நேரம்: 7.08 மணி
இதோ.. வேகமாய்.இன்னும் வேகமாய்.. அடுத்த கணமே என் தங்கத்தை அடைந்துவிடக்கூடாதா?
இன்னும் எதற்கு அவளுக்கும் எனக்கும் 7 நிமிட இடைவெளி.. அன்பில் காலம் கரைவதில்லை..கூடுகிறது..
கணமொன்று கடக்கையில் யுகம்கடந்த வலி..ச்சே..மின்னல் வேகத்தில் வாகனங்கள் செல்லாதா?
இல்லை இந்த ஆட்டோகாரன் மெதுவாக செல்கிறானா? வேகமாகத்தான் திருகுகிறான்.. இத்தனை பேர் சாலையில்
என்ன செய்கிறார்கள்.. ச்சே.. அசமஞ்சங்கள்..நகரவே நாள் செய்கின்றன. எருமைகள்...
சீக்கிரம் போங்க ..ப்ளீஸ் .. மீண்டும் ஆட்டோகாரனுக்கு கெஞ்சலாய் உத்தரவிட்டேன்.
போறேன்மா..போறேன்..ன்னு கொஞ்சம் உறுமலாய் சொல்லிவைத்தான்.
அட..சொல்ல மறந்துவிட்டேனே..நான் அஞ்சலி.. என் வீட்டிற்குதான் இவ்வளவு வேகமாய் போய்கிட்டு இருக்கேன்..
காரணம்.. என் மகள் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கி இருக்கா..!! சந்தோஷமாய் இருக்கா? எனக்கும்தான்..ஆனால்..
நேரம் 6.45 மணி
ஹையா..ஹையா..யய்யய்..ஹையா.. !! கூச்சலுடன் வீட்டிற்குள் ஓடிவந்தாள் இந்திரா.
வந்துடுச்சு பிஸாஸு.. இன்னைக்கு என்ன கிழிச்சிதோ? புகைந்தபடி வெளிவந்தாள் கற்பகம் பாட்டி.
குழந்தையை ஏன் திட்ற..எதுவா இருந்தாலும் என்னை நேரா சொல்லிட்டு போ.. மாடிப்படியிலிருந்து கூவினாள் லட்சுமி.
பாட்டி பாட்டி.. இன்னைக்கு நான் ஸ்கூல்ல..
வந்தது லேட்டு.. இதுல கதைவேற அளக்கறியா.. ஃபங்ஷன் முடிச்சமா..புள்ளைய அனுப்பினமான்னு இல்ல..
இவ்வளவு நேரமா பண்ணுவனுங்க.. என்ன ஸ்கூலோ..?!
உங்கம்மா இருக்காளே.. அவளை அப்படியே உரிச்சி வெச்சிருக்க.. அதே துள்ளல், அதே திமிரு.. அதே அடம்..
பொக்கென்று போனது இந்திராவிற்கு.
அப்பா எங்க பாட்டி..? என்று சோகமாய் கேட்டாள்.
அவன் உள்ளதான் இருக்கான்.. ஏன் அவனை வேறு வம்பிழுக்கணுமா நீ.?
என்னை படுத்தும் இம்சை போதாதா? என்றவண்ணம் அவளுக்கு கவுன் மாட்டிவிட்டாள்.
பேக்கை தன்னோடு தூக்கிகொண்டு..அறைக்குள் நுழைந்தாள்.
சர்ரென்று ஒரு பேனா அவள் கன்னம் உரசி வெளியே விழுந்தது.
எங்க.ஒரு பேனா கூட இல்லை.. ச்சை..வீடா இது.. ஒரு நம்பர் நோட் பண்ண பேனா கூட இல்லை...
இருய்யா இருய்யா..இரு லேப்-ல ஸ்டோர் பண்ணிக்கிறேன்.. |
என்கிட்ட மட்டும் எல்லாம் சொல்லு..என்று செல்லில் எவனையோ எகிறிகொண்டிருந்தான் பாலு.
அப்..பாஆஆஆ..
திரும்பி பார்த்தான் பாலு. செல் தவறி கீழே விழுந்தது.. இணைப்பு துண்டிக்கப்பட்டது.. செல்போன் அணைந்தது.
கோபம் குழந்தைமேல் பாய்ந்தது.
ஏய்..எந்த நேரத்துல கூப்பிடறதுன்னு தெரியாது.. ச்சை.. பிஸாஸே..போ..போ வெளியே என்று அலறியபடி
செல்போனை பொறுக்க போனான்.
..குழந்தை மிரண்டே போனது..6 வயது பெண் என்னதான் செய்வாள்.. மலங்க மலங்க விழித்தாள்..
கலங்கி போனாள்.. துக்கம் தொண்டைக்குள் தள்ள..
மெதுவாய் நடந்தாள்.. லேண்ட் லைனில் அம்மாவின் ஆபிஸ்க்கு அழைத்தாள்..
அலோ..எம்.கே. அஸோஸியேட்ஸ்..
அம்மா இருக்காங்களா? அம்மாட்ட பேசணும்..
எந்த அம்மா.. இங்க நிறைய பேர் இருக்காங்களே குழந்த.. பேர் சொல்லு மா..
அம்மா பேர் அஞ்சலி.. என்றாள்.
அஞ்சலி மேடம்.. உங்களுக்கு போன்..
ஹல்லோ..
ம்மா.. ம்மா..
சொல்லும்மா..
மா..குரல் உடைந்தது.. அழ துவங்கினாள்..
மா..ஃப்ர்ஸ்ட் ப்ரைஸ் மா...கதறி அழுதாள்..
அழுகையில் நடுவே..
எப்போ ம்மா வருவீங்க..?
அழுகை தொடர்ந்தது
தொடர்பு துண்டிக்கப்பட்டது.
9 comments:
ஒரு தாயின் ஏக்கமும் ஒரு குழந்தையின் தவிப்பும் வார்த்தைகளில் நிழலாடுகிறது . அருமை
துரித உணவை துரிதமா தின்னுபுட்டு செத்துருவாங்கன்னு நினைக்கிறேன்..!!
நவீன உலகில் தாய்க்கும் குழந்தைக்குமான நிகழ்வு அழகாய் உணர்வுபூர்வமாய் சொல்லியிருகிறீங்க.
பாராடுக்கள்.ரசித்தேன்.
ரங்கா என்ன சொல்வது தெரியல
கண்முன்னே நீங்கள் சொல்லும் வரிகள் எல்லாம்
காட்சிகளாய்
வாழ்க வளமுடன் அடுத்த பதிவுக்கு காத்துருக்கிறேன்
இப்படி குழந்தைகளின் சின்ன சின்ன கனவுகள் அதிகம் உடைக்கப்படுவது பெற்றோர்களால்தான்... அவர்கள் அதிகம் எதிர்பார்ப்பது அவர்கள் சொல்வதை நாம் கேட்கவேண்டும் என்றுதான்.. ஆனால் விஜய் டி.வி சூப்பர் சிங்கரும்... ப்ளாக்போஸ்ட்டும், சீரியல்களும்...
ஏய்... மூடு.. வாய... எதாவது கேட்க விடறியா.. அமைதியா தூங்கு... இப்படித்தான் நம் பிள்ளைகளோடு உரையாட வைக்கின்றன... உங்கள் கதை சவுக்கடிதான்..
மாறட்டும் மனங்கள்..
வாழ்த்துக்கள் நண்பரே
ஒரு உங்கள் அருகில் மற்றும் பிரியமானவனின் அன்பு நிரூபிக்க இல்லை. ஆனால் நீங்கள் மிக முக்கியமான சந்தர்ப்பங்களில் அங்கே இருக்க வேண்டும். ரஜினி அதே பற்றி என்ன சொல்ல வேண்டும் என்று இங்கே சொடுக்கவும்
http://bit.ly/n9GwsR
ரொம்ப அழகான சிறு கதை.. குழந்தையின் ஏக்கமும், தாயின் தவிப்பும்.. வரிகளில் வரிசையாய்.. நல்ல எழுதி இருக்கீங்க. :)
அன்புடன் ஆனந்தி,
நன்றிம்மா நன்றி!!
தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்
நேரமிருக்கும்போது பார்க்கவும்
http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_20.html
Post a Comment
வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.