Saturday, June 20, 2009

வில்லு நாயகனும்.. 32 கேள்விகளும்..!!1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?


என்னிடம் பிடிச்ச ஒரே விஷயம் பேர்தான்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

அழாதது எப்போதுன்னு கேக்கணும்.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

இங்க தலையெழுத்தே கிறுக்கலா இருக்கு ..இதுல கையெழுத்தை கேக்க வந்துட்டாரு..!!
(அடிக்க வருகிறார்..அவ்வ்வ்)

4).பிடித்த மதிய உணவு என்ன?

லெமன் ஜூஸ்.


5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

அதுக்குத்தானே அனுபவிச்சுட்டு இருக்கேன். இன்னும் வேறயா?


6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

தண்ணீரில் குளிக்க பிடிக்கும்.


7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

”குஷி”க்கு பிறகு ..இடுப்பை தான் பார்க்கிறேன்.

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச விஷயம்: நடிப்பு.

பிடிக்காத விஷயம் : எதன்னு சொல்ல... ஒரு படமா.. ரெண்டு படமா?

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடிச்ச விஷயம்: வெற்றி படங்களுக்கு என்னை பாராட்டுவது..

பிடிக்காத விஷயம் : தோற்ற படங்களுக்கு மக்களை பாராட்டுவது.

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

நயன் அண்ட் த்ரிஷா.


11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

ச்சீ..அசிங்கமா பேசாதீங்க..!!

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

வில்லு படத்தில்.. வடிவேலு காமெடி..!!

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

என்னையே பேனாவா மாத்துற அளவுக்கு எவனுக்கு தைரியம் இருக்கு?(பயத்தோடு சுற்றுமுற்றும் பார்க்கிறார்)

14.பிடித்த மணம்?

”கோ...........”(சென்ஸாரால் நறுக்கப்பட்டது)

வேணாம்..வாய கிளறாதீங்க..


15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

எனக்கு இதை பார்வேர்டு செய்தது..பிடிக்காத விஷயம்..எனக்கே இதை பார்வேடு செய்தது..
அவரை அழைக்க காரணம்.. இன்னுமா புரியல..(வில்லத்தனமாக சிரிக்கிறார்)

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

யாருன்னு தெரியலை.. சிக்கினார்..சின்னபின்னமாக்க படுவார் என்று அன்புடன் தெரிவித்துகொள்கிறேன்.(குரூர சிரிப்பு முகத்தில்)

17. பிடித்த விளையாட்டு?

கபடி.. கபடி.. !!

18.கண்ணாடி அணிபவரா?

போட்டுகிட்ட மட்டும் படம் ஸில்வர் ஜூப்ளியா ஓடிட போவுது..?!

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

ம்ம்.. பாஸ்..

20.கடைசியாகப் பார்த்த படம்?

வில்லு..

ஏய்..பேசிட்டு இருக்கொம்ல.. சைலன்ஸ்.!!

21.பிடித்த பருவ காலம் எது?

படம் வெற்றிபெற்ற காலங்கள் எல்லாமே..(விட்டத்தை ஏக்கமாய் பார்க்கிறார்)..!!

22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

சினிமாவால் அழிந்த சிலர்.

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

அது என்ன டெஸ்க்டொப்?

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சப்தம் :என் படத்தில் நான் பேசிய பஞ்ச் டயலாக்.

பிடிக்காதது : பேட்டி கொடுக்கும் போது மொணமொணவென பேசுவது.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

பத்ரி படத்துக்காக ஸ்விச்டர்லாந்து..

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

கை காலை வேகமா..ஆட்ட தெரியும்..
அதாங்க டான்ஸ்னு எதோ சொல்லுவாங்களே அதுதான். அதுமட்டும்தான்.


27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

அவர் படம் ஹிட்டாவது, என் படம் சொல்லிவெச்ச மாதிரி ஃப்ளாப்பாவது..!!28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோவம்.. உங்க பாஷையில சொல்லணும்னா கொலைவெறி.(நாக்கை துறுத்தியபடி முறைக்கிறார்)

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

கோடம்பாக்கம்..

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

இன்னும் இருக்கேனேன்னு சந்தோஷப்படுங்க..அத விட்டுட்டு ..

31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

மனைவி இல்லாம்ல் செய்ய விரும்பும் காரியம்.... ..

.. திருட்டு முழி முழிக்கிறார்...

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

வாழ்க்கை ஒரு வட்டம்.. அதுல தோக்குறவன் ஜெயிப்பான்..(அழுகிறார்)ஜெயிக்கிறவன் தோப்பான்..!!

இந்த தொடர் பதிவுக்கு நான் அழைப்பது

எவண்டா எனக்கு இதை பார்வேடு பண்ணது?

டிஸ்கி :
இது விஜயை தாக்கவோ, கிண்டல் செய்யவோ போடப்பட்ட பதிவு அல்ல..!!

22 comments:

cheena (சீனா) said...

ரங்கா - கலக்குறே ரங்கா - சூப்பர் பதில்கள்

நாமக்கல் சிபி said...

:))

நாமக்கல் சிபி said...

//7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

”குஷி”க்கு பிறகு ..இடுப்பை தான் பார்க்கிறேன்.//

ஹெஹெ! சூப்பர்!

கும்க்கி said...

இதுல டிஸ்க்கி வேறவா...?
இருக்குடி உனக்கு...பின்னாடி லாரில கத்தி கம்போட வந்துட்டேயிருக்காங்க.

ஆயில்யன் said...

//யாருன்னு தெரியலை.. சிக்கினார்..சின்னபின்னமாக்க படுவார் என்று அன்புடன் தெரிவித்துகொள்கிறேன்.(குரூர சிரிப்பு முகத்தில்)///

ச்சே ச்சே அப்படி ஒரு சிரிப்பு வராது பாஸ் லைட்டா ஸ்மைல் தானே :)

ரங்கன் said...

//7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

”குஷி”க்கு பிறகு ..இடுப்பை தான் பார்க்கிறேன்.//

ஹெஹெ! சூப்பர்!//

ஹெஹெ.. களத்துல இறங்கிட்டீங்க போல..

கார்க்கி said...

//அவர் படம் ஹிட்டாவது, என் படம் சொல்லிவெச்ச மாதிரி ஃப்ளாப்பாவது..!!
//
avar yaarunga???????

ithellaam sariyilla.. aperam ungalayum hitlistla serthuduvoom.. :)))))

ரங்கன் said...

//கும்க்கி said...

இதுல டிஸ்க்கி வேறவா...?
இருக்குடி உனக்கு...பின்னாடி லாரில கத்தி கம்போட வந்துட்டேயிருக்காங்க.//

எனக்குதான் மான்கராத்தே தெரியுமே!! ..

ரங்கன் said...

//கார்க்கி said...

//அவர் படம் ஹிட்டாவது, என் படம் சொல்லிவெச்ச மாதிரி ஃப்ளாப்பாவது..!!
//
avar yaarunga???????

ithellaam sariyilla.. aperam ungalayum hitlistla serthuduvoom.. :)))))//


அவரை தெரியாதா?

அவரை தெரியாதா?

அவர்தாங்க நம்ம .. தல..!! ;)

ரங்கன் said...

//ஆயில்யன் said...

//யாருன்னு தெரியலை.. சிக்கினார்..சின்னபின்னமாக்க படுவார் என்று அன்புடன் தெரிவித்துகொள்கிறேன்.(குரூர சிரிப்பு முகத்தில்)///

ச்சே ச்சே அப்படி ஒரு சிரிப்பு வராது பாஸ் லைட்டா ஸ்மைல் தானே :)//

போட்டுதள்ளுறதுன்னு முடிவான பின்னே. சிரிச்சா என்ன ஸ்மைல் பண்ணா என்ன..

சென்ஷி said...

//பிடிச்ச விஷயம்: வெற்றி படங்களுக்கு என்னை பாராட்டுவது..

பிடிக்காத விஷயம் : தோற்ற படங்களுக்கு மக்களை பாராட்டுவது.//


செம்ம கலக்கல் :))

கார்க்கிக்காகவா இந்த போஸ்ட்?! :)

ரங்கன் said...

வாங்க சென்ஷி..

சத்தியமா..கார்க்கிக்காக இல்லைனு பொய் சொல்லும் அளவுக்கு நான் ஒண்ணும் கோழையில்லை என்பதை தைரியமாய் தெரிவிக்கிறேன்.

ரங்கன் said...

கார்க்கி எங்கிருந்தாலும்.. உடனே வரவும்..!!

(சொ.செ.சூ வெச்சிக்கிறமோ!!)

Anonymous said...

உங்க போதைக்கு விஜய் தான் ஊருகாயா? மா நக்கலை மிஞ்சிடுவீங்க போல.....

செம லொல்லு பண்ணியிருக்கீங்க இதன் காபியை எல்லா விஜய் ரசிகர் மன்றங்களுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்..

ரங்கன் said...

@தமிழரசி :
//செம லொல்லு பண்ணியிருக்கீங்க இதன் காபியை எல்லா விஜய் ரசிகர் மன்றங்களுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்..//

என்னாது ?!

ஜோசப் பால்ராஜ் said...

2வது டிஸ்கி ஒன்னு போட்டு இந்தப் பதிவ கார்க்கிக்கு சமர்பணம் செஞ்சுருக்கலாம்ல மாப்பி.
டிஸ்கி தான் ரொம்ப கலக்கல்.

சுபா said...

:) Good sense of humor Ranga!

ரங்கன் said...

@ஜோசப் பால்ராஜ்,

2வது டிஸ்கி ஒன்னு போட்டு இந்தப் பதிவ கார்க்கிக்கு சமர்பணம் செஞ்சுருக்கலாம்ல மாப்பி. //


ஆத்தா.. இந்த கார்க்கியண்ணன் என்னை எதுவும் சொல்லலைன்னா உனக்கு அவர் செலவிலேயே பன்னீர் வாட்ட்ர்ல அபிஷேகம் பண்றேன்.

நடுக்கத்துடன்
ரங்கன்.

ரங்கன் said...

சுபா said...

:) Good sense of humor Ranga!
//

நன்றி மேடம்.

♫சோம்பேறி♫ said...

:-) kalakkal :-)

sakthi said...

கை காலை வேகமா..ஆட்ட தெரியும்..
அதாங்க டான்ஸ்னு எதோ சொல்லுவாங்களே அதுதான். அதுமட்டும்தான்.


ம்ம்ம்

நல்ல நகைச்சுவை பதிவு

கலக்கல் ரங்கா

பிரியமுடன்.........வசந்த் said...

http://priyamudanvasanth.blogspot.com/

இங்கே தங்களுக்கு விருந்து கிடைக்கும்

வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்

இவண்

அகில உலக விஜய் வலைப்பதிவு சங்க தலைவர்

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.