Tuesday, February 15, 2011

தீண்டல்..!!




கண்சிமிட்டும் கணமொன்றில்
என்னை கடந்துபோகும் நேரத்தில்
தீண்டத்துடிக்கிறேன்.. உன் கன்னங்களை..

மெல்ல வந்தமரும்
மேனியெங்கும் பூவாய் நீயமர
தீண்டத்துடிக்கிறேன்.. உன் உள்ளங்கைகளை..

ஜல்ஜல் சத்தமிட்டு
என்னை ஸ்ருதியிழக்க செய்தோட..
தீண்டத்துடிக்கிறேன்.. உன் கொலுசுப்பாதங்களை..

சமையலின் சமயங்களில்..
சத்தமிடாமல் சத்தமிடும் வளையலால்..
தீண்டத்துடிக்கிறேன்.. உன் வளைகரத்தை..


குழந்தையாய் கொஞ்சம்
குழந்தையை நீ கொஞ்ச..
தீண்டத்துடிக்கிறேன் அந்த மெல்லிடையை..

என்னடி பார்க்கிறாய்
என்று கேட்க தலைகுனிவாய்..
தீண்டத்துடிக்கிறேன்.. அந்த தீக்கண்களை..

காதலோடு வந்து
காதோரம் சுவாசம் தந்து..
தீண்டத்துடிக்கிறேன்.. அந்த மணிக்கழுத்தை..

தீயே!!நான்..

தீண்டலின் தீண்டலில்
தீயாய் தீய்ந்ததில்
தீந்தமிழ் கொண்டிங்கு
தீட்டினேன் ஓர் கவிதை..!!

4 comments:

நிலாமதி said...

தீண்டலின் தீண்டலில்
தீயாய் தீய்ந்ததில்
தீந்தமிழ் கொண்டிங்கு
தீட்டினேன் ஓர் கவிதை..!!..........

............கவிதை மிகவும் அழகு . பாராட்டுக்கள்.

Anonymous said...

தீண்டித்தீண்டி தீயை மூட்டுகிறாயே என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.. தீந்தமிழில் தீட்டியதால் சுடவில்லை சுவைக்கிறது கவிதை..

Ungalranga said...

@நிலாமதி,

ரொம்ப நன்றிங்க..!!
மீண்டும் சந்திப்போம்..!!

Ungalranga said...

@ தமிழரசி,

மிக்க மகிழ்ச்சி..கவிதை சுவைத்தமைக்கு..!!

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.