நீ தொட்டுசென்ற பிறகுதான்
துவங்குகிறது என் நாள்..
நீ சுவைத்த மிச்சமே
தேனீராய் கிடைக்கிற்து தினமும்..
நீ உப்பை சரிப்பார்த்தபின்தான்
நான் சாப்பிடவே அமர்கிறேன்..
தண்ணீர் பாட்டிலின் வாயில்
உந்தன் உதடுகளின் தடம் தினந்தோறும்..
நீ மிச்சம்வைத்த உணவை
மிச்சமில்லாமல் முடிக்கிறேன் மதியம்..
நீ ஓட்டிப்பார்த்ததால் மென்மைகண்டன
என் பைக்கின் கைப்பிடிகள்..
நீ அனுப்பியதாய் சொல்லிதான்
தொட்டுபோகிறது மாலைக்காற்று..
நீ போட்ட கோலமதனால்
தள்ளியே நிறுத்திகிறேன் வாகனத்தை..
வந்தவனை அள்ளிகொண்டு
வாஞ்சையாய் காபி தர..
உனக்கு என்று கேட்டதும்
உனக்குதான் முதலில் என்கிறாய்..
நான் என்னடி செய்தேன்
என்றே உன்னை கேட்க..
நீ புத்தன் நான் யசோதரை
உன் சேவை என் தேவை..
உன் காதல் என் கூலி..
என்றாயே பார்க்கலாம்..
இப்படி நீயே எங்கும்
என்னை சூழ
காதலின் கடலின்
நான் மூழ்கியே வாழ
இனி காதலிக்க தனியாய்
ஏது நேரம்..
காதலிக்கே மொத்தமாய் வாழும் போது..!!
7 comments:
நல்லாருக்குப்பா.. :)
test
இப்படி நீயே எங்கும்
என்னை சூழ
காதலின் கடலின்
நான் மூழ்கியே வாழ//
அருமையான வரிகள். பாராட்டுக்கள்.
கடைசியில் நல்ல கேள்வி !
உணர்வுகளின் கலவை ! மிக ரசிக்க வைக்கிறது !
கவிதைகள் எனக்கு பிடிக்கும், தொடருகிறேன் இன்றில் இருந்து.....!! :))
ஆகா....அருமை
rajeshnedveera
காதலிக்கே மொத்தமாய் வாழும் போது..!!
கொடுத்த் வைத்த காதலி. உண்மைக் காதல் காலத்தால் வாழட்டும்
புத்தனும் யசோதரையும் காதலுக்கு இதுவரைக் கண்டிராத உதாரணம். புத்தன் மாதிரி விட்டுப் போகாமலிருக்கும்வரை இது பொருந்தும். காதல் வழிகிறது கவிதை முழுவதும்.
உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். முடியும்போது பதிவிட்டுப் பங்கெடுத்துக்கொள்ளவும். நன்றி.
Post a Comment
வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.