி!! என்று
பெருமையாக சொல்லும் போது “வெகு சிறுமையாக உணர்ந்தேன்”..!!
என்ன செய்ய..இப்போது இதுவே ஒரு ட்ரெண்ட் ஆகிவிட்டது..
ஹிஹி..!! எனக்கு பாட வராது..!! எனக்கு வரைய வராது..!! எனக்கு வாசிக்க வராது..!! என்று எல்லா படைப்பாற்றலையும்
வராது வராது என்று சொல்லியே வரவிடாமல் செய்துவிட்டோம்..!!
ஏன் நான் வரைய வராது என்று கூசாமல் சொல்கிறேன்..?? அடிப்படை படைப்பாற்றலையே அழிக்க பார்க்கும் இந்த சுபாவம்
எங்கிருந்து வந்தது?
அதன் அடிப்படை..நம்முடைய தாழ்வு மனப்பான்மை.!! இப்போது இந்த மொத்த சமூகத்திலும் தாழ்வு மனப்பான்மை பெருமையானதாக
மாற துவங்கி இருக்கிறது..!!
நாம் பாடலாம், ஆடலாம், வரையலாம், இசை மீட்டலாம், குறுந்திரைப்படங்கள் இயக்கலாம்..இப்படி எல்லா வகையான படைப்பாற்றல்மிக்க
செயல்களும் செய்ய நமக்கு வசதியும் வாய்ப்பும் இருந்தும்....நாம் வராது என்று சொல்வது நம் கையை நாமே முறித்துகொள்வது போல்.!!
நாம் ஒரு புல்லாங்குழலை எடுத்து ஊத ஆரம்பிக்கும் போது மனம் சொல்லும்..”இதனால் உனக்கென்ன புதிதாய் வேலைகிடைத்துவிட போகிறதா?
இதனால் என்ன ப்ரயோஜனம்? வீணான வேலை இல்லையா இது? “இப்படி மனம் பல்வேறு வழிகளில் உங்கள் படைப்பாற்றலை முடக்கி போடும்..!!
கண்டுகொள்ளவே செய்யாதீர்கள்.உங்கள் ஜென்ம சனி உங்கள் மனம் மட்டுமே..!! இதயமும் அறிவும் கலந்து நடத்தும் படைப்பாற்றிலின் வித்தையை
மனம் எப்போதும் குறுக்கிட்டு கெடுக்கும்..!
விடாதீர்கள்..அதை கண்டுகொள்ளாமல்.. இசையை..அந்த ஆழ்ந்த நேசத்தை..உங்களுக்கான உள்ளார்ந்த காதலை..
அன்பை..இறைவன் அருளை..அனுபவியுங்கள்..!! நீங்கள் பார்த்திராத நிம்மதியும் அமைதியும் உங்களை தேடி வந்து தாலாட்டும்..மீண்டும்
உங்கள் தாயின் மடிக்கே திரும்பிய சுகத்தை நிச்சயம் உணர்வீர்கள்..!!
முயன்றுபாருங்கள்..!! படைப்பாற்றலை கையிலெடுங்கள்..!! அது தரும் நிம்மதியை உணருங்கள்..முழுமையான மனிதராய் வாழுங்கள்!!
வாழ்த்துக்கள்!!
9 comments:
நல்ல பதிவு ரங்கா..
அன்பின் ரங்கா
நல்ல சிந்தனை - உண்மை நிலை இது தான் - படைப்பாற்றலைப் பெருக்குவோம்
நல்வாழ்த்துகள் ரங்கா
நட்புடன் சீனா
நல்ல பதிவு... அழகான சிந்தனை....
@கனிமொழி,
நன்றி கனிமொழி!!
@சீனா சார்,
நன்றி சீனா சார்!!
பெருக்குங்கோ..!!
@sangkavi,
நன்றி sangkavi!!
நல்ல பதிவு ..
அழகான சிந்தனைகள் படைப்பாற்றலை மேலும் அதிகரிக்கும்
முயன்றுபாருங்கள்..!! படைப்பாற்றலை கையிலெடுங்கள்..!! அது தரும் நிம்மதியை உணருங்கள்..முழுமையான மனிதராய் வாழுங்கள்!!////
பல நூறு பக்கங்கள் எழுதியும் புரிய வைக்க முடியாததை ...சில வரிகளிலே புரிய வைத்துவிட்டீர்கள் பாராட்டுகள்
முயன்றால் முடியாதது இல்லை. அழகா சொல்லியிருக்கீங்க
Post a Comment
வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.