Wednesday, April 7, 2010

வார்த்தைகளினூடே கவனித்தல்!!

கடந்த சில வருடங்களுக்கு முன்,


ஒரு பள்ளி பாராட்டு விழாவில் கலந்துகொள்ள என் அப்பாவும் நானும் சென்றிருந்தோம்.
அங்கே மேடையில் பள்ளி சார்பான பெரியோர்கள், ஆசிரியர்கள் அமர்ந்திருந்தார்கள்.
அப்பாவின் அருகில் அமர்ந்தபடி அவர்கள் பேசுவதை கேட்டுகொண்டிருந்தேன்.
அப்போது அப்பா ஒரு சிலர் பேசும் போது “இவர் பொய் சொல்கிறார், இவர் உண்மையாக பேசுகிறார்” என்று
அவ்வப்போது என்னிடம் சொல்வார்.

அன்று இரவு அப்பாவிடம் ”அப்பா , எப்படி அவர்கள் பொய் சொல்கிறார், உண்மையை சொல்கிறார்னு
உங்களுக்கு தெரியும்?” என்று கேட்டேன். அவர் “அதில் விஷயம் இருக்குப்பா, நீ ஒருத்தர் பேசும்போது
எப்படி கேட்பாய்? வரிசையான வார்த்தைகள் உன் காதில் விழும்..அதை உன் மனசு படிக்கும் போது அது பேச்சை கேட்பதாகிறது,
அதுவே..அந்த வார்த்தைகளுக்கு இடையே..பேச்சில் ஏற்ற இறக்கங்களை கவனித்தும்..அவர் கண்களை கவனித்தும்,
உடல் அசைவுகளை வைத்தும் அவர் உண்மையாக பேசுகிறாரா? அல்லது பொய்யுரைக்கிறான்னு சொல்லிட முடியும்”
என்று ஒரு விளக்கம் கொடுத்தார்.


அப்போது என் அறிவுக்கு அது புரியவில்லை. அவரும் அதை பெரிதாக எடுத்துகொள்ளவில்லை. ஆனால் அவர் சொன்ன விஷயம்
அதன் கருத்து, அந்த சாரம் மனதில் அப்படியே இருந்தது. என்றாவது இந்த கருத்தை முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்று நினைத்து
அதை மனதிலேயே பத்திரமாய் வைத்திருந்தேன்.

சில வருடங்கள் கடந்தன..மீண்டும் பல்வேறு மனிதர்கள், மற்றும் நண்பர்களை சந்திக்க வேண்டி வந்தது.
அப்போது எனக்கு அப்பா சொன்னாரே அந்த ”வார்த்தைகளுக்கு இடையே கவனித்தல்” ஞாபகம் வந்தது.
அதை கொஞ்சம் கொஞ்சமாய் பயிற்சி எடுக்க ஆரம்பித்தேன்.

சில மாதங்களிலேயே நல்ல பலன் கிடைத்தது. நண்பர்கள் பேசும்போது அவர்கள் வார்த்தைகளிடையே கவனித்தேன்.
வெகு சிலரே உணமையான பற்றோடும், பாசத்தோடும், அக்கறையோடும் பேசுகிறார்கள் என்பதும், மற்ற 75% பேர்
காரியம் ஆகவே பேச்சுகொடுக்கிறார்கள் என்பதும் தெரிந்தது.

இதை அப்பாவிடம் சென்று சொன்னேன். அவர் புன்னகைத்தார். என் உறவினர் ஒருவரிடம் பேச சொன்னார்..
அவர் எப்படிப்பட்டவர் சொல் பார்ப்போம் என்றார். அந்த உறவினர் நல்ல மனிதர். எப்போதும் உற்சாகமாகவும், பரபரப்போடும் இருப்பவர்.
ஒப்புகொண்டேன். பேசினேன். அவரிடம் வந்தேன். ” அவர் பாவம் பா..எதோ மனவேதனையோடே எப்போதும் இருக்கிறார். அதை மறைக்கத்தான் இவ்வளவு
உற்சாகமாய் இருக்கிறார் ”
என்று சொன்னேன். புன்னகைத்தார். ம்ம்..சரியாக சொல்லிவிட்டாய்..என்று தட்டிகொடுத்தார்.

உனக்கு இது நிச்சயம் கைக்கொடுக்கும் என்றார்.

இந்த “வார்த்தைகளுக்கு இடையே கவனித்தல்” மூலம்நல்லவர்களின் அருகாமை அதிகரித்தது. இந்த பயிற்சி
பேசும்போது மட்டுமல்லாமல், புத்தகங்கள் படிக்கும் போதும், செய்திகள் கேட்கும் போதும்,
கவிதைகள் கட்டுரைகள் படிக்கும் போதும்,என எல்லா இடங்களிலும் பரவ ஆரம்பித்தது.

அதனால் தான் எப்போதும் என்னால் கிடைத்ததை எல்லாம் படிக்க முடிவதில்லை..தேடிப்பிடித்தே படிக்க ஆசைப்படுகிறேன்..!!

இப்படியாக தினசரி வாழ்வில் நல்லோரின் இணக்கத்தையும், நல்ல விஷயங்கள் மீதான இணக்கத்தையும்
அதிகரிக்க அப்பா சொல்லிதந்த “ வார்த்தைகளினூடே கவனித்தல்” எனக்கு பயன்பட்டு வருகிறது.

நீங்களும் முயற்சி செய்யுங்கள். என் வாழ்த்துக்கள்.

17 comments:

கனிமொழி said...

:-)

Sure Ranga...

தாரணி பிரியா said...

ஆஹா இப்படி எல்லாம் இருக்குதா. இனி கவனிச்சு பார்க்கிறேன் பகிர்தலுக்கு நன்றி ரங்கா

cheena (சீனா) said...

இதென்ன புதுக் கலை - வார்ததையின் ஊடே கவனித்தல் - புதுமையாக இருக்கிறது - பார்ப்போம்

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

நல்ல விஷயம்தான்.. இது உண்மையானதுதான்..! ஒருவரின் கண்களும், உடல் மொழியுமே அவர் பொய் சொல்கிறாரா? நடிக்கிறாரா? என்பதைக் காட்டிக்கொடுத்துவிடும்.. ஆனால் கண்டுபிடிப்பதற்குத்தான் உங்களை மாதிரி நிறைய பயிற்சிகள் தேவைப்படும்..!

கபீஷ் said...

புரியல. ட்ரை பண்றேன்

அகநாழிகை said...

சிந்திக்க வைக்கும் பதிவு.

Anonymous said...

உண்மை தான் ரங்கா அப்பா ஒரு அகராதி என்பதை மீண்டும் நீருபித்து இருக்கார்... நல்ல பதிவு..சொல்ல மறந்திட்டேன் இனிமேல் உன்னோடு நான் போன்ல மட்டும் தான் பேசுவேன் ஹிஹிஹி

ரங்கன் said...

@ கனிமொழி,

குட் கனிமொழி..!!

ரங்கன் said...

@தாரணி பிரியா,

ட்ரை பண்ணுங்க..வர்கவுட் ஆக வாழ்த்துக்கள்!!

ரங்கன் said...

@Cheena- சீனா,

மாமு, நீதான் புதுசு புதுசுன்னு தேடுவீங்களே..ட்ரை பண்ணி பாருங்க!!

வாழ்த்துக்கள்!

ரங்கன் said...

@கபீஷ்,

இன்னும் விளக்கமா சொன்னா அடிக்க வந்துடுவாங்க..

ட்ரை பண்ணுங்க.புரியும்.!!

ரங்கன் said...

@அகநாழிகை,

நன்றி நண்பரே.!! வருகைக்கு நன்றி!

ரங்கன் said...

@தமிழரசி,

ரொம்ப சந்தோஷம், பில்ல மட்டும் நீங்க கட்டிடுங்க..!!

ரங்கன் said...

@உண்மைதமிழன்,

நீங்க சொல்வது சரியே..!! பயின்றால் கைவராத கலையுமுண்டோ ??

முயற்சி பண்ணுங்க..வாழ்த்துக்கள்!!

என்.ஆர்.சிபி said...

மாப்பி,

உன்கிட்டே பேசும்போது சாக்கிரதையா இருக்கணும் போல?

Anonymous said...

HMM..NICE..
POST...

ரோகிணிசிவா said...

mm ,nalla appa , u r gifted ,
regards to him

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.