இதுக்கெல்லாமா சந்தோஷப்படுவாங்க.
ஏங்க..ஏன் சந்தோஷப்படகூடாது..?
இன்னைக்குதான் சுயநலம் என்பது எவ்வளவு அழகானதுன்னு புரிஞ்சிகிட்டேன்.
இது ரொம்ப முக்கியமான விஷயம். பல சந்தர்பங்களில் நாம் பொதுநலவாதிகளா மாறி நமக்கு நாமே ஆப்புவைத்துகொண்ட
நிகழ்வுகள் எல்லார் வாழ்விலும் நடந்திருக்கும். அப்படிப்பட்ட நிலைமைக்கு காரணம் இந்த "பொதுநலம்" என்கிற எண்ணம்.
முதலில் பொதுநலம் என்பது என்ன? நாலு பேருக்கு கொடுப்பது.. நாலு பேருக்கு நன்மை செய்வது. இப்படி நாலு நாலு பேருக்கா
தினமும் நன்மை செஞ்சிகிட்டு இருந்தா .நாலு பேரு நம்மை... நாலு நாள் கழிச்சு.. நாலு தெரு தள்ளி இருக்குற இடுகாட்டுக்கு தூக்கிட்டு
போகவேண்டியதுதான்.
ஏன் இப்படி சொல்கிறேன்?
காரணம் நம்மிடம் இருப்பதில் பங்களித்து கொடுப்பதுதான் பொதுநலமாகமே தவிர.. நம்மையே கொடுத்துவிடுவது பொதுநலமில்லை.
அப்படி கொடுத்தவர்களும் உண்டு. அவர்கள் அன்பில் நிறைந்துவழிந்தவர்கள், அப்படிப்பட்ட நிறைவு, நம்மிடம் இருக்குமேயானால்
கொடுப்பதில் தவறேதும் இல்லை.
இங்கு நாமே "அய்யா சாமி"என்று அலையும்போது நம் வாசலில் எவனாவது கடன்கேட்டு வந்தால், கண்டிப்பாக உதையை தவிர வேறெதுவும் கொடுக்க
வேண்டியதில்லை. நம்மிடமே இல்லாத போது கர்ணபிரபுவாக மாறுவது முட்டாள்தனம். நம்மிடம் அதிகமாக இருக்கும்போது கஞ்சப்பிரபுவாக
மாறுவது அதைவிட முட்டாள்தனம். நாம் இவைகள் இரண்டையுமே இப்போதைய காலத்தில் சிறப்பாக செய்து வருகிறோம்.
நம் வறுமையை போக்கிகொள்ள வக்கில்லாமல் இருந்தாலும், பிறருக்காக, பொதுநலனுக்காக செய்கிறேன் பேர்வழி என்று எத்தனையோ பேர்
குடும்பத்தை கவிழ்த்திருக்கிறார்கள்.
இயற்கையில் தனக்காக வாழத்தெரியாத ஒரு பைத்தியக்காரத்தனமான உயிரனம் மனிதாக மட்டுமே இருக்க முடியும். மரங்களை எடுத்துகொள்ளுங்கள்.
அவைகள் சுயநலமானவைதான். அவைகள் நன்கு வளரும்வரை வேர்களை பரப்பி நீரை தேடுகின்றன. இலைகளில் சூரியவெப்பத்தை சேர்த்து உணவு
சமைக்கின்றன. இப்படி ஒரு பெரும் சுயநலப் போராட்டத்திற்கு பின்பே..அவைகள் பூக்கின்றன, காய்க்கின்றன, கனிகள் தருகின்றன. காரணம், அவைகள்
நிறைந்துவிட்டன. நிறைவடைந்துவிட்டன. இனிமேல் அவைகள் பொதுநலவாதிகள் ஆகலாம். அவைகள் தன்னளவில் நிறையாவிட்டால் காயுமில்லை,
கனியுமில்லை. இப்படிமொத்த இயற்கையும் சுயநலம் என்பதை சரியாக பயன்படுத்திகொள்கிறது.
இவ்வளவு சுயநலமான இயற்கையை நம்மால் ரசிக்கமுடிகிறது. நம் அருகில் இருக்கும் ஒரே ஒரு சுயநலவாதியை நம்மால் சகித்துகொள்ள முடிவதில்லை.
அப்போ எப்பவுமே சுயநலமா இருக்கணுமா?
எப்போதும் சுயநலமாய் இரு என்று சொல்லவரவில்லை. நீங்க நிறைவடையாமல், நீங்கள் முழுமையடையாமல் பிறரை முழுமைப்படுத்த முடியாது.
நீங்கள் எப்போது முழுமையடைகிறீர்களோ அப்போதே அது பொதுநலமாக மாறிவிடும். அது உங்களை மீறி நடந்துவிடும். பொதுநலம் ஒரு மகிழ்ச்சிதரும்.
நிறைவடையாமல் இப்போது நாம் செய்யும் எந்த பொதுநல சேவையும் மகிழ்ச்சிதராது. நம்மை நாமே ஏமாற்றிகொள்வது அது. நீங்கள் வாழ்வை முழுமையாக வாழுங்கள்.
முழுமை கிடைத்ததும், பிறரை கவனிக்கலாம். :)
புதிதாய் திருமணமான தம்பதிகளுக்கு முக்கியமாய் நான் சொல்வதும் இதுதான். அவளை நீயும், அவனை நீயும் புரிந்துகொள்ளுங்கள். புரிதலில் முழுமை வந்ததும்
பிறப்பதே பிள்ளையாக இருக்கும்.!!, மற்றவை..... ( இது ஒரு பேச்சுலரின் அட்வைஸ். :))) )
Monday, September 27, 2010
Friday, September 10, 2010
புத்தரை தடுமாற வைத்த கேள்வி!
என்னது புத்தரையே தடுமாற வெச்ச கேள்வியா? ஆமாங்க..
அப்படி யோசிச்சு கேள்விகேட்டது யாருங்க? இருங்க சொல்றேன்..
ஞானி..எல்லாம் தெரிஞ்சவர் அவர் ஏன் தடுமாறினாரு? எல்லாம் தெரிஞ்சதாலதான்..
Thursday, September 9, 2010
Deja Vu - 2006 திரை விமர்சனம்
What if you had to tell someone
the most important thing in the world,
but you knew they'd never believe you?
இந்த உலகத்திலேயே முக்கியமான விஷயத்தை ஒருத்தர்கிட்ட சொல்றீங்..
ஆனா அவங்க இதை நிச்சயம் நம்பமாட்டாங்கன்னு உங்களுக்கு தெரியும்.
அப்போ நீங்க என்ன செய்வீங்க?
Subscribe to:
Posts (Atom)