Thursday, September 9, 2010

Deja Vu - 2006 திரை விமர்சனம்

What if you had to tell someone
the most important thing in the world,
but you knew they'd never believe you?

இந்த உலகத்திலேயே முக்கியமான விஷயத்தை ஒருத்தர்கிட்ட சொல்றீங்..
ஆனா அவங்க இதை நிச்சயம் நம்பமாட்டாங்கன்னு உங்களுக்கு தெரியும்.
அப்போ நீங்க என்ன செய்வீங்க?
Deja Vu - 2006








ஒரு படகுத்துறை பக்கத்தில் திரைப்படம் துவங்குகிறது. அமெரிக்க கப்பற்படையில் புதிய
மாலுமிகளாய் சேரவிருக்கும் 300க்கும் மேற்பட்டோருடன் ஒரு படகு கரையில் இருந்த்து
கிளம்புகிறது. அந்த படகில் இருக்கும் சில கார்களில் ஒன்று பற்றி எரியதுவங்குகிறது.


அடுத்த சில நிமிடங்களில் படகு வெடித்து 352 பேர் உயிரிழக்கிறார்கள்.
அடுத்த அரைமணிநேரத்தில் நமது ஹீரோ-Doug Carlin (Denzel Washington) அங்கே வருகிறார். அவர் ஒரு போலீஸ்காரர்.
சூழ்நிலைகளை  ஆராய்கிறார்.  தொடர்ச்சியாக பல சின்னசின்ன தகவல்களை சேகரிக்கிறார்.
அதோடு ஒரு பெண்ணை பற்றி விசாரிக்கவும் அவருக்கு உத்தரவு வருகிறது. அந்த பெண்ணும் இந்த படகு விபத்தில் இறந்து போகிறார் என்று நம்பப்படுகிறது.

அதை உறுதி செய்ய அந்த பெண்ணின் உடலை சோதனை செய்ய மார்ச்சுவரி செல்கிறார்.
அங்கே  அந்த பெண்ணின் பெயர் Claira Kuchuver என தெரிந்துகொள்கிறார்.
அவர் அந்த படகிற்கு செல்லுமுன்பே  இறந்திருக்கவேண்டும் என்று கண்டுபிடிக்கிறார்.
அதோடு.. அவளின் முகம் அவரை என்னவோ செய்கிறது.

அடுத்து அவரின் தந்தையிடம் விஷயத்தை சொல்லிவிட்டு..அவளின் புகைப்படம் ஒன்றை 
பெற்று செல்கிறார். அடுத்து அவளின் வீட்டிற்கு செல்கிறார். அங்கே சுவற்றில் U Can Save Her என்று ஒழுங்கற்ற சில எழுத்துக்கள் இருக்கிறது. அது Doug Carlinஐ இன்னும் 
எதோ செய்ய..


ஒரு புதிய டிபார்மெண்டில் இருந்து ஆட்கள் அவரை அணுகிறார்கள். அது ஒரு
அறிவியல்சார் குற்றஆய்வு பிரிவு. அங்கே  இளம்விஞ்ஞானிகள் சிலர் பணியாற்றுகிறார்கள்.
அவர்களின் வேலை.. குற்ற சம்பவங்களுக்கு முன் நடந்த பல்வேறு சம்பவங்களை தொகுத்து குற்றவாளியை கண்டுபிடிப்பது. சம்பவத்தின் முதல் 3 நாட்களில் துவங்கி..சம்பவம் நடந்த நொடிவரை அவர்கள் முழுமையாக ஆய்வு செய்கிறார்கள்.

அப்போது claire Kuchuver வீட்டிற்கு அந்த ஆய்வை பயன்படுத்துகிறார் Doug Carlin.
படத்தின் வேகத்தில் இந்த பகுதி கொஞ்சம் ஓய்வாகவும் திருப்புமுனையாகவும் அமைகிறது.

Doug Carlin-ன் நண்பர் இறந்ததும், Claire kuchuver இறந்ததும் அதே வில்லனால்தான் என்பதையும் இதில் உறுதி செய்துகொள்கிறார். அதே  போல் வில்லனின் முகமும் அடையாளம் கண்டுகொள்ளப்படுகிறது. 

இந்த சமயத்தில் Doug Carlinக்கு ஒரு சந்தேகம். நாம் திரையில் பார்த்துகொண்டிருப்பது
கடந்தகால வீடியோக்களையா? அல்லது மொத்தமாய் கடந்தகாலத்தையேவா? என்று
கேட்கிறார். அதை விஞ்ஞானிகள் சொல்லதயங்கினாலும்.. அவரே ஒரு பென் டார்ச் மூலம்
திரையில் ஒரு ஒளிபிம்பத்தை  ஏற்படுத்த..அதற்கு திரையில் இருக்கும் Claire Kuchuver
Response செய்கிறார். விஞ்ஞானிகள் வகையாய் மாட்டிகொள்ள.. 

Doug Carlin மடக்கி மடக்கி கேள்விகேட்க ..(இந்த பகுதி ரொம்ப முக்கியமானது..மிஸ் பண்ணிடாதீங்க).. காலத்தை திரையில் மட்டும் பின்னோக்கி
பார்க்க முடியும்னு அவங்க சொல்ல..திரையில் மட்டும்னா..இங்க இருந்து..அதாவது நிகழ்காலத்தில் இருந்து ஒரு பொருளை அனுப்பி..
அது ஏற்படுத்தும் மாற்றங்களை திரையில் கடந்தகாலமாய் பார்க்க முடியுமான்னு கேக்குறார் Doug Carlin..  அப்படியே நடக்கவும் செய்யுது.

அப்படி நடந்தும் Doug Carlin-ன் நண்பரை காப்பாற்ற முடியவில்லை. ஆனால் Doug Carlinவுக்கு நம்பிக்கை குறையவில்லை.
ஒரு வழியாக காலத்தை  பின்னோக்கி பார்த்து குற்றவாளியை  கண்டுபிடித்து சிறையில் அடைத்தும் விடுகிறார்கள்.

ஆனாலும் Doug Carlin-க்கு திருப்தியாக இல்லை. மீண்டும் அதே  ஆய்வுகூடத்திற்கு செல்கிறார். அதே விஞ்ஞானியிடம்..தன்னை 
காலத்தில் பின்னோக்கி அனுப்புமாறும்..தன்னால் முடிந்த அளவு..அந்த குண்டுவெடிப்பை தடுக்க முற்படுவதாகவும் சொல்கிறார்.
இவரின் ஆர்வத்தை புரிந்துகொண்ட விஞ்ஞானியும்..அவரை ஒரு ஹாஸ்பிடலுக்கு காலத்தில் பின்னோக்கி அனுப்புகிறார்.
அங்கே அவர் உயிர்பிரிவதற்குள் காப்பாற்றிவிடுகிறார்கள். பிறகு அவர் வில்லனை தேடிப்பிடித்து Claire Kuchuverஐ காப்பாற்றுகிறார்.

ஆனால் Claire kuchuverக்கு இவரின் மீது நம்பிக்கை இல்லை. இவரை பற்றி காவல்துறையிடம் விசாரிக்கிறார். பிறகு நம்புகிறார்.
அப்போது Doug Carlin சொல்லும் வரிகள்தான் மேலே முதல் பாராவில் உள்ளது. 

இறுதியில் படகில் இருக்கும் அந்த காரை அப்புறப்படுத்தி வில்லனை  தீர்த்துகட்டிவிடுகிறார்கள். காரை  படகில் இருந்து வெளியே கொண்டுவந்ததும்..
கடலில் விழும் காரில் claire kuchuverம் Doug Carlinம் சிக்கியிருக்க..Claire kuchuver தப்பிக்கிறார்.. Doug Carlin காரோடு சேர்ந்து மடிந்துபோகிறார்.

அடுத்த சில விநாடிகளில்.. நிச்சயமா இப்படி ஒரு க்ளைமாக்ஸை  எதிர்பார்த்திருக்க மாட்டீங்க..!!

டிஸ்கி:  இந்த படத்தை  வெச்சி ஒரு சின்ன ரிஸர்ச்சே  பண்ணவேண்டி இருந்தது. அதை அடுத்த பதிவில் பார்ப்போம்..!!

6 comments:

சி.பி.செந்தில்குமார் said...

aahaa,suspense appadinu solli eangka vechuttingkaLe

Meshak said...

உண்மையிலேயே இது ஒரு சிறந்த வித்தியாசமான படம். Deja Vu க்கு அர்த்தம் சொல்லலியே தல.
நல்ல விமர்சனம் தல. நன்றி.

Ungalranga said...

சி.பி.செந்தில்குமார்,

சரியான அளவு ஏங்குங்கள். அதைதான் நாம மொத்த வாழ்க்கையிலும் பண்றோம்.

வருகைக்கு நன்றி!!

Ungalranga said...

@Meshak,

dejavu என்றால் ¨இதை நான் முன்னாடியே பார்த்திருக்கிறேன்¨ என்கிற உணர்வைதான் Deja Vu என்கிறார்கள்.

வருகைக்கு நன்றி நண்பரே!!

கனிமொழி said...

Kudiya sikram' padam pathudanum pa.. :)

nice review Ranga!!

Anonymous said...

Its very good movie. watched many times in DVD.
Diaglogues and direction is very good.
Only thing is there were many loop holes and confusions. But still watchable many times.

Great movie.Great review.

When r u going to talk about the confusions/loopholes of this movie?

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.