தியானத்திற்கு எப்போதும் ஒரு அரிய சக்தி உண்டு. நாம் நிதானம் தவறாது காப்பதே அதன் சக்தி. என்ன சூழ்நிலை வந்தாலும் நாம் நம்மை அறிந்தபடியால், அமைதியாய், தெளிவாய், நிதானித்து
வாழ்க்கையை பார்க்கும் ஒரு மனிதனாய் தியானம் நம்மை மாற்றியமைத்துவிடுகிறது. என் வாழ்க்கையையே எடுத்துகொள்ளுங்கள்..எத்தனை கோடி முறை தற்கொலை எண்ணங்கள் வந்துபோயின,
எத்தனை முறை என் வீட்டை, மக்களை, உலகை வெறுத்திருக்கிறேன்..இப்போது அதை எல்லாம் நினைத்துபார்த்து சிரிக்கத்தான் தோன்றுகிறது. இன்னும் கூட சில நேரங்களில் என் அகந்தை மேலெழும்
நேரம்..அதை உடனே தள்ளிநின்று பார்த்து சிரித்துவிடும் தெளிவு எனக்குள் வந்திருக்கிறது.. உடனே நான் எதோ பெரிதாய் கண்டுவிட்டேன்..ஆச்சா போச்சா என்று அகந்தையுரை எழுத வரவில்லை.
ஒரு அற்ப ஜீவராசி என்னாலேயே இவ்வளவு தெளிவாய், பொருமையாய், அழகாய் வாழ்க்கையை அப்படியே ஏற்றுகொண்டு வாழமுடிகிறதென்றால், உங்களால், உங்களுக்காகவும், உங்களை சார்ந்திருப்பவர்களுக்காகவும்
உழைக்கும் மக்களாகிய உங்களால் எவ்வளவோ தெளிவாய் வாழ முடியும். அப்படி வாழும்போது வாழ்க்கை ரம்மியமாய், அழகாய், ஒரு கலைநயமிக்கதாய் இருக்குமே.. ஒரு ஆடலோடும், பாடலோடும்
ஒரு துள்ளலோடும், ஒரு குதுகலத்தோடும் ஏன் வாழ்க்கையை வாழக்கூடாது?
தம்பி..எல்லாம் சரிதான்..இந்த துள்ளலும், குதூகலம், ஆடல், பாடல் எல்லாம் எப்படிப்பா இந்த அவசர உலகில் சாத்தியம்?
சாத்தியம், ஒரே ஒரு விஷயத்தை சரியாக புரிந்துகொண்டால்...
அது என்ன?
உலகம் அவசரமாய் இல்லை..மனிதர்கள் நமக்குத்தான் அவசரம். உலகம் அவசரமானது என்பது பச்சைப்பொய்..அப்படி இருந்தால்,
இந்நேரம் மனித இனமே இல்லாமல் போய், அடுத்த கட்ட evolution துவங்கி இருக்கும்.... இந்த பூமி சூரியனை சுற்றுகிறதே..அவசரமாகவா சுற்றுகிறது? இல்லை..ஒருமுறை தன்னைத்தானே சுற்றிவர
24 மணிநேரங்கள் எடுத்துகொள்கிறது. இதனால் பூமி சோம்பேறி என்று அர்த்தமல்ல. அதற்குள் ஒரு நிதானமிருக்கிறது. அது அதனளவில் தெளிவாய்தான் இருக்கிறது. பூமியும் நமது கார்ப்பரேட் கந்தசாமிகள் போல்
இன்னும் வேகமாய், இன்னும் வேகமாய் என்று சுழல ஆரம்பித்தால் நம் கதி அதோகதிதான். பாருங்கள், அது சூரியனை சுற்றிவர ஒரு வருட காலம் தேவைப்படுகிறது. இப்படி பூமிக்கு இருக்கும் நிதானமும்
தெளிவும், உங்கள் வழியில் சொல்வதானால், உங்கள் உலகத்திற்கு இருக்கும் தெளிவும், நிதானமும், அதன் பிள்ளைகளான நமக்கு இல்லையே..?!
ஏன் இந்த பைத்தியம்பிடித்தது போன்ற ஓட்டம்? அவசரமே படாத பூமியில், அவசர அவசரமாய் வாழ்ந்து அவசரமாய் செத்துப்போகும் அவலம் ஏன்? கொஞ்சம் யோசித்தால், இதற்கு நீங்கள் தான் முழுப்பொறுப்பு
என்று புரியும்.. ஆனால் எப்படி?
அடுத்த பதிவில் சிந்திப்போம்..!!
7 comments:
அவசர உலகில் நமக்காக வாழ்வது மட்டுமன்றி.. நம்மைச் சார்ந்தவருக்காகவும்... சிறிது வாழ்வது நல்ல விஷயம் தான்.. அதில் கிடைக்கும் திருப்தி.. நமக்கு ஆனந்தத்தை கொடுக்கும்... நம்மால் இயன்ற விசயமும் கூட..! தொடருங்கள்...!
அடுத்த பதிவிற்கு பொறுமையுடன் காத்திருக்கிறேன். :)
super post..
@ஆனந்தி,
உண்மைதான்.. தன்னிலிருந்து பிறருக்கு தானே பொங்கி வந்தால் மகிழ்ச்சி..!!
:) வருகைக்கு நன்றி..!!
@சேலம் தேவா,
ஹாஹாஹா!! நல்லது..நான் சீக்கிரமே(!) பதிவிடுகிறேன்.. :))
வருகைக்கு நன்றி மன்னா!!
@Siva,
நன்றி சிவா..!! :)
@சிவம்ஜோதி,
நிச்சயம் பார்க்கிறேன்..பாடலை பகிர்ந்தமைக்கும் நன்றி நண்பரே..!!
Post a Comment
வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.