Monday, May 30, 2011

சோகமாய்...ஒரு கவிதை...!!







இருப்பதில் இருப்பது
ஏதுமில்லை எனவே
இருப்பதா வேண்டாமா
யோசிக்கிறேன்..

பொறுமை என்னை
போவென விட்டபின்
பொருப்பதா போகவா
யோசிக்கிறேன்..

நன்மையும் தீமையும்
தீர்க்கமாய் தெரிந்தபின்
தீயில் தீய்ந்திட
யோசிக்கிறேன்..

சுட்ட பழங்கள் எல்லாம்
சுடாமல் போனபின்
சுடலையில் சுடப்பட
யாசிக்கிறேன்..

அண்டமும் பிண்டமும்
அவனே ஆனப்பின்
அணைவதா எரிவதா?
யோசிக்கிறேன்..

நேசங்கள் அத்தனையும்
வேஷங்கள் ஆனப்பின்
காற்றோடு கரைந்திட
யாசிக்கிறேன்..

மண்ணும் நீரும்
கொஞ்சம் காற்றும்
கலவையாய் கலந்து
கொடுத்த உடம்பை
கவனமாய் கழட்டிவிட்டு
கரைந்திட போகிறேன்..

சிரித்ததும் போதும்
சிரிக்க வைத்ததும் போதும்
அழுததும் போதும்
இந்த அன்பான மானுடத்தில்

வருந்துகிறேன் 
இங்கு வந்தமைக்கு
திரும்புகிறேன் 
என் தாய்வீட்டிற்கு!!



4 comments:

Unknown said...

:)good one

முனைவர் இரா.குணசீலன் said...

சிரித்ததும் போதும்
சிரிக்க வைத்ததும் போதும்
அழுததும் போதும்
இந்த அன்பான மானுடத்தில்..

ஆழமான உள்நோக்கிய தேடல்..

முனைவர் இரா.குணசீலன் said...

எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா - நான் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா பிறக்கும் ...

பல்வேறு சிந்தனைகளைக் கிளறுவதாக தங்கள் கவிதை உள்ளது..

முனைவர் இரா.குணசீலன் said...

நிழற்படம் எழுத்துக்களுக்கும் உயிரூட்டுவதாக உள்ளது

நல்ல தேர்வு.

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.