Sunday, November 1, 2009

ஒரு சோம்பல் முறிப்பும்..!! சில ஜென் கதைகளும்!!

நான் புதுமையானவன்

புதுசா தலைப்பு(ஹெட்டர்) மாத்தியாச்சு..!!
கீழ பஞ்ச் டயலாக் கூட மாத்தியாச்சே!!
ம்ம்.. அப்புறம்..என்னை தெரியுதா.. ரொம்ப நாளா சரியா பதிவு போடும் மனநிலையில் இல்லாமல்..அல்லாடி தள்ளாடி..மீண்டும் களத்துல ஜம்முனு குதிச்சாச்சு..

சரி..இன்னிக்கு என்ன பதிவலாம்னு யோசிச்ச போது..!!!!!!!
இப்படி பல Exclamatoryயை மனசுக்குள்ள கொண்டுவரும் ஜென் கதைகள் பல்பாய் எறிஞ்சுது.

நீ செய்ய வேண்டாம் நீ செய்தால் போதும்,
நீ வாழ நான் சாகவேண்டி இருக்கும்..

இப்படி பல குழப்பமான பஞ்ச் டயலாக் இருக்கும் பல ஜென் கதைகளை படிச்சு இருக்கேன்.. என்றாலும்..அதில் இருக்கும் அதீத சொல்லாடலும், தத்துவங்களும் என்னை ரொம்ப கவர்ந்தன.

அதில் குறிப்பிட்ட சில ஜென் கதைகளை இங்க தரேன்..படிச்சுட்டு சொ(கொ)ல்லுங்க..!!

எங்கிருந்து வந்தது..?
ஒருவன் ஒரு ஜென் துறவியைக் காண வந்தான். அவரிடம், "இவ்வுலகில் இப்போது புத்தர் இருக்கிறாரா? இல்லையே? எதுவுமே இல்லை என்பதில் தான் இருக்கிறது. அனைத்துமே வெற்றிடம் தான். யாரும் எதுவும் கொடுப்பதில்லை. எதுவும் பெறுவதில்லை." என்றான்.

உடனே அந்த துறவி அவனை தன்னிடமிருந்த ஒரு குச்சியால் ஒரு அடி அடித்தார்.

அவனுக்குக் கோபம் வந்து விட்டது.

"எதுவுமே இல்லை என்றால் உனது கோபம் எங்கிருந்து வந்தது அப்பனே!", என்று கேட்டார் துறவி.


உண்மையான மகிழ்ச்சி!!

ஒரு ஜென் துறவியைச் சந்திக்க ஒரு பணக்காரர் வந்திருந்தார். துறவியிடம் தாம் தம் வழித்தோன்றல்களுடன் மகிழ்ச்சியாக வாழ ஒரு வழி சொல்லுமாறு வேண்டிக் கொண்டார். துறவியும் ஒரு ஓலையை எடுத்து "தந்தை இறப்பார். மகன் இறப்பான். பேரன் இறப்பான்." என்று எழுதிக் கொடுத்தார். பணக்காரருக்கு கடும் கோபம் வந்தது. "என்ன இது? வாழ்வைப் பற்றிக் கேட்டால் சாவைப் பற்றி சொல்கிறீர்களே?", என்று கேட்டார். துறவியோ சிரித்துக் கொண்டே, "வாழ்விற்குத் தான் வழி சொல்லி இருக்கிறேன். நீங்கள் இறக்கும் முன் உங்கள் மகனோ, உங்கள் பேரனோ இழந்தால் அது மகிழ்ச்சி தருமா? எனவே உண்மையான மகிழ்ச்சி என்பது இயற்கையின் வழி வாழ்ந்து இயற்கையாகவே இறப்பது", என்றார்.


விடுதியா? அரண்மனையா?

ஒரு ஜென் குரு ஒரு அரசனின் அரண்மனை நோக்கி வந்தார். நேராக அரசவைக்கே சென்றார். அரசனின் சிம்மாசனத்துக்கு அருகில் வந்ததும், அரசனே, " ஐயா! உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டான்.

அவரோ, "இந்த விடுதியில் ஓரிரவு தங்க இடம் வேண்டும்" என்றார்.

அரசனோ, "இது விடுதி அல்ல. அரண்மனை." என்றான்.

ஜென் குரு, "உனக்கு முன் இது யாருடையது?" என்றார். "என் தந்தையாருடையது".

"அவருக்கு முன்?" என்ற குருவிற்கு "என் பாட்டனாருடையது" என்றான் அரசன்.

இப்படி ஒவ்வொருவரும் சிறிது காலமே தங்கிச் சென்ற இது விடுதி இல்லாமல் வேறென்ன? என்றார் குரு.

இன்னும் இருக்கு..இருந்தாலும் இத்தோட நிறுத்திகிக்க சொல்லி பட்சி சொல்லுது..

நீங்க என்ன சொல்றீங்க...?

அதோட.. எனக்கு தெரிஞ்சு.. ஐநூறூஊஊஊஊஊஊ(500!!).. பதிவுகள் எழுதின ஒரே பதிவர்.. நம்ம புதுகை தென்றலுக்கு தனிப்பட்ட முறையில் ஒரு வாழ்த்துகளையும் சொல்லிக்கிறேன்..!!

14 comments:

முரளிகுமார் பத்மநாபன் said...

ரங்ஸ் படிச்சிட்டேன், அப்படியே இதை தொடர்ந்து எழுதுங்கள், ஹாலிவுட்பாலாவை பாருங்க பிக்சார்ன்னு ஒரு மேட்டரை வைத்து 18 பதிவெழுதிவிட்டார். அத்தனையும் அருமை. இதே ஜென் கதைகளோடு, தனிப்பட்ட அனுபவங்களையும் இணைத்து சொன்னால் இன்னும் சுவையாக இருக்குமென்பது என் கருத்து. :-)

ரங்கன் said...

@முரளிகுமார்,

நட்ப்ஸ்,
நல்ல ஐடியா குடுத்தீங்க... !! :)

பார்ப்போம்.. என்னால் முடிஞ்ச அளவு எழுத பாக்குறேன்..!!

cheena (சீனா) said...

anbin Rangkaa

Good Post - I enjoyed

No tamil font

Again i will post my comment in tamil

CONGRATS

ரங்கன் said...

@சீனா சார்,

நோ டமில் ஃபாண்ட்..?!

இட்ஸ் ஓக்கே..!! லெட்ஸ் கில் இங்கிலீஷ்!

danks paar camming..!!

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு.

நாமக்கல் சிபி said...

:)

ரங்கன் said...

@ராமலக்ஷ்மி,

நன்றி ராமலக்ஷ்மி!!

உங்கள் சிரித்த புத்தர் கவிதை அருமை..!! :)

கோசலன் said...

மொக்கையா இருக்குமோ என்று யோசிச்சன், ஆனா சீரியஸ் தான் :)

மங்களூர் சிவா said...

/

இன்னும் இருக்கு..இருந்தாலும் இத்தோட நிறுத்திகிக்க சொல்லி பட்சி சொல்லுது..

நீங்க என்ன சொல்றீங்க...?
/

பட்சி சொன்னதுக்கு சொல்லுறோம் ரிப்ப்ப்ப்பீட்டு
:)))))))))))

எப்ப்பூடி
:)))))))))))))

மங்களூர் சிவா said...

/

இன்னும் இருக்கு..இருந்தாலும் இத்தோட நிறுத்திகிக்க சொல்லி பட்சி சொல்லுது..

நீங்க என்ன சொல்றீங்க...?
/

பட்சி சொன்னதுக்கு சொல்லுறோம் ரிப்ப்ப்ப்பீட்டு
:)))))))))))

எப்ப்பூடி
:)))))))))))))

ரங்கன் said...

@கோசலன்,

கவலைப்படாதீங்க..!! நீங்க நினைக்கும் அளவுக்கு மொக்கையா இருக்காது என் பதிவுகள்..

சீரியஸ் தான்..என் பதிவுகள் படிச்ச பல பேருக்கு!!

ஹாஹாஹ!!..

வருகைக்கு நன்றி..!!

ரங்கன் said...

@மங்களூர் சிவா,

அண்ணாத்தே ..உன்னுமா தெளியலே..!!

அது ஏன் ஒரே கமெண்டே டபுள் தபா போட்றே..?

சரி உனக்காக ஒரு பஞ்ச் டயலாக் வெச்சிருக்கேன் கேக்குறியா?

எத்தனை தபா கமெண்ட் போட்டோம்ங்குறது முக்கியமில்ல..என்ன கமெண்ட் போட்டோமுங்கற்து தான் முக்கியம்.>!!

எப்பூஊஊடி..!!

புதுகைத் தென்றல் said...

மாற்றம் நல்லா இருக்கு. வலைப்பூவின் மாற்றம் ரசித்தேன். கதைகள் அருமை. தொடருங்கள்.

வாழ்த்திற்கு நன்றி. நம்ம துளசி டீச்சர் 900 பதிவு தாண்டிட்டாங்க. நான் இப்பத்தான் 500.

vasan said...

PUDUMAIYANAVANU sollittu PAZHAMAIYANATHE (OLDEST) solleringa. Ithu sarya.
Vasan

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.