Monday, June 22, 2009

பொல்லாதவன்-2..?!

ஹாய் நண்பர்களே!!

என்னடா இவன் எல்லாம் கதை சொல்லி கேட்கும் அளவுக்கு ஆகிட்டோமேன்னு ஃபீல் பண்ணாதீங்க.. எனக்கும் நல்லா கதை விட..ச்சே.. சொல்ல வரும்..

சரி கதைக்கு வருவோம்..!!

ராம்குமார் மார்க்கெட் அருகே வந்து தனது யமஹா கிளேடியேட்டரை நிறுத்தினான்.

"டேய் ராம்...எங்கடா இவ்ளோ தூரம்...?!" என்றார் சண்முகம்.

"அது ஒண்ணுமில்ல மாமா.. சும்மாத்தான் பாத்துட்டு போலாமேன்னு வந்தேன்"

-"சரி சரி.. வா.. கடைக்கு வா. எத்தன நாள் ஆச்சு உன்ன பாத்து .. ஆளே இளச்சி போன மாதிரி இருக்கியே ஏன்?"

"அட..என்ன மாமா இப்படி சொல்லிட்டீங்க.. நான் நேத்து தான் வெயிட் பாத்தேன்..
எடை 4 கிலோ கூடி இருக்கு.. நீங்க என்னடான்னா..."

"நீ என்ன சொன்னாலும் சரி மாப்ள.. நீ இளச்சுத்தான் போய்ட்ட... எங்க அக்கா சரியா சோறாக்கி போடுதா இல்லையா?!"

கடைக்கு உள்ளே சென்றனர்..

கடைப்பையனை பார்த்து சண்முகம்..

"தம்பி.. ஓடிப்போய் ஒரு கலர் வாங்கியா... பணம் அக்கவுண்ட்ல போட்டுக்க சொல்லு.."

கடைப்பையன்..
"ஆமா.. அவனுக்கும் பணத்துல அக்கவுண்டு.. எனக்கு சம்பளத்துல அக்கவுண்டு.. பக்கி" என மனதுக்குள் திட்டிக்கொண்டே செல்கிறான்.

"எதுக்கு மாமா வீண் செலவு " என்று சம்பிரதாயமாக சொல்லி வைக்கிறான் ராம்.

"இருக்கட்டும் மாப்ள..நமக்குள்ள என்ன?"... என்கிறார் சண்முகம்.

"ஆமா மாப்ள.. கேக்கணும்னு இருந்தேன்.. வண்டி கண்டிஷன் எப்படி?"

"அச்சோ மாமா.. மறந்தே போய்ட்டேன்" என அலறுகிறான் ராம்.

"என்ன மாப்ள.. என்ன ஆச்சு?"

"வண்டி சாவி..வண்டிலேயே இருக்கு. இருங்க.. வரேன்.."

பதறியடித்து கொண்டு ஓடினான்..

வண்டியை நெருங்கி பார்த்தான். சாவி அதிலேயே இருந்தது.

உடனே சாவியை எடுத்துகொண்டு திரும்பினான்.

செல்லும் வழியில் ஒரு விநாயகர் கோவில் இருந்தது.

அதில் விநாயகருக்கு ஒரு அர்ச்சனை செய்து விட்டு வெளியே வந்தான்.

சண்முகம் நின்றிருந்தார்..

"என்ன மாப்ள.. சாவி கிடைச்சுடுச்சுல்ல.. வண்டி இருக்குல்ல.. ?!"

"ஆங்.. இருந்துச்சு மாமா. நல்ல வேளை . ஒரு நிமிஷம் ஆடிப்போய்ட்டேன்"

"உன் நல்ல நேரம்.. மாப்ள.. இனிமே ஜாக்கிரதையா இருந்துக்கோ"


"சரி மாமா.. நான் கிளம்புறேன்"

"சரி மாப்ள.. உனக்கும் வேலை இருக்கும். போய்ட்டு வா"

நிதானமாய் வண்டியை நோக்கி சென்றான்.

டுத்த சில நிமிடங்களில்..

"சார்.. என் பேர் ராம்குமார்..என் வண்டிய காணோம்.. யாரோ திருடிட்டு போய்ட்டாங்க"..

ஏட்டு எட்டி பார்த்தார்.

"தம்பி ஒரு காபி..அப்படியே ரெண்டு வடை சொல்லிடு"

ராம்குமாரை பார்த்து..

"வாங்க.. சொல்லுங்க... என்ன விசேஷம்?"...

11 comments:

sakthi said...

அழகான யதார்த்தமான கதை!!!!

Ungalranga said...

@sakthi

நன்றி சக்தி..!!

cheena (சீனா) said...

ம்ம்ம்ம் என்ன பண்றது - ராம்குமார் பாவம் - இப்படித்தான் வாழ்க்கை போறது

சரி சரி - ரங்கா - நல்லாருப்ப - தொடர்ந்து எழுதுப்பா

Ungalranga said...

@சீனா..

வாங்க சீனா.. வருகைக்கு நன்றி..

சென்ஷி said...

சூப்பர் :)

ஆனா பாவம் :(

pudugaithendral said...

:))

Ungalranga said...

@சென்ஷி..

வருகைக்கு நன்றி..!!

என்னா பண்றது.. திருடுபோகணும்னு இருந்தால் போய்தானே தீரும்

ராஜன் said...

// வந்தது வந்துட்டீங்க.. வாழ்த்திட்டு போங்க. அது என் வளர்ச்சிக்கு உதவும்.//

திட்றதா இருந்தா திட்டலாமா ?

Ungalranga said...

@ராஜன்..

அதை தனிமெயிலில் பேசிக்கலாம்..பொது இடத்தில் வேண்டாம். கிகிகி...

Anonymous said...

ஒரு முறை பிள்ளையார் காப்பாத்திட்டார்....

அடுத்தமுறை ஹிஹிஹிஹி...

மேவி... said...

நல்ல இருக்கு பாஸ் ......

சைக்கிள் திருடன் கதை மாதிரி இருக்குமோ ????

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.