கடந்த சில வருடங்களாகவே என்னுள் எப்போதும் ஒரு ஊசலாட்டம்.
நம்பிக்கை, நம்பிக்கையின்மை(பயம்) இவைகளுக்கு இடையேயான ஊசலாட்டம் அது.
எல்லா ஊஞ்சல்களையும் போல இது மேலேயும் கொண்டு சென்றது. கீழேயும் தள்ள பார்த்தது.
என்ன செய்ய? எல்லா மனிதனுக்கும் இந்த ஊசலாட்டம் இருந்துகொண்டு தானே இருக்கிறது. நான் மட்டும் என்ன விதிவிலக்கா?
நானும் இந்த ஊசலில் ஆடி ஓய்ந்த போது ஒரு சின்ன விஷயம் மூளையில் பளிச்சிட்டது. அதுதான், நம்பிக்கை, பயம் இரண்டுமே
ஒரே விஷயத்தின் இரண்டு பக்கங்கள். ஒரு நாணயத்தின் இரு பக்கம் போல். அவைகள் ஒன்றை ஒன்று சார்ந்தும், சாராமலும் இயங்கும்
ஒரு விசித்திர இயந்திரமாய் தெரிந்தது.
ஒரு இருட்டறையில் நுழையும்போது, அங்கே எதுவும் இருக்காது என்கிற நம் மனதின் நம்பிக்கையே, எதாவது இருக்குமோ என்கிற பயமாய்
மாறிவிடுகிறது. இது எப்போதும் நிகழ்வதே. நம்பிக்கையே நாம் செய்யும் எந்த செயலுக்கும் அடிப்படை. பயமே நாம் தவிர்க்கும் எந்த செயலுக்கும்
அடிப்படை. இப்படி நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் ஆதார சுருதியாக விரும்பும் இந்த இருவரின் கையில் நாம் பொம்மைகளாக இருக்கிறோம்.
நம்பிக்கையால் தூண்டப்படுவதும், அதனால் சில செயல்கள் செய்வதும், அது தோற்றபின் அந்த செயலில் பயம்கொள்வதும்
எப்போதும் நடக்கிறது. எப்போதும் நாம் முழுமையாக வெற்றியடையும் என்கிற நம்பிக்கை உடைய விஷயங்களை மட்டுமே முன்னுரிமை தருகிறோம்.
தோல்வி சார்ந்த விஷயங்களை நாம் எப்போதும் கண்டு அஞ்சுகிறோம். இந்த அச்சம் தேவையற்றது என்கிறேன்.
குழந்தைகள் விளையாடும் போது கவனித்திருக்கிறீர்களா? அவைகள் எப்போதும் வெற்றிக்காக விளையாடுவதில்லை.
அந்த விளையாட்டில் கிடைக்கும் மகிழ்ச்சிக்காகவே அவைகள் விளையாடுகின்றன. வெற்றிக்கான வெறியும் இல்லை. தோல்விக்கான
பயமும் இல்லை.
கால்பந்து வீரர் பீலே ஒரு பேட்டியின் சொன்னார் :
“நான் விளையாடவே ஆசைப்படுகிறேன். ஆனால் என்னையும் அறியாமல் ஜெயித்துவிடுகிறேன்” என்று.
வாழ்க்கை நம்பிக்கையை சார்ந்ததும் அல்ல, பயத்தை சார்ந்ததும் அல்ல. அது வாழ்க்கையை முழுமையாக ஏற்றுகொள்வதிலேயே இருக்கிறது.
ஒரு அருவியில் குளிப்பதை போல், ஒரு தென்றலை அனுபவிப்பதை போல, ஒரு குழந்தையோடு கொஞ்சி மகிழ்வதை போல..
அது எப்போதும் நம்பிக்கைக்கும், பயங்களுக்கும் அப்பாற்பட்டதாய்...அன்பு மயமானதாய், ஆனந்தமானதாய் இருக்கிறது.
நம்பிக்கை, பயம் இந்த இரண்டையுமே கடந்து விட்டால் கடவுளும் உங்கள் கைப்பிடித்து நடப்பார் :)
மறக்காம ஓட்டும் கமெண்டும் பண்ணிடுங்க..!!
நன்றி,
ரங்கன்
12 comments:
Nice post Ranga...
Keep going...
ஆகா, என்ன அருமையாய் எழுதியிருக்கிறீர்கள். வாழ்வின் தத்துவத்தையே சுருக்கமாக கூறிவிட்டீர்கள். நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மையே.
//நம்பிக்கை, பயம் இந்த இரண்டையுமே கடந்து விட்டால் கடவுளும் உங்கள் கைப்பிடித்து நடப்பார் //
பயத்தை கடந்து விடலாம் நம்பிக்கையை ஏன் கடக்கவேண்டும். அது கடவுள்மேல் வைத்த நம்பிக்கையாய் இருக்கட்டுமே!.
அருமை மாப்பி!
ஐ யாம் பிரவுட் ஆஃப் யூ!
//நம்பிக்கை, பயம் இந்த இரண்டையுமே கடந்து விட்டால் கடவுளும் உங்கள் கைப்பிடித்து நடப்பார்//
சரியாத்தான் சொல்லியிருக்கறீங்க....
வாழ்க்கையைப்பற்றிய நல்ல கண்ணோட்டம்...
நல்லா எழுதி இருக்கிங்க ரங்கன்.
என்னோட பெரிய மைனஸ் பயம்தான் :(
//என்னோட பெரிய மைனஸ் பயம்தான் :( //
அப்படின்னா ஒரு + ஓட்டு போட்டுடுங்க! எல்லாம் சரியாய்டும்!
ஹாய் ரங்கா
நல்ல சிந்தனை - நமபிக்கை பயம் இரண்டுமே வாழ்க்கை சார்ந்தது - ஆன்மீகம் சார்ந்தது அல்ல - இருப்பினும் ஆன்மீகம் இவைகளைச் சார்ந்தது போல தோன்றும்
நல்வாழ்த்த்துகள் ரங்கா
நட்புடன் சீனா
ரொம்ப ஆழமான விசயம் . சுறுக்கமாக சொல்லிட்டீங்க
ரங்ஸ். வெல் செய்ட்.
HMM..NICE POST...
KEEP ON ROCKING..
குழந்தைகள் விளையாடும் போது கவனித்திருக்கிறீர்களா? அவைகள் எப்போதும் வெற்றிக்காக விளையாடுவதில்லை.
அந்த விளையாட்டில் கிடைக்கும் மகிழ்ச்சிக்காகவே அவைகள் விளையாடுகின்றன. வெற்றிக்கான வெறியும் இல்லை. தோல்விக்கான
பயமும் இல்லை.
கால்பந்து வீரர் பீலே ஒரு பேட்டியின் சொன்னார் :
“நான் விளையாடவே ஆசைப்படுகிறேன். ஆனால் என்னையும் அறியாமல் ஜெயித்துவிடுகிறேன்” என்று.
கீதை சொல்வதும் இதுதானோ ?
அன்புடன்
ராமசந்திரன்
//நம்பிக்கையே நாம் செய்யும் எந்த செயலுக்கும் அடிப்படை. பயமே நாம் தவிர்க்கும் எந்த செயலுக்கும்
அடிப்படை. இப்படி நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் ஆதார சுருதியாக விரும்பும் இந்த இருவரின் கையில் நாம் பொம்மைகளாக இருக்கிறோம்.//
superb , nalla elutheerkeenga ,
thodarungal !!!
Post a Comment
வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.