தவறு செய்ய கத்துக்கோங்க:
தவறுகள்- மனிதனின் பாடசாலை. இயற்கையின் ஆய்வுக்கூடம், நம்மை கூர்செய்யும் காயங்கள்..
தவறி தத்தளித்து தடுமாறி, அடிபட்டு, சிராய்ப்புகளோடு, சின்ன சுளுக்குகளோடு இப்படி நம் இன்றைய நிலையை எட்ட நம் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்த்திலும் மேற்சொன்னவற்றை அனுபவித்திருப்போம்.
ஏன் தவறு செய்ய கத்துக்கணும்? தவறு என்பது ஒரு ட்ரையல் தான். ஒரு விஷயம் சரியாக வருமா வராதா என்கிற சந்தேகம்
ஆனாலும் முயற்சி செய்து பார்த்துவிடுகிற தைரியம். இவை இரண்டும் சேரும் போது 50% வெற்றி 50% தோல்வி என்றாகிறது. இப்படி 50% வெற்றிகளில் வேலை எளிதாகிறது. 50% தோல்விகளில் நமக்கு மேலும் சில பாடங்களும் நம் அறிவிற்கு இன்னும் சில பாடங்களும் கற்பிக்கப்படுகிறது.
அப்போ எப்பவும் அவமானப்பட்டுதான் கத்துக்க முடியுமா? ஆமாம்.. தவறுகளை வரவேற்காத மனமே அவமானத்தில் கூனிகுறுகுகிறது. அப்படியில்லாமல் “இப்போது நான் செய்யும் இச்செயல் தவறாய் போனாலும் அதன்மூலம் நான் கற்றுகொள்ள தயார்” என்னும் மனநிலையோடு வேலைகளை துவங்கினால்…அந்த வேலை செல்லாது போனாலும் அதன் பாடம் நமக்கு மனதில் வாழ்நாள் முழுதும் தங்கும்.
என்னடா இது இப்படி சொல்றானேன்னு பாக்காதீங்க.. எல்லா அவமானங்களையும் படிக்கட்டுகளாக, ஏணிப்படிகளாக பாருங்கள். அவமானங்கள் தாங்கும் மனமே பல உவமானங்கள் தேடிப்பெரும். எனவே தைரியமா தவறு பண்ணுங்க.. கத்துக்கோங்க.. மெச்சூராகுங்க..!!
வாழ்த்துக்கள்.. Happy Mistakes..!!
11 comments:
தொட்டால் தானே தெரிகிறது தொட்டால் சுடுவது நெருப்பேன்று ........... பயனுள்ள பதிவு நன்றி
mee the firstu...
எப்போது எல்லாம்
தோல்விகளை மிகவும் பிடிக்கிறது
பழகிவிட்டதால்
நல்ல பதிவு ரங்கன்
அரையாண்டு தேர்வில் கணிதத்தில் 35
மதிப்பெண் பெற்றதால்தான் என்னால் முழுஆண்டு 95மதிப்பெண் தேர்வில் பெறமுடிந்தது
//தவறுகளை வரவேற்காத மனமே அவமானத்தில் கூனிகுறுகுகிறது.//
இனிமேல் வரவேற்கிறேன் ரங்கா..!! ஊக்கமூட்டும் பதிவு..!!
//ஒரு விஷயம் சரியாக வருமா வராதா என்கிற சந்தேகம்
ஆனாலும் முயற்சி செய்து பார்த்துவிடுகிற தைரியம்.//
உண்மை தான் :)
@நிலாமதி,
தெரிந்து தெளிந்தால் மகிழ்ச்சி..!!
வருகைகு நன்றி நிலாமதி!
@Siva,
good..keep it up..!!
தவறு செய்ய கத்துக்கிட்டீங்க.. இன்னும் செய்யுங்க..நிறைய கத்துக்கோங்க..!!
நன்றி உங்கள் வருகைக்கு..!!
@சேலம் தேவா,
நன்றி.. காத்திருங்கள்..கற்றுகொள்ளுங்கள்..
வாழ்த்துக்கள்..!!
வருகைக்கு நன்றி..!!
@S.Sudharsan,
உண்மையை தெரிஞ்சிக்கிட்டீங்க..பயன்படுத்தி பாருங்க..!!
நன்றி..உங்கள் வருகைக்கு..!!
தன்னம்பிக்கை அளிக்கும் பதிவு நண்பரே!
nallaayirukku..
Post a Comment
வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.