Thursday, November 26, 2009

காதலில் விழுந்தவர்களுக்கு & விழப்போகிறவர்களுக்கு!!

ஆண்கள் என்ன செய்தாலும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்க முடிவதில்லை. எப்போது பார்த்தாலும் சண்டைகள் மட்டுமே. (குறிப்பாக காதலர்களுக்கிடையில்) இந்தப் பிரச்சினை தீர சில ஐடியாக்கள இங்கே உங்களுக்கு....


http://www.xplorexmobile.com/sites/xmobile/uploads/1mobile_phone_mass_media1.jpg

1.காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மோர்னிங்'ன்னு ஒரு சின்ன SMS அனுப்பணும். உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும் (ஒரு ரூபா செலவுதான். என்னங்க பண்றது? பண்ணித்தான் ஆகணும்.) இதே விடயத்தை ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடியும் நீங்க செஞ்சாகணும்..

http://www.koolrpix.com/images/TF05380/240/wb049530.gif

2. அவங்களைப் பார்க்க போறதுக்கு முன்னாடி உங்க செல் ஃபோனோட ஸ்கிரீன் சேவர்'ல அவங்களோட புகைப்படத்தை கண்டிப்பா வைச்சுக்கணும். (எப்பவும் உன் முகத்தையே பார்த்துகிட்டே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி வெச்சிருக்கேன்னு சொல்லுங்க. இதுலையே அவங்க க்ளீன் போல்ட்)
http://rlv.zcache.com/m_letter_keychain-p146282724671321289qjfk_400.jpg

3. அவங்க பெயரோட முதல் எழுத்தை பைக் கீ-செயின்'ல தொங்க விட்டுக்குங்க. எப்பவும் நீ என் கூடவே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி செய்யுறேன்னு ஒரு பிட்டை விடுங்க. அப்புறம் பாருங்க...

76186014, Adam Burn /fStop


4. சினிமாவுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா, படத்தை பார்க்கறீங்களோ இல்லையோ கண்டிப்பா ஐந்து நிமிடத்துக்கு ஒரு தடவை அவங்களை திரும்பி திரும்பி பார்க்கணும். எதுக்கு என்னையே பார்க்குறீங்கன்னு கேட்பாங்க. உன்னைப் பார்க்கும் போது இருக்கிற சுவாரஸ்யம் படம் பார்க்கும் போது இல்லைன்னு நீங்க சொல்லணும். (வேற வழி இல்லைங்க. இந்த மாதிரி எல்லாம் நாம டயலொக் விடணும்'ன்னு அவங்க எதிர்பார்ப்பாங்க)


http://www.mobilewhack.com/ringtones.gif


5. அவங்க பெயர்ல நிச்சயம் ஏதாவது தமிழ் பாட்டு வந்திருக்கும். அந்த பாட்டை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு ரிங்டோனா வைச்சுக்குங்க. அவங்க உங்ககிட்ட சண்டை போடும்போது, உங்க ஃபிரண்டைவிட்டு உங்க நம்பருக்கு கோல் பண்ண சொல்லுங்க. அந்தப் பாட்டு வந்த உடனே அவங்களை பாருங்க. சண்டை எல்லாம் எங்கே போகுதுன்னே தெரியாது.


http://images-3.redbubble.net/img/art/size:large/view:main/2476533-2-valentine-love-big-shiny-heart-gold-scroll-card.jpg

6. கவிதைங்கிற பெயர்ல எதையாவது நீங்க கிரீட்டிங் கார்ட்ல கிறுக்கிக் கொடுத்தே ஆகணும். அந்த கவிதைகள்'ல வானம், கடல், குயில், தேவதை, மயில், போன்ற வார்த்தைகள் கண்டிப்பா இருந்தே ஆகணும்.

7. "நீ ரொம்ப அழகா இருக்கே"ங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும். (இதுக்கு நீங்க கடவுள்கிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்குங்க)

stk310233rkn, Stockbyte /Stockbyte
8. ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா ஃபர்ஸ்ட் நீங்க ஓடர் பண்ணக்கூடாது. மெனு கார்டை அவங்க கையில கொடுத்து, அவங்களைத்தான் ஓடர் பண்ண சொல்லணும். புரியுதா? (பெண்களோட உணர்வுகளுக்கு நீங்க மதிப்பு கொடுக்குறவர்'ன்னு அவங்களுக்கு தெரியணும் இல்லை. அதுக்குத்தான்)

9. அவங்க எப்படித்தான் ட்ரஸ் பண்ணாலும், "இந்த ட்ரஸ்'ல நீ தேவதை மாதிரி இருக்கேன்னு மனசாட்சியை கழட்டி வைச்சிட்டு பொய் சொல்லணும்". (ராத்திரியில நீங்க தூங்கும் போது தேவதைங்க உங்க கண்ணை குத்தும். சமாளியுங்க)

10. ரொம்ப ரொம்ப முக்கியமான விடயம். அவங்க தோழிங்ககிட்ட பேசும்போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவங்க தோழிங்களை நீங்க கண்டுக்காத மாதிரியே இருக்கணும். ஏன்னா பல பிரச்சினைகளோட தொடக்கம் இங்கே இருந்துதான் ஆரம்பிக்குது.

இந்த விடயங்களை எல்லாம் கடைபிடிச்சு பாருங்க. உங்க காதலி உங்களை தலையில தூக்கி வைச்சு கொண்டாடுவாங்க.http://www.blogcatalog.com/blog/httpkt-saranganblogspotcom/e7204b607ccb27c83f838115828b7660 - இங்கிறுந்து எடுத்து இடப்பட்டது.

25 comments:

தேவன் மாயம் said...

1.காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மோர்னிங்'ன்னு ஒரு சின்ன SMS அனுப்பணும். உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும் ///

பொய்மாதிரித் தெரியக்கூடாது அது முக்கியம்!

தேவன் மாயம் said...

2. அவங்களைப் பார்க்க போறதுக்கு முன்னாடி உங்க செல் ஃபோனோட ஸ்கிரீன் சேவர்'ல அவங்களோட புகைப்படத்தை கண்டிப்பா வைச்சுக்கணும்///

ஓகே!! ஓகே!!

தேவன் மாயம் said...

6. கவிதைங்கிற பெயர்ல எதையாவது நீங்க கிரீட்டிங் கார்ட்ல கிறுக்கிக் கொடுத்தே ஆகணும். அந்த கவிதைகள்'ல வானம், கடல், குயில், தேவதை, மயில், போன்ற வார்த்தைகள் கண்டிப்பா இருந்தே ஆகணும்.//

ஆகா!!

Anonymous said...

இத்தனை கஸ்டப்பட்டு எதுக்கு அந்த பொண்ண காதலிக்கணும்....????

Anonymous said...

பதில் ???

ரங்கன் said...

@thooya,

அம்மாடி.. அதெல்லாம் அப்படித்தான்..கிளவி மாதிரி கேள்வி கேக்காம லவ்வ டெவலப் பண்ற வழிய பாரு...!!

சிட்டுக்குருவி said...

ஹா ஹா எப்படியோ! பதிவு நல்லா இருக்கு

சொந்த காசில சூனியம் வச்சுக்க இப்படில்லாம் ஐடியாவா!!!!!!!!!!!!

முரளிகுமார் பத்மநாபன் said...

இதெல்லாம் ஜனவரிக்கு அப்புறம்தான் ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டேன். மீண்டும் இதுபோன்ற பதிவ்ட்டு என் சாபத்திற்கு ஆளாகாதே ரங்கா..........

cheena (சீனா) said...

அன்பின் ரங்கா

அதென டாக்டர் துருவி துருவிக் கேள்வி கேக்கறாரு - காதலிக்கப் போறாரா ( தங்க்ஸைத்தான்யா )

சரி சரி அந்த ப்ஃரெஞ்ச் கிஸ் கொடுக்கும் "எம்" மிலே ஆரம்பிக்கற பெயர் உள்ள பிகரு யாருடா - மாட்டிக்காதே - அவ்ளோ தான் சொல்லுவேன்

வழக்கம் போல் நல்வாழ்த்துகள்

குட்டி said...

அவங்களைப் பார்க்க போறதுக்கு முன்னாடி உங்க செல் ஃபோனோட ஸ்கிரீன் சேவர்'ல அவங்களோட புகைப்படத்தை கண்டிப்பா வைச்சுக்கணும். (எப்பவும் உன் முகத்தையே பார்த்துகிட்டே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி வெச்சிருக்கேன்னு சொல்லுங்க. இதுலையே அவங்க க்ளீன் போல்ட்)

itha naan daily panren

☀நான் ஆதவன்☀ said...

இவ்ளோ சொன்னீங்களே..... அந்த காதலி கிடைக்கிறதுக்கும் ஏதாவது வழி சொல்லலாம்ல :)

Anonymous said...

adhavan kalakitinga

kiramatthu kallan said...

nalla ponnu irunthathu ippa athu kannaalam katikkichu romba nalla ponnu silppa cetti......

மங்களூர் சிவா said...

try panni paathuttu solren.
:)

இராகவன் நைஜிரியா said...

மாட்டிகிட்டீங்களா...

அனுபவம் நல்லாவே எழுதியிருக்கீங்க.. லேபிளில் : அனுபவம் என்பதையும் சேர்த்து இருக்கலாம்..

இராகவன் நைஜிரியா said...

// ஆண்கள் என்ன செய்தாலும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்க முடிவதில்லை. //

முடியாதுங்க முடியாது... எவ்வளவு நீங்க எழுதினாலும் அது மட்டும் நடக்கவே நடக்காதுங்க...

இராகவன் நைஜிரியா said...

//
1.காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மோர்னிங்'ன்னு ஒரு சின்ன SMS அனுப்பணும். உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும் (ஒரு ரூபா செலவுதான். என்னங்க பண்றது? பண்ணித்தான் ஆகணும்.) இதே விடயத்தை ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடியும் நீங்க செஞ்சாகணும்.. //

ஆக ஒரு நாளைக்கு 2 ரூபாய் செலவு செஞ்சா - அந்த நாள் இனிய நாள் அப்படின்னு சொல்ல வர்றீங்க

ரங்கன் said...

யப்பா..சாமிகளா!!
கமெண்ட் போட்ட கண்மணிகளா.. நேரம் இல்லாததால் தான் ரிப்ளை பண்ணலை..தோ இப்போ
ஆரம்பிக்கிறேன்..!!

ரங்கன் said...

@தேவன்மாயம்,

எப்பவுமே நாம வுடுற டுமீலு பொய் மாதிரி தெரியாது..

அது நம்ம டேலண்டு..!!

வருகைக்கு நன்றி!

ரங்கன் said...

@தூயா,

தூயா மேடம், இப்படி எல்லாம் கொஸ்டீன் பண்ணா அப்புறம் அடுத்து பலாப்பள குலாபின்னு புது ஐட்டம் ராங்கவிண்ட கிச்சன்ல அறிமுகம் ஆகும் பரவாயில்லையா?!!

ரங்கன் said...

@சிட்டுகுருவி,

ஏங்க நீங்க வேற.. இதுக்கு மேலயும் பயங்கரமா போனவங்க எல்லாம் இருக்காங்க..!!

இதெல்லாம் ஜுஜுபி !!

வருகைக்கு நன்றி..!!

ரங்கன் said...

@முரளிகுமார் பத்பநாபன்,

கிறுக்கல்கள்-14 பாகம் எழுதிபுட்டு பேச்ச பாரு..முனிவர் மாதிரி..!!

எல்லாம் இப்போ ஆரம்பிச்சாதானே சரியா இருக்கும் முரளி..அதான்..!!

ஹிஹிஹி..!!

ரங்கன் said...

@சீனா,
அந்த கீசெயின் என்னோடது இல்லைப்பா..!!

அதானே..தேவன் சார் ஏன் என்ன ஆச்சு?

ரங்கன் said...

@குட்டி,

ம்ம்..கண்டினியூ பண்ணுங்க..!!

வாழ்த்துக்கள்!..

வருகைக்கு நன்றி!

Anonymous said...

ம்ம்ம்ம்ம் அப்பன் காசை கரியாக்கிற அத்தனை வழியும் சொல்லிட்ட.. அன்பை மட்டும் அழகா சொல் உண்மை காதல்னா ஊர்ஜிதமாகும்..

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.