நடந்து வந்ததோ நதியோரம்,
நனையவில்லை என் பாதம்,
நனையாதது பாதம் மட்டுமே,
என் நெஞ்சமெல்லாம் ஏனோ ஈரம்..
நனையவில்லை என் பாதம்,
நனையாதது பாதம் மட்டுமே,
என் நெஞ்சமெல்லாம் ஏனோ ஈரம்..
நிற்கவில்லை அமரவில்லை வழியில்,
என்கால்கள் துடிக்கவில்லை வலியில்,
இன்னும் எவ்வளவு தூரம்
ஏனோ மழை வந்தததென் விழியில்.
தூரத்தில் தெரிகிறது பூந்தோட்டம்,
தலையாட்டும் பூக்களின் ஆட்டம்,
இதோ கார்மேகங்களில் கூட்டம்,
ஏனோ என்நெஞ்சில் இன்னும் வாட்டம்.
தலையாட்டும் பூக்களின் ஆட்டம்,
இதோ கார்மேகங்களில் கூட்டம்,
ஏனோ என்நெஞ்சில் இன்னும் வாட்டம்.
வந்துவிட்டேன் பயணிகள் நிழற்கூடம்,
ஒருவருமின்று இது தனிக்கூடம்,
கண்களும் இதயமும் நனைந்து
இங்கு அமர்ந்திருக்கிறேன் இது சவக்கூடம்.
காதலிக்கிறேன் என்றாள் அன்று
மறந்துவிடு என்றாள் அன்று
அப்பா மறுப்பார் என்று
தவிக்கவிட்டு அவனோடு சென்றாள் இன்று..!!
எனக்கும் காதல் வந்தது
என்னை வாட்டிவதைத்து சென்றது,
காதல் இன்னும் வாழ்கிறது
காதலியும் வாழ்கிறாள் புதிய கணவனோடு.
******** ******** ******** ******
(பி.கு): என் நண்பன் ”டேய்..நீ சென்ஸிட்டிவ்..இந்த படம் வேணாம்..சொன்னா கேளு”ன்னு சொல்ல சொல்ல கேட்காமல் ”விண்ணை தாண்டி வருவாயா” பார்த்ததன் விளைவு.. நல்ல திரைக்கதை...நல்ல படம்..நோ மோர் கமெண்ட்ஸ்..!!
(பாதி படத்துக்கே மூச்சு வாங்க ஆரம்பித்துவிட்டது வேறு கதை..!!)
19 comments:
ரங்ஸ், வெயில் காலம் முடியும் வரை இப்படித்தான் குழம்பும், அட்ஜஸ்ட் பண்ணிக்கோ :))
//நடந்து வந்ததோ நதியோரம்,
நனையவில்லை என் பாதம்,//
ஓரமா நடந்தா பாதம் நனையாது மாப்பி!
உள்ள இறங்கி நடக்கணும்!
அப்ப கூட இப்பவெல்லாம் நதில தண்ணி இருக்கிறதில்லை!
//நிற்கவில்லை அமரவில்லை வழியில்,
என்கால்கள் துடிக்கவில்லை வலியில்,
இன்னும் எவ்வளவு தூரம்
ஏனோ மழை வந்தததென் விழியில்//
கால் வலிக்குதுன்னு அழுதுபுட்டு சமாளிஃபிகேஷனைப் பாரேன்!
//எனக்கும் காதல் வந்தது
என்னை வாட்டிவதைத்து சென்றது,
காதல் இன்னும் வாழ்கிறது
காதலியும் வாழ்கிறாள் புதிய கணவனோடு.//
மாப்பி! சொல்லவேயில்லை பாத்தியா!
நீயும் நானும் அப்படியா பழகினோம்!
சிம்புவைப் பார்த்தவுடன் டி.ஆர் பாணி வந்துடுச்சு மாப்பி உனக்கு!
//வந்துவிட்டேன் பயணிகள் நிழற்கூடம்,
ஒருவருமின்று இது தனிக்கூடம்,
கண்களும் இதயமும் நனைந்து
இங்கு அமர்ந்திருக்கிறேன் இது சவக்கூடம்.//
மாப்பி! அது கண்ணம்மாப்பேட்டை பஸ் ஸ்டாப் கிடையாது! நல்லா விசாரிச்சியா?
அருமை
சூப்பர்
பெண்டாஸ்டிக்
வேற வழியில்ல. நான் அடிக்க வேண்டிய பின்னூட்டங்களை அண்ணன் சிபி அடிச்சுட்டதாலே...
Hahaha....... :-)
SIBI comments repeatuuu......
nice:-)
சூப்பர் !!!
செத்துப் பிறக்கவா என்கிறது சொற்கள் மீண்டும் நீ எழுத செத்துப் பிறக்கவா என்கிறது சொற்கள்...
சத்தமிட்டு சிரிக்கிறது வரிகள்
செப்பனிட்ட உன் கைகளை முத்தமிட்டு
சத்தமிட்டு சிரிக்கிறது வரிகள்...
@ மயில்,
சரிங்க மயில்..!!
வருகைக்கு நன்றி!
என்.ஆர்.சிபி,
மாம்ஸ்..நீங்க சொல்லாமலே கண்டுபிடிச்சிடுவீங்கன்னு பார்த்தேன்..
கவிதையை வெச்சி காமெடி பண்ணிட்டா இருக்கீங்க..இருங்க தமிழ்கிட்ட சொல்றேன்..
இராகவன்,
வாங்க பாஸ்..வருகைக்கு நன்றி
@இயற்கை,
நன்றி இயற்கை..!!
@வெறுமை,
அதென்ன பேரு..வெறுமை!!
பாக்க யங்கா..ஸ்மார்ட்டா இருக்கீங்க..இந்த வயசில் எல்லாம் வெறுமைன்னு பேரு வெக்கலாமோ..??
எனிஹவ்..வருகைக்கு நன்றி..!
ஃ ப்ரீயா விடு ரங்கா. இதுவும் கடந்து போகும் :)
எதுகை, மோனையோட கவிதை எழுதினா, சிபி கூட உன்னை கலாய்ப்பாரு.
தையல் போட்டு ஒட்டப்பட்ட இதயம் - படம் நல்லா இருக்கு. ஒரு கோணத்தில், ஒரு ஆணும், பெண்ணும் முத்தமிடுவது போலவும் இருக்கு :)
அனுஜன்யா
//கவிதையை வெச்சி காமெடி பண்ணிட்டா இருக்கீங்க..இருங்க தமிழ்கிட்ட சொல்றேன்..//
மாப்பி! நோ டெரர் ரிவெஞ்சஸ்! அவங்க கவிதை எழுதினா பூமி தாங்காது!
//(பாதி படத்துக்கே மூச்சு வாங்க ஆரம்பித்துவிட்டது வேறு கதை..!!)//
காற்றோட்டமான தியேட்டருக்கு போகலாம்ல!
Post a Comment
வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.