Saturday, November 13, 2010

நீ,நான்,நிலா



செல் எனும் வார்த்தையெங்கும்
வா என்பதை  மறைக்கிறாய்..

ச்சீ என்கிற கொச்சை சொல்லில்
இச்சை சேர்த்து கொல்கிறாய்..

ம்ம் என்ற மௌன சொல்லில்
பேசேன் என்றே ஏங்குகிறாய்..

போ என்று விரட்டும் சொல்லில்
விரைந்து வா என்று மிரட்டுகிறாய்..

முறைக்கும் பார்வை பார்த்தெனை
முறையற்ற மனிதனாக்குகிறாய்..

பூத்து நிற்கும் புன்னகையதில்
புதியவளாய் என்னுள் பூக்கிறாய்..

நான் பேசாதே சமயம்- பேவிடு
என்று பேசாமலே கெஞ்சுகிறாய்..

முத்தம் ஒன்று கேட்டுவிட்டால்
சத்தமில்லாமல் கொஞ்சுகிறாய்..

முத்தத்தூரல் ஓய்ந்தபின்னே
மழையாய் நெஞ்சை மிஞ்சுகிறாய்..

அன்று சிரித்திருந்தது உதடுகள்,

 துடித்திருந்தது இதயங்கள்,

இனித்திருந்திருந்தது யார்...?

நீ,நான், நிலா..!!

15 comments:

Anonymous said...

அப்பாடி அப்படியே கொஞ்சி கொல்கிறது கவிதை..அத்தனை வரிகளிலும் காதலின் உரிமை அள்ளித் தெரிக்கப்பட்டிருக்கு ரங்கா படுபாவி கடைசியில ஏமாத்திட்டியே.... நிலாவிடமும் இத்தனை காதலா..சொர்க்கம் மனித மனங்களில் தான் என்பதை சொல்லாமல் சொல்கிறது கவிதை....

Ungalranga said...

@தமிழரசி,

எழுதினதை விட உன் பின்னூட்டம் சூப்பரா இருக்கே..!!
:)

நாமக்கல் சிபி said...

Yaru andhta Nila?

Ungalranga said...

@அருணையடி,

..அதாங்க..வானத்துல வட்டமா இட்லி மாதிரி ஒன்னு இருக்குமே..அது ..!!

cheena (சீனா) said...

மாமாகேக்கறாரில்ல - பொறுப்பா - பதில் சொல்லேண்டா - அப்புறம் கவிதை (???) நல்லாத்தான் இருக்கு - இருந்தாலும் அங்கங்கே ஒதைக்குது - பாத்துக்க - திறமையை வளத்துக்கோ - பேவிடு = ???? பேசிவிடு அல்லது போய்விடு - எது உன் சிந்தனையில் உருவான சொல் ? - எழுத்துப் பிழை தவிர் .... ஆமாம் நீ சரி நான் சரி - நிலா எங்கேந்து வந்தது சாட்சியா - எப்பவுமே காதல்லே 3வது மனுசன் வேணாம்பா .....

கனிமொழி said...

:)

'பரிவை' சே.குமார் said...

Arumaiyana kathal kavithai.

வருணன் said...

பெண்ணில் வீழ்கின்ற நொடிகள் எப்போதுமே கவித்துவமானவை. நல்ல கவிதை என்பதை விட அழகான கவிதை என்பதே இதற்கு பொருந்தும்...

சிணுங்கல் நிறைந்த வரிகள் அழகு... :)

Ungalranga said...

@cheens,
சீனா சார்..!! ஸ்பெல்லிங் மிஸ்டேக் கண்டுபிடிச்சதுக்கு நன்றி!!

:)

Ungalranga said...

@கனிமொழி,

:) ம்ம்?!

ம்ம்ம்... :)

Ungalranga said...

@சே. குமார்,

நன்றி நண்பரே!!

Ungalranga said...

@வருணன்,

அழகாக சொன்னீர்கள் நண்பரே!!

வருகைக்கு நன்றி ...!!

:)

Muruganandan M.K. said...

"..பூத்து நிற்கும் புன்னகையதில்
புதியவளாய் என்னுள் பூக்கிறாய்.."
இனிமையான வரிகள்.

cheena (சீனா) said...

மிஸ்டேக் கண்டு பிடிச்சதுக்கு நன்றி சொல்லிட்டே - சரி - அதச் சரி செய்ய வேண்டாமா

நாமக்கல் சிபி said...

மிஸ்டேக் கண்டு பிடிச்சதுக்கு நன்றி சொல்லிட்டே - சரி - அதச் சரி செய்ய வேண்டாமா
December 3, 2010 7:32 PM

/நான் பேசாதே சமயம்- பேவிடு
என்று பேசாமலே கெஞ்சுகிறாய்..
/

:))

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.