Kung Fu Panda
ஒரு ஊருல ஒரு பாண்டா கரடி இருந்துச்சாம். அதுக்கு குங்-ஃபூ கலையை கத்துக்கணும்னு ரொம்ப ஆசையாம். ஆனா அவங்க அப்பா அவனை
நூடுல்ஸ் விக்க சொல்லிட்டே இருந்தாராம். ஒரு நாளு..
இப்படி சொல்ல வேண்டிய கதையை மெருகேற்றி.. அழகாய், அனிமேஷனாய், அம்சமாய் குடுத்திருக்கிறார்கள் நமது ஹாலிவுட் சகாக்கள்.
நம்ம டிரீம்வர்க்ஸின் கைவண்ணத்தில் அற்புதமாய் ஒரு படைப்பு.
ஒரு உயரமான உருளைகிழங்கு கணக்காய் ஒரு பாண்டா கரடி.
அதனுடைய ஆசைகள், கனவுகள்,லட்சியம் எல்லாமே குங்-ஃபூ.(இதுவும் கராத்தே போலத்தான்..மேலும் தகவலுக்கு இங்கே பாருங்கள்).
அதில் தேர்ச்சி பெற அது அனுபவிக்கும் கஷ்டங்கள். அதை அடைந்துவிட்ட பிறகு அதற்கு வரும் முக்கியமான சவால். இவை அனைத்தையும்
நகைச்சுவையோடு சொல்லி இருக்கிறார்கள்.
எப்படியும் தன்னை தனித்து நிலைநாட்டிகொள்வதில் ட்ரீம்வர்க்ஸ் எப்போதும் முதலிடம் வகிக்கிறது. பிக்ஸரின் திரைப்படங்களுக்கு
ஈடுகொடுக்கும் விதமாக எப்போதும் ஒரு படைப்பை தன்னிடம் கொண்டுள்ளது ட்ரீம்வர்க்ஸ்.
இது அனிமேஷன் தானா? அல்லது நிஜ சம்பவங்களா? என்று திகைக்க கூடிய அளவுக்கு
அனிமேஷனில் புகுந்து விளையாடி இருக்கிறார்கள் ”கனவுவேலையாட்கள்”. சண்டை காட்சிகளில் இருக்கும் தத்ரூபத்திற்காகவே
படம் ஆஸ்கருக்கு தேர்ந்தெடுக்க பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் பிக்ஸரின் வால்-இ ஆஸ்கரை தட்டி சென்றதுதான் சோகம். இருந்தாலும் மக்கள் மனதில் சிறந்த அனிமேஷன் படமாக
கடந்த 2008ம் ஆண்டு குடிகொண்டது என்பதை மறுப்பதற்கில்லை.
இந்த படத்தில் வரும் முதல் காட்சியானது 3டி-யில் செய்யப்படாமல் 2டி அனிமேஷனாக ஜேம்ஸ் பாக்ஸ்டர் (என் மானசீக குரு)என்கிற அனிமேட்டரால்
தனியே தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதை அவர் நாவலேயே கேட்டு அறியும் பாக்கியமும் எனக்கு கிடைத்தது ,சமீபத்திய பெங்களூரு பயணத்தின் போது.
உதிரி தகவல்கள் :
இதில் வரும் குரங்கு கதாப்பாத்திரத்திற்கு நமது அதிரடி மன்னன் ”ஜாக்கி சானு”ம்..
இதில் வரும் பெண்புலி (அந்த புலி இல்லீங்கோ..இது டைகரஸ்)க்கு நம்ம ”ஏஞ்சலீனா ஜூலி”யக்காவும் குரல் குடுத்திருக்கிறார்கள்.
படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்க கூடியது.
சிடிக்கள் முக்கிய நகரங்களில் நிச்சயம் கிடைக்க கூடியதே!!
நம்ம ரேட்டிங் [7/10]
13 comments:
செம்ம கலக்கல் படம் இது. எனக்கு ரொம்ப பிடிச்சுருந்தது. :)
வருக சென்ஷி..!!
படம் பாத்துட்டீங்க போல..
எல்லாம் சரி பட பேர் என்னனு சொல்லவே இல்லை
ஹாஹாஹா.. நன்றீ..சூரியன்
படத்தின் பெயர் Kung Fu Panda..
படத்தின் டைட்டில் போட்டாச்சு..!!
அடுத்து படம் பார்க்க ஆரம்பிங்க .. இங்க இல்லை.. டிவிடியில்...!!
படம் பார்த்து விட்டேன்,
பகிர்ந்ததற்க்கு நன்றிகள்!!
ஓட்டு போட்டாச்சு!
நம்ம ஆதரவு எப்போதும் உண்டு உங்களுக்கு..
//கலையரசன் said...
//நம்ம ஆதரவு எப்போதும் உண்டு உங்களுக்கு...//
அஹா..அப்போ சரி.. அடுத்த முதல்வர் நாந்தானுங்கோ..!!
ஹைய்ய்ய்ய் நான் ஒரு 6 மாசத்துக்கு முந்தியே பார்த்துட்டேன்ல் :)))
செம ஜாலியான படம் அதுவும் பாண்டா கேரக்டர் சூப்பர் !
ஒரு சீன்ல கொஞ்சம் சோகமா இருக்கும் போது எனக்கு ஒரே ஃபீலிங்க் பீலிங்கஸா வந்ந்திருச்சுப்பா பாவமா இருக்கும் :(
//ஆயில்யன் said...
ஹைய்ய்ய்ய் நான் ஒரு 6 மாசத்துக்கு முந்தியே பார்த்துட்டேன்ல் :)))
செம ஜாலியான படம் அதுவும் பாண்டா கேரக்டர் சூப்பர் !
ஒரு சீன்ல கொஞ்சம் சோகமா இருக்கும் போது எனக்கு ஒரே ஃபீலிங்க் பீலிங்கஸா வந்ந்திருச்சுப்பா பாவமா இருக்கும் :(//
அட.. எந்த காட்சிய சொல்றீங்க?
அருமையா இருக்கு அண்ணாச்சி..படம்..
எப்படிப்பா இப்படியெல்லாம் யோசிக்கிறானுவ...!!
கலக்கிடீங்க.. வாழ்த்துக்களுங்க..!!
:-))
வந்ததுதான் வந்துட்டேன்.வாழ்த்துக்கள்.
@கும்க்கி..
நன்றீ தலைவா!!!
Post a Comment
வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.