Tuesday, February 2, 2010
திமிங்கலத்தை தின்பது எப்படி?-1
என் நண்பர் ஒருவர்..வெகு நாட்களுக்கு முன்..
நான் ஒரு நாவல் எழுதப் போகிறேன்..அது மிகவும் புதுமையானதாகவும்,
பலரால் பாராட்ட கூடியதாகவும் இருக்கும் என்று அடிக்கடி (கடந்த 2 வருடங்களாக) என்னிடம்
சொல்லி வந்தார்..வருகிறார் :).
ஆனால் கொடுமை என்னவென்றால் அவர் இன்னும் அந்த நாவலை துவங்க பிள்ளையார் சுழி கூட
போடவில்லை..!!
காரணம்..அது பெரிய வேலை..அதற்கு நல்ல மனநிலையும், அதிக ஆர்வமும், அதிக நேரமும் பிடிக்கும்.
அவரால் சின்ன சின்ன விஷயங்களில் காட்ட முடிகிற ஆர்வத்தை அதில் காட்ட முடிவதில்லை..
இப்போது அவரை குறை சொல்ல வரவில்லை..அவரை போலத்தான் நாமும்..
சில வேலைகள் நம்மை மலைக்க வைக்கிறது..
இது நம்மால் ஆகுமா? என்று நம் தன்னம்பிக்கையை சந்தேகப்பட வைக்கிறது..
அப்படியே தள்ளிவைத்து விட்டு வேறு சிறு வேலைகளில் மூழ்கி விடுகிறோம்..
பிறகு ஒரு நாள் அதே வேலை..பல சிக்கல்களையும் கூட்டிகொண்டு நம்மிடம் வந்து
நிற்கும் போது மீண்டும் மலைத்துபோகிறோம்..
ஏன்.. என்ன காரணம்..ஏன் இந்த மலைப்பு..??
திருமண பந்திகளில் நீங்கள் பார்த்திருக்கலாம்..சிலர்.. பிடித்த பதார்த்தங்களை
ஆவலுடன் பார்த்தபடி மற்ற பதார்த்தங்களை சாப்பிட்டுவிடுவார்கள்.
பின்பு கடைசியாக தான் அவர்கள் அந்த பதார்த்தங்களை ருசித்து ருசித்து
சாப்பிடுவார்கள்..இது ஒரு வகையான மனப்பான்மை..
சிலர் சுலபான வேலைகளை எல்லாம் உடனே முடித்துவிடுவார்கள்.
ஆனால் பெரிய வேலைகளை, அதாவது அதிக நேரமும், கூடுதல் உழைப்பும்
தேவைப்படுகிற வேலைகளை ஆரம்பிக்கவே மாட்டார்கள். தள்ளி போட்டுகொண்டே
வருவார்கள்..
இந்த வகையான மனநிலைக்கு பெயர் Procrastination. இது ஆபத்தானது.
சரி..இதற்கும் திமிங்கலத்தை தின்பதற்கும் என்ன சம்பந்தம்..ஒரு வேளை அதை தின்றால்
Procrastination சரியாகிவிடுமா?
ம்ம்..ஆகலாம்..!! 98 % வாய்ப்பிருக்கிறது..!!
என்னது?!!!!....சரி நான் திமிங்கலத்துக்கு எங்கே போவேன்?
எங்கேயும் போக வேண்டாம்..நீங்கள் தள்ளி போடும் அந்த பெரிய வேலை தான் அந்த திமிங்கலம்.
அதை எளிமையாக முழுமையாக தின்ன நான் உங்களுக்கு சொல்லித்தர போகிறேன்.
தொடர்ச்சி வரும் வெள்ளியன்று..!!
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
சொல்லுங்கண்ணே.... வெயிட்டீஸ்
@ஜீவ்ஸ்,
தோ வெள்ளிக்கிழமை சொல்லிடுறேன்..!!
ஓக்கே ஆபிஸர் :))
//தள்ளி போடும் அந்த பெரிய வேலை தான் அந்த திமிங்கலம்.
//
வேலையே இல்லாத வெட்டி ஆபிசருங்களுக்கு அட்லீஸ்ட் நெத்திலி பிரையாவாது எப்படி செய்வதுன்னு சொல்லிதாங்க ஆபிசர்!
தோ பார்டா, இன்னொரு சோம.வள்ளியப்பன். ம்ம்ம்... கலக்குங்க ரங்கா....
செல்ஃப் டெவலப்மெண்ட் பத்தி யாரும் எழுதுறதா தெரியலை, தொடர்ந்து நல்லா எழுதுங்க,,,
//சரி நான் திமிங்கலத்துக்கு எங்கே போவேன்?//
இங்க வாங்க இங்க வாங்க.. இங்க திமிங்கலம் சாப்டுவாங்க. நான் பாத்திருக்கேன். சாப்டதில்ல.
நல்ல முயற்சி ரங்கன்.. வெள்ளிக்கு வெயிட்டிங்..
நல்லா இருக்கு
நல்லா இருக்கு
ஆஹா என் பர்சனாலிட்டி டெவலப்மெண்ட் பதிவுகளுக்கு சுட்டி எடுத்துக்க உதவும் பாஸ், அடுத்த போஸ்டுக்கு மீ த வெயிட்டிங்
:-) mee tooooo waitinguuuuu.......
Good post Ranga....
மாப்பி, சூப்பருடே, நல்லாருக்கு. தொடர்ந்து இதே மாதிரி எழுது.
@ ஆதவன்,
வாங்க ஆபிஸர்..இன்னுமா பிஸி?
@குசும்பர்,
அண்ணே..நெத்திலி ப்ரைக்கு முதலில் நெத்திலி கிடைக்கணும்..
நீங்க கிடைச்சதும் சொல்லுங்க..நான் சொல்லித்தரேன்..!!
@முரளிகுமார்,
கண்டிப்பா..யாரும் எழுதலைன்னு சொல்லிட முடியாது..புதுகை தென்றல் எழுதுறாங்க..இன்னும் சிலரும் எழுதிட்டு தான் இருக்காங்க..
ஆனா அவ்வளவாக பப்ளிசிட்டி ஆகறதில்லை அவ்ளோதான்..!!
எனிஹவ்..வருகைக்கு நன்றி முரளி!!
@புதுகை தென்றல்,
எடுத்துக்கோங்க..இப்படி சொல்லிட்டு லிங்க் பண்றவங்களை நான் மதிக்கிறேன்..வரவேற்கிறேன்..
ஆனா சொல்லாம சுடும் பயபுள்ளைங்கள என்ன பண்ணலாம்னு திங்கிங்..!!
@ஜோசப் பால்ராஜ்,
பாராட்டுக்கு நன்றி மேனேஜர்..மேலும் படிங்க..!!
Post a Comment
வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.