Friday, June 4, 2010

கண்ணன் ஏன் தோற்பதில்லை?

சென்ற பதிவில் பார்த்ததுபோல்..கண்ணனின் டெக்னிக் என்ன என்பதை ஆராய்ந்தோம்.
இப்போது..அவன் எப்படி வெற்றி வீரனாக திகழ்கிறான் என்பதை பார்ப்போம்.

http://moralstories.files.wordpress.com/2006/10/chaanuura-mushtika-vadha.jpg
இதை புரிந்துகொள்ள, முற்றிலும் வித்தியாசமான சிலவற்றை சொல்லப்போகிறேன்.
என்னை பொறுத்தவரை, வெல்ல விரும்பாதவனே வெல்கிறான்; வெல்ல நினைப்பவன் தோற்றுவிடுகிறான்!
அந்த கதைகள் எல்லாம், நான் புரிந்துகொண்ட அளவில், இதைத்தான் சொல்கின்றன.

வெல்லும் ஆசைக்குள், தோல்வி ஒளிந்து கொண்டிருக்கிறது, அதன் அடியாழத்தில். இந்த கண்ணன் ஆசையற்றவன் ,
ஏற்கனவே வென்று விட்டான், இனி வெற்றி அவனுக்குத் தேவையில்லை என்பது பொருள்.

இதை வேறு கோணத்திலும் புரிந்துகொள்ளலாம். யாராவது ஒருவர் வாழ்வில் வெல்ல ஆசைப்பட்டு, அதற்காகப்
போராடுகிறபோது, அடியாழத்தில், ஏதோ இல்லை என்ற தவிப்பு இருக்கிறது; தாழ்வு மனப்பான்மையால் அவர்
தவித்துகொண்டிருக்கிறார் என்று அர்த்தம். அடியாழத்தில் அந்த தாழ்வு மனப்பான்மை இருப்பதால், அதை வெற்றியால்
மூடி மறைக்கிறார் என்று அர்த்தம்.

இதற்கு மாறாக,  வெற்றிகளை விரும்பாத ஒருவர், தன்னுடைய மனத்தில் தாழ்வு மனப்பான்மையின் சிறு சாயல் கூட
இல்லாதவராய் இருப்பதால்..எதையும் வெற்றி கொள்ளும் ஆவல் அவரிடம் இல்லை.

ஒரு ஜென் குரு தன் நண்பர்களிடம் “நான் சாகும்வரை என்னை யாரும் வெல்ல முடியாது” என்று கூறினார்.
அவருடைய நண்பர்களில் ஒருவர் எழுந்து “ அந்த ரகசியத்தை எங்களுக்கும் சொல்லிக்கொடுங்கள். நாங்களும் வாழ்க்கையில்
வெற்றி பெற விரும்புகிறோம். எங்களை யாரும் வெல்லக் கூடாது” என்றார்.

அந்த குரு சிரிக்க ஆரம்பித்தார். “அப்படியானால் அந்த ரகசியம் உங்களுக்கு விளங்காது. நான் சொல்லிமுடிப்பதற்குள் நீங்கள் குறுக்கிட்டுவிட்டீர்கள்.
முழுவதுமாய் கேளுங்கள். நான் சொன்னது என்னை வெல்ல யாராலும் முடியாது ஏனென்றால் நான் முழுமையாக தோற்றுவிட்டேன். எனக்கு தோல்விக்கான
அச்சமோ, வெற்றிக்கான ஆவலோ இல்லை, எனவே என்னை எவராலும் வெல்ல முடியாது” என்று சொன்னேன் என்றார்.

நம்முடைய அடிப்படை வெற்றிகான வெறியே தோல்விக்கு இட்டுசெல்கிறது. எப்படியும் வாழவேண்டும் என்கிற ஆவலே உங்களை கல்லரைக்கு தள்ளிவிடுகிறது.
இன்றைய சமூகத்தில் ஆரோக்கியத்திற்கான அதிகப்படியான அக்கறையே நோய்களில் தள்ளிவிடுகிறது. இயற்கை வித்தியாசமானது. எதன்மீது மிகவும் அன்பு செலுத்துகிறோமொ
அதை சீக்கிரமே நம்மிடமிருந்து பிரித்துவிடுகிறது.

கண்ணனுக்கு எல்லாமே விளையாட்டு தான். குழந்தைகள் விளையாட்டிற்காகவே விளையாடுகின்றன. அவைகள் அதில் உள்ள வெற்றிக்காகவோ,
பெருமைக்காகவோ விளையாடவில்லை. அப்படி விளையாட அவர்கள் ஒன்றும் நம்மை போல் பைத்தியக்காரர்கள் இல்லை. முக்கியமாக கண்ணன்
பைத்தியக்காரனில்லை என்றே நினைக்கிறேன். சரிதானே?

Anyhow,இதுதான் என் கண்ணனின் விளையாட்டான வாழ்க்கையின் சாராம்சத்தை கொஞ்சமாய் ருசித்துபார்த்துவிட்டோம். அது என்னவென்றால்,
வாழ்க்கையை அதற்காக மட்டுமே வாழ்வது, லட்சிய வெறி, பண வெறி, காம வெறி, காதல் வெறி(இப்படியும் சிலருண்டு), பதவி வெறி என்கிற
எந்த மடத்தனமும் இல்லாமல், வாழ்க்கையை அதன்வழியிலேயே ஏற்றுகொள்வதே வாழ்வதாகும்.
வெற்றியை பற்றி கவலையே படாதீர்கள், வென்றுவிடுவீர்கள்..!!
வாழ்த்துக்கள்!!

டிஸ்கி:
பதிவுலகில் சண்டைகளும், சமாதானங்களும் சகஜமான ஒன்று தான். ஆனால் அடிப்படையான ஒரே விஷயமே இரண்டு வருடங்களாக ஒரு சண்டைக்கு
காரணாமாக அமைந்துவிட்டது. அது ”இமேஜ்”. நமக்கு தரும் பட்டமே நமக்கு வைக்கப்படும் ஆப்பு என்பதை பதிவர்கள் உணரவேண்டும். அதே போல்
நாம் நம் திருப்திக்காக எழுவது மட்டுமே சரியான வழியே தவிர..மற்றவருக்கோ, கடை பரபரப்பாக இருக்கவேண்டும் என்றோ எழுதினால் சிக்கல்தான். இது என் பணிவான அட்வைஸ்..!!

இமேஜை விடுங்கள். நீங்கள் நீங்களாக மட்டுமே எழுதுங்கள். வாழ்த்துக்கள்!!

17 comments:

கனிமொழி said...

நல்லா இருக்கு ரங்கா.
அட்வைஸ் இப்ப தேவை தான். :-)

நிஜமா நல்லவன் said...

well said..

ரங்கன் said...

@கனிமொழி,

நன்றி கனிமொழி!!

தேவன் மாயம் said...

ரங்கன்!! அழகாச் சொல்லியிருக்கீங்க!!!

cheena (சீனா) said...

ஹாய் ரங்கா - நல்ல முறையில் சிந்திக்கிறாய் - நன்றாகவே எழுதுகிறாய் - முதிர்ச்சி தெரிகிறது - நல்வாழ்த்துகள் ரங்கா
நட்புடன் சீனா

Anonymous said...

மாறுபட்ட கோணத்தில் சிந்தனை செல்கிறது.
ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு - இந்த பழமொழி
பொருந்தும்.
ராகவன்.வ

ஜோசப் பால்ராஜ் said...

பாரேன், இந்தபயலுக்குள்ளயும் என்னமோ இருக்கு.
சரிடே மாப்பி. நல்லா சொல்லிருக்க.

ரங்கன் said...

@நிஜமா நல்லவன்,
நன்றி நிஜமா நல்லவன்!!

ரங்கன் said...

@தேவன் மாயம்,

நன்றி தேவன் மாயம் சார்..!!

V.Radhakrishnan said...

அற்புதம், பாராட்டுகள்.

ரங்கன் said...

@சீனா,

அய்யா..எல்லாம் உங்களை மதுரையில் சந்தித்ததன் விளைவுதான்.!!

:)

ரங்கன் said...

@ராகவன்.வ,

உண்மைதான் தோழர்!!

வருகைக்கு நன்றி!!

ரங்கன் said...

@ஜோசப்,

எல்லாம் உன் ஆசிர்வாதம் குருவே.!!

நன்றி குருவே!!

ரங்கன் said...

@v.Radhakrishnan,

நன்றி ராதாகிருஷ்ணன் சார்..!!

அட ...கிருஷ்ணரே வந்து பாராட்டிட்டாரே!!

சந்தோஷ் = Santhosh said...

நல்லா எழுதியிருக்கேடா மாப்பி.. வழக்கமான மொக்கையில் இருந்து மாறுபட்ட சிந்தனை.. எப்படி தான் யோசிக்கிறீங்களோ?

மின்னுது மின்னல் said...

ஒன்னும் சொல்லுவதற்கு இல்லை ::)

Anonymous said...

Nice

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.