கடந்த பதிவில் Procrastination பற்றி பார்த்தோம்..
இப்போது நீங்கள் திமிங்கலத்தை தின்ன தயாரியிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
நீங்கள் மலைத்து போகும் அந்த மிகப்பெரிய வேலையை திமிங்கலத்தை தின்ன வரிசையான செய்முறை விளக்கம்
இதோ..
1.நம் வாய் எவ்வளவு கிராம் கொள்ளளவு கொண்டது என்பதை கணக்கெடுத்து கொள்ளுங்கள்.(VOLUME)
(முப்பது கிராம் அளவு என்கிறது அறிவியல்)
2. பின்பு திமிங்கலத்தை துண்டுதுண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும்.(PARTITIONING)
3. வெட்டிய துண்டுகளை மீண்டும் 30 கிராம் அளவுகொண்ட துண்டுகளாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.(CONTENT BASED PARTITIONS)
4. வெட்டிய துண்டுகளை குளிரூட்டப்பட்ட அறைகளில் வைத்துவிடுங்கள்.(PRESERVATION)
5. ஒவ்வொரு துண்டுகளாக போகவர எடுத்து சாப்பிட்டுகொண்டே வரவேண்டும்.(CONTINOUS PROCESS)
6. விடாது , தொடர்ந்து இதையே செய்து வரவேண்டும்.(MAINTANANCE OF CONTINUUM)
ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு பின்..திமிங்கலத்தை முழுவதுமாய் சாப்பிட்டு முடித்திருப்போம்.
சரி இதன் சூட்சமம் என்ன..இதை நம் வாழ்க்கை முறையில் , நேர மேலாண்மையில் பயில்வது எப்படி?
திமிங்கலத்தை போய் யார் சாப்பிடுவார்கள் அதுவும் பச்சையாக? என்றெல்லாம் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்.
பெரிய விஷயத்தை எப்படி சிறு பகுதிகளாக்கி முடிப்பதற்கான உதாரணம்தான் இது என்று சரியாகப் புரிந்துகொண்டிருப்பீர்கள்.
நீங்கள் புதிதாக ஒரு மொழியை கற்க விரும்புகிறீர்கள்..என்றால் எடுத்த எடுப்பில் அதன் இலக்கிய நூல்களை புரட்டினால் என்ன ஆகும்?
எதுவும் புரியாது. என்னடா இது மொழி பிரச்சனை என்று மலைத்து போவீர்கள்.
அதே அந்த மொழி சம்பந்தமான ஒரு அகராதி(டிக்ஷனரி)யை வாங்கி அதன் வார்த்தைகளையும் அர்த்தங்களையும் புரிந்துகொண்டு..
தினமும் பத்து அல்லது பதினைந்து வார்த்தைகளை விடாமல் படித்து வந்தால்..ஒரு நாள் நீங்களும் அந்த மொழியில் புலமை பெற்றவர் ஆவீர்கள்.!!
முடிக்கலாம், முடிக்க முயற்சி செய்வோம் என்கிற எண்ணங்களுக்கும் இந்த விஷயத்திற்கும் உள்ள வித்தியாசத்தை பாருங்கள்.
முடிக்கலாம் என்று சொல்லும்போதும், முடிக்க முயற்சி செய்யலாம் என்று சொல்கிற போதும், ஒரு மலைப்பும் களைப்பும் வருகிறது..
ஆனால் இந்த முறையில் அப்படி பட்ட களைப்பே வர வாய்ப்பு இல்லை..காரணம்.
1. எந்தப் பெரிய வேலையையும், சிறிய பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளுதல்.
2. பிரித்துக்கொண்ட சிறிய பகுதியை, தினம் தினம் விடாது முடித்துவிடுதல்.
3. மொத்த விஷயமும் முடியும்வரை கவனம், ஆர்வம் பிசகாமல் தொடர்ந்து செய்தல்.
இதன் பெரிய பலன், தங்கு தடையின்றி வேலை நடைபெறும். மலைப்பு விலகும். தினசரி வாழ்க்கையின் சுவாரசியம் கூடும்..வெற்றி நம் முன்னே விரியும்.
3 comments:
இன்னைக்கு ரெண்டு லைன் படிச்சிட்டேன், நாளைக்கு ரெண்டு நாளாநாளைக்கு ரெண்டு இப்படி படிச்சி உங்க திமிங்கில பதிவை சரியா பனிரெண்டு நாள்ல முடிச்சிடறேன், எப்பூடி எங்க டைம் மேனேஜ்மெண்ட்?
முதல்ல உன்னையவெ வெட்டறேன் வா....
//முதல்ல உன்னையவெ வெட்டறேன் வா....//
:-)
Post a Comment
வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.